கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...



10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...


IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

DATED : 10.07.2024

CORAM :

THE HONOURABLE MR.R.MAHADEVAN, ACTING CHIEF JUSTICE

and

THE HONOURABLE MR. JUSTICE MOHAMMED SHAFFIQ

Writ Petition Nos. 26084, 26133, 27571, 27807, 28291, 32081, 32218, 32698 and 35350 of 2023

and

Writ Miscellaneous Petition Nos. 35331 and 7354 of 2023



>>> உயர்நீதிமன்றத் தீர்ப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 சென்னை உயர்நீதிமன்றத்தில் TET  தேர்ச்சி பெற்று மீண்டும் பணியில் சேர TRB EXAM எழுத வேண்டும் என்ற தமிழக அரசு நிலைப்பாட்டை எதிர்த்து 410 பேர் வழக்கு தொடுத்தனர்.


அந்த வழக்கில் நாங்கள் ஏற்கனவே சீனியாரிட்டி லிஸ்டில் உள்ளோம் மேலும் TET தேர்ச்சி பெற்றுள்ளோம் தற்போதைய முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கழக அரசு வந்தால் TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படும் என்று உறுதி கூறினார்


ஆனால் தற்போது TRB EXAM பணி நியமனத்திற்கு வைக்கப்படுகிறது அதிலிருந்து எங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் நேரடியாக TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தனர்.


 அந்த வழக்கின் தீர்ப்பு  வழங்கப்பட்டது. அதில் வழக்கு தொடுத்த 400 பேருக்கு பணி நியமனம் செய்வதில் முன் உரிமை அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது...


410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் - சென்னை ஐகோர்ட் உத்தரவு...


10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு, தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


போட்டித் தேர்வு மூலம் தேர்வு என்ற அரசாணை அடிப்படையில், தகுதி தேர்வு அறிவிப்பை எதிர்த்து 410 ஆசிரியர்கள் மனு தாக்கல் செய்தனர்.


இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது.


இந்நிலையில், 2014 முதல் 2017ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில், 410 ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடைந்து, 10 ஆண்டாக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


மனு மீதான விசாரணையின்போது, முந்தைய காலத்தில் துவங்கிய தேர்வு நடைமுறையை கைவிட முடியாது என்றும், போட்டித்தேர்வு மூலம் தேர்வு என்று 2018ம் ஆண்டு முடிவை எதிர்வரும் காலத்தில் அமல்படுத்தியிருக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.


அதனால் 10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு, தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


188 பக்க தீர்ப்பு நகல் TET தேர்ச்சி பெற்றோர்  Seniority இல் உள்ளோர் நீதிமன்றம் சென்ற நிலையில்  410  பேருக்கும் பணி வழங்க வேண்டும் வெயிட்டேஜ் மற்றும் இட ஒதுக்கீட்டு முறையில் நீதிமன்றம் தீர்ப்பு...


தமிழ்நாடு அரசின் யு.பி.எஸ்.சி UPSC முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் அறிவிப்பு - 2024...



தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் - நான் முதல்வன் திட்டம் - போட்டி தேர்வு பிரிவு -  தமிழ்நாடு அரசின் யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் அறிவிப்பு - 2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மாணவர்களிடம் மாற்று சான்றிதழ் கேட்டு வற்புறுத்தக் கூடாது - உயர்நீதிமன்றம்...



மாணவர்களிடம் மாற்று சான்றிதழ் Transfer Certificate கேட்டு வற்புறுத்தக் கூடாது - உயர்நீதிமன்றம்...


ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் சேரும் மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழ் கேட்டு வலியுறுத்தக் கூடாது என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப பள்ளி கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சுயநிதி பள்ளிகள் சங்கம் சார்பில் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வேறு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள், மாற்றுச்சான்றிதழ் கோரி தற்போது படிக்கும் பள்ளிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும்.


அந்த விண்ணப்பங்கள் பெற்ற ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டும். எந்த ஒரு காரணத்திற்காகவும் மாற்றுச்சான்றிதழ் வழங்க மறுக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.


நீட் 2024 தேர்வு முடிவு மாநிலம்/ நகரம்/ மையம் வாரியாக வெளியீடு...

நீட் 2024 தேர்வு முடிவு மாநிலம்/ நகரம்/ மையம் வாரியாக வெளியீடு...


 Publishing the result of NEET UG 2024 State/ City/ Centre-wise...


தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை!


உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, exams.nta.ac.in என்ற இணையதளத்தில் தேசிய தேர்வு முகமை முடிவுகளை வெளியிட்டது...





