கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

"High Skill Incentive Scheme" to issue Skill Vouchers to SC / ST / Christian SC students in the final year of education who excel in higher education - G.O. Ms. No: 90, Dated : 10-10-2024

 

உயர் கல்வியில் சிறந்து விளங்கும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்வி இறுதி ஆண்டில் பணவுறுதி ஆவணம் (Skill Vouchers) வழங்க "உயர் திறன் ஊக்கத்திட்டம்" - அரசாணை நிலை எண்: 90, நாள் : 10-10-2024 வெளியீடு



"High Skill Incentive Scheme" to issue Skill Vouchers to SC / ST / Christian SC students in the final year of education who excel in higher education - G.O. Ms. No: 90, Dated : 10-10-2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Disciplinary action may be taken by the DEO against absentee teachers - DEE Proceedings


பள்ளிப் பணிக்கு சரியாக வருகை புரியாத ஆசிரியர்கள் மீது மாவட்டக் கல்வி அலுவலரே ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளலாம் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


ஆசிரியர் பள்ளிப் பணிக்கு சரியாக வருகை தராமல் வேறொரு நபரைக் கொண்டு பாடம் நடத்துதல் - பள்ளி மேலாண்மை குழு மற்றும் ஊர் மக்களிடம் புகார் மனு பெற்று‌ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது - விசாரணை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Conducting lessons by another person without proper attendance of teacher on school duty - Instruction to all District Education Officers to take action on inquiry basis - Proceedings of Director of Elementary Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Jawaharlal Nehru's Birthday - Speech Competition for School and College Students

 


ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாள்: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 1889, நாள் : 09-11-2024


Jawaharlal Nehru's Birthday - Elocution Competition for School and College Students






ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க “நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவரான ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாள் பேச்சுப் போட்டி 12.11.2024 அன்று பள்ளி மாணவர்களுக்கு வடசென்னை அளவில் வில்லிவாக்கம் அரசு மேனிலைப்பள்ளியிலும், தென் சென்னை அளவில் நந்தனம் அரசு மாதிரி மேனிலைப்பள்ளியிலும், மத்திய சென்னை அளவில் திருவல்லிக்கேணி சீமாட்டி விலிங்டன் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளியிலும் முற்பகல் 09.00 மணி அளவில் சென்னை மாவட்டத்தில் நடைபெற உள்ளது.13.11.2024 அன்று கல்லூரி மாணவர்களுக்கு வடசென்னை அளவில் ஆர்.கே.நகர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், மத்திய சென்னை அளவில் சேப்பாக்கம் மாநிலக் கல்லூரியிலும், தென்சென்னை அளவில் இராணி மேரி கல்லூரியிலும் முற்பகல் 09.00 மணி அளவில் சென்னை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெறும் பள்ளி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000/- இரண்டாம் பரிசு ரூ.3000/-. மூன்றாம் பரிசு ரூ.2000/- மேலும் அரசுப் பள்ளிகளில் பயிலும் இரு மாணவர்களுக்கு சிறப்புப் பரிசாக தலா ரூ.2000/- மற்றும் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுவர். கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000/- இரண்டாம் பரிசு ரூ.3000/-. மூன்றாம் பரிசு ரூ.2000/- மற்றும் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுவர். ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாள் பேச்சுப்போட்டியில் பள்ளி மாணவர்களுக்கான தலைப்புகள் விவரம் முறையே, பின்வருமாறு 1. அமைதிப் புறா நேரு 2. நவீன இந்தியாவின் சிற்பி 3. ஆசிய ஜோதி.ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாள் பேச்சுப்போட்டியில் கல்லூரி மாணவர்களுக்கான தலைப்புகள் விவரம் முறையே, பின்வருமாறு 1. நேருவின் வெளியுறவுக் கொள்கை 2. நேரு கட்டமைத்த இந்தியா 3. நேருவின் பஞ்சசீலக் கொள்கை. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Block Level Competition - Literacy Club & Quiz Club - DSE Proceedings



