கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

01.01.2024 நிலவரப்படி தகுதியுள்ள ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டில் பணிமாறுதல் மூலம் கலையாசிரியராகப் பணிநியமனம் வழங்குதல் - ஒதுக்கீட்டு ஆணை வழங்குதல் சார்ந்து - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்...

 

 01.01.2024 நிலவரப்படி தகுதியுள்ள ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு 20%  இட ஒதுக்கீட்டில் பணிமாறுதல் மூலம் கலையாசிரியராகப் பணிநியமனம் வழங்குதல் - ஒதுக்கீட்டு ஆணை வழங்குதல் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்...


Appointment as Art Teacher by transfer in 20% reservation to eligible non-teaching staff as on 01.01.2024 - Issuance of allotment order - Tamil Nadu Joint Director of School Education (Staff Block) Proceedings...



>>> தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மார்ச் 14ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு...


 விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கோவில் திருவிழா திருத்தேர் உற்சவம் வரும் மார்ச் 14ஆம் தேதி அன்று  நடைபெற உள்ளது. இதன் காரணமாக மார்ச் 14ஆம் தேதி அன்று ஒரு நாள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவுலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறைந்த பணியாளர்களை கொண்டு செயல்படும்.


மார்ச் 14ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கு முன்னதாக தேர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தால் திட்டமிட்டபடி தேர்வுகள் நடத்தப்படும் என்றும், மார்ச் 23ஆம் தேதி அன்று இதனை ஈடு செய்யும் விதமாக பணி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


சமூகவலைதள பதிவுகளின் 34 காரணங்களை சுட்டிக்காட்டி பணி இடை நீக்கம் செய்ததற்கான பிரிவுகளின் விளக்கம்...

 

 சமூகவலைதள பதிவுகளின் 34 காரணங்களை சுட்டிக்காட்டி பணி இடை நீக்கம் செய்ததற்கான பிரிவுகளின் விளக்கம்...


ஆசிரியை திருமதி உமா மகேஸ்வரி அவர்கள் சமூகவலைதள பதிவுகளின் 34 காரணங்களை சுட்டிகாட்டி பணி இடை நீக்கம் செய்ததற்கான பிரிவுகளின் விளக்கம் :- Teacher Ms. Uma Maheshwari's explanation of sections on social media postings indicating 34 reasons for suspension



தமிழ்நாடு அரசுப்பணியாளர் நடத்தை விதிகள் - 1973


பிரிவுகள்:-

12(1) , 12

(1) (i) , 12(1) (ii)

20(1) , 20(2)

9(1)

15 , 16 , அடிப்படையில்


செங்கல்பட்டு மாவட்டம், நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை திருமதி உமா மகேஸ்வரி அவர்கள் சமூகவலைதள பதிவுகளின் 34 காரணங்களை சுட்டிகாட்டி பணி இடை நீக்கம் செய்ததற்கான பிரிவுகளின் விளக்கம்:-


இவண்:-

மா.முருகேசன்,

அரசுப்பள்ளி ஆசிரியர்,

தூத்துக்குடி



தமிழ்நாடு மாநிலத் தலைமை தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி இ.ஆ.ப. நியமனம் - தமிழ்நாடு அரசு அரசாணை G.O.Ms.No.51, Dated: 11-03-2024 மற்றும் Gazette Notification வெளியீடு...


தமிழ்நாடு மாநிலத் தலைமை தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி இ.ஆ.ப. நியமனம் - தமிழ்நாடு அரசு அரசாணை G.O.Ms.No.51, Dated: 11-03-2024 மற்றும் Gazette Notification வெளியீடு...




>>> G.O.Ms.No.51, Dated: 11-03-2024 மற்றும் Gazette Notification - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மைசூர் மயிலாடுதுறை விரைவு வண்டி கடலூர் வரை நீட்டிப்பு...


மைசூர் மயிலாடுதுறை விரைவு வண்டி கடலூர் வரை நீட்டிப்பு...


