சிவராத்திரியை ஒட்டி வரும் மார்ச் 8ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01-03-2024...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01-03-2024 - School Morning Prayer Activities...
திருக்குறள்:
பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: அன்புடைமை.
குறள் 76:
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
விளக்கம்:
வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்.
பழமொழி :
Too much of anything is good for nothing.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்
பொன்மொழி:
The real secret to success is enthusiasm.
வெற்றியின் உண்மையான ரகசியம் உற்சாகம்.
அறிவியல் பொது அறிவு வினா விடைகள் :
மனித உடலில் மிகவும் கனமான உறுப்பு - தோல்
வேம்பிலிருந்து கிடைக்கும் பூச்சிக் கொல்லியின் பெயர் - அஸாடிராக்டின்
ஆன்டிஜென்கள் இல்லாத இரத்தத் தொகுதி - O இரத்தத் தொகுதி
எரிசக்தி ஆற்றலைத் தயாரிக்க உதவும் தாவரங்கள் - ஜட்ரோபா மற்றும் யூபோர்பியா
முட்டைத் தாவரம் என அழைக்கப்படுவது - கத்தரி
ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :
Fertility - வளம்
Festival - திருவிழா
Few - சில
Field - வயல்
Fiercely - மும்முரமாக
ஆரோக்கியம்
சுவாசக் கோளாறுகள் (அலர்ஜி)
கபத்தைத் தூண்டும் உணவுகளைத் (வாழைப் பழம், பால் மற்றும் பால் பொருட்கள்) தவிர்க்க வேண்டும்.
ஆசனப் பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சி போன்றவற்றை செய்யலாம்.
நல்ல காற்றோட்டமுள்ள அறையில் வசித்தல், போதுமான உடலுழைப்பு, துளசி+மிளகு, துளசி+தேன், தேன்+மிளகு மற்றும் கொள்ளு போன்றவற்றை உட்கொள்ளுதல் உதவி செய்யும்.
புகை பிடித்தல் கூடாது.
காதுகளை மூடி வைத்திருக்க வேண்டும்.
குளிரான காலை/மாலை வேளைகளில் தலையைப் போர்த்தி வைக்க வேண்டும்.
இன்றைய சிறப்புகள்
மார்ச் 1
1966 – சோவியத்தின் வெனேரா 3 விண்கலம் வெள்ளி கோளில் மோதியது. வேறொரு கோளில் இறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.
1980 – சனி கோளின் யானுசு என்ற சந்திரன் இருப்பதை வொயேசர் 1 விண்கலம் உறுதி செய்தது.
1995 – யாகூ! ஆரம்பிக்கப்பட்டது.
2003 – அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் தனது முதலாவது அமர்வை டென் ஆக்கில் நடத்தியது.
பிறந்த நாள்
1944 – புத்ததேவ் பட்டாசார்யா, மேற்கு வங்கத்தின் 7வது முதலமைச்சர்
1953 – மு. க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர், தி.மு.க. தலைவர்
நினைவு நாள்
-
சிறப்பு நாட்கள்
நினைவு நாள் (மார்சல் தீவுகள்)
விடுதலை நாள் (பொசுனியா எர்செகோவினா, யுகோசுலாவியாவில் இருந்து 1992)
பாகுபாடுகள் ஒழிப்பு நாள்
நீதிக்கதை
முட்டாள் குருவியும் குரங்கும்
ஒரு பெரிய மரத்தில் ஒரு ஜோடி சிட்டுக்குருவிகள் வசித்து வந்தன. அவை இரண்டும் முன்யோசனையும் நன்கு வேலை செய்யும் குணமும் கொண்டவை. குளிர்காலம் வரும் முன் அவை இரண்டும் ஒரு அழகிய, உறுதியான கூட்டை கட்டின. அதனால் அவர்கள் இருவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
மிகவும் மழை பெய்து கொண்டு இருந்த ஒருநாள் இந்த குருவிகள் வசித்துக் கொண்டிருந்த மரத்தில் ஒரு குரங்கு வந்து ஒதுங்கியது. மழையில் மிகவும் நனைந்து அந்த குரங்கு நடுங்கிக்கொண்டிருந்தது. அதை பார்த்த பெண் குருவி, “ஐயா ஏன் நீங்கள் இப்படி மழையில் நனைந்து கொண்டு இருக்கிறீர்கள், ஏன் உங்கள் வீட்டுக்கு போகவில்லை” என்று கேட்டது.
