கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.07.2024...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.07.2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:

பால் :பொருட்பால்

அதிகாரம்:கேள்வி

குறள் எண்:414

கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை.

பொருள்: நூல்களைக் கற்கவில்லையாயினும், கற்றறிந்தவரிடம் கேட்டறிய வேண்டும்;
அஃது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்தபோது ஊன்றுகோல் போல் துணையாகும்.



பழமொழி :
No rain, no grains.

மாரியல்லாது காரியமில்லை



இரண்டொழுக்க பண்புகள் :

*எல்லோரிடமும் மரியாதையாகவும் இனிமையாகவும் பேசுவேன்.

*யாரிடமும் கெட்ட வார்த்தைகளை பேச மாட்டேன்.



பொன்மொழி :

ஆயிரம் வீண் வார்த்தைகளை விட பயனுள்ள இதமான ஒரு நல்ல வார்த்தை சிறந்தது

- புத்தர்.



பொது அறிவு :

1. நமது கால் பாதங்களில் எத்தனை எலும்புகள் இருக்கின்றன?

விடை: 16 எலும்புகள்

2. பரம்பு மலையை ஆண்ட மன்னர்?

விடை: பாரி



English words & meanings :

occupy-ஆக்கிரமிப்பு,

capture-கைப்பற்று



வேளாண்மையும் வாழ்வும் :

உடலுக்கு தீங்கற்ற உணவு உற்பத்திகளை மேற்கொள்வதற்கும், ஒரு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் இயற்கை வேளாண்மை அவசியம்.



ஜூலை 10

சீகன் பால்க் அவர்களின் பிறந்தநாள்

சீகன் பால்க் (Bartholomäus Ziegenbalg, ஜூலை 10, 1682 - பிப்ரவரி 23, 1719) என்பவர் செருமனியைச் சேர்ந்த லூத்தரன் பாதிரியார். தமிழ்நாட்டிற்குச் சென்ற முதலாவது புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத போதகர் ஆவர். 1714 ஆம் ஆண்டு பர்த்தலோமேயு சீகன்பால்குவினால் முதன்முதலில் தமிழில் பைபிள் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்திய மொழிகளில் தமிழில்தான் விவிலியம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறியது. முதன் முதல் இந்தியாவில் அச்சகத்தை ஆரம்பித்தவர். முதன் முதல் இந்தியாவில் காகித ஆலையை ஆரம்பித்தவர். முதன் முதல் தமிழ் நாள்காட்டியை அச்சிட்டு வெளியிட்டவர். முதன் முதல் தமிழ் உரைநடையை அறிமுகப்படுத்தியவர். முதன் முதல் பெண்கள் பள்ளியை ஆரம்பித்தவர்.முதன் முதல் ஏழை பிள்ளைகளுக்கு காப்பகத்தை துவங்கியவர். முதன் முதல் பெண்களுக்கு தையல் கூடம் ஆரம்பித்தவர். முதன் முதல் மதிய உணவு வழங்குவதை துவங்கியவர். முதன் முதல் பள்ளி பிள்ளைகளுக்கு பாடநூலை அச்சிட்டவர்.  முதன் முதல் தமிழ் புரோட்டஸ்டன்ட் ஆலயத்தை கட்டினவர். முதன் முதல் பல் சமய உரையாடலை துவங்கினவர்.முதன் முதல் தமிழ் அகராதியை உருவாக்கினவர். முதன் முதல் தென்னிந்திய கடவுள்களின் வரலாற்றை எழுதியவர்.



நீதிக்கதை

காலத்தின் அருமை

விஜயபுரி என்ற நாட்டை விவேகவர்மன் என்ற அரசன் ஆண்டு வந்தார். அவர் அரசவையில் நன்கு கற்றிருந்த அறிஞர்கள் இடம் பெற்றிருந்தனர்.

அரசர்  ஒரு நாள் அந்த அறிஞர்களை பார்த்து, “அறிஞர் பெருமக்களே வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்தது  எது?” என்று கேட்டார்.

இந்த கேள்வியை கேட்டதும், முதல் அறிஞர், “வாழ்க்கையில் மிகவும் மதிப்பு  வாய்ந்தது உயிர்தான். உயிரில்லை என்றால் நம் வாழ்க்கையில் ஒன்றும் அனுபவிக்க முடியாது” என்றார்.

