கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Teachers suffer as online training links are not available - Daily News


 இணையதள பயிற்சி இணைப்பு கிடைக்காதால் ஆசிரியர்கள் தவிப்பு - நாளிதழ் செய்தி 


Teachers suffer as online training links are not available - Daily News


தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மாற்றுத்திறனாளி மாணவர்களையும் மற்ற மாணவர்களைப் போல் வழி நடத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு உள்ளடக்கிய கல்வி பயிற்சி இணைய வழியில் அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சிக்கான இணைப்பு கிடைக்காததால் ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.


மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்ற மாணவர்களுடன் இணைந்து கல்வி கற்கும் முறை தான் உள்ளடக்கிய கல்வி முறையாகும். மாற்றுத்திறனாளி மாணவர்களையும் மற்ற மாணவர்களைப்போல் வழி நடத்த ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் உள்ளடக்கிய கல்விக்கு இணைய வழியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.


இந்த பயிற்சி டிச.14 முதல் ஜன.10 வரை ஏழு கட்டங்களாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு கட்டங்கள் முடித்த பின் அடுத்த கட்டங்களுக்கு ஆசிரியர்கள் செல்லலாம்.


பயிற்சி நிறைவு செய்த பின் ஆசிரியர்கள் எல்.எம்.எஸ்., என்ற இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தால் பயிற்சி நிறைவு செய்ததற்கான சான்றிதழ்களை டவுன் லோடு செய்து கொள்ளலாம்.


இதற்காக எமிஸ் தளத்தில் உள் உழைந்து ஆசிரியர்கள் தங்கள் பயனர் கணக்கு மூலம் இந்த பயிற்சியை செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் ஆசிரியர்கள் இந்த பயிற்சிக்காக நுழைவதால் இணையதள இணைப்பு கிடைக்கமால் தவிக்கின்றனர்.


தமிழக பள்ளிக்கல்வித்துறை இந்த இணையதள பிரச்னையை சரி செய்து ஆசிரியர்கள் ஆன் லைன் மூலம் பயிற்சி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.


From 01.01.2025 applications all types of leave through Kalanjiyam App only – DSE Proceedings

 

01.01.2025 முதல் களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே ஓய்வூதிய கருத்துருக்களும், அனைத்து வகை விடுப்புகளும் விண்ணப்பிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குநரின் DSE செயல்முறைகள்


From 01.01.2025 applications for pension schemes and all types of leave through Kalanjiyam App only – Director of School Education Proceedings



பள்ளிக்கல்வி துறை அனைத்து அலுவலகங்கள் மற்றும் அரசு / அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் களஞ்சியம் செயலி மூலம் விடுப்பு / ஓய்வூதிய திட்டம் / பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் / கடன் / Pay Slip போன்றவற்றிற்கு களஞ்சியம் செயலியை இனி வரும் காலங்களில் முழுமையாக பயன்படுத்த வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குநர்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Our next calender year 2025 is a mathematical wonder



 நமது அடுத்த நாட்காட்டி ஆண்டு 2025 ஒரு கணித அதிசயம்


சுவாரஸ்யமான 2025 


1) 2025, ஒரு முழு வர்க்க எண் 45²


2) இது இரண்டு வர்க்கங்களின் பெருக்கற்பலன், அதாவது. 9² x 5² = 2025 


3) இது 3 வர்க்கங்களின் கூட்டுத்தொகை, அதாவது. 40²+ 20²+5²= 2025 


4) இது 1936 க்குப் பிறகு முதல் வர்க்க எண் 


5) இது 1 முதல் 9 வரையிலான அனைத்து ஒற்றை இலக்க எண்களின் கனங்களின் கூட்டுத்தொகை, அதாவது. 1³+2³+3³+4³+5³+6³+7³+8³+9³= 2025. 


இவ்வளவு சிறப்பு வாய்ந்த 2025 நமது அடுத்த வருடமாக இருக்கும். 😊



Our next calender year 2025 is a mathematical wonder


Interesting 2025


1) 2025, itself is a square 


2) It's a product of two squares, 

Viz. 9² x 5² = 2025


3) It is the sum of 3-squares, 

viz. 40²+ 20²+5²= 2025


4) It's the first square after 1936


5) It's the sum of cubes, of all the single digits, from 1 to 9,

 viz. 1³+2³+3³+4³+5³+6³+7³+8³+9³= 2025.


This is going to be our NEXT YEAR. 😊


DEE Proceedings to select and send 40 teachers from each block who have made the best contribution to the learning progress of the students through TNSED Manarkeni App

 

ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும் சிறந்த 40 ஆசிரியர்கள் தேர்வு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...


