கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உயர் தொழில்‌ நுட்ப ஆய்வக மதிப்பீடு அறிக்கை அட்டை மாணவர்களுக்கு வழங்குதல்‌ - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் & மாநிலத் திட்ட இயக்குநர் கடிதம்...



உயர் தொழில்‌நுட்ப ஆய்வக மதிப்பீடு அறிக்கை அட்டை மாணவர்களுக்கு வழங்குதல்‌ - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் & மாநிலத் திட்ட இயக்குநர் கடிதம்... 


Assessment - Student Report Card - Fund released for class 6-9 students - Hi-Tech Lab - Report Card- Instructions to HMs & Teachers...




>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, சென்னை - 6.


ந.க.எண்‌.76896/பிடி1/53/2017, நாள்‌ 15.02.2024


பொருள்‌: பள்ளிக்கல்வி - உயர்‌ தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள்‌ (Hi-Tech Labs) - உயர்தொழில்‌ நுட்ப ஆய்வக மதிப்பீடு அறிக்கை அட்டை வழங்குதல்‌ - மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு மற்றும்‌ நடைமுறை வழிகாட்டுதல்கள்‌ வழங்கப்பட்டது - சார்பு


பார்வை : சென்னை-6, ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி மாநில திட்ட இயக்குநரின்‌ கடிதம்‌ ந.க.எண்‌.4648/A4/Student Report Card/ SS/2023, நாள்‌.29.01.2024


பார்வையில்‌ காணும்‌ ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி மாநில திட்ட இயக்குநரின்‌ கடிதத்தின்படி, உயர்‌ தொழில்‌ நுட்ப கணினி ஆய்வகங்கள்‌ செயல்படும்‌ (HI-TECH LABS) அரசு உயர்நிலை / மேல்நிலைப்‌ பள்ளி மாணவர்களுக்கு உயர்தொழில்‌ நுட்ப ஆய்வக மதிப்பீடு அறிக்கை அட்டை வழங்குவது சார்ந்து நிதி ஒதுக்கீடு, மற்றும்‌ நடைமுறை வழிகாட்டுதல்கள்‌ வழங்கப்பட்டுள்ளது.


மேற்கண்ட கடித நகல்‌ இத்துடன்‌ இணைத்து அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ அனுப்பப்படுகிறது. இதனை உரிய பள்ளிகளுக்கு அனுப்பி இக்கடிதத்தில்‌ தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறை வழிகாட்டுதல்களின்படி செயல்பட பள்ளித்‌ தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்களும்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

பள்ளிக்கல்வி இயக்குனர்

இணைப்பு :

பார்வையில்‌ காணும்‌ கடித நகல்‌


பெறுநர்‌

அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌. 

நகல்‌:

மாநில திட்ட இயக்குநர்‌, ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி,

(பேராசிரியர்‌ அன்பழகன்‌ கல்வி வளாகம்‌, சென்னை-6

(பணிந்தனுப்பப்படுகிறது)


சிவில் நீதிபதிகள் பணி நியமன தேர்வுப் பட்டியல் இட ஒதுக்கீட்டில் தவறு நேர்ந்தது எப்படி?