வட்டார அளவிலான இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றப் போட்டிகள் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



Block Level Competition - Literacy Club & Quiz Club - DSE Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Online Patta change service - Report of the Director of Land Surveys and Topography


இணையவழி பட்டா மாறுதல் சேவை தொடர்பாக நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநரின் அறிக்கை - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 1896, நாள் : 09-11-2024


Report of the Director of Land Surveys and Topography in relation to the online patta change service - Tamilnadu Government Press Release No.  1896, Dated : 09-11-2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Budget 2024ன்படி Update ஆகாத IFHRMS - தேவையின்றி பிடிக்கப்பட்டதோடு அக்டோபரில் எகிறிய Income Tax பிடித்தம் - தீர்வு என்ன?


 Budget 2024ன்படி Update ஆகாத IFHRMS - தேவையின்றி பிடிக்கப்பட்டதோடு அக்டோபரில் எகிறிய Income Tax பிடித்தம் - தீர்வு என்ன?


_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_


2024-25 நிதியாண்டு முதல் IFHRMSல் நேரடியாக IT கணக்கிடப்பட்டு மாதாந்திர தவணைப் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. எந்த வரி விதிப்பு முறையில் வரி கணக்கிடப்பட வேண்டும், வரிக் கழிவிற்கான அலுவலகம் சாராத சேமிப்புகள் / முதலீடுகள் எவையெவை என்பதையெல்லாம் ஊழியர்களே உள்ளீடும் செய்துள்ள நிலையில் தற்போதைய சிக்கலுக்கான காரணமென்ன & தீர்வு என்ன என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.


-------------------------------------


*IFHRMS எதனடிப்படையில் வருமானவரி கணக்கிட்டு பிடித்தம் செய்கிறது?*


-------------------------------------


ஒருவரது மார்ச் மாத ஊதியத்தின் அடிப்படையில் 12 மாதங்களுக்கான வருமானம் & பிடித்தங்கள் கணக்கில் கொள்ளப்பட்டு அதனடிப்படையில் அவர் விருப்பம் தெரிவித்த வரிக் கணக்கீட்டு (Old / New Regime) முறையில் வருமான வரி கணக்கிடப்பட்டு, அதை அந்நிதியாண்டில் ஊதியம் பெறவுள்ள மாதங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப  சம தவணைகளாக்கி பிடித்தம் செய்கிறது.


ஒருவருக்கு ஜுலையில் ஊதிய உயர்வு எனில், ஜுன் வரை பழைய ஊதியத்தையும் ஜூலை - பிப்ரவரி வரை புதிய ஊதியத்தையும் வைத்து வரி கணக்கிடப்படும்.


ஒருவேளை இவருக்கு ஜுன் வரை வரி பிடிக்கப்படாத சூழலில், ஜூலை மாத ஊதிய உயர்வால் வரி வருகிறது எனில், வரும் வரியை எஞ்சிய ஜூலை - பிப்ரவரி வரை 8 சம தவணைகளாக்கிப் பிடித்தம் செய்யப்படுகிறது.


இன்றைய நிலையில் ஜனவரி ஊதிய உயர்வு & பொங்கல் மிகை ஊதியம் தவிர்த்து, அகவிலைப்படி மாற்றம் உள்ளிட்ட அனைத்து ஊதிய மாற்றங்களும் கணக்கில் கொள்ளப்பட்டு வரிப் பிடித்தம் செய்யப்பட்டுவருகிறது. எப்போதெல்லாம் ஊதியத்தில் மாற்றம் ஏற்படுகிறதோ அம்மாதத்திய வரிப் பிடித்தத்திலும் மாற்றம் இருக்கும்.


