கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Sastra University B.Ed., degree Eligible to Incentive : G.O. Ms. No: 112, DEE Proceedings & High Court Judgment

 

 

தஞ்சை  சாஸ்த்ரா பல்கலைக்கழக பி.எட்., பட்டம் ஊக்க ஊதிய உயர்விற்கு செல்லும் என்கிற அரசாணை எண் : 112,  தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்பாணை


Sastra University B.Ed., G.O. No. 112, DEE & DSE Proceedings & High Court Judgment


Thanjavur Shastra University B.Ed. Degree will go towards Incentive Pay Increase Government Order G.O. Ms. No.: 112, Director of Elementary Education Proceedings and High Court Judgment



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் இன்று (10/07/2025) கலந்து கொள்ள வேண்டியவர்கள் விவரம்

 

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் இன்று (10/07/2025) கலந்து கொள்ள வேண்டியவர்கள் விவரம்


*மாறுதல் கலந்தாய்வு செய்தி*


 *பள்ளி கல்வித்துறை(DSE- JD(HS)*

 


*இன்று*(10.07.2025)

 *அரசு நகராட்சி முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை-1/ கணினி ஆசிரியர் நிலை-1 /தொழில் கல்வி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு* ( மாவட்டம் விட்டு மாவட்டம் )


--------------------------

 *தொடக்கக் கல்வித் துறை(DEE)*

 *இன்று*( 10.07.2025 )

 *இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல்  கலந்தாய்வு* ( மாவட்டம் விட்டு மாவட்டம்   )

(வ.எண் 2301 முதல் 3500, வரையிலான எண்கள் கொண்ட ஆசிரியர்கள)


Reservation for teachers and government employees in the P.G. Assistant examination


முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வில் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு இட ஒதுக்கீடு


Reservation of seats for teachers and government employees in the competitive examination for postgraduate teachers


09-07-2025 அன்று வெளியிடப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு அறிவிப்பில் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு இட ஒதுக்கீடு 


 09-07-2025 அன்று வெளியிடப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு பணிநியமனத்தில் 


8% இடைநிலை ஆசிரியர்களுக்கும், 2% ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


பணியில் இருப்போர்க்கு நல்வாய்ப்பு. பயன்படுத்தி வெற்றி பெற நல்வாழ்த்துகள்



>>> PGTRB Exam Notification 2025 Released - Total Vacancies : 1996...


பொதுமாறுதல் கலந்தாய்வில் இன்று (11/07/2025) கலந்து கொள்ள வேண்டியவர்கள் விவரம்

 

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் இன்று (11/07/2025) கலந்து கொள்ள வேண்டியவர்கள் விவரம்


 பொதுமாறுதல் கலந்தாய்வு இன்று (11/07/2025) காலை சரியாக 9.30 மணியளவில் துவங்கப்படும். வ.எண் 3501 முதல் 4366, வரையிலான எண்கள் கொண்ட ஆசிரியர்களை வருகை தர உரிய அறிவுரை வழங்கிட DEOs கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்


திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட 6 புதிய அறிவிப்புகள்

 

 

திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்


▪️ திருவாரூர் நகர்ப் பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய வணிக வளாகம்


▪️ நன்னிலம் பகுதியில் ரூ.56 கோடி மதிப்பீட்டில் மாதிரிப் பள்ளி தொடங்கப்படும்


▪️ மன்னார்குடியில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் அரசு மகளிர் கல்லூரி தொடங்கப்படும்


▪️ திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாய்க்கால், ஆறுகள் புனரமைக்கப்படும்


▪️ பூந்தோட்டம் புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்


▪️ பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்த நெல் ஜெயராமனுக்கு திருத்துறைப்பூண்டியில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-07-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-07-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

குறள் 101:

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.     

  விளக்கம்: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.


பழமொழி :
Winners never quit, and quitters never win.

வெற்றி பெறுவோர் ஒரு போதும் கைவிட மாட்டார்கள்.  கைவிடுவோர் வெற்றி பெற மாட்டார்கள்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன்

2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.


பொன்மொழி :

அன்புள்ள மனிதன் தான் எதிலும் வெற்றியைப் பெறுகின்றான் - ரமணர்


பொது அறிவு :

01.உலகின் கூரை என்று அழைக்கப்படும் பீடபூமி எது?

         திபெத் பீடபூமி(Tibetan plateau)

02..தமிழ்நாட்டின் தலைமை தேர்தல்  ஆணையர் யார்?

  திருமதி. அர்ச்சனா பட்நாயக் I.A.S

Tmt. Archana patnaik, I.A.S


English words :

variants–a slightly different form of a thing. திரிபு வடிவம் அல்லது உருவம்


Grammar Tips:

Small –not big
Tiny - smaller than small
Small: A general term for something of limited size
Ex. "She had a small cup of coffee.
"Tiny: Implies a very, very small size.
Ex: "He took a tiny sip of his coffee."


அறிவியல் களஞ்சியம் :

மூளையின் அடிப் பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி தான் உடல் வளர்ச்சியையும், பாலின தன்மையையும் கட்டுப்படுத்துகிறது. ஒரு சிறு பட்டாணி அளவே உள்ள இது, உடலின் பல்வேறு பகுதிகளுடன் 50 ஆயிரம் நரம்புகளால் தொடர்பு கொண்டுள்ளது.