இரண்டாவது அறிஞர், “மன்னா, வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்தது அறிவுதான். அறிவில்லாமல் ஒருவரும் வாழ முடியாது” என்று பதிலளித்தார்.

மூன்றாவது அறிஞர் எழுந்து, “அரசே, வாழ்க்கையில் பொறுமை இன்றி நாம் ஒருகணம் கூட வாழ முடியாது. எனவே மிகவும் விலை உயர்ந்தது பொறுமை தான்” என்று பதில் அளித்தார்.

நான்காவது அறிஞர், “அரசே, நம் பூமிக்கு வேண்டியஆற்றல் சூரியனிடமிருந்து தான் கிடைக்கிறது. சூரியன் இல்லை என்றால் பூமியில் உயிர்கள் கிடையாது. எனவே சூரியன்தான் உயர்ந்தது” என்றார்.

ஐந்தாவது அறிஞர், “வாழ்க்கையில் அனைத்தும் இருந்தும் அன்பு இல்லாவிட்டால் மனிதன் வாழ்ந்து ஒரு பயனும் இல்லை. எனவே அன்பு தான் மிக மதிப்பு வாய்ந்தது” என்றார்.

இறுதியாக ஓர் அறிஞர் எழுந்து, “அரசே, காலம் தான் அனைத்தையும் விட மிக மிக மதிப்பு வாய்ந்தது. நமக்கு காலம் இல்லையானால் உயிர் இருந்து என்ன பயன்?. அறிவை பயன்படுத்த நமக்கு நேரம் எது?. பொறுமையாக இருக்க ஏது அவகாசம்? சூரியனை பயன்படுத்த ஏது காலம்?. அன்பு காட்ட ஏது வாய்ப்பு? எனவே உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்தது காலம்தான்”.

ஆகவே, அதனை வீணாக்காமல் நம்முடைய ஆக்க பணிகளுக்கு எந்தெந்த வகையில் எல்லாம் அதனை பயன்படுத்திக் கொள்ள முடியுமோ? அந்தந்த வகையில் எல்லாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

அரசர்,ஆறாவது அறிஞர் கூறிய கருத்துதான் சிறந்தது என்று பாராட்டி அந்த கருத்தை ஏற்றுக் கொண்டார். காலத்தின் அருமையை குறித்து மிகவும் அழகாக விளக்கிய ஆறாவது அறிஞருக்கு அவர் மனம் விரும்பும் வகையில் எண்ணற்ற பரிசுகளை கொடுத்து பாராட்டினார்.

நீதி : காலம்தான் இவ்வுலகிலே விலைமதிக்க முடியாதது காலத்தை தவற விட்டவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாது. எனவே இளமையிலே நன்கு கற்க வேண்டும்.



இன்றைய செய்திகள்

10.07.2024

¶ தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

¶ வணிக வரித்துறையில் இந்த நிதியாண்டின் முதல் 3 மாதங்களில், கடந்த நிதியாண்டை விட ரூ.3,727 கோடி கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

¶ அமீபா நுண்ணுயிரியால் மூளையழற்சி பாதிப்பு; ஏரி, குளங்களில் யாரும் குளிக்க வேண்டாம்: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.

¶ பொது இடங்களில் கல்லூரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் 2 ஆண்டு சிறை தண்டனை: ரயில்வே காவல்துறை எச்சரிக்கை.

¶ கேரளாவின் சொந்த விமான நிறுவனம்: ‘ஏர் கேரளா’ சேவைக்கு மத்திய அரசு அனுமதி.

¶ மும்பைக்கு ரெட் அலர்ட்: ரயில், விமான சேவைகள் பாதிப்பு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

¶ விம்பிள்டன் டென்னிஸ்: குரோஷியாவின் டோனா வெக்கிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்.

¶ கோபா அமெரிக்க கால்பந்து: பனாமாவை பந்தாடி அரையிறுதிக்கு முன்னேறிய கொலம்பியா.


Today's Headlines

¶ The Tamil Nadu government has ordered the transfer of 18 IPS officers in Tamil Nadu.

¶ In the first 3 months of this financial year, Minister B. Murthy said that in the first 3 months of this financial year, an additional revenue of Rs.3,727 crore has been earned over the last financial year.

¶ Amoebic encephalitis; No one should bathe in lakes, ponds: Public Health Department advises.

¶ 2-year jail term for college students who engage in violence in public places: Railway Police warns

¶ Kerala's Own Airline: Central Govt approves 'Air Kerala' service.

