கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

4 இந்திய காவல் பணி அலுவலர்களை பணியிட மாற்றம் IPS Officers Transfer செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு...

 

 தமிழ்நாட்டில் 4 இந்திய காவல் பணி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு...


திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எம்.சுதாகர் நியமனம் 


சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி சந்தோஷ் ஹடிமானி நியமனம்


பரங்கிமலை துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி எஸ்.செல்வநாகரத்தினம் நியமனம்


தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக கே.பிரபாகர் நியமனம்...



01.01.2025ன் படி புகைப்பட வாக்காளர் பட்டியல்களின் திருத்தம் - சிறப்பு முகாம் தேதிகள் Special Camp on Summary Revision of Photo Electoral Rolls - தலைமைத் தேர்தல் அலுவலர் கடிதம்...



தேர்தல்கள் - 01.01.2025ஐ தகுதித் தேதியாகக் கொண்டு புகைப்பட வாக்காளர் பட்டியல்களின் சிறப்புச் சுருக்கத் திருத்தம் - சிறப்பு முகாம் தேதிகள் - தலைமைத் தேர்தல் அலுவலர் கடிதம்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 Elections - Special Summary Revision of Photo Electoral Rolls with reference to 01.01.2025 as the qualifying date - Revisions Activitics - Special Campaign Dates - Commission's Approval -Communicatcd - Regarding.



PUBLIC (ELECTIONS.I) DEPARTMENT

SECRETARIAT, CHENNAI-600 009.


Letter No.19000/Ele-I/2024-25, Dated:01.10.2024


From

Thiru. Satyabrata Sahoo, I.A.S.,

Chief Electoral Officer &

Principal Secretary to Government.


To

All the District Election Officers.


Sir/Madam,

Sub: Elections - Special Summary Revision of Photo Electoral Rolls with reference to 01.01.2025 as the qualifying date - Revisions Activitics - Special Campaign Dates - Commission's Approval -Communicatcd - Regarding.


Ref:

1. From the Principal Secretary, Election Commission of India, Letter No.23/2024-ERS(Vol.IV), Dated:07.08.2024.

2. This Office Letter No.19000/Ele-1/2024-3, dated 16.08.2024.

3. From the Under Secretary, Election Commission of India, Letter No.23/TN/2025/SSR/SS.I, Dated: 25.09.2024.


******

I am invite attention to the reference 3rd cited and to state that the Election Commission of India has approved the proposal for the Schedule of Special Campaigns in connection with the Special Summary Revision of Photo Electoral Rolls, 2025 as follows:


S.No             Date                   Day

1.            09.11.2024           Saturday

2.            10.11.2024            Sunday

3.             23.11.2024          Saturday

4.             24.11.2024            Sunday


 In this connection, I am to request you to give wide publicity about this in your district, and also to ensure that adequate number of forms (i.e., 6, 6A, 6B, 7 and 8) are available in all the designated locations besides ensuring the presence of Booth Level Officers on the above days.


Yours faithfully,

for Chier Électoral Officer &

Principal Secretary to Government.


Copy to:

Shri.M.L.Mecna,

Under Secretary,

Election Commission of India,Nirvachan Sadan, Ashoka Road, New Delhi- 110 001.

The System Manager,

Public (Elections) Department,

Secretariat, Chennai-600 009.



வாக்காளர் சிறப்பு முகாம்


*வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தலுக்கான சிறப்பு முகாம் 2024 ஆம் ஆண்டு நவம்பர்  09,10, 23 & 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.


*வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்:-


*09.11.2024 சனிக்கிழமை

*10.11.2024 ஞாயிற்றுக்கிழமை

*23.11.2024 சனிக்கிழமை

*24.11.2024 ஞாயிற்றுக்கிழமை


*ஆகிய தினங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்துதல் மற்றும் நீக்குதல் தொடர்பாக சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில்  நடைபெற உள்ளது.

01.10.2024 முதல் சொத்து வரி (Property Tax) 6% உயர்வு...



01.10.2024 முதல் சொத்து வரியை தமிழ்நாடு அரசு (Property Tax) 6% உயர்த்தியுள்ளது என தகவல்...


 வரும் 2025 - 26ம் நிதியாண்டில், சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்த, தமிழ்நாடு அரசிடம் நகராட்சி நிர்வாகத்துறை அனுமதி கேட்டு உள்ளது.


