கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

“சண்டாளர்” என்ற பெயரை பயன்படுத்த தடை...

 




⚠️⚠️⚠️


“சண்டாளர்” என்ற பெயரை பயன்படுத்த தடை...



*🔹🔸தமிழ்நாட்டில் “சண்டாளர்” என்ற சாதிப் பெயரை வசைபாடவோ, நகைச்சுவையாகவோ பயன்படுத்த கூடாது என்று தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.*



▪️. பட்டியலின சாதிப் பிரிவு பட்டியலில் 48ஆவதாக சண்டாளர் என்ற சாதிப் பெயர் உள்ளது.



▪️. எனவே, பட்டியலினத்தில் உள்ள இந்த பிரிவினரை வசை பாடுவதற்கு பயன்படுத்த கூடாது,



▪️. மீறி பயன்படுத்தினால் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளது...



'சண்டாளர்' என்ற சமூகத்தின் பெயரை நகைச்சுவைக்காகவோ, பொதுவெளியிலோ இனி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, " இந்தியாவின் சாதியக் கட்டமைப்பில் ஒவ்வொரு சாதிக்கும் வெவ்வேறு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இப்பெயர்கள் சமூக மதிப்பையும், அவமதிப்பையும் சுட்டுவதாக உள்ளன. தங்களின் சாதியின் பெயர் இழிவாக இருப்பதாகக் கருதும் சாதிகள், அப்பெயரை மாற்றிக் கொள்வதும், அதற்கு அரசு ஒப்புதல் கொடுத்து அரசாணை வெளியிடுவதும் தொடர்ந்து நிகழ்கின்றன.மனிதர்கள் உயிர்வாழ்வதற்கு தேவையான அடிப்படையான பொருட்களை உற்பத்தி செய்தல், சடலங்களை அடக்கம் செய்தல் போன்ற சமூகப் பயனுள்ள பணிகளை செய்யும், சமூகக் குழுக்களை இழிவான பெயர்களில் அழைப்பதும், அரசியல் மேடைகளில் பிறரை வசைபாட பயன்படுத்துவதும், கலை இலக்கியங்கள், திரைப்பட நகைச்சுவை காட்சிகளிலும், திரைப்பட பாடல்களிலும் அப்பெயர்களை பயன்படுத்துவதும் பரவலாக உள்ளது.


இது, இப்பெயர்களில் உள்ள மக்களை புண்படுத்துவதாகும். தவிர இது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்ற எண்ணமும் பொதுமக்களிடம் இல்லை. மேலும், பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி(Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act, 1989) பொதுவெளியில் பட்டியல் சாதிப் பெயர்களை இழிவான பொருளில் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். தமிழகத்தின் சில பகுதிகளிலும், இந்தியாவிலும் 'சண்டாளர்' என்ற பெயரில் மக்கள் உள்ளனர்.தமிழகத்தில் பட்டியல் சாதியினர் அட்டவணையில் இப்பெயர் 48-ஆவது இடத்தில் உள்ளது. அண்மைக்காலங்களில் பிறரை இழிவுபடுத்தும் நோக்கில் இப்பெயர் பொது வெளியில் சமூக ஊடகங்களில் அழுத்தமாக பேசப்படுவதை காண முடிகிறது. எனவே, இழிவுபடுத்தும் நோக்கத்திலோ, நகைச்சுவையாகவோ, அரசியல் மேடைகளிலோ சண்டாளர் என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்துவோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஆணையம் பரிந்துரைக்கிறது". இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.





சென்னை அரசு அருங்காட்சியகத்தில் ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம்...

 சென்னை அரசு அருங்காட்சியகத்தில் ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம்...



மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும் - அரசு அறிவிப்பு...

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும் - அரசு அறிவிப்பு...



ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு காலியாக உள்ள பணியிடங்களில் கூடுதல் பொறுப்பு - வட்டாரக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...