 சிவில் நீதிபதிகள் பணி நியமன தேர்வுப் பட்டியல் இட ஒதுக்கீட்டில் தவறு நேர்ந்தது எப்படி?

~~~~~~~~~~~~~~~~~~~~~~

சமீபத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தால் வெளியிடப்பட்ட  சிவில் நீதிபதிகள் தேர்வுப் பட்டியலில் இட ஒதுக்கீடு சரியாக கடைபிடிக்கப்பட வில்லையெனக் கூறி, புதிய பட்டியலை வெளியிடும்படி சொல்லியிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.


இதில் தவறு நடந்தது எங்கே?


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 245 சிவில் நீதிபதி காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 2023-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி வெளியிட்டது. 


இதில் நடப்புப் பணியிடங்கள் 153, பின்னடைவுப் பணியிடங்கள் 92 ஆகியவை இடம்பெற்றிருந்தன. 


இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, தற்காலிக தேர்வு பட்டியல் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி வெளியிடப்பட்டது.


இந்தத் தேர்வுப் பட்டியல் வெளியான பிறகு, இந்தத் தேர்வை எழுதிய தேர்வர்கள் சிலர் பணியிடங்களை நிரப்பும்போது இட ஒதுக்கீட்டு முறை சரியாக பின்பற்றப்படவில்லை யெனக் கூறி வழக்குத் தொடர்ந்தனர்.


"இந்தப் பட்டியலில் இடஒதுக்கீடு முறை சரியாகப் பின்பற்றப் படவில்லை. அதிக மதிப்பெண் பெற்ற தேர்வர்கள், பொதுப் பட்டியலில் இடம் பெறுவதற்குப் பதிலாக, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். 


இதனால், வேறு சிலர் இட ஒதுக்கீடு பெறுவது பாதிக்கப்பட்டுள்ளது," என்று கூறி, பாதிக்கப்பட்ட ஒன்பது தேர்வர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.


இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.


இதில் (பிப்ரவரி 29) வியாழக்கிழமையன்று  தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், "அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்கள் பொதுப் பிரிவிலும் இடம் பெற்றுள்ளனர். 


இது இட ஒதுக்கீட்டுத் தத்துவத்திற்கே மாறானது. ஆகவே அந்த பட்டியலை ரத்து செய்கிறோம். 


அதிக மதிப்பெண் பெற்றவர்களை பொதுப் பிரிவில் சேர்த்தும் மற்றவர்களை உரிய இடஒதுக்கீட்டு இடங்களில் சேர்த்தும் திருத்தி அமைக்கப்பட்ட தேர்வுப் பட்டியலை அரசுப் பணியாளர் தேர்வாணையம் இரண்டு வாரங்களில் வெளியிட வேண்டும்," என உத்தரவிட்டுள்ளது.


பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இதுபோல எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க, சமூக நீதியில் அக்கறை கொண்ட அதிகாரி ஒருவரை நியமித்து இட ஒதுக்கீடு தேர்வாணையங்களில் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.


"இதற்கு முன் 2019-ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளுக்கு 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் போதும் இதே குளறுபடிகள் நிகழ்ந்தன. 


இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அமர்வும், இரு நீதிபதிகள் அமர்வும் ஆசிரியர் தேர்வு வாரியம் கடைபிடித்த அளவுகோல் தவறு என்று தீர்ப்பளித்தன.


"ஆனாலும், அதை ஏற்காத ஆசிரியர் தேர்வு வாரியம் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 


அம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன், 27-ஆம் விதிப்படி இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என ஆணை பிறப்பித்தது. 


தமிழ்நாடு அரசு (எதிர்) சோபனா வழக்கு என்றழைக்கப்படும் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அப்போது வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தான் சென்னை உயர்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.


"தேர்வாணையத்தின் 27-ஆம் விதிப்படி இட ஒதுக்கீட்டை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து அனைத்து தேர்வாணையங்களுக்கும் தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும்.


