கல்வி அஞ்சல்கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...கல்வி அஞ்சல்கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்... கல்வி அஞ்சல்தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...கல்வி அஞ்சல்கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...கல்வி அஞ்சல்கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்... கல்வி அஞ்சல்தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...கல்வி அஞ்சல்
அமைச்சு பணியாளர்களின் பணிமாறுதல் மூலம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியுள்ள பணியாளர்கள் விவரங்களை அனுப்ப உத்தரவு...
பணியாளர் தொகுதி - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி - பள்ளிகள் - முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் 50% பணியிடங்களில் 2% பணியிடங்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைகளில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்களை கொண்டு நிரப்பும் பொருட்டு விவரங்களை அனுப்ப ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் உத்தரவு.
கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆய்வு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு...
234/77 திட்டத்தின் 189ஆவது ஆய்வு!
திருமதி.சிவகாமசுந்தரி அவர்களின் #கிருஷ்ணராயபுரம் தொகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டோம்.
திறன்மிகு வகுப்பறைக்காக வந்துள்ள கல்வி உபகரணங்களைப் பார்வையிட்டு, பள்ளியின் சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்துமாறு தலைமை ஆசிரியரிடமும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமும் அறிவுறுத்தியுள்ளோம்.
பள்ளியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கலைத் திருவிழாப் போட்டியில் பங்கேற்றுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
பரமத்திவேலூர் நன்செய் இடையாறு சங்கர கந்தசாமிக் கண்டர் அறநிலையத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நூற்றாண்டு விழா வளைவினையும், அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா கட்டடத்தையும் திறந்து வைத்து விழா மலரையும் வெளியிட்டோம்.
கந்தசாமிக் கண்டர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு ஓய்வு பெற்ற ஆசிரியப் பெருமக்களைக் கெளரவித்தோம்.
நூறாண்டுகளுக்கு முன்பே இப்பகுதி குழந்தைகளுக்கு தங்குவதற்கான இடமும் கல்வியும் வழங்கி, அவர்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்திட்ட அறநிலையத்தின் பெரியோர்கள் அனைவரின் சேவையினையும் இந்நாளில் போற்றுகின்றோம்.
அரசு உதவிபெறும் பள்ளி ஆய்வு குறித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு...
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தினார்.
இதை தொடர்ந்து இன்று அரசு உதவிபெறும் பள்ளி மாணவச் செல்வங்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.
234/77 ஆய்வுத் திட்டத்தின் கீழ் 188ஆவது ஆய்வை சட்டமன்ற உறுப்பினர் திரு.பொன்னுசாமி அவர்களின் #சேந்தமங்கலம் தொகுதியில் மேற்கொண்டோம்.
சேந்தமங்கலம் கொண்டமநாயக்கன்பட்டி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான கலைமகள் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் பயிலும் 49 மாணவர்களும் காலை உணவு திட்டத்தால் பயன் பெறுகின்றார்கள்.
பள்ளிக் கட்டட மேம்பாடு, தூய்மை பணியாளர்கள் தேவை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளோம்.
பணி ஓய்வு மற்றும் இறப்பு பணிக்கொடைத் தொகையினை Death Cum Retirement Gratuity Amount 01.01.2024 முதல் ₹ 20 இலட்சத்தில் இருந்து, ₹ 25 இலட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை DCRG G.O.Ms.No.281, Dated: 06-09-2024 வெளியீடு...
1.1.2024 முதல்
பணிக்கொடை 25,00,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது..
1.1.2024 முதல் நடைமுறை..
1.1.2024 to 31.8.2024 வரை ஏற்கனவே ஓய்வு பெற்றோர்....
( தமிழ்நாட்டில் GPF employee)
இந்த கூடுதல் பணப் பலனை பெறலாம்...
புதிய கருத்துருக்கள் அனுப்பும் போது DCRG அதிகபட்சமாக 25L வரை பெறலாம்...
ஆசிரியர்கள் வருவதற்கு முன்பே பள்ளிக்கு சென்ற அமைச்சர் - தனியாளாக பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்...
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
———————————————————————————————————
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் 234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளும் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றார். அந்த வரிசையில் இன்று பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஓவியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இன்று (12-09-2024) காலை 8 மணிக்கே பள்ளிக்குள் நுழைந்த அமைச்சர் காலை உணவு உட்கொண்டிருந்த மாணவர்களுடன் உரையாடினார்.
ஆசிரியர்கள் யாரும் அந்நேரத்தில் வராத காரணத்தால் தனியாளாக பள்ளி முழுவதும் சுற்றிப்பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.
காலை உணவு பணியாளர் திருமதி துர்கா மட்டுமே அப்போது பள்ளியில் இருந்த காரணத்தால், அவர் மட்டுமே அமைச்சரின் கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தார்.
காலை உணவுத் திட்டத்தில் எத்தனை மாணவர்கள் சாப்பிடுகின்றார்கள்? பள்ளி தொடங்கப்பட்ட ஆண்டு? பள்ளியின் வளர்ச்சிக்கு தேவையான கோரிக்கைகள் குறித்தும் அப்போது வந்திருந்த ஊர் மக்களிடம் கேட்டுக்கொண்டார். மாணவர்களிடம் கற்றல் குறித்து ஆய்வு செய்வதற்காக திருக்குறள், தமிழ்-ஆங்கில எழுத்துகளை சொல்ல சொல்லி ஆய்வு செய்தார் மாண்புமிகு அமைச்சர் திரு அன்பில் மகேஸ் அவர்கள்...