கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

December- 2024 Departmental Exams - Exam Hall Ticket Admit Card Released

 



டிசம்பர் - 2024 துறைத் தேர்வுகளுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வெளியீடு


December- 2024 Departmental Exams - Exam Hall Ticket Admit Card Released 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



IFHRMS - Latest UPDATE Regarding Income Tax Deduction

 

IFHRMS - வருமான வரிப்பிடித்தம் தொடர்பான சமீபத்திய புதுப்பிப்பு


IFHRMS - Latest UPDATE Regarding Income Tax Deduction 


 இந்த ஆண்டிற்கான வருமானவரித் தொகை நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கிறதா அல்லது எவ்வளவு இனிமேல் இந்த மூன்று மாதத்திற்கும்  ( டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி )பிடிக்க வேண்டும் என்பதை IFHRMS  மூலம் சுலபமாக கண்டறியலாம். 


👉Open Google 


👉Type IFHRMS  and search 


👉Select களஞ்சியம் Website


👉Input Your IFHRMS User ID and Password 


👉Select eServices ( HR & Fin)


👉Select employee self service


👉Select Reports ( Top of the Menu ICONS )


👉Choose Incometax projection Report self service 


👉Input DEC-2024 and select the same below


👉And then select Continue


👉Finally submit


👉Click OK


👉Click Monitor Request Status


👉Selec View Output (HTML  format)


👉இதில் இந்த வருடத்திற்கான மொத்த சம்பளத்தொகை, If new regime Rs.75000 (standard Deduction) கழித்த பிறகு இந்த ஆண்டிற்கான மொத்த சம்பளத் தொகை ...


இந்த தொகைக்கு இந்த வருடத்திற்கு உங்களது வருமான வரி தொகை... இதுவரை நீங்கள் ஒவ்வொரு மாதமும் IFHRMS மூலம் கட்டிய வருமான வரி தொகை ....


இனி நீங்கள் எவ்வளவு கட்ட வேண்டும் என்பது குறித்த அனைத்து விவரங்களும் இருக்கும். 


வருமான வரி தொகை சற்று வித்தியாசம் இருக்கிறது என்றால் , ஏப்ரல் 2024 முதல் நவம்பர் 2024 வரை பிடிக்கப்பட்ட வருமான வரி தொகையை Payslip மூலமாகவோ அல்லது பள்ளியில் உள்ள சம்பள பதிவேடு மூலமாகவோ , கூட்டி மொத்த தொகையை இந்த ஆண்டிற்கான மொத்த வருமான வரி தொகையிலிருந்து கழித்து,  அதை மூன்றாக Divide செய்யவும்.


தற்போது டிசம்பர் மாதத்திற்கு PayRoll RUN  செய்து முடித்து விட்டதால்.. டிசம்பர் மாதத்திற்கு உரிய சரியான வருமானவரித் தொகை பிடித்தம் செய்ததாக சேர்க்கப்பட்டிருக்கிறது..


ஆதலால், மூன்றாக Divide செய்த தொகையினை ,ஜனவரி, பிப்ரவரி ,இரண்டு மாதத்திற்கு மட்டும் சம்பளத்தில் பிடிக்க சொல்லி முறையாக தலைமை ஆசிரியருக்கு விண்ணப்பம் தரலாம்.


Link...👇 

https://www.karuvoolam.tn.gov.in/




Thirukkural Quiz for Govt Servants and Teachers - Letter from Tamil Development and News Department & District Collector



 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி - வினா போட்டி - தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை & மாவட்ட ஆட்சியரின் கடிதம்


Thirukkural Quiz for Govt Employees and Teachers - Letter from Tamil Development and News Department & District Collector



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




வினாடி வினா - போட்டிக்கான பாடத்திட்டம்...


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

16-12-2024 - School Morning Prayer Activities

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-12-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:

"பால்: பொருட்பால்

அதிகாரம் :சூது

குறள் எண்:935

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.

பொருள்: சூதாடு கருவியும். ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆய்விடுவர்."


பழமொழி :
வைரத்தை வைரம் கொண்டே அறுக்க வேண்டும்.  

A diamond must be cut with a diamond.


இரண்டொழுக்க பண்புகள் : 

  *இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல் விரைவாக தூங்கி அதிகாலையில் எழுவேன்.

*தினமும் அதிகாலையில் உடற்பயிற்சி மேற்கொள்வேன்.


