2023-2024ஆம் கல்வி ஆண்டு - 2023 ஜூன் மாதம் - ஆசிரியர் நாட்காட்டி (June 2023 Diary)...
*01,02,03.06.2023 - வியாழன்,வெள்ளி, சனி _
எண்ணும் எழுத்தும் பயிற்சி
(4-5 வகுப்பு ஆசிரியர்கள்)
*03.06.2023- சனிக்கிழமை
BEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்
*07.06.2023- புதன்கிழமை
2023-2024ஆம் கல்வி ஆண்டு தொடக்க நாள்
*10.06.2023- சனிக்கிழமை
DEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்
*17.06.2023- சனிக்கிழமை
CEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்
&
தொடர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி
(1-5 வகுப்பு ஆசிரியர்கள்)
*19.06.2023 to 24.06.2023 -திங்கள் முதல் சனி வரை
தொல்லியல் பயிற்சி
(தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்)
*26.06.2023- திங்கள் கிழமை
அர்பா - (RL)
*29.06.2023 - வியாழக்கிழமை
பக்ரீத் பண்டிகை
அரசு விடுமுறை
dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் இன்று (30-05-2023) முதல் விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்யலாம்.
தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராமவர்மா வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு இன்று (மே 30) மதியம் நகல் வெளியிடப்படுகிறது.
இதையடுத்து மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகல்களை www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன்பிறகு மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் அதே இணையதள பக்கத்தில் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இதை பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து நாளை (மே 31) முதல் ஜூன் 3-ம் தேதி வரை சம்பந்தபட்ட மாவட்ட தேர்வு உதவி இயக்குநர் அலுவலகங்களில் சென்று ஒப்படைக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக மறுமதிப்பீடுக்கு பாடத்துக்கு ரூ.505-ம், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ.305-ம், இதர பாடங்களுக்கு ரூ.205-ம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும்போது தரப்படும் ஒப்புகை சீட்டை தேர்வர்கள் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
அனைவருக்கும் வணக்கம்.
EMIS-ல் Time Table பதிவேற்றுவதற்கான வழிமுறை. உங்கள் பள்ளிக்கான Time Tableஐ பதிவேற்றுங்கள்.
முதலில் Emisல் உங்கள் பள்ளி Idயை போட்டு உள் நுழையவும்
அடுத்து school ஐ தொடவும் அதில் TIME TABLE ஐ தொடவும்.
படி 1
Class teacher பதிவேற்ற வேண்டும்
ஒவ்வொரு வகுப்புக்கும் ஏற்கெனவே நம் பள்ளி ஆசிரியர்கள் பெயர் காட்டப்படும் அதை தொட்டு Submit கொடுக்க வேண்டும்.
அடுத்து school start time என இருக்கும் கட்டத்தில் 9.10 என கொடுத்து அடுத்து AMஎன்பதை தொடவும்
Submit கொடுத்து Next என்பதைத் தொடவும்.
படி 2:
Class subject-Teacher ஒவ்வொரு வகுப்பிற்கு ஒவ்வொரு பாடத்திற்கும் என நாம் டச் செய்தாலே அந்த ஆசிரியர் பெயர் காட்டும் அதை தொடவும் .
முடிந்ததும் அந்த வகுப்பு பச்சை நிறத்தில் மாறிவிடும்.
அடுத்து Submit ஐ தொடவும்.
Next தொடவும்.
3வது படி:
Do we have combine Class or section in our school எனக் காட்டும் அதனைத்தொடவும்.
பெரும்பாலான பள்ளிகள் combine Class ஆகத்தான் இருக்கும். எனவே Yes என்பதைத் தொடவும்.
இப்போது வகுப்புகள் காட்டும்
எந்தெந்த வகுப்புக்கள் Combine Class என்பதை டிக் செய்து Combine என்பதைத் தொடவும்
அடுத்து Next தொடவும்.
4வது படி:
Club Activities என காட்டும். தொடக்கப் பள்ளியை பொறுத்தவரை இந்த Club எதுவும் கிடையாது. மூன்று clubஐயும் தொட்டு NOT functioning என்ற ஆப்ஷன் தொடவும்.