சென்னை மாநகராட்சியின் பிரதான பகுதிகளில், 1998லும்; சென்னை மாநகராட்சி விரிவாக்க பகுதிகள் மற்றும் பிற மாநகராட்சிகளில், 2008லும் சொத்து வரி உயர்த்தப்பட்டது.



மத்திய அரசு அறிவுறுத்தல்


மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15வது நிதி ஆணைய பரிந்துரைப்படி உள்ளாட்சி அமைப்புகளில், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்த அறிவுறுத்தப்பட்டது.


அதன்படி, 2022 - 23ம் நிதியாண்டில், உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டது. அப்போது, 600 சதுரடிக்கு குறைவான குடியிருப்புகளுக்கு, 25 சதவீதமும்; 601 - 1,200 சதுரடி வரை என்றால், 50 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டது.


மேலும், 1,201 - 1,800 சதுரடி குடியிருப்பு கட்டடங்களுக்கு, 75 சதவீதமும்; 1,800 சதுரடிக்கு மேலாக இருந்தால், 100 சதவீதமும் சொத்து வரி உயர்ந்தது. அதேபோல, வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு, 100 சதவீதமும்; தொழிற்சாலை, கல்வி நிலைய பயன்பாட்டு கட்டடங்களுக்கு, 75 சதவீதமும் உயர்த்தப்பட்டது.


சென்னை மாநகராட்சியில் பிரதான பகுதிகளில், வணிக பயன்பாட்டுக்கு, 150 சதவீதமும்; தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய கட்டடங்களுக்கு, 100 சதவீதமும் உயர்த்தப்பட்டது. சொத்து வரி உயர்வுக்காக வெளியிடப்பட்ட அரசாணையில், 15வது நிதி ஆணைய பரிந்துரைப்படி, ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரி உயர்த்தப்படும் என, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.


சென்னை, திருநெல்வேலி, துாத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட மக்கள் கடந்த 2023ல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். அதனால், 2024 - 25ம் நிதியாண்டில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், 2025 - 26ம் நிதியாண்டில் சொத்து வரியை, 6 சதவீதம் உயர்த்த, நகராட்சி நிர்வாகத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.


இருப்பினும், 2025ல் உள்ளாட்சி தேர்தல்; 2026ல் சட்டசபை தேர்தல் உள்ளிட்டவை வர உள்ளதால், சொத்து வரி உயர்வால், ஆளுங்கட்சிக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.


ரூ.110 கோடி கூடுதல் வருவாய்நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், ஒவ்வொரு நிதியாண்டிலும் சொத்து வரி உயர்த்தப்படும் என, அரசாணை வெளியிடப்பட்டது. கடந்தாண்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால், சொத்து வரியை உயர்த்த அரசு அனுமதிக்கவில்லை.


நிதி பற்றாக்குறை போன்ற காரணங்களால், வரும் நிதியாண்டில் சொத்து வரியை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சொத்து வரி 6 சதவீதம் உயர்த்தப்படும். சொத்து வரி உயர்வு அரசின் கொள்கை முடிவை சார்ந்தது என்பதால், அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது.


அரசு அனுமதி அளித்தால் சென்னை மாநகராட்சிக்கு, ஆண்டுக்கு 110 கோடி ரூபாய்க்கு மேல் கூடுதல் வருவாய் கிடைக்கும். இதேபோல, மற்ற உள்ளாட்சிகளிலும், உட்கட்டமைப்பு வசதிக்கான கூடுதல் வருவாய் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


இந்நிலையில் 2025-26-ஆம் நிதியாண்டில் சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்த நகராட்சி நிர்வாகத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.


இடம், கட்டிடத்தின் அளவை பொறுத்து மக்களுக்கான சொத்து வரியில் வித்தியாசம் இருக்கும்.


மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15-வது நிதி ஆணைய பரிந்துரைப்படி உள்ளாட்சி அமைப்புகளில், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்துவரி விகிதத்தை உயர்த்த அறிவுறுத்தியது. அந்த வகையில், தமிழகத்தில் 2022-ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டது. அப்போது, 600 சதுர அடிக்கு குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25 சதவீதம் உயர்த்தப்பட்டது.


