கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-10-2024

 

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-10-2024 - School Morning Prayer Activities...

   

திருக்குறள்:

பால் : பொருட்பால்

அதிகாரம் : நட்பு

குறள் எண்: 787

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு.

பொருள் : நண்பனை அழிவைத் தரும் தீமைகளிலிருந்து விலக்கி, நன்னெறியில் நடக்கச் செய்து,அவனுக்குத் துன்பம் வந்த போது அவனுடனிருந்து துன்பப்படுவதே நட்பு ஆகும்.           


பழமொழி :
கல்வியே நாட்டின் முதல் அரண். 

  Education is the chief defence of a Nation.


இரண்டொழுக்க பண்புகள் : 

1.விலை கொடுத்து வாங்கும் பொருளை பொறுப்புடன் கையாளுங்கள்.

2. அவசியம் தேவை என்றால் மட்டுமே விலை கொடுத்து வாங்குங்கள் .


பொன்மொழி :

ஒரு போதும் துன்பமாக மாறாத பொருள் ஒன்று உண்டென்றால், அது நாம் செய்யும் நற்செயலே. -- மேட்டர்லிங்க்


பொது அறிவு :

1. ஆண்டு முழுவதும் சூரிய ஒளிக்கதிர்கள் செங்குத்தாக விழும் பகுதி எது?

விடை:  பூமத்திய ரேகை மண்டலம்

2. அறுவைச் சிகிச்சையில் உடலின் உள்ளே உள்ள பாகங்களைத் தைப்பதற்குப் பயன்படுவது எது?

விடை:  பட்டு நாண்


English words & meanings :

Comb-சீப்பு,

Scissors-கத்தரிக்கோல்


வேளாண்மையும் வாழ்வும் :

செயற்கை அல்லது வேதியல் உரங்கள் உபயோகித்து செய்யப் படும் விவசாயம் அதிக மகசூல் தந்தாலும் இது அதிக அளவில் மண்ணையும் மனிதனையும் பாதிக்க ஆரம்பித்தது. இதன் விளைவாக இயற்கை உரம் கொண்டு செய்யப் படும் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் என்ற குரல் எங்கும் ஒலிக்க ஆரம்பித்தது


அக்டோபர் 22

பன்னாட்டு திக்குவாய் விழிப்புணர்வு நாள் (International Stuttering Awareness Day, ISAD), அல்லது பன்னாட்டு திணறல் விழிப்புணர்வு நாள் (International Stammering Awareness Day) என்பது ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 22 ஆம் நாள் கொண்டாடப்படும் ஓர் நிகழ்வாகும். இது முதன் முதலில் 1998 இல் ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து ஆகிய நாடுகளில் கொண்டாடப்பட்டது. உலக மக்கள்தொகையில் ஒரு சதவீதமானோர் திக்குவாய் அல்லது திணறுபவர்களாக உள்ளனர், இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் நோக்கமாக உள்ளது.


நீதிக்கதை

பருவத்தே பயிர்செய்

பழனிக்கு சொந்தமாக வயல் ஒன்று இருந்தது. மற்றவர்கள் எல்லாம் வயலில் உழுகின்ற நேரம் பழனி தன் வயலைப் பற்றி எந்த எண்ணமும் இல்லாமல் சும்மாவேயிருந்தான்.

இதனைக் கவனித்த பழனியின் மனைவி வயலில் ஏர்கலப்பை பூட்டி உழும்படி கூறினாள். பழனி அதனை ஒரு காதில் வாங்கி மறுகாதில் விட்டு விட்டான்.

மற்ற விவசாயிகள் எல்லாம் வயலில் நீர் பாய்ச்சி விவசாய வேலையை ஆரம்பித்தார்கள். அதனைக் கண்ட பழனி நமது வயலில் பின்னர் விவசாயம் செய்து கொள்ளலாம் என்று சும்மாவே இருந்து விட்டான்.