-------------------------------------


*IFHRMSன் இந்நடைமுறை ஏற்புடையதா?*


-------------------------------------


வருமான வரிச் சட்டப்படி ஊதியம் வழங்கும் அலுவலரின் (DDOவின்) மிக முக்கியமான பணி தனது ஊழியரது வருமான வரியைத் துல்லியமாகக் கணக்கிட்டு மாதம்தோறும் பிடித்தம் செய்து காலாண்டிற்கு ஒருமுறை அதற்குரிய கணக்கினை I.Tயிடம் சமர்ப்பித்து, பிடித்தம் செய்யப்பட்ட வரியை தனது TANல் இருந்து ஊழியரது PAN வழியே I.Tயில் வரவாக்கி, வரி வந்தாலும் வராவிட்டாலும் ஆண்டின் இறுதியில் அவ்வூழியருக்கு Form16 வழங்குவதாகும். மேலும், எக்காரணம் கொண்டும் DDO TAN மூலமாக இல்லாது ஊழியரது PAN வழியே பிப்ரவரிக்குள் நேரடியாக Advance Tax செலுத்தக்கூடாது. மேற்கூறியவற்றில் தவறோ தாமதமோ நேர்ந்தால் DDOவிற்குத் தண்டனை / தண்டத்தொகை விதிக்கவும் வருமானவரிச் சட்டத்தில் இடமுண்டு.


அரசு நிருவாகத்தைப் பொறுத்தவரை இதையெல்லாம் கண்காணிக்கும் பொறுப்பு கருவூலத்துறையைச் சார்ந்தது. தனியார் பெரு நிறுவனங்களும், மத்திய அரசு & பொதுத்துறை நிறுவனங்களும் இதைச் சரியாக செய்துவரும் சூழலில்தான் இதற்குள்ளாக IFHRMS மூலம் தமிழ்நாடு கருவூலத்துறையும் தற்போது கால்பதித்துள்ளது.


தொடக்கத்தில் இது ஏதோ வழிப்பறி போலத் தோன்றினாலும், முறையான கணக்கீடுகளின் அடிப்படையில் சட்டப்படி தான் இந்நடைமுறை செயல்வடிவம் பெற்றுள்ளது. இந்நடைமுறை 100% முழுமையடையும் சூழலில், Form16 உட்பட I.T தொடர்பாகக் கூடுதலாக யாருக்கும் எந்தக் கட்டணமும் கப்பம் கட்ட வேண்டிய தேவை இருக்காது.


-------------------------------------


*IFHRMSஆல் நேர்ந்துள்ள சிக்கல் என்ன?*


-------------------------------------


இந்திய அரசின் மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களின் 23.07.2024 தேதியிட்ட நிதிநிலை அறிக்கையின் அடிப்படையில், New Regime முறையில் Tax Slab மாற்றப்பட்டதோடே Standard Deductionம் 50,000ல் இருந்து 75,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுவிட்டது. இந்த உயர்வானது 2025-26 Assessment Yearக்கு (அதாவது நடப்பு 2024-25 நிதியாண்டிற்கே) பொருந்தக்கூடியதாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.


IFHRMSல் அக்டோபர் 2024 வரை Tax Slab மட்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், Standard Deductionல் பழைய ரூ.50,000 மட்டுமே கழிக்கப்பட்டுள்ளது.


இதனால், NEW REGIMEல் உள்ள அநேகருக்குக் கூடுதலாக வருமான வரி கணக்கிடப்பட்டு பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. வரும் மாதத்திலாவது இத்தவறு சரி செய்யப்பட்டால் மேற்கொண்டு கூடுதல் பிடித்தமின்றி வரும் மாதங்களில் எஞ்சிய சரியான வரியை மட்டும்  IFHRMSல் தானாகவே ஈடு செய்துகொள்ளும் வாய்ப்புண்டு.