பொன்மொழி :

வெற்றியாளர் ஒரு போதும் இழப்பதில்லை,  ஒன்று வெல்கிறார் அல்லது கற்கிறார் ---மகாத்மா காந்தி


பொது அறிவு :

1. பிளாஸ்டிக் தயாரிப்பில் எந்த நாடு முதலிடம் வகிக்கிறது?

விடை :  ஜெர்மனி.   

2. மின்னியலின் தந்தை என்று வர்ணிக்கப்படுபவர் யார்? 

விடை: நிக்கோலா டெஸ்லா


English words & meanings :

Cooking.  -   சமைத்தல்

Dancing.   -    நடனம்


வேளாண்மையும் வாழ்வும் :

உட்செலுத்தும் பொருட்களுக்கான செலவு குறைவதாலும், நுகர்வோர் கரிமப் பொருட்களுக்காக கொடுக்கும் கூடுதல் விலையாலும், கரிம விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கப் பெறுகிறது.


டிசம்பர் 16

வெற்றி நாள்

வெற்றி நாள் (இந்தி: विजय दिवस Eng- Victory Day) 1971ல் இந்தியா வங்கதேச முக்திவாகினியுடன் இணைந்து இந்திய-பாகிஸ்தான் போர், 1971 இல் பெற்ற வெற்றியின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் திசம்பர் 16 அன்று கொண்டாடப்படுகிறது.

1971 இல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின் விளைவாக பாகிஸ்தான் இராணுவம் தானாக முன்வந்து நிபந்தனையற்ற சரணாகதி அடைந்தது. கிழக்குப் பாகிஸ்தான் வங்காளதேசம் என்ற தனி நாடாக உருவானது. தங்களின் தோல்விக்குப் பின்னர் டாக்காவில் ரமணா குதிரைப் பந்தைய மைதானத்தில் 93,000 பாகிஸ்தான் வீரர்கள் ஜெனரல் அமீர் அப்துல்லாகான் நியாஸி தலைமையில் இந்தியாவின் லெப்டினெண்ட் ஜெனரல் ஜெகத்சிங் சிங் அரோரா, தலைமையிலான கூட்டணிப் படைகளிடம் சரணடைந்தனர். இப்போரில் உயிர் நீத்த தங்கள் நாட்டு வீரர்களின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும்விதமாக ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் வெற்றி நாள் அனுசரிக்கப்படுகிறது.



நீதிக்கதை

சிட்டுக்குருவியும் காகமும்

ஒரு காட்டில் சிட்டுக்குருவி ஒன்று வசித்து வந்தது. அது யாரிடமும் எளிதாக பழகாது, எப்போதும் அமைதியாக தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்து கொண்டு இருந்தது. அதற்கு சுயமாக யோசித்து  முடிவெடுக்கவும் தெரியாது. ஒரு நாள் காகம் ஒன்று அந்தச் சிட்டுக்குருவியிடம் கேட்டது,”சிட்டுக்குருவியே, நீ என்னுடன் நண்பனாக இருப்பாயா?” என்று. அந்த சிட்டுக்குருவியும் சரி என்று சொல்லி அந்த காகத்துடன் பழக ஆரம்பித்தது.

அப்போது சிட்டுக்குருவியிடம் மற்ற  பறவைகள்  கூறினார்கள், “சிட்டுக்குருவியே நீ காகத்துடன் பழகாதே, நிச்சயம் ஒருநாள் உனக்கு ஏதாவது பிரச்சனையை அந்த காகம் கொண்டு தரும்” என்றார்கள். ஆனால் சிட்டுக்குருவி அவர்கள் பேச்சுக்கு செவி கொடுக்காமல் காகத்துடன் நட்பாக பழக ஆரம்பித்தது. நாட்கள் கடந்தன அப்போது ஒரு நாள் காகம் சிட்டுக்குருவியிடம் கேட்டது, “நண்பா நாங்கள் வெளியே செல்கிறோம் நீ எங்களுடன் வருகிறாயா?” என்று. சிட்டுக்குருவியும் சரி நானும் வருகிறேன் என்று அந்த காகங்களுடன் சென்றது.

அந்த காகங்கள் அருகில் இருந்த ஒரு சோழ வயலில் புகுந்து அங்கு இருந்த அனைத்து சோள வகைகளை கொத்தி திங்க ஆரம்பித்தன. ஆனால் இந்த சிட்டுக்குருவியோ அமைதியாக ஒரு மரத்தில் அமர்ந்திருந்து. இந்த காகங்கள் சோளம் உண்ணுவதை பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அந்த விவசாய நிலத்தின் உரிமையாளர் ஓடி வந்தார், கையில் கம்போடு வந்து இந்த காகங்களை விரட்டினார்.