அதனைக் கண்டு பழனியின் மனைவிக்கு ஆத்திரமாக வந்தது. பழனியை விவசாயம் செய்யும்படி வற்புறுத்தினாள்.

சோம்பேறியான பழனி அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று சும்மாவே இருந்துவிட்டான். பழனியின் வீட்டிலிருந்த அரிசி மூட்டையில் உள்ள அரிசியெல்லாம் காலியாகத் தொடங்க, அவன் சாப்பாட்டிற்கு அரிசி வாங்க பணம் இல்லாமல் திண்டாடினான்.

அறுவடை காலம் நெருங்கியதும் மற்ற விவசாயிகள் தங்கள் வயலில் விளைந்த நெற்கதிர்களை அறுத்து, நெற்குவியல்களை மூட்டை மூட்டையாக எடுத்துச் சென்றார்கள்.

அதனைப் பார்த்து பழனியால் பொறாமைப்படத்தான் முடிந்தது. குறித்த காலத்தில் விவசாயம் செய்து முடிக்காததால் தன் குடும்பம் இன்று வறுமையில் வாடுகிறதே என்று கவலையடைந்தான்.

இனிமேல் எந்த வேலையையும் காலம் பார்த்துச் செய்ய வேண்டுமென்று தன்னைத் திருத்திக் கொண்டான்.

நீதி:

பருவம் பார்த்து பயிர் செய்வதுபோல்,எந்தச் செயலையும் காலம் பார்த்து உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டும்.


இன்றைய செய்திகள்

22.10.2024

* விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள்.

* டெல்டா பாசனத்திற்கு மேட்டூரில் இருந்து 2500 கன அடி தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளது.

* திருவள்ளூரில் இரு செப்பேடுகள் கண்டுபிடிப்பு. மப்பேட்டில் உள்ள சிங்கீஸ்வரர் கோயிலில் விஜயநகர பேரரசு காலத்திலான இரு செப்பேடுகள் கண்டுபிடிப்பு.

* இந்தியாவுக்கு ஐ.நா., சபையில் நிரந்தர இடம்... பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன்  வலியுறுத்தல்.

* 2024 ஆண்டுக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் மோதியது.இந்த போட்டியில், நியூசிலாந்து 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.


Today's Headlines

* Tamil Nadu Pollution Control Board appeals to the public to celebrate an accident, sound and pollution free Diwali.

* An additional 2500 cubic feet of water has been released from Mettur for delta irrigation.

* Discovery of two coppers in Tiruvallur. Two Vijayanagara Empire period tombstones were discovered at Singheeswarar temple in Mappet.

* Permanent seat for India in the UN...Emphasis by former British Prime Minister David Cameron.

* New Zealand team and South Africa team clashed in the final of the 2024 Women's T20 World Cup cricket series. New Zealand won the match by 32 runs.



Prepared by

Covai women ICT_போதிமரம்


France educational tour under Kanavu Asiriyar Scheme - List of teachers - DSE Proceedings



 DSE  - பிரான்ஸ் கல்வி சுற்றுலா செல்லும் ஆசிரியர்கள் பட்டியல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் R.C.No.060004/C1/E2/2024, dated. 18.10.2024


DSE - List of teachers going on educational tours to France under Kanavu Asiriyar Scheme - Proceedings of the Director of Education R.C.No.060004/C1/E2/2024, dated. 18.10.2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




PROCEEDINGS OF THE DIRECTOR OF SCHOOL EDUCATION, CHENNAI -6

R.C.No.060004/C1/E2/2024, dated. 18.10.2024

Sub : School Education - Tamil Nadu Government Servants Conduct Rules 1973- To grant permission to visit France - Orders issued -Regarding.