மணற்கேணி செயலி மூலம் மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்திற்கு மிகச்சிறந்த பங்களிப்பினை நல்கியுள்ள 40 ஆசிரியர்களை ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும் தேர்வு செய்து அனுப்பிட தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு...


1 to 8th standard best 40 trs (8×5=40) (each class 5 trs) from each block to be selected - BEO's prepare the trs list


The Director of Elementary Education directed to select and send 40 teachers from each union who have made the best contribution to the learning progress of the students through TNSED Manarkeni App



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்திற்கு மிகச்சிறந்த பங்களிப்பினை நல்கியுள்ள ஆசிரியர்களை ஓர் ஒன்றியத்திலிருந்து ஒவ்வொரு வகுப்பிற்கும் 5 ஆசிரியர்கள் என்ற அடிப்படையில் 40 ஆசிரியர்களை கண்டறிந்து தெரிவு செய்திடவும் அத்தகைய சிறந்த ஆசிரியர்களின் விவரங்களை ஆங்கிலத்தில் மட்டும் Excel படிவத்தில் பின்வரும் தகவல்களின் அடிப்படையில் பூர்த்தி செய்து மாவட்டவாரியாக தொகுத்து அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.


தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் ஒன்றியத்திற்கு 40 சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்ய உத்தரவு (அதாவது ஒரு வகுப்பிற்கு 5 ஆசிரியர்கள்) 


🟢  மணற்கேணி செயலியை ஆசிரியர்கள் வகுப்பறைகளில் பயன்படுத்த வேண்டும்.


🟢 மணற்கேணி App பயன்படுத்துவது பற்றி  பள்ளி மேலாண்மை குழுவில் பெற்றோர்களுக்கு விளக்க வேண்டும். 


🟢 ஒவ்வொரு ஒன்றியத்திலும், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு மிகச்சிறந்த பங்களிப்பை நல்கியுள்ள ஆசிரியர்களில் - ஒரு வகுப்பிற்கு 5 ஆசிரியர்கள் என மொத்தம் 40 ஆசிரியர்களை வரும் 08.01.2025 க்குள் தேர்வு செய்ய வேண்டும்.


தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

Term 2 - SA Marks - 1 to 5th Std - Input in TNSED App - Guidelines - DEE Proceedings

 

  2024-25ஆம் கல்வி ஆண்டு - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பிற்கான இரண்டாம் பருவத் தொகுத்தறி மதிப்பெண்கள் - TNSED செயலியில் உள்ளீடு செய்தல் - வழிகாட்டி நெறிமுறைகள் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 24-12-2024...


Academic Year 2024-25 - Second Term Summative Assessment Marks for Class 1 to 5 in Government and Government Aided Schools - Input in TNSED App - Guidelines - Proceedings of Director of Elementary Education, Dated: 24-12-2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் (ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை) - TN SED School app செயலியில் உள்ளீடு செய்தல் - சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்...



Man survives by lying in the middle of the tracks when the train arrives - video goes viral



ரயில் வரும் பொழுது தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய நபர் - வைரலாகும் காணொளி


Man survives by lying in the middle of the tracks when the train arrives - video goes viral


கேரளா: கண்ணூர்,  சிராக்கல் பகுதியைச் சேர்ந்த நடுத்தர வயது நபர் ரயில் வரும் போது தண்டவாளத்தின் நடுவில் படுத்து ஒருவர் அதிசயமாக உயிர் தப்பினார்.


 நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, ரயில் நெருங்கியபோது அவர் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு எந்த காயமும் ஏற்படாமல் அவரை ரயில் கடந்து சென்ற பின் எழுந்து சென்றார்.


 இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஸ்ரீஜித் என்பவர் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.  இந்தச் செயல் தற்செயலானதா அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க அதிகாரிகள் இது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



Kerala Kannur Viral Video Latest News: 

பேஸ்புக், ட்விட்டர், யூ-ட்யூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தினந்தினம் பல்வேறு வீடியோக்கள் பதிவிடப்படுகின்றன. இணையத்தில் கொட்டிக்கிடக்கும் வீடியோக்கள் அவ்வப்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரல் ஆகும். அதிர்ச்சியளிக்கும் வீடியோக்கள், விழிப்புணர்வு வீடியோக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களில் வீடியோக்கள், வினோதமான வீடியோக்கள் என பல்வேறு வீடியோக்கள் அடிக்கடி வைரலாகி மக்கள் மத்தியில் பேசுப்பொருளாக இருக்கும். 


தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடும் அதிகரித்துவிட்டது. ஸ்மார்ட்போனில் வீடியோ, புகைப்படங்கள் எடுக்கும் பழக்கங்களும் அதிகரித்துவிட்டது. யூ-ட்யூப் ஷார்ட்ஸ், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் வீடியோக்கள் பதிவிட்டு இன்டர்நெட் பிரபலமாகிவிட நினைக்கின்றனர். இதனால், எந்த இடமானாலும் சரி, எந்த நேரமானாலும் சரி ஸ்மார்ட்போனை வைத்து புகைப்படம், வீடியோ எடுப்பதை பலரும் ஒரு வேலையாகவே வைத்திருக்கின்றனர். தினமும் குறைந்தபட்சம் ஒரு வீடியோ அல்லது ஒரு புகைப்படத்தையாவது பதிவிட்டு தங்களின் இருப்பை இணையத்தில் பதிவு செய்துகொண்டே இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.



வைரலாகும் கேரள வீடியோ

அப்படியிருக்க, உங்களின் கண் முன்னே எதாவது அசம்பாவிதம் நடந்தாலோ, குற்றச்செயல்கள் நடந்தாலோ அது தட்டிக்கேட்கிறார்களோ இல்லையோ தங்களின் ஸ்மார்ட்போனை வைத்து பதிவுசெய்துவிடுகின்றனர். இது ஒரு வகையில் நல்லதுதான், ஏனென்றால் அவை குற்றவாளிகளுக்கு எதிரான ஆதரமாகிவிடுகிறது. மறுபுறம் யாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களையும் இதேபோல் சில வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில், கேரளாவில் ஒருவர் தன் கண்முன் நடந்த ஒரு வியப்பான சம்பவத்தை வீடியோ எடுத்து இணையத்தில் உலாவாவிட்டார், தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வைரல் வீடியோ எதை பற்றியது, எதனால் அது இவ்வளவு தூரம் வைரலானது ஏன் என்பது குறித்து இங்கு காணலாம். 


வைரல் வீடியோ: திக் திக் காட்சிகள்


ரயில் வருவதை பார்க்காமல் தண்டவாளத்தை கடக்க நினைத்த ஒருவர், திடீரென தனது அருகே ரயில் வருவதை பார்த்து நொடிப்பொழுத்தில் தண்டவாளத்தில் அப்படியே படுத்து, உயிர்தப்பிய வீடியோ தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கேரளாவின் சிராக்கல் - கண்ணூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பன்னென்பாறை பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது.


கண்ணுார் : ரயில் வருவது தெரியாமல், தண்டவாளத்தில் நடந்து சென்ற முதியவர் சிக்கி, காயமின்றி உயிர் தப்பினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


ரயில் வருவதை பார்க்காமல் தண்டவாளத்தை கடக்க நினைத்த ஒருவர், திடீரென தனது அருகே ரயில் வருவதை பார்த்து நொடியில், தண்டவாளத்தில் அப்படியே படுத்து, உயிர்தப்பிய வீடியோ தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ நேற்று மாலை கேரளாவின் சிராக்கல் - கண்ணூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பன்னென்பாறை பகுதியில் எடுக்கப்பட்டது.


ரயில் வேகமாக சென்றுகொண்டிருக்க அதன் அடியில் ஒருவர் படுத்துக்கொண்டிருப்பதும், ரயில் கடந்து சென்ற பின்னர் அந்த நபர் எதுவும் நடக்காதது போல் சற்று தள்ளாடியபடியே தண்டவாளத்தை கடந்து செல்வதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. நல்லவேளையாக, அந்த நபருக்கு காயம் ஏதும் இல்லை என்பதையும் காண முடிந்தது. வீடியோ வைரலானதை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


அந்த வீடியோவில் ரயில் அடியில் படுத்துக்கிடந்த நபர் யார் என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது. கண்ணூர் பன்னென்பாறை பகுதியை சேர்ந்த பவித்ரன் என்பது உறுதியாகி உள்ளது.




விபத்து குறித்து பவித்ரன் கூறுகையில், நான் மொபைல் போனை பார்த்துக்கொண்டே,தண்டவாளத்தில் நடந்து சென்றபோது, ரயில் வருவதைப் பார்த்தேன். என்னால் ஓட முடியவில்லை. அதனால் நான் தண்டவாளத்தில் அப்படியே படுத்துவிட்டேன். ரயில் கடந்து சென்றதும் நான் எழுந்து வந்துவிட்டேன்.