இந்தக் காகங்களும் பயத்தில் பறந்தன, அந்த காகங்கள் சிட்டுக்குருவியை தனியாக அங்கு விட்டு கொண்டு பறந்து சென்றன. ஆனால் சிட்டுக்குருவியோ மரத்தில் அமர்ந்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தது. அப்போது அந்த விவசாயி சிட்டுக்குருவியை நோக்கி கம்பை எடுத்து  சிட்டுக்குருவியை அடித்தார். சிட்டுக்குருவியும் கீழே விழுந்தது. அப்போதுதான் சிட்டுக்குருவி உணர்ந்தது, மற்ற பறவைகள் சொன்னதை நான் கேட்காமல் போனது என்னுடைய தவறுதான் என்று எண்ணி வருந்தியது.

நீதி : பிறர் நம் நன்மைக்காக கூறும் அறிவுரையை  கேட்க வேண்டும்.


இன்றைய செய்திகள்

16.12.2024

* அரசு பேருந்துகளுக்கு தகுதிச்சான்று வழங்குவதில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என போக்குவரத்து ஆணையருக்கு மாநில தலைமை தகவல் ஆணையர் உத்தரவு.

* பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு நிறுத்தப்பட்ட புக் பைண்டிங் பயிற்சி உட்பட மேலும் புதிதாக 7 பயிற்சிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.

* நாடு முழுவதும் நடைபெற்ற லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 1.45 கோடி வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இதில் ரூ.7 ஆயிரம் கோடி பணபட்டுவாடா நடைபெற்றுள்ளதாக தகவல்.

* ஒரே இரவில் 37 உக்ரைன் டிரோன்களை அழித்த ரஷிய ராணுவம்.

* ஐ.எஸ்.எல்.கால்பந்து: கேரள அணியை வீழ்த்தி மோகன் பகான் வெற்றி.

* இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்; 2ம் நாள் முடிவில் நியூசிலாந்து 340 ரன்கள் முன்னிலை.


Today's Headlines

* The state Chief Information Commissioner has directed the Transport Commissioner to pay due attention to issuing qualification certificates to government buses.

* The Tamil Nadu government informed the High Court that 7 more new training courses, including the discontinued bookbinding training for the visually impaired, will be started soon.

* 1.45 crore cases were closed in a single day through Lok Adalats held across the country. It is reported that Rs. 7 thousand crores of money was paid out of this.

* Russian army destroyed 37 Ukrainian drones in a single night.

* ISL football: Mohun Bagan defeats Kerala team.

* 3rd Test against England; New Zealand leads by 340 runs at the end of the 2nd day.


Covai women ICT_போதிமரம்


Kalaignar Kaivinai Thittam - G.O. Ms. No. 64, Dated : 06-12-2024 Released

 


கலைஞர் கைவினை திட்டம் - ரூ.50000 மானியத்துடன் ரூ.300000 வரை கடனுதவி - அரசாணை (நிலை) எண்: 64, நாள் : 06-12-2024 வெளியீடு


Kalaignar Kaivinai Thittam - Loan up to Rs.300000 with Subsidy of Rs.50000 - G.O. Ms. No. 64, Dated : 06-12-2024 Released 


Micro, Small and Medium Enterprises Department - Announcement made by the Hon'ble Minister for Finance and Human Resources Management on 19.02.2024 - progressive artisans development credit linked subsidy scheme "Kalaignar Kaivinai Thittam" - Implementation Guidelines- Orders - Issued.


குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை - மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் 19.02.2024 அன்று வெளியிட்ட அறிவிப்பு - முற்போக்கான கைவினைஞர் மேம்பாட்டு கடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டம் "கலைஞர் கைவினை திட்டம்" - செயல்படுத்தல் வழிகாட்டுதல்கள் - ஆணைகள் - வெளியிடப்பட்டது.


 

>>> அரசாணை (நிலை) எண்: 64, நாள் : 06-12-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




Appointment of Judges in High Courts - Caste Category Representation - Number of Vacancies - Ministry of Law's Reply, dated : 28-11-2024



உயர்நீதிமன்றங்களில் யாருக்கு எவ்வளவு பிரதிநிதித்துவம்?


உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளின் நியமனம் - வகுப்புவாரி பிரதிநிதித்துவம் - காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை - சட்ட அமைச்சகத்தின் பதில், நாள் : 28-11-2024


Appointment of Judges in High Courts - Caste Category Representation - Number of Vacancies - Ministry of Law's Reply, dated : 28-11-2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



GOVERNMENT OF INDIA

MINISTRY OF LAW AND JUSTICE

DEPARTMENT OF JUSTICE

RAJYA SABHA

UNSTARRED QUESTION NO. 438

ANSWERED ON 28/11/2024

SOCIAL DIVERSITY IN HIGHER JUDICIARY

438. SHRI P. WILSON:

Will the Minister of Law and Justice be pleased to state:

(a) whether Government has included in memorandum of procedure proposed for appointment of High Court and Supreme Court judges, requirement of social diversity/reservations;

(b) details and number of SC,ST,OBC, forward caste, women and minority judges in all the High Courts and in Supreme Court as on 31.10.2024; 

(c) reasons due to which the names of Ramasamy Neelakandan and John Sathyam have been kept pending despite being recommended by the Supreme Court Collegium on 17.01.2023 for appointment as judges of Madras High Court; and

(d) details of total number of vacancies in all High Courts for judges with total strength as on 31.10.2024?


ANSWER

MINISTER OF STATE (INDEPENDENT CHARGE) OF THE MINISTRY OF LAW AND JUSTICE; AND MINISTER OF STATE IN THE MINISTRY OF PARLIAMENTARY AFFAIRS.

(SHRI ARJUN RAM MEGHWAL)

(a) to (d): Appointment of Judges to the Supreme Court and High Courts is made under Articles 124, 217 and 224 of the Constitution of India and according to the procedure laid down in the Memorandum of Procedure (MoP) prepared in1998 pursuant to the Supreme Court Judgment of October 6, 1993 (Second Judges case) read with their Advisory Opinion of October 28, 1998 (Third Judges case), which do not provide for reservation for any caste or class of persons. Therefore, category-wise data pertaining to representation of SCs, STs and OBCs among the Judges of High Courts are not centrally maintained. However, since 2018, the recommendees for the post of High Court Judges are required to provide details regarding their social background in the prescribed format (prepared in consultation with the Supreme Court). Based on the information provided by the recommendees, out of 684 High Court Judges appointed since 2018,


21 belong to SC category, 14 belong to ST category, 82 belong to OBC category and 37 belong to Minorities. As on 31.10.2024, 02 women Judges are working in the Supreme Court and 106 in various High Courts.


2. As per the Memorandum of Procedure (MoP), the responsibility for initiation of proposals for appointment of Judges in the Supreme Court vests with the Chief Justice of India, while the responsibility for initiation of proposals for appointment of Judges in the High Courts vests with the Chief Justice of the concerned High Court, in consultation with two senior-most puisne Judges of the High Court. However, the Government has been requesting the Chief Justices of High Courts that while sending proposals for appointment of Judges, due consideration be given to suitable candidates belonging to Scheduled Castes, Scheduled Tribes, Other Backward Classes, Minorities and Women to ensure social diversity in the appointment of Judges in High Courts. 


3. As per the Memorandum of Procedure (MoP), the proposals recommended by the High Court Collegium for appointment as High Court Judges, are to be considered in light of such other reports/inputs as may be available to the Government for assessing the suitability in respect of the names under consideration.The Supreme Court in its Judgment dated 6.10.1993 in Supreme Court Advocates on Record Vs. Union of India (Second Judges Case) inter-alia observed that merit selection is the dominant method for judicial selections and the candidates to be selected must possess high integrity, honesty, skill, high order of emotional stability, firmness, serenity, legal soundness, ability and endurance. 


4. Appointment of Judges in the higher judiciary is a continuous, integrated and collaborative process between the executive and the judiciary. It requires consultation and approval from various Constitutional Authorities both at State and Central level. The Government exercises its opinion on the recommendations made by the Supreme Court Collegium (SCC) by virtue of this collaborative process so as to ensure that most suitable and meritorious candidate is appointed to the esteemed post of a Judge in the Constitutional Courts. Only those persons are appointed as Judges of the Supreme Court and High Courts whose names have been recommended by the SCC.


