கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS EXAMINATION 2023 -2024 - LIST OF 5890 SELECTED CANDIDATES...

 

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்ட தேர்வு 2023-2024 - தேர்வாகியுள்ள 5890 மாணவர்களின் பெயர் பட்டியல்...


NMMS EXAMINATION 2023 -2024 - LIST OF 5890 SELECTED CANDIDATES...



>>> Click Here to Download...



தமிழ்நாடு புதிய மருத்துவ காப்பீடு திட்டம் - TN - NHIS Mobile App Download Link...



 தமிழ்நாடு புதிய மருத்துவ காப்பீடு திட்டம் - Tamilnadu New Health Insurance Scheme - TN - NHIS Mobile App Download Link...



Click Here to Download...

தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பு, களஞ்சியம் இணைய முகப்பு மற்றும் கைபேசி செயலி, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு வலைதளம் மற்றும் கைபேசி செயலி தொடக்கம்...



 தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பு, களஞ்சியம் இணைய முகப்பு மற்றும் கைபேசி செயலி, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு வலைதளம் மற்றும் கைபேசி செயலி தொடக்கம் - செய்தி வெளியீடு எண்: 387, தேதி : 27.02.2024...


மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பு, களஞ்சியம் இணைய முகப்பு மற்றும் கைபேசி செயலி, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு வலைத்தளம் மற்றும் கைபேசி செயலியை தொடங்கி வைத்தார்



>>> செய்தி வெளியீடு எண்: 387, தேதி : 27.02.2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


செய்தி வெளியீடு


மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் கருவூலம் மற்றும் கணக்குத் துறை சார்பில் தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பு (TNPFTS), களஞ்சியம் இணைய முகப்பு மற்றும் கைபேசி செயலி, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு வலைத்தளம் மற்றும் கைபேசி செயலி தொடங்கி வைத்தார் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் இன்று (27.02.2024) கருவூலம் மற்றும் கணக்குத் துறை சார்பிலான பின்வரும் நிகழ்ச்சிகளை பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை 6வது தளத்தில் தொடங்கி வைத்தார்.



தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பு (TNPFTS), அரசு பொது நிதி நடைமுறையை எளிமைப்படுத்துதல், கருவூலத்தில் இருந்து கடைசி பயனர் வரை நிதி சென்று சேர்வதைக் கண்காணித்தல், அரசு செலவினத்தை முறைப்படுத்துதல், சிறந்த நிதி கண்காணிப்பு செயலி மூலம் திட்டங்களை தீட்டுதல், அரசின் கடனைக் குறைத்தல் என்ற வகையில் தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பு துவக்கி வைக்கப்பட்டது. 



களஞ்சியம் இணைய முகப்பு மற்றும் கைபேசி செயலி, தமிழ்நாடு அரசின் கருவூலம் மற்றும் கணக்குத் துறை வாயிலாக அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான சுயசேவைகளை நேரம் மற்றும் இருப்பிடம் சாராமல் பயன்படுத்தும் வகையில் கைபேசி செயலி துவக்கி வைக்கப்பட்டது. 


புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு வலைத்தளம் (Website) மற்றும் கைபேசி செயலி (Mobile App) அரசு ஊழியர்கள். ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் (NHIS/PNHIS) சிகிச்சை பெற அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள், சிகிச்சைகளின் விவர பட்டியல்கள். மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகள் பதிவிறக்கம் செய்யும் வசதிகள் மற்றும் பல விவரங்களை அறிந்துகொள்ளும் வகையில் வலைத்தளம் மற்றும் கைபேசி செயலி துவக்கி வைக்கப்பட்டது.



கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் பணியாளர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை (IFHRMS) தொடர்பான பயிற்சிகள் வழங்கிடவும், நிதித்துறையின் கீழ் இயங்கும் துறை தலைமைகளின் பயன்பாட்டிற்கும் மற்றும் பொதுவான செயல்பாடுகளுக்காகவும் ரூ.16.11 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன வசதிகளுடன் கூடிய பயிற்சி கூடம் மற்றும் ரூ. 9.85 இலட்சம் மதிப்பீட்டில் நூலகம் திறக்கப்பட்டது. 