அதற்கு குரங்கு சொன்னது “எனக்கு தனியாக வீடு ஒன்றும் இல்லை எல்லா மரங்களிலும் நான் மாறி மாறி தங்குவேன்” என்றது. இதைக்கேட்ட பெண்குருவி “எதிர்காலத்திற்கு சேகரிக்காத புத்தியில்லாத குரங்கு ஒரு சோம்பேறி” என்று விமர்சித்தது. குரங்கு மிகவும் கோபப்பட்டு அந்த குருவிடம் அமைதியாக இருக்கச் சொன்னது.
ஆனால் அந்தக் குருவி சொன்னது, “என்னுடைய சிறிய அலகை வைத்து நான் இவ்வளவு பெரிய கூட்டை கட்டி உள்ளேன், ஆனால் உன்னிடம் இரண்டு கைகள் இருந்தும் உன்னால் ஒரு வீடு கட்ட இயலவில்லை” என்று விமர்சித்துக் கொண்டே இருந்தது. குரங்கிற்கு மிகவும் கோபம் வந்தது.
அந்தக் குரங்கு கோபத்தில் அந்தக் குருவியின் கூட்டை தன் கைகளால் கிழித்து போட்டது. அந்தக் குருவிக்கு மிகவும் கோபம் வந்தது ஆனால் அதால் எதுவும் செய்ய முடியாமல் அமைதியாக இருந்தது. அந்த இரண்டு குருவிகளும் மழையில் நனைய ஆரம்பித்தன. தேவையில்லாத இடத்தில் தான் செய்த உபதேசம் தான் இதற்கு காரணம் என்று அந்தப் பெண் குருவி மிகவும் வருந்தியது.
நீதி : கேட்பவர்களுக்கு மட்டும் அறிவுரை கொடுப்பது நல்லது.
இன்றைய முக்கிய செய்திகள்
01-03-2024
சிவராத்திரியை ஒட்டி வரும் மார்ச் 8ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு...
12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்...
மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது; உயர்நீதிமன்ற தீர்ப்பு சரியே.. சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு...
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட உத்தரவை உறுதி செய்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு...
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எவ்வித அழுத்தமும் இன்றி எழுத வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை...
ரூ.986 கோடியில் 2 ஆயிரத்து 292 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது குலசேகரன்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்...
Today's Headlines:
01-03-2024
Announcement of local holiday for Kanyakumari district on 8th March which coincides with Shivratri...
My heartiest congratulations to the students who are going to write the 12th general examination: Chief Minister M.K.Stalin...
Sterlite plant cannot be allowed to open again; High Court verdict is correct.. Supreme Court praises Madras High Court...
Chief Minister M.K.Stal's welcome to the Supreme Court's decision which upheld the order to close the Sterlite plant...
Students writing the 12th general exam should write without any pressure: Minister Anbil Mahesh advises...
New rocket launch pad at Kulasekaranpatnam on 2,292 acres at Rs.986 crore: Prime Minister Modi laid the foundation stone...
பள்ளி மேலாண்மைக் குழுவின் (SMC) பதவிக்காலம் ஆகஸ்ட் 2024 மாதம் வரை நீட்டிப்பு - அரசாணை 1(டி) எண்: 64, நாள் : 29-02-2024 வெளியீடு...
பள்ளி மேலாண்மைக் குழுவின் (SMC) பதவிக்காலம் ஆகஸ்ட் 2024 மாதம் வரை நீட்டிப்பு - அரசாணை 1(டி) எண்: 64, நாள் : 29-02-2024 - G.O. (1D) No.64, Dated: 29-02-2024 வெளியீடு...
>>> அரசாணை 1(டி) எண்: 64, நாள் : 29-02-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பள்ளிக் கல்வி - பள்ளி மேலாண்மைக் குழு - 2022-2024 ஆம் ஆண்டிற்கான பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் பதவிக் காலத்தை நீட்டிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது...
TNPSC வெளியிட்ட சிவில் நீதிபதி தேர்வுப் பட்டியல் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...
TNPSC வெளியிட்ட சிவில் நீதிபதி தேர்வுப் பட்டியல் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...
சிவில் நீதிபதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று சிவில் நீதிபதிகளின் தேர்வு பட்டியலை ரத்து செய்யுமாறு டிஎன்பிஎஸ்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், புதிய பட்டியலை 2 வாரங்களில் வெளியிட டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதனை தொடர்ந்து கடந்த கடந்த ஜூன் 30ஆம் தேதியுடன் இந்த பணிக்காக விண்ணப்பிக்கும் அவகாசம் முடிவடைந்தது.
மொத்தம் இந்த தேர்விற்காக 6,031 ஆண்களும், 6,005 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 12,037 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான முதல் நிலை தேர்வு, கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி நடந்து முடிந்தது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், தஞ்சாவூர், வேலுார், விழுப்புரம் ஆகிய 9 இடங்களில், சிவில் நீதிபதி முதல் நிலை தேர்வுக்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு மெயின் தேர்வு கடந்த நவம்பரில் நடந்து முடிந்தது. இதன் பின்னர் முதன்மை எழுத்து தேர்வானது (மெயின் தேர்வு) கடந்த தாண்டு நவம்பர் 4, 5ஆம் தேதிகளில் நடந்தது. இந்தத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அத்தேர்வுக்கான அறிவிப்பில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்முக தேர்வுக்கு தற்காலிகமாக 472 பேர் அழைக்கப்பட்டனர். இதற்கான முடிவுகள் கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதனை தொடந்து, கடந்த ஜனவரி 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 10ஆம் தேதி வரை சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நேர்முக தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில், சமீபத்தில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சியானவர்களின் 245 பேர் பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்த நிலையில், 245 சிவில் நீதிபதிகளுக்கான புரவைசனல் பட்டியலை ரத்து செய்ய கோரி ஷீலா உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவில், சிவில் நீதிபதிகளுக்கான தேர்வில், பின்னடைவு காலி பணியிடங்களை நிரப்பாமல் இட ஒதுக்கீடு முறை தவறாக பின்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிவில் நீதிபதிகளின் தேர்வு பட்டியலை ரத்து செய்யுமாறு டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், புதிய பட்டியலை 2 வாரங்களில் வெளியிட டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் நோக்குடன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக பள்ளிக்கு ரூபாய் 2000 ஒதுக்கி SPD செயல்முறைகள் வெளியீடு...
மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் நோக்குடன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக பள்ளிக்கு ரூபாய் 2000 ஒதுக்கி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 0783/ A7/SS/2023, நாள்: 29.02.2024 வெளியீடு...
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
ந.க.எண்: 0783/ A7/SS/2023, நாள்: 29.02.2024
பொருள் : 2023-24 – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 28.02.2023 முதல் 2024-2025ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ளுதல் – நிதிவிடுவித்தல் – தொடர்பாக...
பார்வை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள், ந.க.எண். 079119/எம்/இ1/2023, நாள். 20.02.2024
அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளில் அனைத்து பாடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் - குறைந்தபட்சம் 6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு முடிய 175 மாணவர்கள் மற்றும் ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் உள்ள 66 பள்ளிகளுக்கு மட்டும் ஏற்கனவே அந்த பள்ளிகளில் உள்ள 216 பட்டதாரி பணியிடங்களை தவிர்த்து கூடுதலாக அப்பள்ளிகளுக்கு 114 பட்டதாரி பணியிடங்கள் அனுமதி அளித்து ஆணை - பள்ளிக்கல்வித்துறை அரசாணை (நிலை) எண்: 54, நாள்: 28-02-2024 வெளியீடு...
அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளில் அனைத்து பாடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் - குறைந்தபட்சம் 6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு முடிய 175 மாணவர்கள் மற்றும் ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் உள்ள 66 பள்ளிகளுக்கு மட்டும் ஏற்கனவே அந்த பள்ளிகளில் உள்ள 216 பட்டதாரி பணியிடங்களை தவிர்த்து கூடுதலாக அப்பள்ளிகளுக்கு 114 பட்டதாரி பணியிடங்கள் அனுமதி அளித்து ஆணை - பள்ளிக்கல்வித்துறை அரசாணை (நிலை) எண்: 54, நாள்: 28-02-2024 வெளியீடு...
6-8 வகுப்புகளில் குறைந்தபட்சம் 175 மாணவர்கள் மற்றும் 6-8 வகுப்புகளில் தலா 35 மாணவர்கள் என்ற இரண்டு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து அரசாணை வெளியீடு...
26.02.2024, 27.02.2024, 28.02.2024 மற்றும் 29.02.2024 ஆகிய நாட்களில் நடந்த 6, 7, 8 மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கான பிப்ரவரி மாத கற்றல் விளைவுகள் மற்றும் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வு விடைக்குறிப்புகள் - தமிழ் & ஆங்கில வழி...
26.02.2024, 27.02.2024, 28.02.2024 மற்றும் 29.02.2024 ஆகிய நாட்களில் நடந்த 6, 7, 8 மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கான பிப்ரவரி மாத கற்றல் விளைவுகள் மற்றும் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வு விடைக்குறிப்புகள் - தமிழ் & ஆங்கில வழி (Answer Keys of Learning Outcomes (LOs) & Competency Based Assessment Exam February 2024 for Class 6, 7, 8 & 9 held on 26.02.2024, 27.02.2024, 28.02.2024 மற்றும் 29.02.2024 - Tamil & English Medium)...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
The completion of direct inspection conducted by Minister Anbil Mahesh Poiyamozhi in all 234 constituencies
234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு The completion of direct inspection...