ஓசூர் வழியாக மைசூரில் இருந்து மயிலாடுதுறை வரை இயங்கிய ரயில், இனிமேல் சீர்காழி, சிதம்பரம் வழியாக கடலூர் துறைமுகம் வரை இயக்க முடிவு...


Extension of Mysore Mayiladuthurai Express to Cuddalore port... 


The train which was running from Mysore to Mayiladuthurai via Hosur, will now run to Cuddalore port via Sirkazhi, Chidambaram...



2022-2023ஆம் ஆண்டிற்கான சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது - தேர்வு பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது...

 


2022-2023ஆம் ஆண்டிற்கான சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது - தேர்வு பெற்றவர்களுக்கு  ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது...


மாணாக்கர்களின் அறிவை வடிவமைப்பதிலும் , அறிவியல் கற்றல் மீதான ஆர்வத்தை வளர்ப்பதிலும் , உயர் கல்வியில் மாணாக்கர்கள் அறிவியல் துறையினை தேர்ந்தெடுப்பதற்கும் மற்றும் அறிவியலாளர்களாக உருவாகுவதற்கும் அறிவியல் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.



அறிவியல் ஆசிரியர்களின் விலைமதிப்பற்ற பணிகளை அங்கீகரிக்கும் விதமாக அறிவியல் நகரம் 2018-2019 முதல் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுகளை வழங்கி வருகிறது. 2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ் நாட்டில் உள்ள உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி அளவில் அரசு , அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.


2022-2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கு இரண்டு அறிவியல் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


2022-2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதை மாண்புமிகு உயர்கல்வித் துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு ஆர்எஸ்ராஜகண்ணப்பன் அவர்கள் , உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் திரு ஆகார்த்திக் இஆப , மற்றும் அறிவியல் நகரம்  முதன்மைச் செயலர் துணைத் தலைவர் திரு. தேவ் ராஜ் தேவ் , இஆப ஆகியோர்களின் முன்னிலையில் இன்று ( 11.03.2024 ) சென்னை தலைமை செயலகத்தில் வழங்கினார்கள்.


விருது பெற்றவர்களின் விவரம் பின்வருமாறு

1. இயற்பியல் துறையில் திருமதி. ச.ர.பிந்துலேகா , முதுகலை ஆசிரியை அரசு மேல்நிலைப்பள்ளி , கொட்டாரம்- 629703. கன்னியாகுமரி மாவட்டம் அவர்களுக்கு வழங்கப்பட்டது .


2. உயிரியல் துறையில் திருமதி சு.சங்கீதா , பட்டதாரி ஆசிரியை , அரசு மேல்நிலைப்பள்ளி சேடப்பட்டி -625 527 , மதுரை மாவட்டம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.



சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது பெற்றவர்களுக்கு மாண்புமிகு உயர்கல்வித் துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்களால் தலா ரூ .25,000 / - (ரூபாய் இருபத்தைந்தாயிரம் மட்டும்) ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.




பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12-03-2024...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12-03-2024  - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: விருந்தோம்பல்.


குறள் 83:


வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை

பருவந்து பாழ்படுதல் இன்று.


விளக்கம்:


விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை.




பழமொழி : 


எல்லா இன்பத்துக்கும் பின்பு ஒரு துன்பம் உண்டு / எதுவும் நிரந்தரம் இல்லை...


Every pleasure has a pain



பொன்மொழி:


If you want your dreams to come true then WAKE UP...


 உங்கள் கனவு நனவாக வேண்டுமா? விழித்து எழுங்கள்!


அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


கிரேவின் நோயுடன் தொடர்புடைய சுரப்பி - தைராய்டு சுரப்பி

மனித ஆண்களின் மூளையின் எடை சுமார் - 1400 கிராம்

செல்லினைக் கண்டறிந்தவர் - இராபர்ட் ஹூக்

உட்கருவைக் கண்டுபிடித்தவர் - இராபர்ட் பிரெளன்

செல் கொள்கையை முன் மொழிந்தவர்கள் - தியோடர் ஸ்ச்வான், ஜேக்கப் ஸ்லீடன்



ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Jackel - நரி 

Jackfruit - பலாப்பழம் 

Jaggery - வெல்லம் 

Jewelery - நகை 

Joke - நகைச்சுவை 


ஆரோக்கியம்


சர்க்கரை உட்கொள்ளலை வரம்பிடவும்:

ஆரோக்கியமான உணவுக்கு, சர்க்கரைகள் உங்கள் மொத்த ஆற்றல் உட்கொள்ளலில் 10%க்கும் குறைவாக இருக்க வேண்டும். 5% க்கும் குறைவாகக் குறைப்பது கூடுதல் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.

குக்கீகள், கேக்குகள் மற்றும் சாக்லேட் போன்ற இனிப்பு தின்பண்டங்களுக்கு பதிலாக புதிய பழங்களைத் தேர்ந்தெடுப்பது சர்க்கரையின் நுகர்வு குறைக்க உதவுகிறது.

குளிர்பானங்கள், சோடா மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள பிற பானங்கள் (பழச்சாறுகள், கார்டியல்கள் மற்றும் சிரப்கள், சுவையூட்டப்பட்ட பால்கள் மற்றும் தயிர் பானங்கள்) ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதும் சர்க்கரையின் உட்கொள்ளலைக் குறைக்க உதவுகிறது.



இன்றைய சிறப்புகள்


மார்ச் 12


1954 – சாகித்ய அகாதெமி இந்திய அரசினால் தொடங்கப்பட்டது.


2006 – தென்னாபிரிக்கா ஒரு நாள் பன்னாட்டுத் துடுப்பாட்டமொன்றில் 438/9 ஓட்டங்களைப் பெற்று ஆஸ்திரேலியாவை (434) வென்று சாதனை படைத்தது.



பிறந்த நாள் 

-



நினைவு நாள் 

-


சிறப்பு நாட்கள்


மின்வெளித் தணிக்கைக்கு எதிரான உலக நாள் (எல்லைகளற்ற செய்தியாளர்கள், பன்னாட்டு மன்னிப்பு அவை ஆகியவற்றால் 2009 இல் கோரப்பட்டது)


மர நாள் (சீனா, தைவான், மாக்கடோனியக் குடியரசு)



நீதிக்கதை


மந்திர மணி 


முன்னொரு காலத்துல ஒரு நதிக்கு பக்கத்துல ஒரு கிராமம் இருந்தது. அந்த கிராமத்தில் இருக்கிற எல்லோரும் ரொம்ப கஷ்டப்பட்டு வேலை செய்து பணம் சம்பாதிச்சாங்க. 


அந்த கிராமத்துல ராமு என்று ஒரு பையன் தன் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தான். அவன் ஒரு மாடு மேய்க்கிற பையன், அவன் ரொம்ப நல்லா பாடுவான். தினமும் காலையில் எல்லா மாடுகளையும் மேச்சலுக்காக காட்டுக்கு கூட்டிட்டு போவான். 


அந்த காட்டுல ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. மாடுகள் புற்களை மேய்ந்து கொண்டு இருக்கும் போது, அவன் அந்த மரத்துக்கு கீழே உட்கார்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டே பாடுவான். சாயங்காலம் வரைக்கும் மாடுகளை மேய்த்து விட்டு தன் முதலாளி கிட்ட மாடுகளை கூட்டிட்டு வருவான். 


அந்த வேலைக்கு தினமும் அவன் முதலாளி ஒரு ரூபாய் கொடுத்தார்.  அந்த காசை எடுத்துகிட்டு அவன் வீட்டுக்கு வருவான். அவன் வீட்டில் அம்மாவும், தம்பியும் இருந்தாங்க. அவங்க வீட்டுல சம்பாதிக்கிற ஒரே ஒரு ஆள் அவன் தான்.




