கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

01.08.2024 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலையாசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் - DSE செயல்முறைகள்...

 

 01.08.2024 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலையாசிரியர்  பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் - DSE செயல்முறைகள்...


As on 01.08.2024 Post Graduate Teacher Post Vacancies Based on Students Strength - DSE Proceedings...





பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.08.2024...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.08.2024 - School Morning Prayer Activities...



திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்:446

தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்தது இல்.

பொருள்: தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளவனாய் நடக்கவல்ல ஒருவனுக்கு, அவனுடைய பகைவர் செய்யக்கூடிய தீங்கு ஒன்றும் இல்லை.


பழமொழி :
அலைகடலுக்கு அணை போட முடியுமா?

Against God’s wrath no castle is proof


இரண்டொழுக்க பண்புகள் :

*ஆபத்தில் இருப்பவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்.

*துன்பப்படுபவர்களைக் கண்டால் அவர்களுக்கு ஆறுதல் கூறுவேன்.


பொன்மொழி :

" யார் சொல்லியிருந்தாலும், எங்குப் படித்திருந்தாலும், நானே சொன்னாலும், உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே"-----தந்தை பெரியார்


பொது அறிவு :

1. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்  யார்?

டாக்டர் முத்துலட்சுமி

2.இந்தியாவின் முதல் சபாநாயகர் யார்?

ஜி.வி.மவ்லாங்கர்


English words & meanings :

greet-வாழ்த்து,

compliment-பாராட்டு


வேளாண்மையும் வாழ்வும் :

ஆடி மாதத்தில் விதை விதைத்து விவசாயம் செய்தால், தை மாதத்தில் அறுவடை செய்யலாம். பயிர்களுக்கு தேவையான சூரிய ஒளியும், பிராண வாயுவும், நல்ல மழையும் கிடைத்து, விவசாயிகளுக்கு சிறப்பான அறுவடையைக் கொடுக்கும்.



ஆகஸ்ட் 07

இரவீந்தரநாத் தாகூர் அவர்களின் நினைவுநாள்


இரவீந்தரநாத் தாகூர்

இரவீந்தரநாத் தாகூர் (Rabindranath Tagore) வங்காள மொழி: রবীন্দ্রনাথ ঠাকুর, மே 7, 1861- ஆகஸ்ட் 7, 1941) புகழ் பெற்ற வங்காள பல்துறையறிஞர் ஆவார்.[1][2] 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். மேலும் இந்தியக் கலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். இவர் கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஆவார். [3] இந்த கவிதைத் தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரேயாவார். மேலும் ஐரோப்பியர் அல்லாத ஒருவர் இந்த விருதைப் பெறுவதும் இதுவே முதல் முறையாகும்.


கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நினைவுநாள்

முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi, சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018)[2] இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார். 1969,1971,1989,1996,2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றினார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர்.
கை ரிக்ஷா ஒழிப்புத்திட்டம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத்திட்டம், எல்லா மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகள், கலை அறிவியல் கல்லூரிகள் பல பல்கலைக்கழகங்கள் எனப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர்.

இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்தி, 50 விழுக்காட்டில் 30 விழுக்காடு பிற்படுத்தப் பட்டோருக்கும், 20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், 18 விழுக்காடு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும், 3 விழுக்காடு அருந்ததியருக்கும், 3.5 விழுக்காடு இஸ்லாமியருக்கும், 1 விழுக்காடு மலைவாழ் மக்களுக்கும் அளித்து அனைத்து சமூகத்திலும் அடித்தட்டு மக்கள் கல்வி, வேலை வாய்ப்புகளை உறுதி செய்ததனால் மானுட மேம்பாட்டுக் குறியீட்டில் இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது.

நீர்ப்பாசனம், மின்சாரம், வேளாண்மை, தொழிலாளர் நலன், நிலச் சீர்த்திருத்தம் ஆகிய துறைகளில் மேம்பாட்டுத் திட்டங்களை வளர்த்ததால் தமிழ்நாடு உணவு தானிய உற்பத்தியில் பல சாதனைகளைப் படைத்து வருகிறது. சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதாலும், தொழில் துறை முதலீடுகளை ஈர்ப்பதற்கு கலைஞரின் ஆட்சிக்காலங்களில் செயல் திட்டங்களை அறிமுகப்படுத்தியதாலும் தமிழகம் தொழில் துறையிலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் ஒரு சீரான வளர்ச்சியை பெற்றிருக்கிறது.



