கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ரயில் வருகையை துல்லியமாக தெரிந்துகொள்ள Whatsapp எண்...

 


ரயில் வருகையை துல்லியமாக தெரிந்துகொள்ள இனி வாட்ஸ் அப் போதும்!


ரயில் வருகையை துல்லியமாக தெரிந்துகொள்ள இனி வாட்ஸ் அப் போதும் என இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.

.

இதுவரை 139 என்ற எண்ணை அழைத்து ரயில் எங்கே வந்துகொண்டிருக்கிறது என்ற தகவலைப் பயணிகள் பெற்றுக்கொண்டிருந்தனர். ஆனால் ஒரே எண்ணை, ஒரே நேரத்தில் ஏராளமானோர் அழைத்ததால்,  சர்வர் பிரச்சனை ஏற்பட்டு 139ஐ உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது.

.

இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப் மூலம் ரயில் பயண சேவையை லைவ் ஆக உடனுக்குடன் அளிக்க ஆரம்பித்துள்ளது.

.

எப்படி இந்த சேவையைப் பெறுவது?

.

* முதலில் 7349389104 என்ற எண்ணை மொபைலில் சேமித்துக் கொள்ளுங்கள்.

.

* வாட்ஸ் அப் செயலிக்குச் செல்லுங்கள்.

.

* வாட்ஸ் அப்பில் நீங்கள் சேமித்து வைத்துள்ள 7349389104 எண்ணிற்கு நீங்கள் தகவல் பெற விரும்பும் ரயிலின் எண்ணை அனுப்புங்கள்.

.

* அடுத்த 2 நொடிகளில் உங்கள் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும். அதில் ரயில் எண், அதன் பெயர், எந்தத் தேதியில் ரயில் கிளம்பியது, எந்த ரயில் நிலையத்தைத் தாண்டியுள்ளது, அடுத்த ரயில் நிலையத்தை எப்போது வந்தடையும் உள்ளிட்ட தகவல்கள் அடங்கி இருக்கும்.

.

அதுமட்டுமல்லாமல், 'நான் உங்களுக்கு சிறந்த சேவையை அளித்திருக்கிறேனா?' என்று கேள்வி எழுப்பபட்டு, கருத்தும் கேட்கப்படுகிறது.

.

இந்த சேவையை ரயில்வே துறை, 'மேக் மை ட்ரிப்' உடன் இணைந்து அளிக்கிறது.

.

இதனால் பயணிகள் வாட்ஸ் அப் மூலமாகவே நமக்குத் தேவையான ரயில் பயணம் குறித்த அனைத்து விவரங்களையும் லைவ் ஆகத் தெரிந்துகொள்ள முடியும்.

.

மறக்க வேண்டாம்

7349389104...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்று (17.04.2026) TNSED Attendance Appல் ஆசிரியர் வருகைப்பதிவு செய்யும் முறை

இன்று (17.04.2026) TNSED Attendance Appல் ஆசிரியர் வருகைப்பதிவு செய்யும் முறை வணக்கம்  17.04.2026 Friday Today Attendanceல்  Fully Not worki...