"அனைத்துத் தேர்வாணையங்களிலும் இட ஒதுக்கீடு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதைக் கண்காணிக்க சமூகநீதியில் அக்கறை கொண்ட அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்," என்று அவர் விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.


TNPSC யில் இந்தத் தவறு எப்படி நடந்தது என்பது குறித்து டி.என்.பி.எஸ்.சி வட்டாரங்களில் விசாரித்தபோது, இது விதியைத் தவறாகப் புரிந்துகொண்டதால் நேர்ந்த தவறு எனத் தெரிவித்தனர்.


அதாவது, மொத்தம் 245 நீதிபதிகளைத் தேர்வுசெய்வதற்கு தேர்வு நடத்தப்பட்டது. 


அதில் 92 பணியிடங்கள் ஏற்கனவே நிரப்பப்படாமல் இருந்தவை. 


153 பணியிடங்கள் புதிதாக நிரப்பப்பட வேண்டியவை. இதில் ஏற்கனவே நிரப்பப்படாத பின்னடைவுப் பணியிடங்களைப் பொறுத்தவரை, அவைதான் முதலில் நிரப்பப்பட வேண்டும். 


மேலும், எந்தெந்த இட ஒதுக்கீட்டுப் பிரிவில் அந்தப் பணியிடங்கள் இருக்கின்றனவோ, அதைச் சரியாக பார்த்து அந்தந்த ஒதுக்கீட்டிற்கு ஏற்றபடி நிரப்ப வேண்டும்.


அதைச் செய்யும்போது, அதிக மதிப்பெண்களைப் பெற்ற பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தோரை வைத்து அந்த இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன. 


ஆனால், விதிமுறைப்படி பொதுப் பிரிவினருக்கான இடங்களை நிரப்பிவிட்டு, மீதமுள்ள இடஒதுக்கீட்டுப் பிரிவினரை வைத்துக் கொண்டு இந்தப் பட்டியலை நிரப்பியிருக்க வேண்டும். 


பின்னடைவுப் பட்டியலை முதலில் நிரப்ப வேண்டும் என்பதை சரியாகப் புரிந்துகொள்ளாததால் நேர்ந்த தவறு இது. விரைவிலேயே நீதிமன்றம் கூறியபடி புதிய பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவித்தனர்.


அங்கன்வாடி மையங்களில்‌ பயிலும்‌ 5+ வயதினை நிறைவு செய்யும்‌ குழந்தைகளை 01.03.2024 முதல் அரசு தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ சேர்க்கை செய்தல்‌ - சார்நிலை அலுவலர்களுக்கு அறிவுரைகள்‌ வழங்குதல்‌ - தொடர்பாக - தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌. 003845 / ஜெ2 / 2024, நாள்‌. 01.03.2024...

 

அங்கன்வாடி மையங்களில்‌ பயிலும்‌ 5+ வயதினை நிறைவு செய்யும்‌ குழந்தைகளை 01.03.2024 முதல் அரசு தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ சேர்க்கை செய்தல்‌ - சார்நிலை அலுவலர்களுக்கு அறிவுரைகள்‌ வழங்குதல்‌ - தொடர்பாக - தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌. 003845 / ஜெ2 / 2024, நாள்‌. 01.03.2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, சென்னை - 6,

ந.க.எண்‌. 003845 / ஜெ2 / 2024, நாள்‌. 01.03.2024


பொருள்‌: தொடக்கக்‌ கல்வி- 2024-2025ஆம்‌ கல்வி ஆண்டு மாணவர்‌ சேர்க்கை - 01.03.2024 முதல்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்‌ சேர்க்கை நடைபெறுதல்‌ - அங்கன்வாடி மையங்களில்‌ பயிலும்‌ குழந்தைகளில்‌ 5+ வயதினை நிறைவு செய்யும்‌ குழந்தைகளை அரசு தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ சேர்க்கை செய்தல்‌ - சார்நிலை அலுவலர்களுக்கு அறிவுரைகள்‌ வழங்குதல்‌ - தொடர்பாக

பார்வை: 1. சென்னை - 6, தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இயக்குநர்‌ மற்றும்‌ தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ இணை செயல்முறைகள்‌,

ந.௧.எண்‌.079119/எம்‌/இ1/2023, நாள்‌.26.02.2024.

2. சென்னை - 6, தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, நக.எண்‌. 003845 / ஜெ2 / 2024, நாள்‌.29.02.2024


பார்வை (1)ல்‌ காணும்‌ செயல்முறைகளில்‌ 2024-2025ஆம்‌ கல்வியாண்டில்‌, தமிழ்நாடு அரசு பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்‌ கட்டுப்பாட்டில்‌ செயல்படும்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்‌ சேர்க்கைப்‌ பணிகளை 01.03.2024 முதல்‌ தொடங்கிட விரிவான அறிவுரைகள்‌ வழங்கப்பட்டது.