நீதிக்கதை

நன்றியுணர்ச்சி

வேடன் ஒருவன் வேட்டையாட சென்றான். அவன் விரித்த  வலையில் வழி அறியாமல் வந்த கழுகு ஒன்று மாட்டிக்கொண்டது.

அவன் அந்த கழுகை தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று, அதனுடைய இறக்கைகளை வெட்டிவிட்டு சங்கிலியால் மரத்தில் கட்டி போட்டான்.

அந்த வழியாகச் சென்ற இரக்கம் உள்ள ஒருவர்,  வேடனிடம்  கழுகை காப்பாற்ற எண்ணி வேடனிடம் விலை கொடுத்து கழுகை  தன்னுடைய வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.

புதிய இறக்கைகள் முளைக்கும் வரை பாதுகாப்போடு வளர்த்து வந்தார். புதிய இறக்கைகள் முளைத்த உடன் அதனை காட்டுக்குள் செல்ல அனுமதித்தார்

காட்டுக்குள் சென்ற கழுகு ஒரு முயலை பிடித்து வந்து தனது நன்றியுணர்ச்சியை காண்பிப்பதற்காக தன்னை காப்பாற்றியவருக்கு பரிசாக வழங்கியது.

அதனைப் பார்த்த நரி கழுகிடம் "முயலைப் பிடித்து சென்று வேடனிடம் கொடுத்திருந்தால் மற்றொரு முறை உன்னை  வேட்டையாட மாட்டார்" என்று கூறியது.

அதற்கு கழுகு "அவர் எத்தனை முறை வந்தாலும் என்னை வேட்டையாட வருவார். ஏனெனில்  வேட்டையாடுதல் அவருக்கு தொழில். நான் எனது நன்றியுணர்ச்சியை காண்பிப்பதற்காகவே என்னை காப்பாற்றியவருக்கு பரிசளித்தேன்" என்று கூறியது.


இன்றைய செய்திகள்

07.08.2024

☘️போலி மருத்துவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு.

☘️‘ஜீரோ ஆக்சிடென்ட் டே’ விழிப்புணர்வு பிரச்சார திட்டம்: நாட்டிலேயே முதல் முறையாக சென்னையில் அறிமுகம்.

☘️கோவையில் இந்தியா - ஜெர்மனி கூட்டுப் போர் பயிற்சி: இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகள் பங்கேற்பு.

☘️வங்கதேசத்தில் திடீர் ராணுவ ஆட்சி: பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்.

☘️ஈரானின் எந்த தாக்குதலையும் எதிர்கொள்ள தயார்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு.

☘️பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம்; இந்தியாவின் வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேற்றம்.

☘️பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

☘️வங்காளதேசத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள மகளிர் டி20 உலக கோப்பை வேறு நாட்டுக்கு மாற்றப்படலாம் என்று  தகவல் வெளியாகி உள்ளது.

Today's Headlines

☘️Court orders Tamil Nadu government to crack down on fake doctors with an iron fist.

☘️'Zero Accident Day' Awareness Campaign: Launched in Chennai for the first time in the country.

☘️ India-Germany Joint War Exercise in Coimbatore: England, Spain, France countries also took part.

☘️ Sudden military rule in Bangladesh: Prime Minister Sheikh Hasina who resigned  took refuge in India.

☘️ Ready to face any attack by Iran: Israeli Prime Minister Netanyahu announced.

☘️Paris Olympic Wrestling;  India's Vinesh Bhoga advances to semi-finals.

☘️India's Neeraj Chopra qualified for the final round of javelin at the Paris Olympics.

☘️ It has been reported that the Women's T20 World Cup scheduled to be held in Bangladesh may be shifted to another country.

Prepared by

Covai women ICT_போதிமரம்


இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு முடிந்த (06.08.2024) பின்பு பள்ளி வாரியாக உள்ள காலிப் பணியிடங்கள்...


 இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு முடிந்த (06.08.2024) பின்பு பள்ளி வாரியாக உள்ள காலிப் பணியிடங்கள்...


Secondary Grade Teachers Post Vacancy Details...



மாவட்டம் விட்டு மாவட்டம் இடைநிலை ஆசிரியர்களுக்கு நடைபெற்ற பொதுமாறுதல் கலந்தாய்வு  தமிழகம் முழுவதும் நிறைவு பெற்றது. மீதமுள்ள இடைநிலை ஆசிரியர் SGT Vacant Places காலிப் பணியிடங்கள் மாவட்டம் வாரியாக...


