2024-2025 ஆம் ஆண்டு முதல் அரையாண்டில் செலுத்த வேண்டிய தொழில் வரி Professional Tax (எந்த மாற்றமும் இல்லை) தொடர்பாக தேனி மாவட்டம், ஹைவேவிஸ் பேரூராட்சி செயல் அலுவலரின் கடிதம்...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
2024-2025 ஆம் ஆண்டு முதல் அரையாண்டில் செலுத்த வேண்டிய தொழில் வரி Professional Tax (எந்த மாற்றமும் இல்லை) தொடர்பாக தேனி மாவட்டம், ஹைவேவிஸ் பேரூராட்சி செயல் அலுவலரின் கடிதம்...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
உச்சநீதிமன்றத்தில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு 09.09.2024 அன்றைக்கு ஒத்திவைப்பு...
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்கு 10கிராம் தங்கப் பதக்கத்துடன் "ஹெலன் கெல்லர் விருது" - அரசாணை (நிலை) எண் : 07, நாள்: 31-07-2024 வெளியீடு...
"Helen Keller Award" for Outstanding Teachers of Education of Students with Disabilities - Ordinance G.O. Ms. No : 07, Dated: 31-07-2024...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மாற்றுத்திறனாளிகள் நலத் துறை - உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று, பார்வை மற்றும் செவித்திறன் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்காக வழங்கப்படும் மாநில விருது 'ஹெலன் கெல்லர் விருது' என்ற பெயரில் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள் நல (மாதிந-2)த் துறை
அரசாணை (நிலை) எண். 07 நாள்: 31.07.2024,
குரோதி, ஆடி-15,
திருவள்ளுவர் ஆண்டு, 2055.
படிக்க :
1. அரசாணை (நிலை) எண்.47, மாற்றுத்திறனாளிகள் நலத் (மாதிந.2) துறை, நாள்.19.10.2015.
2. அரசாணை (பை) எண்.01, மாற்றுத்திறனாளிகள் நல (மாதிந-2)த் துறை, நாள் 29.07.2022.
3. அரசாணை (2ப) எண்.07, மாற்றுத்திறனாளிகள் நல (மாதிந-2)த் துறை, நாள் 28.11.2019.
4. அரசாணை (நிலை) எண்.17, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, நாள் 04.07.2022.
5. மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் அவர்களின் கடிதம் ந.க.எண்.2429/உ.உ.பிரிவு/2024, நாள்.25.06.2024.
ஆணை:
மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று வழங்கப்படும் விருதாளர்களை தேர்ந்தேடுப்பதற்கான வரையறைகள் வெளிடப்பட்டுள்ளன.
2. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில்,
மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள் 7 நிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா (ஆகஸ்ட்-15) மற்றும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று (டி சம்பர்-3) வழங்கப்படும் மாநில விருதுகளுக்கான விருதாளர்களை தேர்வு செய்யும் மாநில அளவிலான தேர்வுக் குழு மாற்றியமைக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
3. மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், 2019-ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவினை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்களில் சிறந்த பணியாளர்களுக்கான மாநில விருதினை 5-லிருந்து 10-ஆக உயர்த்தியும் தொழு நோயிலிருந்து குணமடைந்த பணியாளர் பிரிவினை, நடமாட இயலாதோருக்கான விருது பிரிவுடன் சேர்த்தும் மற்றும் 5 கூடுதல் விருதுகள் வழங்கிட ஏதுவாக தலா 10 கிராம் எடையுள்ள 5 எண்ணிக்கையிலான 22 கேரட் தங்கப்பதக்கமும் பாராட்டு சான்றிதழும் வழங்க நிதி ஒதுக்கீடு...
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள் எழுதிய நூல்கள் அனைத்தும் நூல் உரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமை ஆக்கப்படுகின்றன - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...
உலகெங்கும் வாழும் தமிழர்கள் கலைஞரின் நூல்களை படிக்க வாய்ப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
6 முதல் 8 வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆங்கிலப் பாடவேளையின் பொழுது மொழி ஆய்வகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதை தயவுசெய்து உறுதி செய்யவும்.
மொழி ஆய்வக அமர்வுகள் கேட்பது, வாசிப்பது மற்றும் பேசும் திறன்களை வளர்ப்பதற்கு இன்றியமையாத பகுதியாகும். ஒவ்வொரு வாரமும் தவறாமல் பின்பற்றவும். தயவுசெய்து இந்த செய்தியை தலைமை ஆசிரியர்கள் மூலம் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு அனுப்பவும். நன்றி.