அடுத்து Submit தொடவும். இப்போது proceed என ஒரு அறிவிப்பு காட்டும். அடுத்து Class, section இரண்டையும் கொடுத்து show என்ற பட்டனை தொட்டால் Time Table காட்டும்.
அதனை save கொடுக்க வேண்டும்.அவ்வளவுதான் படித்து புரிந்து கொண்டு செய்தால் மிக எளிது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (நாட்டு நலப்பணித் திட்டம்) மற்றும் தொடக்கக்கல்வி இணை இயக்குநர் (உதவி பெறும் பள்ளிகள் ) ஆகியோரின் இணைச் செயல்முறைகள், சென்னை -6
ந.க.எண்: 019527 /எம்/இ1/2022, நாள்: 29.05.2023
பொருள்: பள்ளிக்கல்வி 2023-2024 ஆம் ஆண்டில் அனைத்து வகை அரசு /அரசு உதவி பெறும் பள்ளிகளில் விழிப்புணர்வு வாரம் - மாணவர்களின் உடல் / மன நலன் காக்க சிறப்புப் பயிற்சிகள் - பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் தொடர்பாக.
பார்வை: பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண். 019527/எம்/இ1/2022. நாள். 06.08.2022.
அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரம், மாணவர் நலன், மகிழ்ச்சியான கற்றல் சூழல் ஆசிரியர் - மாணவர் நல்லுறவு மேம்பட தமிழ்நாடு அரசு பல திட்டங்களை அறிவித்துத் திறம்பட நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாணவர்களின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் உடல்நலன் மற்றும் மனநலத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான அமர்வுகள் பள்ளிகளிலேயே நடத்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பின்வரும் அறிவிப்பை வெளியிட்டார்.
1 ஒவ்வொரு கல்வி ஆண்டின் முதல் வாரத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மனநலம், குழந்தைகள் மீதான வன்முறையைத் தடுத்தல், தண்னம்பிக்கையை வளர்த்தல், போதைப் பொருட்களுக்கு அடிமையாதலைத் தடுத்தல், தன்சுத்தம் பேணுதல் போன்ற பொருண்மைகளில் பள்ளி அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.”
பள்ளிகளில் விழிப்புணர்வு வாரம்:
உடல், மனநலம் பேணும் பள்ளிச்சூழலில் கல்வியைப் பெறும் குழந்தைகள் வாழ்க்கையில் வெற்றி வாய்ப்பைப் பெறுகிண்றனர். இதற்கென, அரசுப்பள்ளிகளில் கண்ணொளி காப்போம் திட்டம், RBSK திட்டம், WIFS திட்டம் எனப் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
கடந்த சில காலங்களில் மாணவர்களின் கற்றல் முறைகளில் குறிப்பிடத் தகுந்த மாறுதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் உடல், மணநலனைக் காக்க மருத்துவக் குழுக்களைக் கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உரிய பரிசோதனைகளைச் செய்யவும், இளைஞர் நீதிச்சட்டம், போக்சோ சட்டம், சாலைப் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு குழந்தைகளுக்கு எதிரான வன்முறை போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் போன்ற அரசு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வைப் பள்ளிகளில் ஏற்படுத்தவும் அரசு உறுதி பூண்டுள்ளது.
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்
26.06.2023 அன்று விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்வும், 27.06.2023 முதல் 30.06.2023 வரை கீழ்க்காணும் துறைகளுடன் இணைந்து விழிப்புணர்வு வாரத்தை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
1. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை.
2 சமூக நலம் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை/ சமூகப் பாதுகாப்புத்துறை
3. காவல் துறை
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையின் இணைச் செயல்முறைகள், சென்னை- 6.
https://kalvianjal.blogspot.com/2023/05/2023-2024-01952812023-25052023.html
ந.க.எண். 019528/எம்/இ1/2023, நாள். 25.05.2023.
https://kalvianjal.blogspot.com/2023/05/2023-2024-01952812023-25052023.html
பொருள்: பள்ளிக்கல்வி - 2023-2024ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு செய்ய வேண்டிய செயல்பாடுகள் மற்றும் இந்தக் கல்வியாண்டில் செயல்படுத்த வேண்டிய கல்விச் செயல்பாடுகள், கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் கல்விசாரா செயல்பாடுகள் சார்ந்து பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்க கல்வி) ஆகியோர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக.