ஜூலை 11

உலக மக்கள் தொகை நாள்

உலக மக்கள் தொகை நாள் (World Population Day) என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது. 1987 ஆம் ஆண்டில் இதே நாளிலேயே உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனைத் தாண்டியது.


நீதிக்கதை

ஒரு ஊரில் ஒரு எலி இருந்தது. ஒருநாள் அதற்கு உணவு எதுவும் கிடைக்கவில்லை.‌ பசியோட அலைந்த எலி ஓரிடத்தில் ஒரு ஓட்டை தெரிவதை பார்த்தது. அதன் உள்ளே சென்றது. அங்கு பார்த்தால் நிறைய தானியங்கள் வைக்கப்பட்டு இருந்தது. அதைக் கண்ட எலி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது. அங்கே இருந்து அந்த தானியங்களை உண்ண ஆரம்பித்தது. அதிக ஆசையால் சோம்பேறித்தனத்தால் அங்கேயே தங்கியிருந்து எல்லா தானியங்களையும் தானே சாப்பிட்டு முடிக்க முடிவு செய்தது.‌ உணவுத் தேடி எங்கும் அலைய வேண்டாம் என்று நினைத்து சந்தோஷப்பட்டது.‌ சில நாட்களுக்குப் பின்பு வெளியில் வந்து வெளி உலகப் பார்க்க நினைத்தது. ஆனால் வேலை செய்யாமல் இருந்து சாப்பிட்டதினால் உடம்பு மிகவும் பெருத்து விட்டது. இப்போது அதனால் அந்த ஓட்டை வழியாக வெளியே வர முடியவில்லை. அங்கேயே முட்டி மோதி இறந்து போனது

நீதி:  பேராசை பெருநஷ்டம்


இன்றைய செய்திகள்

11.07.2025

⭐தமிழகத்தில் தொழில்துறை தலைநிமிர்ந்து நிற்கிறது மு.க.ஸ்டாலின்

⭐ கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

⭐டெல்லியில் நிலநடுக்கம் - பீதியில் மக்கள்

⭐எலான் மஸ்க்கின் Starlink செயற்கைகோள்களுக்கு இந்திய விண்வெளி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி

⭐டிரம்ப் உத்தரவு எதிரொலி: 2,000 மூத்த அதிகாரிகளை பணிநீக்கம் செய்யும் நாசா

🏀 விளையாட்டுச் செய்திகள்🥳

🏀லார்ட்ஸ் டெஸ்ட்: ஒரே ஓவரில் இங்கிலாந்தின் தொடக்க வீரர்களை வீழ்த்திய நிதிஷ் ரெட்டி..!

🏀ஆசிய கோப்பை தகுதிச்சுற்று ரவுண்ட் போட்டியில் ஹாங்காங்கிற்கு எதிராக இந்தியா 0-1 எனத் தோல்வியடைந்தது.


Today's Headlines

✏️ Tamil nadu CM M.K. Stalin noticed our Industry in Tamil Nadu is standing High

✏️ Coimbatore District Collector has advised people to be cautious. Because, Nipah virus has been reported in the state of Kerala. Therefore, the

✏️ Earthquake in Delhi ,so that the  People in panic

✏️Indian Space Regulatory Authority approves Elon Musk's Starlink satellites

✏️Echo of Trump's order: NASA to lay off 2,000 senior officials

*SPORTS NEWS

🏀 Lord's Test: Nitish Reddy bowls out England openers in one over.

🏀 India lost 0-1 to Hong Kong in the Asia Cup qualifiers.


Covai women ICT_போதிமரம்


Magizh Mutram மாணவர்களுக்கான குழுக்கள் தேர்ந்தெடுத்தல் - EMIS ல் Update செய்யும் வழிமுறை



மகிழ் முற்றம் மாணவர்களுக்கான குழுக்கள் தேர்ந்தெடுத்தல் - EMIS ல் update செய்யும் வழிமுறை


EMIS WEBSITE

⬇️

SCHOOL  LOGIN

⬇️

SCHOOLS ACTIVITIES

⬇️

CLICK HOUSE SYSTEM

⬇️

SELECT ACADEMIC ACTIVITIES-2025-26

⬇️

SELECT MONTH - JULY

⬇️

ASSIGN HOUSES TO ALL STUDENTS

⬇️

CLICK SET HOUSE

⬇️

SET HOUSE INFORMATION ல் மாணவர்களின் பெயர் பட்டியல் தோன்றும். அதற்கு கீழ் உள்ள YES

button யை Click செய்தல் வேண்டும்.

⬇️

ASSIGN HOUSE HEAD TEACHER & HOUSE CAPTAINS TO ALL GROUPS.

⬇️

Click குறிஞ்சி குழு

⬇️

Select House Captain 1, House Captain 2 & House head teacher

⬇️

Click Submit button


இதே போன்று அனைத்து குழுக்களுக்கும் செய்ய வேண்டும்




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEO Promotion to 34 Govt High/ Hr.Sec School HMs - DSE Proceedings

    34 அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக்கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ...