மஞ்சளின் மருத்துவப் பயன்கள்...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
2024 – 2025 ஆம் கல்வியாண்டிற்கான எம்.டி. (சித்தா), எம்.டி. (யுனானி) மற்றும் எம்.டி.(ஓமியோபதி) மருத்துவ முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை...
2024 – 2025 ஆம் கல்வியாண்டிற்கான எம்.டி. (சித்தா), எம்.டி. (யுனானி) மற்றும் எம்.டி.(ஓமியோபதி) மருத்துவ முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை...
ஏ.ஐ., வாயிலாக விடைத்தாள் மதிப்பீடு - பல்கலைகளில் அமல்படுத்த திட்டம்...
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (Artificial Intelligence) வாயிலாக விடைத்தாள் மதிப்பீடு - பல்கலைக்கழகங்களில் அமல்படுத்த திட்டம்...
ரயிலை நிறுத்திய நெய் !! - இன்று ஒரு சிறு கதை...
ரயிலை நிறுத்திய நெய் !! - இன்றைய சிறுகதை - Today's Short Story...
ஒரு கிராமத்தான். அவனுக்குப் பட்டணத்தில் வேலை கிடைத்திருந்தது. ரயிலில் பயணம் புறப்பட்டான்.அந்தக் கிராமத்தானுடைய பாட்டிக்கு அவன்மீது பாசம் அதிகம். ஒரு பெரிய டின் நிறைய நெய் கொடுத்தனுப்பினார்.
‘இது எதுக்கு பாட்டி?’ என்று கேட்டான் அவன்.
"தினமும் நல்லா நெய் ஊத்திச் சாப்பிட்டா தான் நீ பலமா வளரமுடியும்’ என்றார் பாட்டி. இதை எப்பவும் மறந்துடாதே!"
அவனுக்குப் பாட்டி சொல்வதைக் கேட்டு சிரிப்புதான் வந்தது. "நெய் சாப்பிட்டா பலமாயிட முடியுமா? இதெல்லாம் சும்மா ஏமாத்து வேலை" என்று நினைத்தான்.
ஆனாலும் பாட்டி மனம் கோணக் கூடாதே என்பதற்காக வாங்கிக் கொண்டான். ஒரு கையில் பெட்டி, இன்னொரு கையில் நெய் டின் சகிதம் ரயிலில் ஏறினான்.
அன்றைக்கு ரயிலில் பயங்கரக் கூட்டம். அவன் எப்படியோ அடித்துப் பிடித்து ஒரு மூலையில் இடம் பிடித்துக்கொண்டான். பெட்டியை ஓரமாக வைத்தான். நெய் டின்னை வைக்க தான் இடமே இல்லை. சுற்றும்முற்றும் பார்த்தான். 'சிவப்புக் கலரில்' ஏதோ தொங்கிக்கொண்டிருந்தது. அங்கே நெய் டின்னைத் தொங்கவிட்டான்.
அந்தப் பட்டிக்காட்டானுக்குத் தெரியாது, அவன் நெய் டின்னை மாட்டியது அபாயச் சங்கிலியில் என்று. டின்னின் கனம் சங்கிலியைப் பிடித்து இழுக்க, ரயில் நின்று போனது.
சிறிது நேரத்தில் அதிகாரிகள் வந்தார்கள். "யாருய்யா இங்கே இந்த டின்னை மாட்டினது?"
"நான் தான்ங்க. ஏன்?" அப்பாவியாக விசாரித்தான் இவன்.
"யோவ், முதல்ல டின்னை எடுய்யா. அது ரயிலையே நிறுத்திடுச்சு!"
அதிகாரிகள் இப்படிச் சொன்னதும் இவன் கண்களில் நீர் வழிந்தது.
"எங்க பாட்டி சொன்னது சரிதான். இந்த டின்னுக்குள்ளே இருக்கிற நெய் எவ்ளோ பலசாலி. இத்தனை பெரிய ரயிலையே இழுத்துப் பிடிச்சு நிறுத்திடுச்சே!" என்று நெகிழ்ந்தான்.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
November 14 - Jawaharlal Nehru's birthday
நவம்பர் 14 - ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் November 14 - Jawaharlal Nehru's birthday சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1...