Ref : 

1. G.O.(Ms).No.109, Personnel and Administrative reforms (A) Department, dated.31.07.2006.

2. G.O.(Ms).No.259, Personnel and Administrative reforms (A) Department, dated.17.12.2007.

3. From the Superintendent of Police, Security Branch CID Chennai-28, Lr.No.SCA.4.No.3698/16751/NOC/2024 C Dated 02.10.2024

4. From the Superintendent of Police, Security Branch CID Chennai-28, Lr.No.SCA.4.No.3714/16767/NOC/2024 C Dated 04.10.2024

5. From the Superintendent of Police, Security Branch CID Chennai-28, Lr.No.SCA.4.No.3717/16770/NOC/2024 C Dated 05.10.2024


ORDER:

Under the powers delegated in G.0.Ms.No.109, Personnel and Administrative Reforms (A) Department dated. 31.07.2006 and Under rule 24-A of the Tamil Nadu Government Servants Conduct Rules 1973, the Director of School Education is pleased to grant permission to 54 numbers of Government / Government Aided School Teachers those who were selected under Kanavu Asiriyar Scheme to participate the International Educational Tour scheduled by Government of Tamil Nadu to visit France from 23.10.2024 to 29.10.2024. List of teachers participating in the International Educational Tour under Kanavu Asiriyar Scheme is enclosed.


Enclosure:

Name list of teachers participating in the International Educational Tour


Director of School Education 

To,

Coy to Director, Elementary Education, Chennai-600 006

Copy to all Chief Educational Officers

Copy to all respective Headmasters


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-10-2024

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-10-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:

பால்:பொருட்பால்

அதிகாரம்:பழைமை

குறள் எண்:805

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுஉணர்க
நோதக்க நட்டார் செயின்.

பொருள்:வருந்தத்தக்க செயல்களை நண்பர் செய்தால், அதற்குக் காரணம், அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும்.


பழமொழி :
Caution is the parent of safety

முன்னெச்சரிக்கையே பாதுகாப்பிற்கு பிதா.


இரண்டொழுக்க பண்புகள் : 

1.விலை கொடுத்து வாங்கும் பொருளை பொறுப்புடன் கையாளுவேன்.

2. அவசியம் தேவை என்றால் மட்டுமே அதிக விலை கொடுத்து வாங்குவேன் .


பொன்மொழி :

மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகிறான். - சுவாமி விவேகானந்தர்.


பொது அறிவு :

1.செயற்கையான சிறுநீரகம் எனப்படுவது எது? -

விடை :டயலைசர்

2.சிறுநீரில் காணப்படும் யூரியாவின் அளவு என்ன ?

விடை : 2 சதவீதம்


English words & meanings :

Acid-அமிலம்

Bucket-வாளி


வேளாண்மையும் வாழ்வும் :

உலக அளவில் உணவுத் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலையில், எதிர்காலம் விவசாயிகள் கையில் தான் உள்ளது என்பதை வலியுறுத்தவும், உணவு பாதுகாப்பை வலியுறுத்தவும் டிசம்பர் 23ம் தேதி விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.


அக்டோபர் 21

ஆல்ஃபிரட் நோபெல் அவ்ர்களின் பிறந்தநாள்

ஆல்ஃபிரட் நோபெல் (About this soundAlfred Bernhard Nobel (பிறப்பு:(சிட்டாக்கோம், சுவீடன், 21 அக்டோபர் 1833 – Sanremo, இத்தாலி, 10 திசம்பர் 1896)) நோபெல் பரிசினை உருவாக்கிய சுவீடன் நாட்டு அறிவியலாளர். டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர். ஆல்ஃபிரட் நோபெல் ஒரு வேதியாளர், பொறியாளர், புத்தாக்குனர், ஆயுதத் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தார். போப்பர்சு என்னும் பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனத்துக்கு உரிமையாளராக இருந்தார். தன்னுடைய கடைசி உயிலின் மூலம், தன் பெரும் சொத்தைக் கொண்டு நோபெல் பரிசை நிறுவினார். இவரின் நினைவாக நோபெலியம் (Nobelium)என்னும் synthetic தனிமம் பெயரிடப்பட்டது.