ஒரு நாள் மாடுகளை காட்டுக்கு கூட்டிட்டு போகும்போது ஒரு ஆள் அங்கே இருந்த ஆல மரத்தை வெட்டிக் கொண்டு இருந்தார். அதை பாத்த உடனே ராமுக்கு ரொம்ப கோபம் வந்தது. 


அந்த ஆள் மரத்தை வெட்டாமல் இருக்க ராமுக்கு ஒரு யோசனை வந்தது. உடனே அந்த ஆள் அருகில் சென்று புத்திசாலித்தனமா சொன்னான். “இந்த மரத்த பத்தி உனக்கு தெரியாதா, ரொம்ப வருடங்களுக்கு முன்னாடி இந்த மரத்துக்கு ஒரு சாமியார் ஒரு ஆசிர்வாதம் கொடுத்தார். யாரவது இந்த மரத்தை வெட்டினா உடனே இந்த மரத்துக்கு உயிர்வந்து வெட்டுகிறவர்களை கொன்றுவிடும்” என்றான். 


ராமு சொன்னதை கேட்ட அந்த ஆள் அவன் சொன்னதை அப்படியே நம்பி பயந்து ஓடிப் போனான். கொஞ்ச நேரம் கழித்து உர்ண்மையிலே அந்த ஆலமரத்திற்கு உயிர் வந்து ராமுவுக்கு நன்றி சொல்லி அவனுக்கு ஒரு மேஜிக் பெல்லை பரிசாக கொடுத்தது. அதுக்கு ராமு “இது ஒரு சாதாரண பெல் இதை வைத்து என்ன பிரயோசனம்” என்றான். 


“இது ஒன்றும் சாதாரண பெல் இல்லை. இது ஒரு மேஜிக் பெல் நீ இத வச்சு என்ன வேணும்னாலும் சாப்பிடலாம். ஆனால் இதை ஒரு நாளைக்கு ஒரு முறை தான் பயன்படுத்த முடியும்” என்று சொன்னது மரம். ராமு அந்த பெல்லை எடுத்துக்கிட்டு சாயங்காலமா மாடுகளை முதலாளி கிட்ட திருப்பிக் கொண்டு வந்து விட்டு விட்டு வீடு திரும்பினான். 




அவனுடைய அம்மாவும், தம்பியும் ரொம்ப நேரமா சாப்பிடாம பசியோட ராமுக்காக காத்துக்கிட்டு இருந்தாங்க. ராமு வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் அவனோட அம்மா “மகனே ஏன் இவ்வளவு தாமதமாக வந்த என்ன ஆச்சு” என்று கேட்டார்கள். அதற்கு ராமு நடந்ததை எல்லாத்தையும் அம்மாகிட்ட சொல்லிவிட்டு “இனி நாம் சாப்பாடு பத்தி கவலையே பட வேண்டாம்மா நமக்கு என்ன வேண்டும் என்றாலும் சாப்பிடலாம்னு” அந்த பெல்ல அட்டிகிட்டே சொன்னான். உடேன சுவையான சாப்பாடு அவங்க முன்னாடி வந்தது அந்த ராத்திரி அவங்க நல்லா சாப்பிட்டுட்டு துங்கினார்கள். 


அடுத்த நாள் காலை ராமு வேலைக்கு கிளம்பி போயிட்டான். ஆனால் அந்தப் பெல்லை வீட்லயே விட்டுட்டு போயிட்டான். சாயங்காலம் வீட்டுக்கு வரும்போது ராமு ரொம்ப பசியோட வந்தான். அந்தப் பெல்லை வைத்து ருசியான சாப்பாடு சாப்பிடலாம் என்று அவன் நினைத்தான். ஆனால் அவனுடைய அம்மாவும், தம்பியும் முன்னாடியே பெல்ல அடிச்சு சாப்பாட சாப்பிட்டுட்டு ராமுவுக்கு ரொம்ப கொஞ்சம் சாப்பாடு வச்சிருந்தாங்க. 