*This is a gentle reminder.* Kindly ensure that all students from 6 to 8 std are taken to the language lab during English period on every Friday. The language lab sessions are an essential part to build listening, reading and speaking skills.
Follow it regularly every week. Kindly forward this message to the concerned teachers through HMs.
Thank you.
Link to the timetable allotment video:
https://d1e5r329t7a85t.cloudfront.net/Timetable%20allotment.mp4
Link to the preparation checklist video:
https://d1e5r329t7a85t.cloudfront.net/Language%20Lab%20Preparedness.mp4
ஹைதராபாத், டெல்லி, ராஜஸ்தான் & அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான CCRT பயிற்சிகளுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
திருக்குறள்:
பால் :பொருட்பால்
அதிகாரம் : காலம் அறிதல்
குறள் எண்489
எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல்.
பொருள் : கிடைத்தற்கரிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரிய செயல்களைச் செய்ய வேண்டும்.
பழமொழி :
Better an open enemy than a false friend
போலி நண்பனை விட நேரிடை எதிரி மேல்
இரண்டொழுக்க பண்புகள் :
*எனக்கு வழங்கப்பட்ட வேலைகளை உரிய நேரத்தில் முடிப்பேன் .
*எனது கடமைகளை சரிவர செய்து, உரிமைகளைப் பெறுவேன்.
பொன்மொழி :
கல்வியின் நோக்கம் மாணவர்களின் மனதை உண்மைகளால் நிரப்புவது அல்ல. அவர்களுக்கு சிந்திக்கக் கற்றுக் கொடுப்பதே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். –ராபர்ட் மேனார்ட் ஹட்சின்ஸ்
பொது அறிவு :
1. முட்டையில் உள்ள செல்களின் எண்ணிக்கை
விடை: ஒரு ஹேப்பிளாய்டு செல்( one haploid cell)
2. தேசிய நலவாழ்வு மற்றும் குடும்ப நல நிறுவனம் அமைந்துள்ள இடம்
விடை: டெல்லி
English words & meanings :
bang-இடி,
tinkle-மணியின் ஒலி
வேளாண்மையும் வாழ்வும் :
சைமன்ஸ் மழைமானி (Symon's Rain Gauge)
அமைப்பு
ஓரிடத்தில் பெய்கின்ற அப்போதைய மழையின் அளவினை அளப்பதற்கு சைமன்ஸ் மழைமானி பயன்படுகின்றது. திறந்த வெளியில் நிலமட்டத்திற்கு மேலே 30 செ.மீ., உயரத்தில், நீளம், அகலம், உயரம் முதலியவை 60 செ.மீ. இருக்குமாறு கான்கிரிட் தளம் அமைக்கப்பட்டிருக்கும். கான்கிரீட் தளத்தின் மையத்தில் கண்ணாடி ஜாடியும் அதனுள் ஒரு புனலும் ஒரு சிலிண்டர் அமைப்பினுள் வைக்கப்பட்டிருக்கும். புனலின் அகன்ற பகுதி சிலிண்டரின் மேல் பகுதியில் இருக்குமாறு அமைக்கப்பட்டிருக்கும். இந்த புனலின் அகன்ற வாய்ப்பகுதியின் பரப்பளவு 200 ச.செ.மீ ஆகும்.
செயல்படும் விதம்
மழை பெய்யும் பொழுது புனலில் விழுகின்ற நீர் மழைமானியில் உள்ள ஜாடியில் சேமிக்கப்படுகின்றது. அதாவது 200 ச.செ.மீ பரப்பளவில் விழுகின்ற மழைநீர் ஜாடியில் சேமித்து வைக்கப்படுகின்றது. அளவு ஜாடியைப் பயன்படுத்தி இதன் கன அளவு கணக்கிடப்படுகின்றது. இதிலிருந்து மழையின் மூலம் நிலம் பெற்ற நீரின் அளவையும் கண்டறியலாம்.