நீதிக்கதை

நான்கு நண்பர்கள்

முன்னொரு காலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் நான்கு நண்பர்கள் வசித்து வந்தனர். அவர்கள் சத்தியானந்தன், வித்தியானந்தன், தர்மானந்தன், சிவானந்தன் என்று அழைக்கப்பட்டனர்.

முதல் மூவரும் சிறந்த அறிவாளிகள்; பல கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள். ஆனால், சிவானந்தன் உண்பதிலும் உறங்குவதிலுமே தன் பொழுதைக் கழித்து வந்தான். அவன் ஒரு முட்டாள் என்றே மற்றவர்கள் கருதினர்.

ஒரு முறை அந்தக் கிராமத்தில் பஞ்சம் தலைவிரித்தாடியது. ஆறுகளும் ஏரிகளும் வற்றத் தொடங்கின. பயிர்கள் கருகின. உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது.

உயிர் பிழைக்க அந்தக் கிராம மக்கள் மற்ற இடங்களைத் தேடிச் செல்ல ஆரம்பித்தனர். மற்றவர்களைப் போல் நாமும் வேறு இடத்திற்குச் செல்ல வேண்டும்  என்றான் சத்தியானந்தன். அவன் கூறியதை மற்ற நண்பர்கள் ஏற்றுக் கொண்டனர். “சிவானந்தனை என்ன செய்வது?” என்று கேட்டான் சத்தியானந்தன்.

“நம்முடன் அவனை அழைத்துச் செல்ல வேண்டுமா ? அவனுக்குப் படிப்பும் இல்லை; எந்தத் திறமையும் இல்லையே” என்று தொடர்ந்து கூறினான் சத்தியானந்தன்.

“நம்முடன் அவனை அழைத்துச் செல்ல முடியாது. அவன் நமக்குச் சுமையாக இருப்பான்” என்று பதில் கூறினான் தர்மானந்தன்.

“அவனை இங்கேயே இருக்க விட்டு நாம் மட்டும் எப்படிச் செல்லமுடியும்? நம்முடன் வளர்ந்தவன் அவன். நாம் சம்பாதிப்பதை நம் நால்வரிடையே சமமாகப் பங்கிட்டுக் கொள்ளலாம்,” என்று வித்தியானந்தன் கூறினான்.

எனவே, சிவானந்தனைத் தம்முடன் அழைத்துச் செல்ல அவர்கள் தீர்மானித்தனர்.  அருகிலுள்ள நகரத்தை நோக்கிச் சென்றனர். போகும் வழியில் ஒரு காடு குறுக்கிட்டது. அதன் வழியே செல்லத் தொடங்கினர்.

ஓர் இடத்தில் ஒரு விலங்கின் எலும்புகளைக் கண்டனர். வியப்படைந்த அவர்கள் அவற்றை அருகில் சென்று பார்த்தனர்.

“இவை ஒரு சிங்கத்தின் எலும்புகளாகத்தான் இருக்க வேண்டும்” என்று வித்தியானந்தன் கூறியவுடன் மற்ற மூவரும் அதை ஆமோதித்தனர்.

உடனே, ” நம்முடைய கல்வியறிவைப் பயன் படுத்துவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு, ” என்று சத்தியானந்தன் கூறியதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

“இந்த எலும்புகளை என்னால் ஒன்று சேர்க்க முடியும், ” என்று கூறியவாறே சத்தியானந்தன் அந்த எலும்புகளை ஒன்று சேர்த்துச் சிங்கத்தின் எலும்புக் கூட்டை உருவாக்கினான்.

“அதற்கு இரத்தமும் தசையும் என்னால் அளிக்க முடியும்” என்றான் தர்மானந்தன் அவனுடைய திறமையால் உயிரற்ற சிங்கத்தின் முழுமையான உடல் இப்போது அவர்கள் முன்னால் கிடந்தது.

“இந்தச் சிங்கத்தின் உடலுக்கு என்னால் உயிரூட்ட முடியும்” என்று துடிப்புடன் கூறினான் வித்தியானந்தன்.

