கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

+2 முடித்த மாணவிகளுக்கு அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் கட்டணமில்லாத இரண்டாண்டு செவிலியர் பயிற்சி...




  +2 முடித்த மாணவிகளுக்கு அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் கட்டணமில்லாத இரண்டாண்டு செவிலியர் பயிற்சி...


 அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் ஈராண்டு செவிலியர் பயிற்சிக்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது.  +2 முடித்த எந்த ஒரு மாணவியும் பயிற்சியில் சேரலாம். பயிற்சிக் காலத்தில் ஊக்கத் தொகையும் வழங்கப் படும். ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே… பயிற்சி முடிந்தபின் மூன்றாண்டுகள் அரவிந்த் மருத்துவமனையில் பணி செய்வது கட்டாயம். அந்த மூன்றாண்டுப் பணிக் காலத்திலும் ஊதியம் வழங்கப்படும்.


இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க, கீழ்க்காணும் இணைப்பை பயன்படுத்தவும்


https://aravind.org/mlop-recruitment/#1615894571217-5819322e-7a8e   


பயிற்சி மாணவியரைத் தேர்வு செய்யும் நேர்காணல் 30 ஜூலை அன்று நடைபெறும்.


நேர்காணலின்போது எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள்:

• +2 மதிப்பெண் பட்டியல் (Original + Xerox copy)

• ஆதார் அட்டை ((Original + Xerox copy)

• Transfer Certificate – TC (Original + Xerox copy).        


மாவட்ட கருவூல அலுவலர் தலைமையில் வருமான வரி பிடித்தம் தொடர்பாக நடைபெற்ற ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகளுக்கான கூட்டத்தின் முக்கிய விவரங்கள்...

 

மாவட்ட கருவூல அலுவலர் தலைமையில் வருமான வரி பிடித்தம் தொடர்பாக நடைபெற்ற ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகளுக்கான கூட்டத்தின் முக்கிய விவரங்கள்...


 இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கருவூல அலுவலர் தலைமையில் வருமான வரி பிடித்தம் தொடர்பாக ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகளுக்கான கூட்டம் நடைபெற்றது..


 முக்கிய விவரங்கள்:


1. ஓய்வூதியம் மாதம் 62500 கீழ்.... வருடத்திற்கு 7 லட்சத்து ஐம்பதாயிரம்  ரூபாய்க்கு கீழ் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு... புதிய திட்டத்தின் கீழ் வருமான வரி பிடித்தம் செய்யப்பட மாட்டாது.

2. மாதம் ரூபாய் 62501 க்கு மேல்... வருடத்திற்கு ஏழு லட்சத்தி 50 ஆயிரத்து ஒன்றுக்கு மேல் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வருமான வரி பிடித்தம் செய்யப்படும்.

3. இதன்படி மூன்று லட்சத்திற்கு மேல் ஆறு லட்சத்திற்குள் 5%

4. ஆறு லட்சத்துக்கு மேல் 9 லட்சம் வரை 10%

5. ஒன்பது லட்சம் முதல் 12 லட்சம் வரை 15 சதவீதம்

6. 12 லட்சம் முதல் 15 லட்சம் வரை 20 சதவீதம்

7. இவ்வாறு கூடிக்கொண்டே போகும்

8. அனைத்து ஓய்வூதியம் பெறும் அலுவலர்களும்.. பான் நம்பர்... ஆதார் நம்பர்.. ரேஷன் கார்டு.. உடனடியாக இணைக்கப்பட வேண்டும்.

9. இணைக்கவில்லை எனில் இந்த மாத ஓய்வூதியம் கிடைக்கப் பெறாது.

10. அனைவரும் "களஞ்சியம் ஆப்" டவுன்லோட் செய்து ஓய்வூதிய விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்.

11. மேலும் பான் நம்பரும் இணைத்துக் கொள்ளலாம்.

12. தெரியாத அலுவலர்கள் மாவட்ட கருவூலம் அல்லது சார்நிலை கருவூல அலுவலகத்தை அணுகி பான் நம்பரை இணைத்துக் கொள்ளலாம்.

13. குடும்ப ஓய்வூதிய காரர்களுக்கு வருமான வரி பிடித்தம் செய்யப்பட மாட்டாது.

14. பான் எண் இணைக்க இந்த மாதம் பத்தாம் தேதி கடைசி நாள் ஆகும்..

15. வருமான வரி பிடித்தல் செய்வதற்கு இரண்டு முறைகள் உள்ளன ஒன்று  பழைய முறை.

16. புதிய முறை இரண்டாவது முறையாகும்.