மேலும், ரூ.75,000 வரை Standard Deduction என்பதால் மொத்த வருமானம் ரூ.7,75,000/- வரை உள்ளோருக்கு வருமானவரியே வராது. ஆனால், பழைய ரூ.50,000 Standard Deductionஐ வைத்தே IFHRMSல் வரி கணக்கிடப்பட்டுள்ளதால், இந்த விளிம்பு நிலையில் உள்ள அநேகருக்கு தேவையின்றி ஜூலை2024 முதல் வரிப்பிடித்தம் செய்யப்பட்டு வந்துள்ளது. அதிலும் அக்டோபர் 2024ல் 53% DA கூட அநேகருக்கு வரியும் எக்குத்தப்பாக எகிறியுள்ளது. வரும் மாதங்களில் இத்தவறு திருத்தப்பட்டாலும், பழைய கணக்கீட்டால் வருமான வரியே வராதவர்களிடம் தவறாகப் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை அவர்கள் திரும்பப்பெற அடுத்த அக்டோபர் (ITR முடிக்கும்) வரை காத்திருந்தாக வேண்டும்.


-------------------------------------


*சிக்கலுக்கான நிரந்தரத் தீர்வு என்ன?*


-------------------------------------


IFHRMSன் வரிப்பிடித்த நடைமுறையை நாங்கள் எதிர்க்கிறோம் என்று கூறிவிட்டு ஒதுங்கிக் கொண்டதோடே சங்கங்களோ / தனி நபர்களோ இதில் போதிய கவனமோ, அக்கறையோ, கணக்கீட்டு முறைகள் குறித்த விழிப்புணர்வோ இல்லாமல் இருந்ததும் இச்சிக்கலுக்கு மேலுமொரு காரணமாகும். இதனால், ரூ.300 முதல் ரூ.10,000 வரை தேவையேயின்றி வரி செலுத்தி வந்துள்ளனர்.


சங்கங்கள் இப்போதும், 'இதுனாலதேன் எதிர்க்கிறோம்!' என்றுகூறி போகாத ஊருக்கு வழி தேடுவதை நிறுத்திவிட்டு, சட்டம் - காலம் - களத் தேவையை உணர்ந்து. . . . IFHRMS தனது வரிப்பிடித்தக் கணக்கீட்டை 2024 Budget அறிவிப்பிற்கேற்ப Update செய்து கொள்ள வேண்டி, இம்மாதம் 10ஆம் தேதிக்குள் (Centralized Payroll Run செய்வதற்குள்) மாநிலக் கருவூலம் & நிதித்துறையிடம் வலியுறுத்தியாக வேண்டும். இல்லையேல் நவம்பர் மாதத்திலும் தேவையின்றி வரிப்பிடித்தம் செய்யப்படுவது தொடரும்.


மேலும், OLD REGIME தேர்வு செய்துள்ளோர் டிசம்பர் மாதத்திலேயே சேமிப்புகள் / முதலீடுகள் தொடர்பான அசல் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கலையும் நிதித்துறையிடம் தெரியப்படுத்தி போதிய கால அவகாசத்தைச் சங்கங்கள் பெற்றுத்தர வேண்டும்.


-------------------------------------


*உடனடித் தற்காலிகத் தீர்வு என்ன?*


-------------------------------------


ஒருவேளை சங்கங்கள் இச்சிக்கலைக் கவனத்தில் கொண்டு செயல்பட தாமதம் ஏற்படும் சூழலில் ஊதியப் பட்டி அலுவலகத்தில் தயார் செய்யும் முன்பே, ஊழியர்கள் தமது வருமானவரிப் படிவத்தைத் தாங்களே தயார் செய்துபார்த்து அதனடிப்படையில், நவம்பரில் / வரும் மாதங்களில் கூடுதலாக / தேவையின்றி வரிப்பிடித்தம் செய்ய வேண்டாமென தங்களது ஊதியம் பெற்று வழங்கும் அலுலரிடம் கடிதம் அளித்து பிடித்தத் தொகையை / பிடித்தம் நிறுத்துவதை உறுதி செய்துகொள்ளவும்.


*முக்கியக் குறிப்பு :*


இதில் நான் குறிப்பிட்டுள்ளதை மட்டும் நம்பி பதற்றம் கொள்ளாமல், New Regime தேர்வு செய்துள்ளோர் முதலில் தங்களுக்கான சரியான வருமானவரியைக் கணக்கிட்டுப் பார்த்துவிட்டு அதனடிப்படையில் தொடர் நடவடிக்கையை உறுதி செய்துகொள்ளவும்.