https://kalvianjal.blogspot.com/2023/05/2023-2024-01952812023-25052023.html
பார்வை: 1. அரசாணை (நிலை) எண். 163/பள்ளிக் கல்வி (ERT)த் துறை, நாள்.10.07.2017https://kalvianjal.blogspot.com/2023/05/2023-2024-01952812023-25052023.html
2. பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 019528/எம்/இ1/2022, நாள்.11.06.2022.https://kalvianjal.blogspot.com/2023/05/2023-2024-01952812023-25052023.html
3. தொடக்க கல்வி இயக்குரின் நேர்முக கடித எண்.007351/ஜெ2/2021, நாள்.08.10.2021https://kalvianjal.blogspot.com/2023/05/2023-2024-01952812023-25052023.html
2023-2024ம் கல்வியாண்டில் 6 முதல் 12 வகுப்புகளுக்கு ஜூன் 1 ஆம் தேதியும், 1 முதல் 5 வகுப்புகளுக்கு ஜூன் 5ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பதற்கு முன்பு செய்யப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்து கீழ்காணும் அறிவுரைகள் அனைத்து கல்வி அலுவலர்களுக்கும் வழங்கப்படுகிறது.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
https://kalvianjal.blogspot.com/2023/05/4-5-4th-5th-standard-tamil-ennum.html
தமிழோடு விளையாடு
எளிய விளையாட்டுகள் மூலம் முன்கற்றதை நினைவுகூரும் பகுதி. குழந்தைகள் பங்கேற்று எழுத்துகளை அடையாளம் கண்டு சரியாக ஒலித்தும் சொற்களைப் படித்தும் இணையாக, குழுவாகக் கற்க இப்பகுதி வழிகாட்டும். https://kalvianjal.blogspot.com/2023/05/4-5-4th-5th-standard-tamil-ennum.htmlஇக்கற்பித்தல் செயல்பாட்டினைத் தொடர்ந்து அரும்பு, மொட்டு, மலர் நிலையிலும் வகுப்புக்கேற்ற நிலையிலும் உள்ள குழந்தைகள் செய்வதற்கான செயல்பாடுகள் ஒவ்வொரு அலகின் தொடக்கத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன. பயிற்சிநூல் செயல்பாடுகளைச் செய்யும்போது எழுத்துகளை ஒலித்துக் கொண்டே சொற்களைப் படித்துக்கொண்டே செய்ய வழிகாட்டுங்கள்.
https://kalvianjal.blogspot.com/2023/05/4-5-4th-5th-standard-tamil-ennum.html
வாங்க பேசலாம்
பாடப்பொருள் சார்ந்த கலந்துரையாடல் பகுதி. வகுப்பில் உள்ள பேசத்தயங்கும் குழந்தைகளும் தன்னம்பிக்கையுடன் பேச வழிகாட்டுவதாக குழந்தைகள் எளிமையாகப் புரிந்துகொண்டு ஆர்வமாகப் பங்கேற்கும் தலைப்புகளை/கருத்துகளை முன்வைத்து கலந்துரையாடலைத் தொடங்குங்கள். கலந்துரையாடலின் நோக்கத்தை மனத்தில் நிறுத்தி சரியானபாதையில் கலந்துரையாடல் நிகழ்வதை உறுதிப்படுத்துங்கள்.
https://kalvianjal.blogspot.com/2023/05/4-5-4th-5th-standard-tamil-ennum.html
வானவில் நேரம் & வானவில் மேடை
பாடம் சார்ந்த கலை, கைவினைப்பொருள்கள் செய்யவும் கதை, பாடலை நீட்டிக்கவும் மாற்றவும் உருவாக்கவும் கூறவும் நடிக்கவும் எழுதவும் இன்னபிற படைப்பாற்றல் திறன்களை வெளிப்படுத்தவும் உதவும் பகுதி. எல்லாக் குழந்தைகளும் எல்லாத் திறன்களிலும் ஆர்வமானவர் அல்லர். அவரவர்க்கு விருப்பமான செயல்பாடுகளைச் செய்து ஏற்ற திறன்பெற வழிகாட்டுங்கள். https://kalvianjal.blogspot.com/2023/05/4-5-4th-5th-standard-tamil-ennum.htmlநமது குழந்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் பேச்சாளர்களை, பாடகர்களை, இசைக்கலைஞர்களை, கவிஞர்களை, கதைசொல்லிகளை, நடனமணிகளை அடையாளங்கண்டு வளர்த்தெடுக்கும் களமே வானவில் மேடை.