பெல்ல ஒரு நாளைக்கு ஒரே முறை தான் உபயோக படுத்த முடியும். அதனால் ராமுவால எதுவும் பண்ண முடியவில்லை. அந்த சாப்பாடு ராமுக்கு போதுமானதாக இல்லை. அதனால் அவன் ரொம்ப கோவமாக இருந்தான். 


“இந்த மேஜிக் பெல் என்னுடையது, என் அம்மாவும், தம்பியும் நல்லா சாபிட்டுட்டு எனக்கு கொஞ்ச சாப்பிட வைச்சிடாங்க. அதனால நான் இனி இந்த பெல்ல என்னுடனே வச்சுக்க போறேன்” என்று ரொம்ப சுயநலமா யோசித்தான் ராமு. அடுத்த நாள் காலைல பெல்லை அவனுடனே கொண்டு போனான். அவன் அம்மாவும், தம்பியும் பெல்லை வீடு முழுவதும் தேடுனாங்க ஆன கிடைக்கவில்லை.



சாயங்காலம் ராமு வீட்டுக்கு திரும்பி வந்ததும் ராமுவோட தம்பி ராமுவிடம் “அண்ணா எனக்கு ரொம்ப பசிக்குது, நான் ரொம்ப நேரமா நீ கொண்டு வந்த பெல்லை தேடிட்டு இருக்கேன் ஆனால் எவ்வளவு தேடியும் அது கிடைக்கல” என்று சொன்னான். 


உடனே தன்னோட சட்டை பாக்கெட்டில் இருந்து அந்த பெல்லை எடுத்து தம்பி கிட்ட காட்டினான் ராமு. இதை பார்த்து கொண்டிந்த ராமுவோட அம்மா அவன்கிட்ட ரொம்ப கோவப்பட்டாங்க. “நீ இந்த பெல்லை உன்னுடன் கொண்டு சென்றாயா!, உன் தம்பி காலையிலிருந்து ஒன்றுமே சாப்பிடவில்லை. 



உன்னோட சுயநலத்துக்காக எங்களை இப்படி விட்டுட்டு போய்விட்டாயே!” என்று கேட்டார்கள். ராமு உடனே தன்னுடைய தப்பை உணர்ந்து தன் அம்மா கிட்ட மன்னிப்பு கேட்டான். “அம்மா நேற்று எனக்கு நீங்க போதுமான சாப்பிட வைக்கவில்லை. அதனாலதான் சுயநலமாய் யோசித்தேன். இன்னொரு முறை நான் இப்படி சுயநலமாக என் வாழ்க்கையில் எப்பவும் செய்ய மாட்டேன்”  என்று சொல்லி அந்த பெல்லை அம்மாகிட்டயே கெடுத்துட்டான். 


இந்த கதையோட நீதி என்னவென்றால் நம்ம எப்பவுமே சுயநலமா யோசிக்க கூடாது.




இன்றைய முக்கிய செய்திகள் 


12-03-2024 


ரூ.65 கோடி வரி நிலுவை பிடித்த விவகாரத்தில் வருமான வரித்துறைக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் காங்கிரஸ் கட்சி மேல்முறையீடு...


மக்களவை தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் (CAA) அமலுக்கு வந்ததாக ஒன்றிய அரசு அறிவிப்பு...


மாணவர்கள் பள்ளியிலேயே ஆதார் எண் பெறுவதற்கு புதிய பதிவுகள் , புதுப்பித்தல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...


சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த படம் உள்ளிட்ட 7 ஆஸ்கர் விருதுகளை வென்று குவித்துள்ளது ‘ஓப்பன்ஹைமர்’ திரைப்படம்...



Today's Headlines:

12-03-2024


Congress appeals in Delhi High Court against Income Tax Department in Rs 65 crore tax arrears... 


With the Lok Sabha elections coming soon, the Union Government has announced that the Citizenship Amendment Act (CAA) will come into effect... 


Issue of guidelines regarding new registrations, renewals for students to get Aadhaar number at school... 


The movie 'Oppenheimer' has won 7 Oscars including Best Director, Best Actor, Best Picture...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...