Old Regime தேர்வு செய்துள்ளோருக்கு இச்சிக்கல் எழாது என்றாலும், வருமானவரியைத் தாங்களும் கணக்கிட்டு கழிவுகளுக்கான சேமிப்புகள் / முதலீடுகள் எவ்வளவு தேவை என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-11-2024

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-11-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:

"பால் :பொருட்பால்

அதிகாரம்: பழைமை

குறள் எண்:810

விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.

பொருள்:

(தவறு செய்தபோதிலும்) பழகிய நண்பரிடத்தில் தம் உரிமைப் பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குரிய சிறப்பை அடைவர்."


பழமொழி :
தூய்மை என்பது தெய்வபக்திக்கு அடுத்தது.  

Cleanliness is next to Godliness.


இரண்டொழுக்க பண்புகள் : 

*மனித நேயத்தை விட்டு விடாமல் சகோதரப் பண்புடன் அனைவரிடமும் பழகுவேன்.

* விட்டுக் கொடுப்பதால் பிரச்சினைகள் வராமல் தடுக்க முடியும். எனவே  நான் பிறருக்கு விட்டுக் கொடுப்பேன்.


பொன்மொழி :

காலம் விடயங்களை மாற்றுகிறது என்று அவர்கள் எப்போதும் கூறுகிறார்கள், ஆனால் உண்மையில் நீங்கள் தான் அவற்றை மாற்ற வேண்டும். -- ஆண்டி வார்ஹோல்


பொது அறிவு :

1. ரத்த வெள்ளை அணுக்களின் வேறு பெயர் என்ன?

லூக்கோசைட்ஸ்.

2. ரத்த சிவப்பணுக்களின் வேறு பெயர் என்ன?

எரித்ரோசைட்ஸ்.


English words & meanings :

Fenugreek Seed-வெந்தயம்,

Garlic-பூண்டு


வேளாண்மையும் வாழ்வும் :

பயிர் சுழற்சி, பசுந்தாள் எரு, மூடு பயிர்கள் மற்றும் ஊடுபயிர் முறையில் பேபேசியே குடும்பத்தாவரங்களைப் பயிரிடும்போது அவற்றின் வேர் முடிச்சுகளில் உள்ள ரைசோபியம் என்ற நுண்ணுயிர் தழைச்சத்தை  வளி மண்டலத்திலிருந்து எடுத்து பொருத்துகிறது.


நவம்பர் 11

தேசிய கல்வி நாள்

தேசிய கல்வி நாள் (National Education Day) இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 11 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக விளங்கிய மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது. 15 ஆகத்து 1947 முதல் 2 பிப்ரவரி 1958 வரை இவர் கல்வி அமைச்சாராகப் பணியாற்றினார்.


மௌலானா அபுல் கலாம்  ஆசாத்

மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது (11 நவம்பர் 1888 – 22 பெப்ரவரி 1958) (Abul Kalam Muhiyuddin Ahmed, வங்காள: আবুল কালাম মুহিয়ুদ্দিন আহমেদ আজাদ, உருது: مولانا ابوالکلام محی الدین احمد آزاد) இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்திய முசுலிம் அறிஞரும் ஆவார். சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து- முசுலிம் ஒற்றுமையை வலியுறுத்திய முசுலிம் தலைவர்களில் முதன்மையானவர். இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர். பாக்கித்தான் பிரிவினையையும் அங்கு இராணுவ ஆட்சி ஏற்படப்போவதையும் முன்னரே தெரிவித்த பெருமை உடையவர்.[1] பரவலாக இவர் மௌலானா ஆசாத்என அறியப்படுகிறார்; ஆசாத் (விடுதலை) என்பது இவர் வைத்துக்கொண்ட புனைப்பெயராகும்.