https://kalvianjal.blogspot.com/2023/05/4-5-4th-5th-standard-tamil-ennum.html
சொல்லக்கேட்டு எழுதுவோம்
ஆசிரியர் சொல்லச் சொல்லக் குழந்தைகள் எழுதி முடித்தவுடன் எழுதிய பகுதியை ஒவ்வொரு குழந்தையும் அருகில் உள்ள குழந்தையிடம் கொடுத்துக் கரும்பலகையில் உள்ள சரியான சொல், தொடருடன் ஒப்பிட்டுத் திருத்தம் செய்து கொள்ளலாம்; அல்லது இணையாக, குழுவாகச் சேர்ந்து ஆசிரியர் வழிகாட்டுதலுடன் எழுதியதைத் திருத்திக்கொள்ளலாம். https://kalvianjal.blogspot.com/2023/05/4-5-4th-5th-standard-tamil-ennum.htmlபிழைகளின்றி எழுதுவதற்கும் சரியாக ஒலிப்பதற்கும் இப்பயிற்சி உதவும். குழந்தைகளின் தேவைக்கேற்ப பயிற்சிநூலிலும் குறிப்பேட்டிலும் இப்பயிற்சியை மேற்கொள்ளலாம். மெதுவாக எழுதும் குழந்தைக்கு உரிய நேரம் வழங்குவதிலும் பிழைகளைக் களைய கரும்பலகை, குறிப்பேட்டில் எழுதும் பயிற்சி அளிப்பதிலும் கவனம் செலுத்துங்கள்.
https://kalvianjal.blogspot.com/2023/05/4-5-4th-5th-standard-tamil-ennum.html
திறவுகோல்
செயல்பாடுகள் மூலம் பாடக்கருத்தை உணரச்செய்யும் பகுதி. செயல்பாடுகளைச் செய்ய முன்வராது ஒதுங்கி தயங்கி இருக்கும் குழந்தைகளும் வகுப்பறைகளில் இருப்பர். செயல்பாடுகளில் குழந்தைகள் மாறிமாறிப் பங்கேற்கும் வகையில் தாள்களில் எழுதிச் சுருட்டி வைக்கப்பட்ட பெயர்சீட்டுகள் அல்லது குச்சிகளில்/ பொம்மைகளில் ஒட்டப்பட்ட பெயர்களைப் பயன்படுத்துங்கள். அனைத்துக் குழந்தைகளும் பங்கேற்பதை உறுதிப்படுத்துங்கள்.
https://kalvianjal.blogspot.com/2023/05/4-5-4th-5th-standard-tamil-ennum.html
வானம் வசப்படும்
பாடக்கருத்தைக் கற்றபின் குழந்தைகள் மேற்கொள்ளும் பயிற்சிப் பகுதி. இது பயிற்சிநூலிலும் பாடநூலிலும் மேற்கொள்ளப்படும். அதற்கான பக்க எண், பயிற்சித் தலைப்பு போன்றவை ஆசிரியர் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. https://kalvianjal.blogspot.com/2023/05/4-5-4th-5th-standard-tamil-ennum.html4,5ஆம் வகுப்புகளில் வகுப்புக்கு ஏற்ற கற்றல்நிலையில் இல்லாத குழந்தைகள், அடிப்படையில் இருந்து செய்து கற்பதற்குரிய செயல்பாடுகள், வண்ணங்களில் வேறுபடுத்தி அளிக்கப்பட்டுள்ளன. அவற்றைச் செய்த குழந்தைகள், படிப்படியாகத் தங்கள் வகுப்புநிலைக்கேற்ற செயல்பாடுகளைச் செய்ய ஊக்கப்படுத்துங்கள்.
https://kalvianjal.blogspot.com/2023/05/4-5-4th-5th-standard-tamil-ennum.html
படைப்பாற்றல் களஞ்சியம்
மொழித்திறன்களை வளர்ப்பதற்கும் வெளிப்படுத்துவதற்குமான களம்.