¶ Red alert for Mumbai: Rail, flight services affected; Holidays for schools and colleges.

¶ Wimbledon Tennis: Croatia's Donna Vekic advances to semi-finals.

¶ Copa America football: Colombia advanced to the semi-finals by beating Panama.

Prepared by

Covai women ICT_போதிமரம்


புதுச்சேரியில்‌ அரசுப் பள்ளிகளுக்கான நேரம் மாற்றம் - 15-07-2024 முதல் நடைமுறை...



புதுச்சேரியில்‌ அரசுப் பள்ளிகளுக்கான நேரம் மாற்றம் - வருகிற‌ 15ம்தேதி முதல் அமலுக்கு வருகிறது...


புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள், தற்போது காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 3:45 மணி வரை நடைபெற்று வருகிறது. 


இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் நேரங்களை மாற்றி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, பள்ளி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.


அதன்படி, காலை 9 மணிக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மதியம் 12.25 மணிக்கு இடைவேளை விடப்படுகிறது. 


அதன் பிறகு 1.35 மணிக்கு தொடங்கி மாலை 4:20 மணி வரை பள்ளிகள் செயல்பட உள்ளன.


இந்த புதிய நடைமுறை வருகிற 15ம் தேதி காமராஜர் பிறந்தநாள் அன்று அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இ.நி.ஆ காலிப்பணியிடங்கள் விவரம் வெளியீடு...


தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரம் வெளியீடு...


DEE - SGT Vacant List as on 09-07-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தமிழ்நாடு காவல்துறையில் 18 இ.கா.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வெளியீடு...




 தமிழ்நாடு காவல்துறையில் 18 ஐ.பி.எஸ். அலுவலர்கள் பணியிட மாற்றம்...


சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர்கள் இருவரும் பணியிட மாற்றம்...


சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் (வடக்கு) அஸ்ரா கர்க் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு நரேந்திரன் நாயர் நியமனம்


சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் (தெற்கு) பிரேம் ஆனந்த் சின்ஹா மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு கண்ணன் நியமனம்


தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு அபின் தினேஷ் மோதக் நியமனம்


வடக்கு மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர் மாற்றப்பட்டு அப்பொறுப்புக்கு அஸ்ரா கர்க் நியமனம்


தெற்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


₹200, ₹500 ஆகிய ரூபாய் நோட்டுகளை ஒழிக்க வேண்டும் - சந்திரபாபு நாயுடு...

₹200, ₹500 ஆகிய ரூபாய் நோட்டுகளை ஒழித்து டிஜிட்டல் கரன்சியை ஊக்குவிக்க வேண்டும் - சந்திரபாபு நாயுடு...


கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் செய்து சம்பாதித்த பணத்தில் அரசு நிர்வாக சிஸ்டத்தை வாங்க பார்க்கின்றனர். ரூ.500, ரூ.200 நோட்டுகளை ரத்து செய்து டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த வேண்டும் என்று ரூ.5,40,000 கோடி கடன் திட்டம் வெளியிட்டு முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார். ஆந்திர மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு கூட்டம், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமராவதி தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. 227வது எஸ்.எல்.பி.சி கூட்டத்தில் 2024-2025 நிதியாண்டுக்கான ரூ.5,40,000 கோடி கடன் திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டார்.


பின்னர் அவர் பேசியதாவது: டிஜிட்டல் பரிவர்த்தனையில் முதல் மூன்று மாநிலங்களில் ஆந்திர அரசு உள்ளது. அதனை முதல் இடத்திற்கு கொண்டு வர வேண்டும். வங்கிகளும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் ஊழலை குறைத்து உற்பத்தி பெருக்கலாம். நாட்டில் உள்ள கருப்புப் பணத்தை அகற்ற பிரதமர் மோடி அரசு 2016ல் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை திரும்பப் பெற்றது. பணத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க ரூ.2000 நோட்டுகள் கொண்டு வரப்பட்டு, அதன் பிறகு அவற்றையும் ரத்து செய்தது. கடந்த ஐந்தாண்டுகளில் ஊழல் செய்து சம்பாதித்த பணத்தில் அரசு நிர்வாக சிஸ்டத்தை வாங்க பார்க்கின்றனர். அவர்களின் ஊழலை தடுக்க ரூ.500, ரூ.200 நோட்டுகளை ரத்து செய்து டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தி ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