EMIS NEW UPDATE - BREAD WINNING -- விபத்தில் பெற்றோரை இழந்த மாணவர்கள் - கல்வி உதவித்தொகை பெற EMIS வலைதளத்தில் விண்ணப்பித்தல்...



EMIS NEW UPDATE - BREAD WINNING -- விபத்தில் பெற்றோரை இழந்த மாணவர்கள் - கல்வி உதவித்தொகை பெற EMIS வலைதளத்தில் விண்ணப்பித்தல்...


📝விண்ணப்பிக்க தேவையான விவரங்கள்


👉 இறப்பு சான்றிதழ்

👉வாரிசு சான்றிதழ்

👉Bonafide Certificate

👉Birth Certificate

👉FIR

👉Post Mortem Report

👉Student Aadhaar

👉Living parent Aadhaar

👉Student Ration Card

👉Income certificate

👉Bank pass book


இந்த Document/சான்றிதழ்களை தயார் நிலையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்கவும்..


மிக முக்கிய குறிப்பு:


👉மாணவர்களின் பெற்றோர் 


1️⃣வாகன விபத்து

2️⃣தீ விபத்து

3️⃣கட்டிட விபத்து 


➡️போன்ற விபத்தில் இறப்பு / முழு ஊனம் அடைந்திருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்...


👉 விபத்து தொடர்பான FIR COPY & POST MORTEM REPORT அவசியம்...


⬅️வயது முதிர்வு

⬅️இயற்கை மரணம்

⬅️தற்கொலை


போன்ற காரணங்களால் இறப்பு ஏற்பட்டிருந்தால் விண்ணப்பிக்க கூடாது...



திருமணமாகாத அரசு ஊழியர், மரணமடைந்தால் அவரது சகோதரர் அல்லது சகோதரிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கலாம் - அரசுக் கடிதம்...


 திருமணமாகாத அரசு ஊழியர், ஓய்வுபெறுவதற்கு முன் மரணமடைந்தால் அவரது திருமணமாகாத சகோதரர் அல்லது சகோதரிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கலாம்...

கருணை அடிப்படையிலான பணி நியமனம்

Compassionate Ground Basis Appointment...



>>> அரசு கடிதம் எண்.11379 / க்யூ 1 / 2019-1 . நாள் 26.06.2019 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தகவல் அறியும் உரிமைச் சட்டம் , 2005 விரைவு அஞ்சல் AHA இப தலைமைச் செயலகம் , சென்னை -9 . தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை


 அரசு கடிதம் எண்.11379 / க்யூ 1 / 2019-1 . நாள் 26.06.2019 


அனுப்புநர்:

திருமதி . பா . சித்ரா , பி . ஏ . பொது தகவல் அலுவலர் அரசு சார்புச் செயலாளர் , 


பெறுநர் 

செல்வி.க.சத்யப்பிரியா , த.பெ.காளைலிங்கம் , காடனேரி கிராமம் , பாகனேரி அஞ்சல் , சிவகங்கை மாவட்டம் . ( இ )


அம்மையீர் , 

பொருள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் , 2005- தகவல் கோரியது தொடர்பாக , 


பார்வை :

 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான மனு நாள் 11.06.2019 . ( இத்துறையில் கிடைக்கப்பெற்ற நாள் 13.06.2019 . பார்வையில் கண்ட தங்களது மனுவில் கோரப்பட்ட தகவலுக்கு கீழ்க்கண்ட விளக்கம் அளிக்கப்படுகிறது 


திருமணமாகாத ஒரு அரசு வாழியர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு இறந்து விட்டால் அவரது திருமணமாகாத சகோதரர் அல்லது சகோதரிக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கலாம் என அரசாணை ( நிலை ) எண் .134 , தொழிலாளர் மற்றம் வேலைவாய்ப்புத் துறை , நாள் 22.10.1998 - ல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது . 

 


அதன் நகல் இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது . 


தங்கள் உண்மையுள்ள ,


 பொதுத் தகவல் அலுவலர் | அரசு சார்புச் செயலாளர் . ✍🏼



தங்கம் இருப்பு வைத்திருக்கும் டாப் 10 நாடுகள்...



 எந்த நாட்டில் எவ்வளவு தங்கம் இருக்குனு தெரிஞ்சுக்கோங்க.. 🪙


தங்கம் இருப்பு வைத்திருக்கும் Top 10 நாடுகள்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. Released to set up new fire stations at 7 places

 7 இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள் அமைக்க அரசாணை வெளியீடு Promulgation of decree to set up new fire stations at 7 places ▪️ கருமத்தம்பட...