செயல்பாட்டுக் களஞ்சியம்
கணக்குகளை உருவாக்கித் தீர்வு காணவும் கணிதச் சிந்தனையைத் தூண்டி வெளிப்படுத்துவதற்குமான களம்.
அறிவியல் களஞ்சியம்
சிறுசிறு சோதனைகளைச் செய்துபார்த்து அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கான களம்.
வரலாற்றுக் களஞ்சியம்
வரலாற்று உண்மைகளை அறிவதற்கும் சமூகச் சிந்தனையை வளர்ப்பதற்குமான களம்.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
10 மற்றும் 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு (Extension of time to apply for 10th and 11th Standard supplementary examination)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
கம்பம் நகருக்குள் புகுந்த அரிசி கொம்பன் (Arisikomban) யானை - மீண்டும் தனது வாழ்விடத்தை (மூணாறு) நோக்கிச் செல்ல ஆயத்தமா? (Rice Kompan elephant that entered the city of Kambam; Ready to go back to his habitat (Munnar))?
``அரிசி கொம்பன் யானை அது வாழ்விடமான மூணாறு சின்னக்கானல் பகுதியை நோக்கி செல்லவே மேகமலையில் இருந்து இறங்கி லோயர்கேம்ப் வந்து கம்பம் பகுதிக்குள் புகுந்துள்ளது. விரைவில் வனப்பகுதியில் சென்றுவிடும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை" - வனத்துறை அறிவிப்பு
அரிசி கொம்பன் யானை
இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தாம்பாறை ஊராட்சிகளில் கடந்த 5 ஆண்டுகளில் 12 உயிர்களை காவு வாங்கிய அரிசி கொம்பன் என்ற யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. அதன் பின்னர் கழுத்தில் சாட்லைட் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு தமிழக - கேரள எல்லை பகுதியான தேக்கடி பெரியாறு புலிகள் காப்ப பகுதியில் விடப்பட்டது.
முதலில் அரிசி கொம்பனை பிடித்து பாலக்காடு பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தில் விட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து தேக்கடி பெரியாறு புலிகள் காப்பக பகுதியில் விட முடிவெடுக்கப்பட்டது. அதன்படி தமிழக - கேரள எல்லைப் பகுதியில் மங்கள தேவி கண்ணகி கோயில் செல்லும் நுழைவு வாயில் பகுதியில் யானை விடப்பட்டது.
இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட இரவங்கலாறு வனப்பகுதியில் நுழைந்து அங்கிருந்து மேகமலை ஹைவேஸ் பகுதியில் கடந்த 2 வாரங்களாக சுற்றித்திரிந்தது. வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் அரிசி கொம்பன் யானை மேகமலையின் வடக்குப் பகுதியில் இறங்கி இரவோடு இரவாக லோயர்கேம்ப் பகுதிக்கு வந்தது. நேற்று காலை லோயர்கேம்ப்பில் இருந்து கம்பம் நகர் பகுதிக்குள் வந்தது. கம்பம் கூலத்தேவர் தெரு பகுதியில் வந்த யானையை கண்டு அப்பகுதியினர் கூச்சலிட்டவாறு ஓடிச் சென்றனர்.
>>> கம்பம் நகருக்குள் அரிசிக் கொம்பன் யானையின் நகர்வலம் (காணொளி 1)...
மேலும் பலர் யானையை பார்த்து கூச்சலிட்டனர். இதனால் வேகமாக ஓடிய யானை சாலையில் நின்றிருந்த சேர் ஆட்டோவை இடித்து தள்ளிவிட்டு ஓடியது. ஒருவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தேனி மாவட்ட வனத்துறையினர் யானையை கம்பம், கம்பம் மெட்டு இடையே வனப்பகுதியில் விரட்ட முயன்றனர். யானை மலை அடிவாரப்பகுதியில் புளியந்தோப்பில் முகாமிட்டு இருந்தது.
>>> கம்பம் நகருக்குள் அரிசிக் கொம்பன் யானையின் நகர்வலம் (காணொளி 2)...