நீதிக்கதை

எலுமிச்சம் பழம்

முதல் நாள் கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள் அனைவரையும் அடுத்த நாள், எலுமிச்சம் பழம் கொண்டு வருமாறு பேராசிரியர் கூறினார்.

ஏன்? எலுமிச்சம்பழம் என்ற வினாவோடு மாணவர்கள் அனைவரும் எலுமிச்சம்பழம் ஒன்றை எடுத்துக்கொண்டு அடுத்த நாள் வகுப்பிற்கு வந்தனர்.

"அவரவரின் பெயரின் முதல் எழுத்தை  எலுமிச்சம் பழத்தின் மேல் செதுக்குங்கள்" என்றார் பேராசிரியர். மாணவர்கள் செதுக்கினார்கள். ஒரு கூடை ஒன்றில்  அனைத்து பழங்களையும்  போடச் சொன்னார்.நன்றாக கலந்தார்.

பின்பு மாணவர்கள் அனைவரையும் அவரவர் பழங்களை எடுக்கச் சொன்னார். மாணவர்களும்  அவரவர் தம் முதல் எழுத்தை கொண்டு பழங்களை சரியாக எடுத்துக் கொண்டனர்.

பின்பு எலுமிச்சம் பழத்தின் தோலை அகற்றிவிட்டு கூடையில் போடச் சொன்னார். மீண்டும் கலந்தார். மீண்டும் அவரவர் பழங்களை எடுக்குமாறு கூறினார்.  ஆனால் மாணவர்களால் எடுக்க  இயலவில்லை.

அப்போது பேராசிரியர்  "தோலை நீக்கிவிட்டால் அனைத்து எலுமிச்சம் பழங்களும் ஒன்றுதான். ஆனால் அதன் சுவை எப்போதும் மாறுவது இல்லை. அதேபோலத்தான் மாணவர்களாகிய நீங்களும் எந்த  சமூக வேறுபாடுகளின் பின்னணியில் இருந்து வந்திருந்தாலும் அனைவரும் மனித பண்புள்ளவர்கள்.  மனிதநேயத்தை எப்போதும் விட்டு விடாமல் சகோதரப் பண்புடன் அனைவரும் பழக வேண்டும். இதுவே உங்களுக்கு முதல் பாடம்" என்று முடித்தார்.


இன்றைய செய்திகள்

11.11.2024

* கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் 3.3 ரிக்டர் அலகில் லேசான நில அதிர்வு: வீடுகளை விட்டு வெளியேறிய பொதுமக்கள்.

* தமிழகத்தில் நடப்பாண்டில் மட்டும் 4 லட்சம் பேருக்கு நாய்க்கடி பாதிப்பு. ரேபிஸ் நோயால் 36 பேர் உயிரிழப்பு என பொது சுகாதாரத் துறை தகவல்.

* ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார்  வனப்பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 1 ராணுவ அதிகாரி உயிரிழந்தார்.  மேலும் 3 ராணுவ வீரர்கள்  காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* அமெரிக்காவில் ஆய்வகத்தில் இருந்து தப்பிய 43 குரங்குகள்: தேடும் பணி தீவிரம்.

* பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: அமெரிக்க வீராங்கனை கோகோ காப் சாம்பியன் பட்டம் பெற்றார்.

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.


Today's Headlines

* Mild earthquake of magnitude 3.3 Richter scale is felt in Bochampalli area of ​​Krishnagiri district: People came out of their homes.

*  4 lakh people are affected by dog ​​bites in Tamil Nadu this year alone.  According to the Public Health Department, 36 people have died due to rabies.

* An army soldier was  dead and three injured in a gunfight with militants in Jammu and Kashmir's Kishtwar forest, officials said.

* 43 monkeys escaped from a research laboratory in the United States: the search is intensified.

* Women's Tennis Championships: American  player Coco Cope won championship.

* Pakistan won the 3 ODI match series against Australia by 2-1.

Prepared by

Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...