நான் பள்ளி வாகன கிளீனராக உள்ளேன்.அந்த சம்பவத்தின் போது, நான் மதுபானம் எதுவும் அருந்தவில்லை. அந்த வீடியோவை பார்த்ததும் உள்ளுக்குள் பயமாக இருந்தது. தான் தொடர்ந்து இவ்வழியே செல்வதாகவும், இதுதான் எனது முதல் அனுபவம்.


இவ்வாறு பவித்ரன் கூறினார்.

Job satisfaction - Today's Short Story

 

செய்யும் தொழில் மனத்திருப்தி - இன்றைய சிறுகதை 


Job satisfaction - Today's Short Story 


இன்று ஒரு சிறு கதை


செய்யும் தொழில் மனத்திருப்தி

..................................


ஒரு கோவிலில் கல் தச்சர்களின் முயற்சியால் சிற்பங்கள், சிலைகள், விக்ரகங்கள் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருந்தன.


ஒரு கல் தச்சர் ஒரு சிலையை உருவாக்கிக் கொண்டு இருந்தார். அவரின் அருகில் ஒரே மாதிரியான இரண்டு சிலைகள் இருந்தன. 


எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரியாக இருந்தன. அதைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர்,


“ஒரே விக்ரகத்திற்கு இரண்டு சிலைகளை உருவாக்குகிறீர்களா அய்யா?” என்றார்.


கல் தச்சர் சொன்னார்,


“எங்களுக்கு ஒரே ஒரு சிலையே போதுமானது. ஆனால் முதலில் செய்யப்பட்ட சிலையில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதனால் இரண்டாவது சிலையை உருவாக்குகிறேன் என்றார்..


வழிப்போக்கர் நன்றாக இரண்டு சிலைகளையும் உற்றுக் கவனித்து விட்டுச் சொன்னார் -


எந்தச் சேதமும் எனது கண்ணுக்குத் தெரியவில்லையே” அய்யா..


தனது வேலையில் கவனத்துடன் இருந்த கல் தச்சர் சொன்னார்


“அந்த சிலையின் மூக்கின் அருகில் ஒரு சிறிய சேதம் உள்ளது. ”என்றார்.

இந்தச் சிலையை எங்கே நிர்மாணிக்க இருக்கிறீர்கள்?” 

- வழிப்போக்கர்.


“50 அடி உயரத்தில் மேலே நிர்மாணிக்க இருக்கிறோம்” ,,

ஐம்பதடி உயரத்தில் இருக்கப் போகிற சிலையின் மூக்கு அருகில் இருக்கும் இந்தச் சிறிய சேதத்தை யார் கவனிக்கப் போகிறார்களா?” என்ன என்றார் வழிப்போக்கர்.


தனது வேலையைச் சற்று நிறுத்தி விட்டு வழிப்போக்கரிடம் புன்னகையுடன் 

கல்தச்சர் சொன்னார்,


“யார் கவனிக்கப் போகிறார்கள்? - எனக் கேட்கிறீர்கள்.


அய்யா,வேறு யாருக்கும் அந்தச் சேதம் தெரிவதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.


எனது கடமையில் இப்படி ஒரு சேதத்தை நான் உருவாக்கியதை அடுத்தவரிடம் மறைப்பது எனக்குப் பிடிக்கவில்லை.


சேதம் சிறியதா? , பெரியதா? என்பது பற்றிக் கவலை இல்லை. செய்யும் தொழிலில் பிழை ஏற்படலாம். ஆனால் பிழையை மறைக்காமல் வெளிப்படையாக இருக்கவே விரும்புகிறேன்”. என்றார் அந்தக் கல் தச்சர்..


ஆம்,நண்பர்களே.,


உயர்ந்த தரம் என்பது அடுத்தவரின் பார்வையில் இருந்து வர வேண்டியது இல்லை.


அது தனக்குள்ளேயே இருந்து வர வேண்டும்.


அடுத்தவருக்காக வேலை செய்வதில் கிடைக்கும் இன்பத்தை விட, தன் மனத்திருப்திக்காக வேலை செய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி அதிகம்…


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (Ms) No: 98, Dated : 30-12-2024, Raising the Additional Incharge Allowance Amount to ₹1000/- for Noon Meal Organisers

  சத்துணவு அமைப்பாளர்களுக்கான கூடுதல் பொறுப்புப் படியை ₹1000/- ஆக உயர்த்தி அரசாணை (நிலை) எண்: 98, நாள் : 30-12-2024 வெளியீடு சத்துணவு அமைப்ப...