 

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு காலியாக உள்ள பணியிடங்களில் கூடுதல் பொறுப்பு - வட்டாரக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - BEO Proceedings...


 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் அதிகம் காலியாக உள்ள நிலையில் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் கூடுதலாக 1 முதல் 3 பள்ளிகளுக்கு பொறுப்பு தலைமை ஆசிரியராக செயல்படுவார்...


கிருஷ்ணகிரி மாவட்டம் , ஒசூர் கல்வி மாவட்டம் (தொடக்கக்கல்வி) , தளி ஒன்றியம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 2024-2025ஆம் கல்வியாண்டு தகவல் மேலாண்மை முறையை இணையதள வழி மூலம் கலந்தாய்வு நடைபெற்றது.


 கலந்தாய்வு மூலம் தலைமையாசிரியர் மாறுதலில் சென்றுள்ளதால் கீழ்க்கண்ட பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் பணியிடம் காலி ஏற்பட்ட காரணத்தால் இப்பள்ளிகளுக்கு மாணவர் நலன் மற்றும் நிர்வாக நலன் கருதி கீழ்க்கண்ட பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்களுக்கு நிதி அதிகாரத்துடன் கூடிய அனைத்து பொறுப்புகளுடன் கூடுதல் பொறுப்பு வழங்கப்படுகிறது . மேலும் கீழ்க்கண்ட தலைமையாசிரியர்கள் 08.07.2024 முதல் கலம் 4 ல் குறிப்பிட்டுள்ள பள்ளிக்கு முற்றிலும் தற்காலிகமாக கூடுதல் பொறுப்புடன் பணிபுரிய ஆணையிடப்படுகிறது...





நடுநிலைப்பள்ளிகளில் 6, 7, 8ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் - ஊராட்சித் தலைவர் கோரிக்கை...


 நடுநிலைப்பள்ளிகளில் 6, 7, 8ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் - ஊராட்சித் தலைவர் கோரிக்கை - நாளிதழ் செய்தி...




கர்நாடகாவில் கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்...

 தனியார் நிறுவனங்களின் குறிப்பிட்ட பிரிவுகளில் கன்னடர்களுக்கு மட்டுவே வேலை - கர்நாடக அமைச்சரவையில் மசோதாவுக்கு ஒப்புதல்...


கர்நாடகாவில் கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்...


கர்நாடக சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்


அரசு, தனியார் துறைகளில் சி மற்றும் டி பிரிவு பணியிடங்களுக்கு 100% கன்னடர்களை நியமிக்கும் வகையில் மசோதா நாளை தாக்கல்...






கர்நாடகாவில் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு... முக்கிய அம்சங்கள் என்ன?


இந்த புதிய மசோதாவின்படி, கர்நாடகாவில் 15 ஆண்டுகள் வசித்து, கன்னடத்தில் பேச, எழுத, படிக்க தெரிந்தவர்கள் அனைவரும் கன்னடர்கள் என்று அம்மாநில அரசு தெளிவுபடுத்தியுள்ளது.


கர்நாடகாவில் கன்னடர்களுக்கே முன்னுரிமை தரும் வகையில் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.


கர்நாடகா மாநிலத்தில், பிற மாநிலத்தவர் அதிக வேலைவாய்ப்புகளை பறிப்பதாக அதிக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதற்காக அம்மாநிலத்தில் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா தற்போது அமைச்சரவையின் ஒப்புதலை பெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பட்டியலிட உள்ளது.


இடஒதுக்கீடு எவ்வளவு?



கர்நாடகாவில் உள்ள தனியார் நிறுவனங்களில் மேலாண்மை பதவிகளில் 75 சதவீதம், அதற்கு கீழுள்ள பதவிகளில் 50 சதவீதம் கன்னடர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த இடஒதுக்கீடு ஐடி நிறுவனங்கள் உட்பட அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தனியார் நிறுவனங்களும் தங்களது வேலைக்கு பயன்படுத்தும் குரூப் ‘சி’, குரூப் ‘டி’ தொழிலாளர்கள் கன்னடர்களாகவே இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



யார் கன்னடர்கள்?