உடனே முன்னால் ஓடி வந்து சிவானந்தன் அவனைத் தடுத்தான். “வேண்டாம், வேண்டாம். நீ ஒன்றும் செய்ய வேண்டாம்.நீ இந்தச் சிங்கத்திற்கு உயிரூட்டினால் இது நம்மைக் கொன்றுவிடும், என்று கூறியவாறே அவனைத் தடுக்க முயன்றான் சிவானந்தன்.

” ஏ. கோழையே ! என்னுடைய அறிவையும் திறமையையும் பரிசோதித்துப் பார்ப்பதிலிருந்து நீ என்னைத் தடுக்க முடியாது,” என்று கோபத்துடன் வித்தியானந்தன் கத்தினான்.

” இரு, இரு, நான் முதலில் இந்த மரத்தின் மீது ஏறிக் கொள்கிறேன், ” என்று பயந்தவாறு கூறிய சிவானந்தன், அருகில் இருந்த மரத்தின் மீது தாவி ஏறினான்.

மரத்தின் உச்சாணிக் கிளையில் அவன் ஏறி அமர்ந்த போது வித்தியானந்தன் தன் திறமையால் அந்தச் சிங்கத்தை உயிர் பெறச் செய்தான்.

பலமாகக் கர்ச்சித்தவாறு எழுந்த சிங்கம் அந்த மூன்று அறிவில் சிறந்த நண்பர்களை தாக்கியது.

தங்கள் அறிவை தவறாக பயன்படுத்தியதை நினைத்தும், தங்கள் நண்பனை முட்டாள் என எண்ணியது குறித்தும் வருந்தினார்கள்.

நீதி : கல்வியறிவைப் பயன்படுத்தி சமயோசிதமாக யோசிக்க வேண்டும்.


இன்றைய செய்திகள்

21.10.2024

* தமிழகத்தில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

* வங்கக்கடலில் வரும் 23 ஆம் தேதி புயல் உருவாக இருப்பதாகவும், அந்தப் புயலுக்கு 'டானா' என பெயரிடப்பட்டுள்ளது எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

* ரூ.990 கோடியில் 3 ஏஐ மையங்கள்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்.

* கியூபாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையம் சேதமடைந்ததால் அந்நாடு இருளில் மூழ்கியது.

* சுல்தான் கோப்பை ஹாக்கி: முதலாவது லீக் ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா வெற்றி.

* மேஜர் லீக் கால்பந்து: மெஸ்ஸி ஹாட்ரிக் கோல். இன்டர் மியாமி அணி வெற்றி.


Today's Headlines

* The Tamil Nadu Pollution Control Board has issued an order restricting the time spent bursting firecrackers during Diwali in Tamil Nadu.

* The Indian Meteorological Department has informed that a storm, 'Dana,' is expected to form in the Bay of Bengal on the 23rd.

* 3 AI centers at Rs 990 crore: Information by Union Minister Dharmendra Pradhan.

* Cuba's largest power plant was destroyed, plunging the country into darkness.

* Sultan Cup Hockey: India beat Japan in the first league match

* Major League Soccer: Messi Scores Hat Trick  Inter Miami wins.

Prepared by

Covai women ICT_போதிமரம்


Procedures and G.O.s for Obtaining 25 Types of Tamil Nadu Govt Certificates through e-Sevai Centers



இ-சேவை மையங்கள் மூலம் தமிழ்நாடு அரசின் 25 வகையான சான்றுகள் பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் அரசாணைகளின் தொகுப்பு...


Procedures and G.O.s for Obtaining 25 Types of Tamil Nadu Govt Certificates through e-Service Centers - Compilation...


 

>>> வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் பொதுமக்களுக்கு இ-சேவை மையம் வழியாக இணையதள மின் சேவை மூலம் வழங்கப்படும் 25 வகையான சான்றுகள் தொடர்பான விவரங்கள், அரசாணைகள் மற்றும் அரசுக் கடிதங்களின் தொகுப்பு (Collection of details, G.O.s (Ordinances) and Government Letters regarding 25 types of certificates issued by Revenue and Disaster Management Department through e-sevai centre to public through online)...


வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் பொது மக்களுக்கு இ-சேவை மையம் வழியாக இணையதளம் மின் சேவை மூலம் கீழ் குறிப்பிட்டுள்ள 25 வகையான சான்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன...


வருமானச் சான்றிதழ்கள் 

இருப்பிட சான்றிதழ்கள் 

வசிப்பிடச் சான்றிதழ்கள் 

சிறு/ குறு விவசாயி சான்றிதழ்கள் 

குடிப்பெயர்வு சான்றிதழ் 

இயற்கை இடர்பாடுகளால் இடிந்த பள்ளி /கல்லூரி சான்றிதழ்களின் இரண்டாம் படி பெறுவதற்கான சான்றிதழ் 

ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றுகள் 

திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்று 

வேலை இல்லாதவர் என்பதற்கான சான்று 

விவசாயி வருமானச் சான்றிதழ் 

கணவனால் கைவிடப்பட்டோர் சான்றிதழ் 

விதவை சான்றிதழ் 

ஜாமீன் சான்றிதழ் 

பிறப்பு / இறப்பு சான்றிதழ் 

தொலைந்துவிட்ட பள்ளி / கல்லூரி கல்வி சான்றுக்கு தடை இன்மை சான்று 

ஒருங்கிணைந்த சான்றிதழ் 

வாரிசு சான்றிதழ் 

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான சான்றிதழ் 

ஜெயின் மதத்தவருக்கான சிறுபான்மையினர் சான்றிதழ் 

ஆதரவற்ற விதவை சான்றிதழ் 

சொத்து மதிப்பு சான்றிதழ் 

கலப்பு திருமண சான்றிதழ் 

முதல் பட்டதாரி சான்றிதழ் 

இதர பிற்பட்டோர் வகுப்பினர் சான்றிதழ் 

சாதி சான்றிதழ்கள்






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


Case Status of High School Headmaster Promotion

 

உச்சநீதிமன்றத்தில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்குகளின் நிலவரம்...


Status of High School Headmaster Promotion Cases in Supreme Court...


* உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு (Pon. Selvaraj உள்ளிட்டோர் தொடர்ந்தது DIARY NO. - 39294/2023 PON SELVARAJ VS. THE STATE OF TAMIL NADU) 21.10.2024ல் விசாரணைக்கு வர இருந்த நிலையில் 25.10.2024க்கு ஒத்திவைப்பு...


* 17.10.2024 அன்று விசாரணைக்கு வந்ததாக கூறப்படும் மற்றொரு வழக்கின் நிலை (M.Krishnamoorthi உள்ளிட்டோர் தொடர்ந்தது) இன்னும் அப்டேட் செய்யப்படவில்லை...



>>> DIARY NO. - 39294/2023 PON SELVARAJ VS. THE STATE OF TAMIL NADU தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> DIARY NO. - 48521/2023 M.KRISHNAMOORTHI VS. D. RAJAN தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Conducting Gram Sabha Meeting on Local Bodies Day November 1 - Meeting Agenda - Rural Development and Panchayat Director's letter, dated : 17-10-2024

 

நவம்பர் 1 - உள்ளாட்சிகள் தினம் அன்று கிராம சபைக் கூட்டம் நடத்துதல் - கூட்டப் பொருள் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் கடிதம், நாள் : 17-10-2024



November 1 - Conducting Gram Sabha Meeting on Local Bodies Day - Meeting Agenda - Rural Development and Panchayat Director's letter, dated : 17-10-2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


த‌மி‌ழ்த்தாய் வாழ்த்து - இனி அரசின் மாநிலப்பாடல் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு, 17-12-2021...

 த‌மி‌ழ்த்தாய் வாழ்த்து - இனி அரசின் மாநிலப்பாடல் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு, 17-12-2021...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...