கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

12th Standard Public Exams Start Tomorrow - Cell Phone Banned - Punishment for disorderly Activities

 

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடக்கம் - அலைபேசிக்கு தடை - ஒழுங்கீனச் செயல்பாடுகளுக்குத் தண்டனை - செய்தி வெளியீடு எண்: 476, நாள் : 01-03-2025


 Class 12 Public Exams Start Tomorrow - Cell Phone Banned - Punishment for Misbehave Activities - Press Release No: 476, Dated : 01-03-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நாளை (03.03.2025) தொடங்கி மார்ச் 25 வரை நடைபெற உள்ளது.


நடப்பாண்டு + 2 பொதுத்தேர்வை 8 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுத உள்ளனர்.


3,316 தேர்வுகள் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


94983 83075, 94983 83076 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு மாணவர்கள், பெற்றோர்கள் சந்தேகங்களை கேட்கலாம் - பள்ளிக்கல்வித்துறை.


+2 பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட மாணவர்  3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வெழுத தடை விதிக்கப்படும் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை



Improvement in Pope's health



போப் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.


Pope's health improved


இது குறித்து வாடிகன் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை 


கடந்த 24 மணி நேரத்தில் போப் பிரான்சிஸ் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சிறுநீரக பிரச்னை சரியாகி வருகிறது. தற்போது நுரையீரல் வீக்கம் சரியாக வருகிறது.


இன்று நடத்தப்பட்ட ரத்த பரிசோதனைகள் மூலம் அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவது உறுதி செய்யப்பட்டது 


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கத்தோலிக தலைமை மதகுரு போப் பிரான்சிஸின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை அவர் காபி குடித்து, ஓய்வெடுத்துள்ளார்.


உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிஸ் தொடர்ந்து குணமடைந்து வந்த நிலையில், அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டு, உடல்நிலை மோசமடைந்தது.


இந்த நிலையில், அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இன்று காலை உணவாக அவர் காபி குடித்ததாகவும், பிறகு செய்தித்தாள் படித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இன்று அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இன்னும் ஓரிரு நாள்கள் அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.


அவரது நோய் பாதிப்பு முழுதாக குணமடையவில்லை, எனவே, அவர் அபாயநிலையை தாண்டவில்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 14-ஆம் தேதி முதல் ரோம் நகரின் ஜெமிலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் போப் பிரான்சிஸின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் காணப்பட்டதைத் தொடர்ந்து அவர் சீராக சுவாசித்து வருகிறார். அவருக்கு ஆஸ்துமா தொடா்பான புதிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.


அவருக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து குணமடைந்து வருவதால் போப் மருத்துவமனை அறையில் வழக்கமான பணிகளை மேற்கொண்டார்.



Microsoft is shutting down Skype

 


Skype-க்கு விடை கொடுக்கிறது மைக்ரோசாஃப்ட்


Microsoft is shutting down Skype


Skype-யை மூடும் மைக்ரோசாஃப்ட்


இதன் Credential-கள் மூலம் வரும் மே மாதத்திலிருந்து Microsoft Teams-ல் லாகின் செய்து அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது. 


சுமார் 20 வருடங்களாக internet-based phone and video சேவைகளை வழங்கி வந்த Skype-ன் நினைவுகளை சமூகவலைத்தளங்களில் பதிவிடத் தொடங்கிய நெட்டிசன்கள்.


வரும் மே மாதம் 5-ம் தேதி உடன் ஸ்கைப் தளத்துக்கு விடை கொடுப்பதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கு மாற்றாக டீம்ஸை பயனர்கள் மத்தியில் பிரபலப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.


கடந்த 2003-ல் ஸ்கைப் அறிமுகம் செய்யப்பட்டது. வீடியோ வழி உரையாடல், வீடியோ கான்ஃபரன்சிங் மற்றும் வாய்ஸ் கால்ஸ் போன்றவற்றை மேற்கொள்ளலாம். இன்ஸ்டன்ட் மெசேஜிங், ஃபைல் டிரான்ஸ்பர் உள்ளிட்ட அம்சங்கள் இதில் அடங்கும். டெஸ்க்டாப் உள்ளிட்ட கணினி மற்றும் மொபைல் போனில் இதை பயன்படுத்த முடியும். 2005-ல் 50 மில்லியன் பயனர்களை ஸ்கைப் தளம் எட்டியது.


ஸ்கைப் பயனர்கள் தங்களது பயனர் விவரங்களை கொண்டு டீம்ஸில் லாக்-இன் செய்யலாம் என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது. அதன் மூலம் பழைய சாட்கள் மற்றும் கான்டக்ட்ஸ் போன்றவை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் கட்டண சந்தா பயன்பாட்டை ஸ்கைப் தளத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுத்தி உள்ளது.


நவீன கம்யூனிகேஷன்ஸ் சார்ந்து டீம்ஸ் தளத்தை ப்ரோமோட் செய்யும் வகையில் இந்த நகர்வை மைக்ரோசாஃப்ட் முன்னெடுத்துள்ளது. ஸ்கைப் பயனர்கள் மே 5-ம் தேதி வரையில் அந்த தளத்தை பயன்படுத்தலாம்.


2025-2026 Academic Year Admission in Government Schools - Tamilnadu Chief Minister launched



2025-2026 ஆம் கல்வி ஆண்டின் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்


2025-2026 Academic Year Admission in Government Schools - Tamilnadu Chief Minister launched


தந்தைக்கே உரிய மகிழ்வுடன் மாணாக்கர் சேர்க்கை ஆணையை வழங்கிய தாயுமானவர்




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.


மாணவர்களுக்கு மலர் மாலை அணிவித்து, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.


ராயப்பேட்டை லேடி வெலிங்டன் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.


தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் 2025-2026ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்.


March 2025 - School Calendar



மார்ச் 2025  - பள்ளி நாள்காட்டி


March 2025 - School Calendar 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



01-03-2025 -சனி - ஆசிரியர் குறை தீர் நாள் 


03-03-2025 - திங்கள் - +2 பொதுத் தேர்வு ஆரம்பம்.


05-03-2025- புதன் - 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஆரம்பம்.


28-03-2025 -வெள்ளி -10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஆரம்பம்.


22-03-2025 - சனி - பள்ளி முழு வேலை நாள்.


🌟அரசு விடுமுறை நாள்


31-03-2025 - திங்கள் - ரம்ஜான் பண்டிகை 


🌟RL / RH வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்...


04-03-2025 - செவ்வாய் - அய்யா வைகுண்ட சாமி பிறந்தநாள்


05-03-2025 - புதன் - சாம்பல் புதன்


12-03-2025 - புதன் - மாசி மகம்


27-03-2025 - வியாழன் - ஷபே காதர்



2024-2025ஆம் கல்வியாண்டிற்கான திருத்திய நாட்காட்டி - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 10-10-2024...



Revised Calendar for Academic Year 2024-2025 - Proceedings of Director of School Education, Dated : 10-10-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Governor send Birthday wishes to CM



 ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தமிழ்நாடு முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து


Governor R.N. Ravi send Birthday wishes to Chief Minister of Tamil Nadu Mr. M.K.Stalin




PM Modi Happy birthday to TN Chief Minister M.K.Stalin



பிரதமர் மோடி அவர்கள் தமிழ்நாடு முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து


Prime Minister Modi Happy birthday to Chief Minister of Tamil Nadu Mr.M.K.Stalin




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiyam Mobile App New Version Update - Version 1.22.2 - Updated on 13-05-2025

      KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.22.2 *  IFHRMS   Kalanjiyam Mobile App New App New Update  *  Version 1.22.2 *  Updated on 13-05-2...