தற்போது ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு வட்டாரம், கல்வி மாவட்டம் என்று தனி தனியாக நடைபெற்று முடிவுற்றது. தற்போது மாவட்ட விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடைபெற்று முடிவற்றது. அனைத்து கலந்தாய்வு முடிவு பெற்றபின் உள்ள காலிப் பணியிடங்கள் பள்ளி வாரியாக வெளியிடப்பட்டுள்ளன.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


1 முதல் 3ஆம் வகுப்புகளுக்கு வளரறி மதிப்பீடு (ஆ) தேதிகள் அறிவிப்பு...

 

 ஒன்று முதல் மூன்றாம் வகுப்புகளுக்கு வளரறி மதிப்பீடு (ஆ) - FA (b) 09-08-2024 முதல் தொடங்கப்பட உள்ளது...


Formative Assessment (b) for Classes 1 to 3  Notification of Dates...



பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் சேர்த்துக் கொள்ளலாம் என அறிவிப்பு...

 பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க வேண்டுமா? 


-அரிய வாய்ப்பு!


பிறப்புச் சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் சேர்த்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


குழந்தை பள்ளியில் சேர, வாக்காளா் அடையாள அட்டை பெற, வயது குறித்து ஆதாரம், ஓட்டுநா் உரிமம் பெற, கடவுச்சீட்டு மற்றும் விசா உரிமம் உள்ளிட்டவற்றுக்கு பிறப்புச் சான்றிதழ் முக்கிய ஆவணமாக உள்ளது.


பிறப்புச் சான்றிதழ் குழந்தையின் சட்டப்பூா்வ சான்றிதழாகும். குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான பிறப்புச் சான்றிதழ் ஆகும்.


அவ்வாறு பிறப்புச் சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயா் பதிவு செய்யாதவா்கள், தங்கள் பெயரை பிறப்புச் சான்றிதழில் 2024-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநரும் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் பதிவாளருமான செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.


மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் முறையிட்டு பிறப்புச் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என்றும், மாவட்ட சுகாதார இணை மற்றும் துணை இயக்குநர்கள் பள்ளி மாணவர்களின் பிறப்புச் சான்றிதழில் பெயர் இருப்பதை உறுதி செய்து, விடுபட்டிருந்தால் மாணவர்கள் வாயிலாக பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து தேவையான ஆவணங்களை கொண்டு பெயர் சேர்க்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 21 நாள்களுக்குள் குழந்தையின் பெற்றோா் அல்லது காப்பாளா் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமுமின்றி பெயா் பதிவு செய்யலாம்.


12 மாதங்களுக்குப் பின் குழந்தையின் பெயரை 15 வருடங்களுக்குள் உரிய காலதாமதக் கட்டணம் ரூ.200 செலுத்தி பதிவு செய்வதற்கு பிறப்பு இறப்பு பதிவுச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.










Dr.Radhakrishnan Awardக்கு விண்ணப்பித்தவர்களின் பெயர் பட்டியல்...


 Dr.Radhakrishnan Awardக்கு விண்ணப்பித்தவர்களின் பெயர் பட்டியல்...



தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களின் பெயர் பட்டியல்..


இவ்வருடம் முதல் EMIS வலைதளம் மூலம்  டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியருக்கான விருது விண்ணப்பம் விண்ணப்பிக்க வழி செய்யப்பட்டு இருந்தது..


அவை Fully Completed, Partially completed 


என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது...



>>> பெயர்ப்பட்டியல் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


செய்திகளின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள புதிய Whatsapp Channel தொடக்கம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு...


 செய்திகளின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள புதிய Whatsapp Channel தொடக்கம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு...


தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகத்தின் whatsapp சேனல் தொடக்கம்...


தமிழ்நாடு அரசின் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கும் தகவல் சரிபார்ப்பகம் தினமும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வெறுப்புப் பிரச்சாரங்கள் மற்றும் போலி செய்திகளைக் கண்டறிந்து மக்களுக்கு உண்மையான தகவல்களைத் தரவுகளோடு பதிவிட்டு வருகிறது. 



எனவே , சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள விரைவுத் துலங்கல் குறியீட்டை ( QR Code ) ஸ்கேன் செய்து பின் தொடரவும் .


👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼



>>> செய்தி வெளியீடு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conducting Practical Exams for Half Yearly Examination - DSE Proceedings

அரையாண்டுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Proceedings of the Director of School Education fo...