17. புதிய முறையில் ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஊதியம்.+ அகவிலைப்படி + மருத்துவ படி.. இதன் கூட்டுத்தொகை மாதம் ஒன்றிற்கு ரூபாய் 62,500  க்கு மேல் இருப்பின் வருமான வரி பிடித்தம் செய்யப்படும்.. வேறு எந்த கழிவுகளும் கிடையாது..

18. ரூபாய் 62,500 க்கு கீழ் ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் இரண்டாவது முறையே சிறப்பானதாகும்...

19. மாதம் ரூபாய் 62,500 க்கு மேல் ஊதியம் பெறுபவர்கள் பழைய முறையா புதிய முறையா என்று ஆலோசித்து அதற்கேற்ப வருமான வரி பிடித்த முறையில் தேர்வு செய்து கொள்ளலாம்..

20. இந்த செய்தியை படிக்கும் ஓய்வூதியதாரர்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களோ பான் எண்ணை இணைக்காவிடில் உடனடியாக இணைக்க செய்யுங்கள்...


          நன்றி..


ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் இடமாறுதல் கலந்தாய்வை நடத்தக் கூடாது - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் அறிக்கை...


 பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை  

ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல்

இடமாறுதல் கலந்தாய்வை நடத்தக் கூடாது:

அது அவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம்!


தமிழ்நாட்டில் அரசு  பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள்,  தொழிற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பணியிட மாறுதல் கலந்தாய்வுகள்  மே மாதம் 24-ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை மொத்தம் 30 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.  ஆசிரியர்களை  கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் செய்வது வரவேற்கத் தக்கது. ஆனால், அதில் கடைபிடிக்கப்படும் அணுகுமுறை மிகவும் தவறானதும், அநீதியானதும் ஆகும்.


ஆசிரியர்கள் பணியிட மாறுதலில் கடைபிடிக்கப்படும் அடிப்படை நடைமுறை, ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு  வழங்கி விட்டு, அதனால் ஏற்படும் காலியிடங்களையும் சேர்த்து கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பது தான். இது தான் தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கம் ஆகும். ஆனால்,  2021-ஆம்  ஆண்டில்  திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நடைமுறையை காற்றில் பறக்கவிட்டு, பதவி உயர்வு வழங்குவதற்கு முன்பாகவே பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தும் புதிய  நடைமுறையை புகுத்தியிருக்கிறது.


கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாகவே ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.  பதவி உயர்வு பெறுபவர்களுக்கு, அந்த நேரத்தில் காலியாக உள்ள இடங்களில்  அவர்களுக்கு விருப்பமான  இடத்தை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது தான் விதி ஆகும். அது அவர்களின் உரிமை. அப்படி செய்வது தான் பணியிட மாறுதலில்  குழப்பங்களைத் தடுக்கும்.  


ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் நேரடியாக பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப் பட்டால்,  அதற்கு முன் காலியாக உள்ள அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு விடும்.  அத்தகைய சூழலில் பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஒதுக்கீடு செய்ய போதிய இடங்கள் இருக்காது. அதனால், விருப்பம் இல்லாமல், அதிகாரிகளால் ஒதுக்கப்படும்  இடங்களில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்படும்.  அதுமட்டுமின்றி,  ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் போது அவர்கள் ஏற்கனவே வகித்து வந்த பணியிடம் காலியாகி விடும். அதனால்,  அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் பாதிக்கப்படுவார்கள்.


ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு  வழங்காமல்,  பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவதன் நோக்கமே, பணியிட மாறுதல் முடிவடைந்த பிறகு  பதவி உயர்வு வழங்குவதன் மூலம் ஏற்படும் காலியிடங்களில் தங்களுக்கு வேண்டியவர்களை பணம் வாங்கிக் கொண்டு இடமாறுதலில் அமர்த்தலாம் என்பது தான் என்று குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. அந்தக் குற்றச்சாட்டுகளை  புறந்தள்ளி விட முடியாது.


2021-ஆம் ஆண்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததன் காரணமே ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தான். அவர்களின் பணியிட மாறுதல் நடைமுறையில் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த  நடைமுறையை மாற்றுவது அவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். எனவே, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள நடைமுறையை ரத்து செய்து விட்டு, பதவி உயர்வு வழங்க வேண்டிய ஆசிரியர்களுக்கு முதலில் பதவி உயர்வு வழங்கி விட்டு,  அதனால் ஏற்படும் காலியிடங்களையும் சேர்த்து ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று  வலியுறுத்துகிறேன்.


வல்லவனுக்கு வல்லவன் - இன்றைய சிறுகதை...



வல்லவனுக்கு வல்லவன் - இன்றைய சிறுகதை...