இந்த புதிய மசோதாவின்படி, கர்நாடகாவில் 15 ஆண்டுகள் வசித்து, கன்னடத்தில் பேச, எழுத, படிக்க தெரிந்தவர்கள் அனைவரும் கன்னடர்கள் என்று அம்மாநில அரசு தெளிவுபடுத்தியுள்ளது.


அதே சமயம், மேல்நிலைப்பள்ளியில் கன்னடத்தை ஒரு பாடமாக படிக்காதவர்கள் கன்னட மொழித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மீறினால் என்னவாகும்?

இந்த சட்டத்தை மீறும் தனியார் நிறுவனங்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், அரசு குறிப்பிட்டுள்ள இடஒதுக்கீடு வரும்வரை அந்த தனியார் நிறுவனம் தினமும் ரூ.100 அபராதமாக கட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது ட்விட்டர் பதிவில், “மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் 100 சதவீத கன்னடர்களை கட்டாயமாக சி, டி கிரேடு பணிகளில் அமர்த்துவது தொடர்பான மசோதாவுக்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கன்னட தேசத்தில் கன்னடர்கள் வேலை பறிக்கப்படுவதைத் தவிர்த்து, தாயகத்தில் சுகபோக வாழ்வைக் கட்டியெழுப்ப வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்பதே நமது அரசின் விருப்பம். நாங்கள் கன்னட ஆதரவு அரசு. கன்னடர்களின் நலனில் அக்கறை காட்டுவதே எங்கள் முன்னுரிமை.




முதல்வர் சித்தராமையாவின் ட்வீட் (அது இப்போது நீக்கப்பட்டதாகத் தெரிகிறது) குறித்து கர்நாடக தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் எஸ் லாட் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகிறார், "நிர்வாகத்தில் (நிலை) 50% பேருக்கு இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது, மேலாண்மை அல்லாத நிலையில், 70% பேருக்கு வேலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது... அத்தகைய திறன்கள் இல்லை என்றால் , ஆட்களை அவுட்சோர்ஸ் செய்து அவர்களுக்கு இங்கு வேலை கொடுக்கலாம் ஆனால், உள்ளூரில் கிடைக்கும் திறன்களுக்கு முன்னுரிமை கொடுக்க அரசு ஒரு சட்டம் கொண்டு வர முயற்சிக்கிறது"



“தனியார் துறை நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.


இது குறித்து வரும் நாட்களில் மறுபரிசீலனை செய்து முடிவு எடுக்கப்படும்”


- கர்நாடக முதல்வர் சித்தராமையா X தளத்தில் பதிவு



பள்ளிக்கல்வித்துறை செயலாளர், உள்துறைச் செயலாளர் உள்ளிட்ட 15 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை G.O.Rt.No. 3471, Dated : 16-07-2024 வெளியீடு...

 

 பள்ளிக்கல்வித்துறை செயலாளர், உள்துறைச் செயலாளர் உள்ளிட்ட 15 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை G.O.Rt.No. 3471, Dated : 16-07-2024 வெளியீடு...



>>> Click Here to Download G.O.Rt.No. 3471, Dated : 16-07-2024...




உள்துறை செயலாளராக இருந்த அமுதா ஐஏஎஸ்  வருவாய் துறை செயலாளராக நியமனம்.


புதிய உள்துறை செயலாளராக தீரஜ் குமார் நியமனம்.


சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக பணியிட மாற்றம்.


சென்னை மாநகராட்சி ஆணையராக குமரகுருபரன் நியமனம்.


தாம்பரம் மாநகராட்சி கமிஷனராக பாலச்சந்திரன், பள்ளிக்கல்வித்துறை செயலாளராக மதுமதி நியமனம்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் பொருட்பால் அதிகாரம்: த...