சென்னை மற்றும் மதுரை மண்டல இணை இயக்குநர்களின் அலுவலக பயன்பாட்டிற்காகவும், புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்ட மருத்துவ அலுவலரின் பயன்பாட்டிற்காகவும் ரூ.26.10 இலட்சம் மதிப்பீட்டில் மூன்று மகேந்திரா பொலிரோ வாகனங்கள் வழங்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் நிதித்துறை. முதன்மை செயலாளர். திரு.த.உதயச்சந்திரன். இ.ஆ.ப. அவர்கள், அரசு சிறப்பு செயலாளர், திரு. பிரசாந்த் மு.வடநேரே, இ.ஆ.ப. அவர்கள், கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் திரு.க.விஜயேந்திர பாண்டியன், இ.ஆ.ப. அவர்கள். அரசு இணைச் செயலாளர், திரு. எச்.கிருஷ்ணனுண்ணி, இ.ஆ.ப. அவர்கள் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


IFHRMS - Kalanjiyam Mobile App - பயன்படுத்தும் முறை...

 


IFHRMS - Kalanjiyam Mobile App - Version 1.0 - New Update on 21-02-2024 - Now available @ Play store...


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தாங்கள் பெறும் சம்பள தகவல்களை ஐ எஃப் எச் ஆர் எம் எஸ் இணையதளத்திற்கு சென்று இதற்கு முன்பு பார்க்க முடியும். தற்போது கையடக்க அலைபேசி வழியாக அதற்கான பிரத்தியேக வடிவமைப்புடன் IFHRMS - Kalanjiyam Mobile App ஆக தற்போது தரப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி வரும் காலங்களில் அனைத்து தகவல்களையும் இந்த அலைபேசி செயலி வழியாகவே தெரிந்து கொள்ள முடியும்.


பயன்படுத்தும் முறை


✔️Install the application


👍Open the application


✔️Input ID number


👍Mobile number automatic showing


👍OTP number received


✔️Input OTP number


👍 Reset New PIN Number (4 Digit)



Download Link👇👇👇


https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam



>>> IFHRMS Kalanjiyam Appஐ Install செய்து open ஆகவில்லை என்றால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்...


பணி நிரவல் - TRB மூலம் இடைநிலை ஆசிரியர் நியமனம் - பின்பற்ற வேண்டிய கால அட்டவணை குறித்த அரசாணை (நிலை) எண்: 48, நாள்: 21-02-2024 வெளியீடு...


பணி நிரவல் - TRB மூலம் இடைநிலை ஆசிரியர் நியமனம் - பின்பற்ற வேண்டிய கால அட்டவணை குறித்த அரசாணை (நிலை) எண்: 48, நாள்: 21-02-2024 வெளியீடு...



G.O. Ms. No. 48, Dated: 21-02-2024 - இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் -31.05.2024க்குள் பணி நிரவல் செய்தல் வேண்டும் - ஆசிரியர் கலந்தாய்வு ஜூன் -30 க்குள் நடத்தி முடித்தல் வேண்டும் - அரசாணை வெளியீடு...



>>> அரசாணை (நிலை) எண்: 48, நாள்: 21-02-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இன்று (28.02.2024) பிற்பகல் 04.00 மணிக்கு NMMS தேர்வு முடிவுகள் வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு வெளியீடு...

 

 இன்று (28.02.2024) பிற்பகல் 04.00 மணிக்கு NMMS Results தேர்வு முடிவுகள்  2023-2024 வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு வெளியீடு...



>>> அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2024-2025ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் தொடர்பாக DSE & DEE இணைச் செயல்முறைகள்...

 

2024-2025ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் தொடர்பாக DSE & DEE இணைச் செயல்முறைகள்...


💥 2024-2025 ஆம்  கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை - 01.03.2024 முதல் தொடக்கம்...


💥 தொடக்கக் கல்வி பதிவேடு...


💥 பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரப்படுத்துதல்...


💥 விழிப்புணர்வுடன் பேரணி நடத்துவதற்கான முன்னேற்பாடுகள்...


💥 பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் கடமைகள்...


💥 பேரணியில் இடம்பெறத்தக்க வாசகங்கள்...


💥 பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள்...


தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனரின் இணை செயல்முறைகள் ந.க.எண்: 079119/ எம்/ இ1 / 2023, நாள்: 27-02-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SLAS Model QP regarding - State SLAS team information

 மாநில அடைவு தேர்வு மாதிரி வினாத்தாள் தொடர்பாக மாநில SLAS குழுவின் தகவல்  SLAS  Model  Question Paper regarding - State SLAS team informatio...