இதேபோல, 601 முதல் 1,200 சதுர அடி வரை பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதமும், 1,201 முதல் 1,800 சதுர அடி குடியிருப்பு கட்டிடங்களுக்கு, 75 சதவீதமும் 1,800 சதுர அடிக்கு மேலாக இருந்தால் 100 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டது. வணிக பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை, கல்வி நிலைய பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 75 சதவீதமும் உயர்த்தப்பட்டது.



இதில், சென்னை மாநகராட்சியில் பிரதான பகுதிகளில் 600 சதுர அடிக்கு குறைவான கட்டிடங்களுக்கு 50 சதவீதம், 2011-ம் ஆண்டு சென்னையோடு இணைக்கப்பட்ட பகுதியாக இருந்தால் 25 சதவீதமும் உயர்த்தப்பட்டது. 600 முதல் 1,200 சதுர அடி பரப்பளவு குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதம், 1,201 முதல் 1,800 சதுர அடி பரப்பளவுக்கு 100 சதவீதம், 1,801 சதுரடிக்கு மேல் 150 சதவீதம் உயர்த்தப்பட்டது.


உயர்த்தப்பட்ட இந்த சொத்துவரி சொத்துகளின் அளவு மற்றும் மண்டலங்களைப் பொறுத்து வேறுபட்டது. 2025- 26-ம் நிதியாண்டில் சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்த நகராட்சி நிர்வாகத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.



இந்த நிலையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட அலுவலக கூட்டரங்கில், செப்டம்பர் மாதத்துக்கான மாதாந்திர மன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடந்தது. கூட்டத்தில், சென்னை மாநகராட்சியில் 6 சதவீதம் சொத்து வரியை உயர்த்துவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சொத்து வரி உயர்வு என்பது சொத்துகளின் அளவு மற்றும் மண்டலங்களை பொறுத்து வேறுபட்டு காணப்படும்.


குறிப்பாக, இடம், கட்டிடத்தின் அளவை பொறுத்து மக்களுக்கான சொத்து வரியில் வித்தியாசம் இருக்கும். சென்னை மாநகராட்சியில் 6 மாதத்துக்கு ஒரு முறை சொத்துவரி வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில், 2025-26-ம் ஆண்டுக்கான சொத்துவரி அடுத்த மாதம் முதல் கணக்கீடு செய்யப்படும். எனவே, இந்த உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வு அக்டோபர் 1-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


Agenda of Gram Sabha meeting on Gandhi Jayanti (02.10.2024) - Letter from Director of Rural Development and Panchayats Department...

 

 காந்தி ஜெயந்தி (02.10.2024) அன்று கிராமசபை கூட்டம் நடத்துதல் - கூட்டப்பொருள் சார்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநரின் கடிதம்...



Conduct of Gram Sabha meeting on Gandhi Jayanti (02.10.2024) - Letter from Director of Rural Development and Panchayats Department Regarding Agenda...





Pay Authorization Order for 197 temporary posts for 3 months up to 30.11.2024...

 


197 தற்காலிகப் பணியிடங்களுக்கு 30.11.2024 வரை 3 மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு...



Release of Pay Authorization Order for 197 temporary posts for 3 months up to 30.11.2024...





Minister Anbil Mahesh called the parents on the cell phone and inquired about the condition of the student who did not come to school...

 பள்ளிக்கு வராத மாணவனின் நிலை குறித்து பெற்றோரை செல்போனில் அழைத்து விசாரித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்...


Minister Anbil Mahesh called the parents on the cell phone and inquired about the condition of the student who did not come to school...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


Minister Anbil Mahesh admitted to hospital...

 

 அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் மருத்துவமனையில் அனுமதி...


Minister Anbil Mahesh admitted to hospital...


உடல் நலக் குறைவு காரணமாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.


அரசு நிகழ்ச்சிகள் மற்றும் துறைசாா் பணிகளில் ஈடுபட்டு வந்த அவருக்கு செவ்வாய்க்கிழமை மாலை ஜீரண மண்டல பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது.



இதையடுத்து சென்னை அமைந்தகரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதனடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் அவா் வீடு திரும்புவாா் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.


முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அன்பில் மகேஸ் பொய்யாமொழியை, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

05-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-12-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்: பு...