பார்வை (2ல்‌ காணும்‌ செயல்முறைகளில்‌ 2024-2025ஆம்‌ கல்வி ஆண்டில்‌ அரசுப்‌ பள்ளிகளில் மேற்படி மாணவர் சேர்க்கை பணிகளுக்கான விழிப்புணர்வு சேர்க்கைப் பேரணி நடத்தும்போது ஏற்படும்‌ செலவினங்களுக்காக ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி மாநிலத்‌ திட்ட இயக்ககத்தில்‌ இருந்து ஒவ்வவாரு தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிக்கும்‌ SNA A/c ல்‌ ரூ.2,000/- நிதி விடுவிக்கப்பட்டது குறித்து தெரிவிக்கப்பட்டது.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ சீரிய முயற்சியால்‌ தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களின்‌ கல்வித்‌ தரம்‌ உயரும்‌ பொருட்டு பல்வேறு முன்னோடித்‌ திட்டங்கள்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்‌ வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


வரும்‌ கல்வி ஆண்டில்‌ அனைத்து அரசு தொடக்கப்‌ பள்ளிகளிலும்‌ திறன் வகுப்பறைகள்‌ (Smart Class Rooms), அனைத்து அரசு நடுநிலைப்‌ பள்ளிகளிலும்‌ உயர்‌ கொழில்‌ நுட்ப கணிணி ஆய்வகங்கள்‌ (Hi-Tech Labs) அதற்குத்‌ தேவையான இணையதள (Broadband Connectivity) வசதியுடன்‌ அமைக்கப்பட உள்ளன. மேலும்‌, அரசுப்‌ பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்கக்‌ கணினியும்‌ (TAB) வழங்கப்பட உள்ளது.


அரசுப்‌ பள்ளிகளில்‌ 2024-2025ஆம்‌ கல்வி ஆண்டிற்கான மாணவர்‌ சேர்க்கையை சென்னை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை நடுநிலைப்‌ பள்ளியில்‌ 01.03.2024 அன்று மாண்புமிகு பள்ளிக்‌ கல்வித்‌ துறை அமைச்சர்‌ அவர்கள்‌ தொடங்கி வைத்துள்ளார்கள்‌.


பள்ளிகள்‌ அமைந்துள்ள குடியிருப்புப்‌ பகுதிகளில்‌ (Habitation and Catchment Area) இருந்து 5+ வயதுடைய குழந்தைகளை அரசுப்‌ பள்ளிகளில்‌ சேர்க்கை செய்வதற்கும்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ கிடைக்கும்‌ கற்றல்‌ வாய்ப்புகள்‌, பல்வேறு நலத்திட்டங்கள்‌ மற்றும்‌ மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு உதவித்தொகை குறித்தும் அறியும் வகையில்‌ விழிப்புணர்வு பிரச்சாரத்தினை அனைத்து பொது மக்கள்‌ மற்றும்‌ அனைத்து பள்ளி வயது குழந்தைகளின்‌ பெற்றோர்கள்‌ மத்தியில்‌ ஏற்படுத்தித்‌ தேவையான நடவடிக்கைகளை பள்ளித்‌ தலைமை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ இருபால்‌ ஆசிரியர்கள்‌ மேற்கொள்வதற்கு உரிய அறிவுரைகளை வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌ மூலமாக வழங்கிட அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்களும்‌ (தொடக்கக்‌ கல்வி) கேட்டுக்கொள்ளப்‌படுகிறார்கள்‌.


தமிழ்நாட்டில்‌ பெரும்பான்மையான அரசுப்‌ பள்ளிகள்‌ ஊரகப்‌ பகுதிகளில்‌ தான்‌ அமைந்து உள்ளது. ஊரகப்‌ பகுதிகளில்‌ அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களில்‌ 3 முதல்‌ 5 வயதுடைய குழந்தைகள்‌ பள்ளி முன்பருவக்‌ கல்வியைக்‌ கற்று வருகின்றனர்‌. இம்மையங்களில்‌ முன்பருவக்‌ கல்வியை நிறைவு செய்யும்‌ 5+ வயதுடைய குழந்தைகளின்‌ எண்ணிக்கை விவரம்‌ RevenueDistrict / Project-ன்படி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள்‌ இயக்ககத்தில்‌ இருந்து பின்வருமாறு பெறப்பட்டு உள்ளது. (மையங்கள் வாரியாக 5+ வயதுடைய மாணவர்‌ எண்ணிக்கை மாவட்டவாரியாக இணைப்பில்‌ கண்டுள்ளபடி இணைக்கப்பட்டு உள்ளது).



29.07.2011க்கு முன்னர் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை - சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பு...


 29.07.2011க்கு முன்னர் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை - சென்னை உயர்நீதிமன்றத்தின் Judgment...


W.P.Nos.693 & 695 of 2024