இதுகுறித்து வனத்துறையினரிடம் பேசியபோது, “யானையை விரட்டக் கூடாது, அதன்போக்கிலேயே விட வேண்டும். குறிப்பாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும் என்பதால் கவனமாக செயல்பட வேண்டியுள்ளது.
>>> கம்பம் நகருக்குள் அரிசிக் கொம்பன் யானையின் நகர்வலம் (காணொளி 3)...
அரிசி கொம்பன் யானை அது வாழ்விடமான மூணாறு சின்னக்கானல் பகுதியை நோக்கி செல்லவே மேகமலையில் இருந்து இறங்கி லோயர்கேம்ப் வந்து கம்பம் பகுதிக்குள் புகுந்துள்ளது. விரைவில் வனப்பகுதியில் சென்றுவிடும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை “என்றனர்.
>>> நாராயணதேவன்பட்டியில் அரிசிக் கொம்பன் யானையின் நகர்வலம் (காணொளி 4)...
கம்பம் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள வாழைத்தோட்டத்திற்குள் புகுந்த அந்த யானை அங்கிருந்து இன்று காலை சுருளிப்பட்டியில் உள்ள தோப்பிற்குள் சுற்றித் திரிகிறது.
இந்த யானையை 3 கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பொள்ளாச்சியில் இருந்து சுயம்பு என்ற கும்கி வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் முதுமலையில் இருந்து 2 யானைகள் வரவழைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், கம்பம் நகரை விட்டு, சுருளிப்பட்டி கிராமத்தில் 'அரிசி கொம்பன்' புகுந்துள்ளதால் அங்கு 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்ல தொழிலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுருளி அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுருளிப்பட்டி பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
கம்பம் நகரில் இன்று 2-வது நாளாக 144 தடை உத்தரவு தொடர்கிறது. மேலும் சுருளிப்பட்டி, சுருளி அருவி பகுதிக்கும் விவசாயிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. 6 கி.மீ தொலைவுக்கு முன்பே வனத்துறையினர் மற்றும் போலீசார் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
பொதுமக்கள் அரிசி கொம்பன் யானைக்கு இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும். படம் பிடிப்பது மற்றும் வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். இது குறித்து தேனி மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரே கூறுகையில் வனத்துறையினர், வருவாய்த்துறையினர், போலீசார் அடங்கிய குழுவினர் யானையை கண்காணித்து வருகின்றனர்.
யானையை காட்டுக்குள் அனுப்பும் வரை பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றார்.
லோயர்கேம்பில் இருந்து கம்பம் நகர் பகுதிக்குள் வந்த யானை நேற்று ஒரு நாள் முழுவதும் கெஞ்சியகுளம் அருகேயுள்ள புளியந்தோப்பில் 7 மணி நேரம் இருந்தது.
>>> கம்பம் நகருக்குள் அரிசிக் கொம்பன் யானையின் நகர்வலம் (காணொளி 5)...
இதையடுத்து இளைஞர் ஒருவர் ட்ரோன் மூலம் வீடியோ எடுக்க முயன்றபோது பதற்றமடைந்த யானை அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வாழைதோப்பில் புகுந்தது.
இரவு முழுவதும் அங்கேயே இருக்கும் என வனத்துறையினர் கணித்திருந்த வேளையில், நேற்று இரவு 12 மணி அளவில் சுமார் 15 கிலோ மீட்டர் நடந்தே பயணித்து சுருளி அருவி செல்லும் சாலையில் தனியார் தோட்டத்திற்கு சென்றது. இதற்கிடையே பொள்ளாச்சி அருகே டாப் சிலிப்பில் இருந்து சுயம்பு என்ற கும்கி யானை, அரிசி கொம்பனை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக அழைத்துவரப்பட்டுள்ளது.
“சூழலை பொருத்து மேலும் இரண்டு கும்கி யானைகள் கொண்டுவரப்படும் எனவும், மூணாறு நோக்கி சென்று கொண்டிருந்த யானை திசை மாறி 15 கிலோ மீட்டர் பயணப்பட்டுள்ளதால், மீண்டும் மேகமலைக்கு செல்லவும் வாய்ப்புள்ளது “ என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...