* ரூ.1,29,503 கோடி இழப்பு


ஆந்திர மாநிலம் அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு மின்சாரத் துறை குறித்த வெள்ளை அறிக்கையை நேற்று வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த ஐந்தாண்டுகளில் மின்துறை முற்றிலும் சீரழிந்தது. திறமையற்ற ஆட்சியில் என்ன நடக்கும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் ரூ.32,166 கோடி கட்டண உயர்வால் மக்கள் மீது சுமையை ஏற்றப்பட்டது. மின் துறையில் ரூ.49,596 கோடி கடன் ஏற்பட்டுள்ளது. கட்டண உயர்வால் 1 கோடியே 53 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்துறையில் மக்களுக்கும், அரசுக்கும் ரூ.1,29,503 கோடி இழப்பு ஏற்பட்டது. மின் வினியோகத்தில் ஏற்படும் இழப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.07.2024...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.07.2024 - School Morning Prayer Activities...



திருக்குறள்:

பால் : பொருட்பால்

அதிகாரம்:கேள்வி

குறள் எண்:413

செவி உணவிற் கேள்வி யுடையார் அவிஉணவின்
ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து.

பொருள்: செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும்,
அவி உணவைக்கொள்ளும் தேவரோடு ஒப்பாவர்.



பழமொழி :
Necessity knows no low.

ஆபத்துக்கு பாவம் இல்லை



இரண்டொழுக்க பண்புகள் :

*எல்லோரிடமும் மரியாதையாகவும் இனிமையாகவும் பேசுவேன்.

*யாரிடமும் கெட்ட வார்த்தைகளை பேச மாட்டேன்.



பொன்மொழி :

கல்வி என்பது ஆற்றில் எதிர்நீச்சல் போடுவது
போன்றது. முன்னேறிக்கொண்டே போக வேண்டும் நிறுத்தினால் பின்னுக்கு அடித்துத் தள்ளும்.

- - சீனப்பழமொழி



பொது அறிவு :

1. ”செந்தமிழ் நாடெனும் போதினிலே”-பாடலின் ஆசிரியர்?

விடை: பாரதியார்

2. கட்டிடங்களுக்கு வெள்ளையடிப்பதற்குப் பயன்படுவது

விடை: கால்சியம் ஹைட்ராக்சைடு



English words & meanings :

deviation-வேறுபாடு,

  engage-ஈடுபாடு



வேளாண்மையும் வாழ்வும் :

இயற்கை வேளாண்மையில் தரமான விதை, மண்புழு உரம், பசுந்தாள் உரம், சாணம், உதிர்ந்த இலைகள், மக்கும் குப்பைகள்உபயோகப்படுத்தப்பட்ட காபீ தூள் போன்ற இயற்கை உரங்கள் பயன்படுத்தப்படுவதால் நல்ல மகசூல் கிடைப்பதோடு, சத்துள்ள காய், கனிகளும் கிடைக்கின்றன. நிலங்களின் தன்மையை மீட்டு எடுப்பதற்கும் இயற்கை வேளாண்மை பெரிதும் உதவுகிறது.



நீதிக்கதை

நம் வார்த்தை நம் கையில்

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் அவருக்கு இரவில் தூங்கும் பொழுது  வந்த கனவில் ராஜாவிற்கு பற்களெல்லாம் விழுந்து  பொக்கை வாயுடன் இருப்பதைப் போல் கண்டார்.

காலை எழுந்தவுடன் ராஜாவுக்கு கனவின் பலன் என்ன? என்று அறிந்து கொள்ள  ஆர்வமாக இருந்தது. எனவே தன் நாட்டில் உள்ள ஜோதிடர் ஒருவரை அழைத்தார். தன் கனவின் பலனை கேட்டார்.

அவரும் சாஸ்திரங்களை எல்லாம் ஆராய்ந்து  கனவின் பலனாக அரசே தங்களுக்கு முன்னரே தங்கள் உறவினர்கள் ராணி இளவரசர், இளவரசி அனைவரும் இறந்து விடுவார்கள் என்று கூறினார்.

இதனைக் கேட்ட அரசர் கோபமடைந்து அவருக்கு தண்டனை விதித்தார். ஆனாலும் அரசருக்கு கனவின் பலனை சரியாக அறிந்து கொள்ள விருப்பம் ஏற்பட்டது.

எனவே, மற்றொரு ஜோதிடரை அழைத்து  கனவின் பலனை கூறுமாறு கேட்டார்.