ஆகஸ்ட் 23
அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள் (International Day for the Remembrance of the Slave Trade and its Abolition) ஆண்டு தோறும் ஆகத்து 23 ம் திகதி கொண்டாடப்படுகிறது. இத்தினம் குறிப்பாக 1791 ஆகத்து 22ம் திகதி இரவும் ஆகத்து 23ம் திகதியும் தற்போதைய ஹெய்டி இல் (island of Saint Domingue) இடம் பெற்ற அடிமை வியாபாரத்திற்கு எதிரான கிளர்ச்சியையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் நினைவு கூரும் வகையிலேயே இத்தினம் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
நீதிக்கதை
சக்கரம் தாங்கி
ஒருநாள் நான்கு சீடர்கள் காட்டு வழியாக ஒன்றாக பயணம் செய்து ஆசிரமத்திற்கு சென்றார்கள். சுவாமி பைரவா நந்தா அந்த நான்கு சீடர்களிடம் கேட்டார், “நீங்கள் யார் எதற்காக இங்கே வந்துள்ளீர்கள்?”. அதற்கு அந்த சீடர்கள் சொன்னார்கள், “சுவாமி, உங்களுடைய அதிசய சக்தி பற்றி நாங்கள் கேள்வி பட்டு இருக்கிறோம். உங்களை பார்த்த நாங்கள் மிகவும் சந்தோஷம் அடைகிறோம்”.
“நாங்கள், உங்களுடைய சீடர்களாக இருக்க ஆசைப்படுகிறோம். எங்களுக்கு உங்கள் உதவி தேவை” என்றனர். அதைக்கேட்ட சுவாமி பைரவா நந்தா அவர்களுக்கு உதவி செய்ய முடிவெடுத்தார். அவர் ஆசிரமத்திற்கு உள்ளே சென்று நான்கு மண் வாரி எடுத்துக் கொண்டு வந்தார்.
அந்த நான்கு மண் வாரியை சீடர்களுக்குக் கொடுத்து சொன்னார், “கிராமத்திற்கு அருகில் ஒரு பெரிய குளம் உள்ளது, அந்த குளத்தின் கரையில் ஒரு பெரிய மரம் உள்ளது அந்த மரத்தின் அருகே உள்ள செம்மண்ணை இந்த மண்வாரி வைத்து தோண்டுங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டம் உள்ளதா என்று பார்க்கலாம்“ என்றார்.
அந்த நான்கு சீடர்களும் மண் வாரியை எடுத்துக்கொண்டு குளத்திற்கு அருகில் உள்ள செம்மண்ணை தோண்ட ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு சீடர் அங்கே தோண்டிய இடத்தில்செம்பு இருப்பதை பார்த்து ஆச்சரியம் உற்றார். அவர் மற்ற சீடர்களிடம் சொன்னார் “நமக்கு நிறைய செம்பு கிடைத்துள்ளது. நாம் இதை எடுத்துக்கொண்டு பங்கிட்டுக்கொள்ளலாம்”
என்றார். ஆனால், மற்றொரு சீடர் சொன்னார், “நாம் இங்கே தங்கத்தை தேடி தான் வந்துள்ளோம். அதனால் நீ வேண்டுமென்றால் இதை எடுத்துக் கொண்டு செல் “.
அந்த செம்பை கண்டுபிடித்த முதல் நபர் அதை எடுத்துக் கொண்டு சந்தோஷமாக திரும்பினார். மற்ற மூன்று பேரும் திரும்ப தோண்ட ஆரம்பித்தார்கள். அப்போது மற்றொரு சீடருக்கு வெள்ளி கிடைத்தது. அவர் சந்தோஷத்தில், “ஐயோ கடவுளே! நான் மிகவும் அதிர்ஷ்டம் உள்ளவன் எனக்கு வெள்ளி கிடைத்துள்ளது, என்று சொல்லிக்கொண்டு மற்ற இரண்டு பேரிடம் நாம் இந்த வெள்ளியை எடுத்துக்கொண்டு பங்கிட்டுக் கொள்ளலாம் வாங்க” என்றார்.
ஆனால் மற்ற இருவரும் தங்கம் qகிடைக்கும் வரை தோண்டி பார்க்கலாம், நீ வேண்டும் என்றால் அந்த வெள்ளியை எடுத்துக் கொண்டு செல் என்றனர். அந்த இரண்டாவது சீடரும் கிடைத்த வெள்ளியை எடுத்துக் கொண்டு சந்தோஷமாக சென்றார். மற்ற இரண்டு சீடர்களும் மீண்டும் மண் வாரி எடுத்து தோண்ட ஆரம்பித்தார்கள்.
அப்போது மூன்றாவது சீடர் அங்கே தங்கம் இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தார். அவர் மற்ற சீடரிடம் நாம் இந்த தங்கத்தை எடுத்துக் கொண்டு இங்கிருந்து செல்லலாம் என்றார். ஆனால் அவரோ, “இல்லை இங்கே செம்பு, வெள்ளி, மற்றும் தங்கம் கிடைத்துள்ளது, எனவே இன்னும் தோண்டினால் வைரம் கிடைக்கும்” என்று சொன்னார்.