5. The sanctioned strength and vacancies of Judges in the High Courts as on 31.10.2024 is at Annexure.


*****

Annexure

Statement showing Sanctioned strength and Vacancies of Judges in the High Courts 

(As on 31.10.2024)

Sl. No. High Court(s) Sanctioned Strength Vacancies

1 Allahabad 160 78

2 Andhra Pradesh 37 8

3 Bombay 94 25

4 Calcutta 72 29

5 Chhattisgarh 22 5

6 Delhi 60 23

7 Gauhati 30 6

8 Gujarat 52 20

9 Himachal Pradesh 17 6

10 J & K and Ladakh 25 10

11 Jharkhand 25 7

12 Karnataka 62 12

13 Kerala 47 2

14 Madhya Pradesh 53 18

15 Madras 75 8

16 Manipur 5 1

17 Meghalaya 4 0

18 Orissa 33 14

19 Patna 53 18

20 Punjab & Haryana 85 32

21 Rajasthan 50 18

22 Sikkim 3 0

23 Telangana 42 15

24 Tripura 5 0

25 Uttarakhand 11 5

Total 1122 360



The Constitution of India does not provide for caste-wise reservation for High Court judges, so the government does not maintain caste-wise data on High Court judges. However, since 2018, the government has collected social background information on High Court judge nominees. Here is some information on the caste of High Court judges appointed since 2018: 

Caste

Number of judges

Scheduled Caste (SC)

21

Scheduled Tribe (ST)

12

Other Backward Class (OBC)

78

General

499

The government has also asked High Court Chief Justices to consider candidates from underrepresented groups, such as SCs, STs, OBCs, minorities, and women, when appointing judges. 

Appajee Vardarajan was the first Scheduled Caste judge of the Madras High Court, serving from 1980–1985


Sale of 3 types of 'Co-operative Pongal' packages containing grocery items at Ration Shops



கூட்டுறவு பண்டக சாலைகள் மற்றும் நியாயவிலைக் கடைகளில் மளிகை பொருட்கள் அடங்கிய 3 வகையான ‘கூட்டுறவு பொங்கல்’ தொகுப்பு விற்பனை


Sale of 3 types of 'Co-operative Pongal' packages containing grocery items at Co-operative Stores and Fair Price Ration Shops


 ரூ.199, ரூ.499, ரூ.999... - 3 அலகுகளில் ‘கூட்டுறவு பொங்கல்’ தொகுப்பு விற்பனை


கூட்டுறவு பண்டக சாலைகள் மற்றும் நியாயவிலைக் கடைகளில் மளிகை பொருட்கள் அடங்கிய 3 வகையான பொங்கல் தொகுப்புகளை விற்க கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது.



அரசு கூட்டுறவுத்துறை சார்பில் பண்டிகை காலங்களில், பண்டிகைக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் கூட்டுறவு பண்டக சாலைகள் மற்றும் நியாயவிலைக் கடைகளில் விற்கப்பட்டு வருகிறது. விலை மலிவாகவும், பொருட்கள் தரமாகவும் இருப்பதால், இத்திட்டம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'கூட்டுறவு பொங்கல்' என்ற பெயரில் மளிகைப் பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்புகளை விற்க கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது. இந்த தொகுப்புகளில் பச்சரிசி, வெல்லம், நெய், முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் இடம்பெற உள்ளன.



இதுகுறித்து அனைத்து மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ந.சுப்பையன் அனுப்பியுள்ள செயல்முறை ஆணையில் கூறியிருப்பதாவது: அடுத்த மாதம் 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, 'கூட்டுறவு பொங்கல் தொகுப்பு' என்ற பெயரில் மளிகைப் பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்புகளை விற்க கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது. அவற்றை நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலைகள், பிரதம கூட்டுறவு பண்டக சாலைகள், சுயசேவை பிரிவுகள், நியாயவிலைக் கடைகளில் விற்க வேண்டும்.


ரூ.199 முதல் 999 வரை: இதில் ரூ.199-க்கு 'இனிப்பு பொங்கல் தொகுப்பு' (8 பொருட்கள்), ரூ.499-க்கு 'சிறப்பு கூட்டுறவு பொங்கல் தொகுப்பு' (20 பொருட்கள்), ரூ.999-க்கு 'பெரும் பொங்கல் தொகுப்பு' (35 பொருட்கள்) ஆகிய 3 வகைகளில் பொங்கல் தொகுப்புகள் விற்கப்பட உள்ளன. இத்தொகுப்புகளை அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


14.01.2025 அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு "கூட்டுறவு பொங்கல்" என்ற பெயரில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்க மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை தயார் செய்து தங்கள் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களான நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள், கூட்டுறவு விற்பனைச் சங்கம், சுயசேவை பிரிவுகள், சில்லறை விற்பனை நிலையங்கள் போன்ற அனைத்து விற்பனை அலகுகள் மூலம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ளபடி


இனிப்பு பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் ரூ.199/-க்கும்,


சிறப்பு பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் ரூ.499/-க்கும் மற்றும்


பெரும் பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் ரூ.999/-க்கும் விற்பனை செய்ய உத்தரவிடப்படுகிறது.