அவரும் சாஸ்திரங்கள் எல்லாம் ஆராய்ந்து அரசே! தங்கள்  உறவினர்கள் ராணி,இளவரசர், இளவரசி ஆகியோரை விட தாங்கள் நீண்ட வருடங்கள் நிறைவாக வாழ்வீர்கள் என்று கூறினார்.

அரசர் மிகவும் சந்தோசம் அடைந்து அவருக்கு பொன்னும் பொருளையும் பரிசாக கொடுத்தார்.

இரண்டு ஜோதிடர்களும் கூறியது ஒரே  கருத்தைத்தான். ஆனால்  பயன்படுத்திய வார்த்தைகள் தான் வேறு.



இன்றைய செய்திகள்

09.07.2024

√ மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஒருநபர் குழு அமைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

√ தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேலை: எச்சரிக்கையுடன் இருக்க தமிழக காவல்துறை அறிவுறுத்தல்.

√ வணிக பிரிவு கட்டிட மின் இணைப்புக்கு பணி நிறைவு சான்று பெறுவதில் விலக்கு: தமிழக மின்வாரியம் அறிவிப்பு.

√ உணவுப் பொருள் பாக்கெட்டுகளில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு அளவை பெரிய எழுத்தில் அச்சிட இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் ஒப்புதல்.

√ மலைப்பகுதியில் சீனாவுக்கு பதிலடி கொடுக்க ‘ஜோராவர்’ இலகுரக பீரங்கி தயார்: 2027-ல் ராணுவத்தில் சேர்க்கப்படும்.

√ இந்தியா, அமெரிக்கா எச்சரித்த பிறகும் வெளிநாட்டு ஆய்வு கப்பலுக்கு தடை விதிக்க இலங்கை மறுப்பு.

√ இந்தோனேசியாவின் சட்டவிரோத தங்க சுரங்கத்தில் மண் சரிந்து 11 பேர் உயிரிழப்பு.

√ கோபா அமெரிக்க கால்பந்து: பனாமாவை பந்தாடி அரையிறுதிக்கு முன்னேறிய கொலம்பியா.

√ விம்பிள்டன் டென்னிஸ்; காலிறுதிக்கு முன்னேறினார் லோரென்சோ முசெட்டி மற்றும் ஜானிக் சின்னர்.


Today's Headlines

√ Tamil Nadu Chief Minister M.K.Stalin has ordered to set up a one-man committee to amend the Central Government's new criminal laws at the state level.

√ Working in Southeast Asian countries: Tamil Nadu police advises to be cautious.

√ Exemption in obtaining completion certificate for commercial section building electrical connection: Notification of Tamil Nadu Power Board.

√ Food Safety and Quality Commission of India approves to print sugar, salt and fat content in big letters on food packets.

√ 'Zoravar' light artillery ready to retaliate against China in the hills: to be inducted in 2027

√ Sri Lanka refuses to ban foreign survey ship despite warnings from India, US

√ Landslide kills 11 at illegal gold mine in Indonesia

√ Copa America: Colombia beats Panama and reached the semi-finals

√ Wimbledon Tennis;  Lorenzo Musetti and Janic Sinner advanced to the quarter-finals.

Prepared by

Covai women ICT_போதிமரம்


59 உதவித் திட்ட அலுவலர்கள் (APO - HSS HM Cadre) மற்றும் 67 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை DC - BT Cadre) தாய்த் துறைக்கு திரும்ப அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 24909/ சி4/ இ2/ 2024, நாள்: 08-07-2024 - இணைப்பு: அரசாணை (நிலை) எண்: 156, நாள் : 03.07.2024...

 

59 உதவித் திட்ட அலுவலர்கள் (APO - HSS HM Cadre) மற்றும் 67 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை DC - BT Cadre) தாய்த் துறைக்கு திரும்ப அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 24909/ சி4/ இ2/ 2024, நாள்: 08-07-2024 - இணைப்பு: அரசாணை (நிலை) எண்: 156, நாள் : 03.07.2024...



>>> பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 24909/ சி4/ இ2/ 2024, நாள்: 08-07-2024 & அரசாணை (நிலை) எண்: 156, நாள் : 03.07.2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

November 14 - Jawaharlal Nehru's birthday

  நவம்பர் 14 - ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்  November 14 - Jawaharlal Nehru's birthday சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1...