தங்கம் கிடைத்த சீடர் அந்த தங்கத்தை எடுத்துக் கொண்டு சந்தோஷமாக திரும்பினார். அந்த நான்காவது சீடர் மண்வாரி எடுத்து மீண்டும் தோண்ட ஆரம்பித்தார். தோண்டிக் கொண்டே இருக்கும்போது ஒரு பெரிய ஓட்டை ஒன்று ஏற்பட்டு அந்த ஓட்டைக்குள் அவர் கீழே போய் விழுந்தார். அந்த நான்காவது சீடர் எழும்பி பார்த்தபோது அங்கே ஒரு மனிதர் நின்று கொண்டிருந்தார். அவர் தலையில் ஒரு சக்கரம் சுற்றிக் கொண்டே இருந்தது. அதை பார்த்த இந்த சீடர் கேட்டார், “நீங்கள் யார்? அந்த சக்கரம் ஏன் உங்கள் தலையில் சுற்றிக் கொண்டு உள்ளது?” என்றார்.
அப்படி கேட்டவுடனே அந்த சக்கரம் இந்த சீடர் தலையில் வந்து சுற்ற ஆரம்பித்தது. பேராசை பிடித்த அனைவரும் கடைசியில் இங்கே தான் வருவார்கள். பேராசையால், வைரத்திற்கு ஆசைப்பட்டு, இந்த குழியில் வந்து விழுந்தேன். அந்த சக்கரம் என் தலையில் வந்து சுற்ற ஆரம்பித்தது. இனி ஏதாவது ஒரு பேராசை பிடித்தவன் வந்து இங்கே விழும்போது போது அந்த சக்கரம் உன்னை விட்டு அகன்று விடும்”, என்று கூறிக்கொண்டு அந்த சீடர் வந்த ஓட்டை வழியாக இந்த மனிதன் மேலே சென்றார்.
நீதி: பேராசை பெரும் நஷ்டம்.
இன்றைய செய்திகள்
23.08.2024
* 50 வயதை கடந்த மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு மீண்டும் துறை தேர்வு எழுதுவதில் விலக்கு: தமிழக அரசு ஆணை பிறப்பிப்பு.
* ரூ. 5 ஆயிரத்துக்கு மேல் இருக்கும் மின்கட்டண தொகையை இனி காசோலை அல்லது டிடி மூலம் மட்டுமே செலுத்த முடியும்: தமிழ்நாடு மின்சார வாரியம் தகவல்.
* மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அனைத்து நூல்களையும் தமிழக அரசு சார்பில் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
* உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2-வது 700 மெகாவாட் அணு உலை நேற்று முழு திறனுடன் உற்பத்தியை தொடங்கியது.
* பத்ம விருதுகள் 2025-க்கான விண்ணப்பங்களை செப்டம்பர் 15 வரை சமர்ப்பிக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
* மாஸ்கோ மீது தாக்குதல் நடத்துவதற்கு உக்ரைன் அனுப்பிய 11 ட்ரோனை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா.
* சென்னையில் டேபிள் டென்னிஸ் லீக் போட்டிகள் தொடங்கியது.
* பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு ஒடிசா மாநில அரசு பரிசுத்தொகை வழங்கி கவுரவிப்பு.
* இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்ட பி.சி.சி.ஐ.
Today's Headlines
* Exemption from re-writing departmental exam for differently abled government employees those who have crossed 50 years : Tamil Nadu Govt issued order.
* The payment should be paid only by cheque or DD if the Electricity bill exceeds more than 5000/-
Tamil Nadu Electricity Board Informed.
*Tamil Nadu Chief Minister M. K. Stalin ordered to nationalize all the books of the late former Chief Minister Karunanidhi without any royalty.
* The 2nd indigenously built 700 MW nuclear reactor started production at full capacity yesterday.
* The Union Home Ministry announced that applications for the Padma Awards 2025 can be submitted till September 15.
* Russia shoots down 11 drones sent by Ukraine to attack Moscow
* Table Tennis League starts in Chennai.
* The Odisha State Government felicitated the Indian hockey team who won the bronze medal in the Paris Olympics.
* BCCI released the schedule for 5 Test matches against England.
Prepared by
Covai women ICT_போதிமரம்
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...