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

DATED : 11.01.2024



29.07.2011க்கு முன்னர் பட்டதாரி ஆசிரியர்களாக அரசு உதவிபெறும் சிறுபான்மை அற்ற பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை என்றும் ஆண்டு ஊதிய உயர்வு (increment) ஊக்க ஊதிய உயர்வு (incentive) தேர்வுநிலை ஊதிய உயர்வு (Selection Grade) ஆகியவை உடனே வழங்கிடவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



>>> Click Here to Download Judgment W.P.Nos.693 & 695 of 2024 - IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS - DATED : 11.01.2024...


1-5 வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மார்ச் 5 முதல் நடைபெறவுள்ள எண்ணும் எழுத்தும் Online பயிற்சிக்கான Link...

 1-5 வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மார்ச் 5 முதல் நடைபெறவுள்ள எண்ணும் எழுத்தும் இணைய வழி பயிற்சிக்கான ( Ennum Ezhuthum Online Training ) Link...



எண்ணும் எழுத்தும் online  பயிற்சிக்கான link

👇👇👇👇


https://tntp.tnschools.gov.in/login?returnUrl=%2FcourseList



 1 முதல் 3 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்துப் பள்ளி ஆசிரியர்களும் இப்பயிற்சியினை 05.03.2024 முதல் 13.03.2024 முடிய இணைய வழியில் எடுத்துக் கொள்ளும் வகையில் பயிற்சிக்கான கட்டகங்கள் ஆசிரியர்களின் பார்வைக்கு இருக்கும் . ஆசிரியர்கள் இப்பயிற்சியினை மேற்குறிப்பிட்ட தேதிக்குள் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் எடுத்து முடித்த பின்பு பயிற்சி மதிப்பீட்டினை (Training Assessment ) மேற்கொள்ள வேண்டும்.



மேலும் , 4 மற்றும் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து பள்ளி ஆசிரியர்களும் இப்பயிற்சியினை 06.03.2024 முதல் 14.03.2024 முடிய இணைய வழியில் மேற்கொள்ளும் வகையில் பயிற்சிக்கான கட்டகங்கள் ஆசிரியர்களின் பார்வைக்கு இருக்கும் . ஆசிரியர்கள் இப்பயிற்சியினை மேற்குறிப்பிட்ட தேதிக்குள் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் எடுத்து முடித்த பின்பு பயிற்சி மதிப்பீட்டினை ( Training Assessment மேற்கொள்ள வேண்டும் .


எண்ணும் எழுத்தும் - 3ஆம் பருவம் - 1 - 5ஆம் வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கான குறுவள மைய இணைய வழி பயிற்சி - நடைபெறும் தேதிகள் & பயிற்சி காணொளிகள் நேரம் - தொடக்ககல்வி இயக்குநரின் செயல்முறைகள்....

 

 எண்ணும் எழுத்தும் - 3ஆம் பருவம் -  1 - 5ஆம் வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கான குறுவள மைய இணைய வழி பயிற்சி - நடைபெறும் தேதிகள் & பயிற்சி காணொளிகள் நேரம் - தொடக்ககல்வி இயக்குநரின் செயல்முறைகள்....


Ennum Ezhuthum - Cluster Resource Center Online Training for Teachers handling Classes 1 – 5 – Term 3 – Dates & Training Videos Timing – Proceedings of Director of Elementary Education….


Online Training Dates - DEE Proceedings...

👇👇👇👇







தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிய வட்டமாக திருவோணம் உதயம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு...

 தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்கள் சீரமைப்பு - புதிய வட்டமாக திருவோணம் உதயம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு...


 புதிதாக திருவோணம் வட்டம் உருவாக்கம்...


தஞ்சை மாவட்டத்தில் புதிதாக திருவோணம் தாலுகா உருவாக்கம்


ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை தாலுகாகளை சீரமைத்து, திருவோணம் உருவாக்கம்


காவாளப்பட்டி, சில்லத்தூர், திருநெல்லூர், வெங்கரை மற்றும் 45 வருவாய் கிராமங்களும் திருவோணத்துடன் சேர்ப்பு..



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...