*=> இனிப்பு பொங்கல் தொகுப்பு ரூ.199 :*

* பச்சரிசி (BPT 43) - 500 கிராம்

* பாகு வெல்லம் - 500 கிராம்

* ஏலக்காய் - 5 கிராம்

* முந்திரி - 50 கிராம்

* ஆவின் நெய் - 50 கிராம்

* பாசி பருப்பு - 100 கிராம்

* உலர் திராட்சை - 50 கிராம்

* சிறிய பை - 1

----------------------------


*=> சிறப்பு பொங்கல் தொகுப்பு ரூ.499:*

* மஞ்சள் தூள் - 50 கிராம் 

* சர்க்கரை - 500 கிராம்

* துவரம் பருப்பு - 250 கிராம்

* கடலைப் பருப்பு - 100 கிராம்

* பாசிப் பருப்பு - 100 கிராம்

* உளுத்தம் பருப்பு - 250 கிராம்

* கூட்டுறவுப்பு - 1 கிலோ

* நீட்டு மிளகாய் - 250 கிராம்

* தனியா - 250 கிராம்

* புளி - 250 கிராம்

* பொட்டுக் கடலை - 200 கிராம்

* மிளகாய் தூள் - 50 கிராம்

* செக்கு கடலை எண்ணெய் - 1/2 லிட்டர்

* கடுகு - 100 கிராம்

* சீரகம் - 50 கிராம்

* மிளகு - 25 கிராம்

* வெந்தயம் - 100 கிராம்

* சோம்பு - 50 கிராம்

* பெருங்காயம் - 14 கிராம்

* மளிகை பை - 1

----------------------------


*=> பெரும் பொங்கல் தொகுப்பு ரூ.999*

* மஞ்சள் தூள் - 50 கிராம்

* சர்க்கரை - 1/2 கிலோ

* கூட்டுறவுப்பு - 1 கிலோ

* துவரம் பருப்பு - 1/4 கிலோ

* உளுந்தம் பருப்பு - 250 கிராம்

* கடலை பருப்பு - 200 கிராம்

* பச்சை பட்டாணி - 100 கிராம்

* பாசி பருப்பு (சிறுபருப்பு) - 250 கிராம்

* வெள்ளை சுண்டல் - 200 கிராம்

* வேர்க்கடலை - 200 கிராம்

* பொட்டுக்கடலை - 200 கிராம்

* வரமிளகாய் - 250கிராம்

* புளி - 200 கிராம்

* தனியா - 25 கிராம்

* கடுகு - 100 கிராம்

* மிளகு - 50 கிராம்

* சீரகம் - 50 கிராம்

* வெந்தயம் - 100 கிராம்

* சோம்பு - 50 கிராம்

* ஏலக்காய் - 5 கிராம்

* செக்கு கடலை எண்ணெய் - 1/2 லிட்டர்

* வரகு - 500 கிராம்

* சாமை - 500 கிராம்

* திணை - 500 கிராம்

* ரவை - 500 கிராம்

* அவல் - 250 கிராம்

* ராகி மாவு - 500 கிராம்

* கோதுமை மாவு - 500 கிராம்

* ஜவ்வரிசி - 200 கிராம்

* வறுத்த சேமியா - 170 கிராம்

* மல்லி தூள் - 50 கிராம்

* சாம்பார் தூள் - 50 கிராம்

* மிளகாய் தூள் - 50 கிராம்

* பெருங்காயத் தூள் - 25 கிராம்

* பெரிய மளிகை பை - 1

- மேற்குறிப்பிட்ட பெரும் பொங்கல் பெயரில் தொகுப்புடன் விலையில்லாமல் நாட்டு சர்க்கரை 500 கிராம் வழங்கப்படும்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiam Mobile App New Version Update - Version 1.20.9 - Updated on 23-12-2024

  * KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.20.9 *  Kalanjiam Mobile App New App New Update  *  Version 1.20.9 *  Updated on 23/12/2024 * Whats ...