 ஒரு 83 வயது பாட்டி, படுக்கையில் படுத்துக்கொண்டு, தனது 87 வயதான கணவரிடம் கூறினார்:


"இங்க பாருங்க, நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன், கேரேஜ் லைட் அணைக்கவில்லைன்னு நினைக்கிறேன். நீங்க போய் கேரேஜ் லைட்டை ஆஃப் பண்ணிட்டு வாங்க".


முதியவர் மிகவும் சிரமப்பட்டு படுக்கையில் இருந்து எழுந்து, ஜன்னலைத் திறந்து பார்த்தார், ஐந்தாறு திருடர்கள் தனது கேரேஜ் கதவை உடைக்க முயற்சிப்பதைக் கண்டார்.


பெரியவர் அங்கிருந்து அருகில் உள்ள காவல் நிலையத்தை ஃபோனில் அழைத்தார்: "ஹலோ...... எனது முகவரியை எழுதிக் கொள்ளுங்கள். வீட்டில் நாங்கள் இரண்டு வயதான கணவன் மனைவி மட்டுமே இருக்கிறோம். இப்போது ஐந்து அல்லது ஆறு திருடர்கள் எங்கள் கேரேஜ் கதவை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு போலீஸ் குழுவை சீக்கிரம் அனுப்புங்கள்."


மறுபக்கத்திலிருந்து காவல் அதிகாரியின் குரல் வந்தது: "உங்கள் முகவரியை குறித்துக் கொண்டோம். எங்களிடம் தற்போது காவலர்கள் யாரும் இல்லை. நாங்கள் ஒரு போலீஸ் டீமுடன் தொடர்பு கொண்டவுடன், அவர்களை உங்கள் வீட்டிற்கு அனுப்புகிறோம்."


இதைக் கேட்டு, பெரியவர் ஏமாற்றம் அடைந்தார், ஆனால் மறுபுறம், கேரேஜின் பூட்டை உடைக்கும் பணியில் திருடர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.


இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, பெரியவர் மீண்டும் காவல் நிலையத்தை அழைத்தார்: "அய்யா..... இப்போது யாரையும் அனுப்ப வேண்டியதில்லை. ஐந்து திருடர்களையும் சுட்டு விட்டேன்" என்று நிதானமாகக் கூறினார்.


போலீஸ் ஸ்டேஷனில் ஒரே பரபரப்பு. ஐந்து நிமிடங்களில், ஒரு போலீஸ் குழு, ஒரு ஹெலிகாப்டர், ஒரு சிறப்பு மருத்துவர், மூன்று மருத்துவர்கள் மற்றும் இரண்டு ஆம்புலன்ஸ்களுடன், முதியவரின் வீட்டை அடைந்தது.


ஐந்து திருடர்களும் கைது செய்யப்பட்டனர்.


பின்னர் போலீஸ் குழுவின் தலைவர் பெரியவரை அணுகி கேட்டார், "நீங்கள் அந்த ஐந்து திருடர்களையும் சுட்டுக் கொன்றதாகச் சொன்னீர்கள், ஆனால் நாங்கள் அவர்களை உயிருடன் பிடித்துள்ளோமே?"


முதியவர் பதிலளித்தார்: "நீங்கள் கூடத்தான் சொன்னீர்கள் போலீஸ் டீம் எதுவும் இல்லை என்று".


மூத்த குடிமக்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்...


ஓய்வூதிய பலன்களைப் பெற முடியாதா - 1000 தலைமையாசிரியர்கள் அதிர்ச்சி...


 ஓய்வூதிய பலன்களைப் பெற முடியாதா - 1000 தலைமையாசிரியர்கள் அதிர்ச்சி...



அரசுப் பேருந்துகளில் UPI வசதி - தமிழ்நாடு அரசு அறிவிப்பு...

அரசுப் பேருந்துகளில் UPI வசதி - தமிழ்நாடு அரசு அறிவிப்பு...



கட்டாய வருமான வரி பிடித்தம் இம்மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது. தவறுதலாக Regime தேர்வு செய்தவர்கள் மாற்ற முடியாது - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை அலுவலர் கடிதம்...

 

கட்டாய வருமான வரி பிடித்தம் இம்மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது. தவறுதலாக Regime தேர்வு செய்தவர்கள் மாற்ற முடியாது - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை அலுவலர் கடிதம்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தானாக வருமான வரி கணக்கிடும் முறையில் மே மாதமும் வரி பிடித்தம் செய்யப்படும், பழைய முறைப்படி வருமான வரி செலுத்துபவர்கள் 15 ம் தேதிக்குள் சேமிப்பை காட்டலாம்,  மேலும் ஒருமுறை தேர்வு செய்யப்பட்ட Regime ஐ மாற்ற இயலாது எனவும் அறிவிப்பு...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம் :தீ...