கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Important Announcement Regarding Pensioners Identity Card...



 ஓய்வூதியர்கள் அடையாள அட்டை குறித்து முக்கிய அறிவிப்பு...


Pensioner ID card in Tamil Nadu: தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒரு வகையை சார்ந்த அரசு ஓய்வூதியர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது சார்ந்து முக்கியமான தகவல் வந்து வெளியாகி உள்ளது.


Pensioners Identity Card Latest Updates: ஓய்வூதியர் அடையாள அட்டை குறித்துக் வெளியாகி உள்ள அறிவிப்பு என்பது எந்த வகையினை சார்ந்த ஓய்வூதியர்களுக்கு  பொருந்தும். இதற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும். இந்த அடையாளத்தை பெற விண்ணப்பத்துடன் என்னென்ன ஆவணங்கள் இணைக்க வேண்டும் போன்ற விவரங்களை குறித்து தெரிந்துக்கொள்வோம்.


ஓய்வூதியர்கள் அடையாள அட்டை குறித்து புதிய அறிவிப்பு...


மத்திய மற்றும் மாநில அரசின் சார்பாக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதாரர்கள் பயன்பெறும் வகையில் புதிய அறிவிப்புகளும், அவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை விதிமுறை மாற்றங்கள் சார்ந்தும் தகவல்கள் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் ஓய்வூதியர்கள் அடையாள அட்டை குறித்து புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 


டிஓடி (DoT) ஓய்வூதியர்கள் அனைவரும் ஓய்வூதியர் அடையாள அட்டை (பென்ஷனர்ஸ் ஐடென்டிட்டி கார்டு - Pensioners Identity Card) பெற விண்ணப்பம் செய்வது தொடர்பாக அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது. 


ஓய்வூதியர்கள் அனைவருக்கும் அடையாள அட்டைகளை (Pensioners Identity Card) வழங்குவதாக பிஆர்.சிசிஏ (DoT தமிழ்நாடு சர்க்கிள் (Tamil Nadu Circle) அலுவலக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.


ஓய்வூதியர் அடையாள அட்டைக்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன? 

ஓய்வூதியர்கள் அனைவரும் உரிய படிவத்தை பூர்த்தி செய்து அந்த படிவத்துடன் இரண்டு போட்டோ அனுப்பப்பட வேண்டும்.


ஒன்று அந்த படிவத்தில் ஒட்டப்பட வேண்டும் மற்றொன்று தனியாக ஒரு கவரில் போட்டு விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். 


இரண்டாவதாக பிபிஓ (PPO) நகல் அனுப்ப வேண்டும். 


மூன்றாவதாக ஆதார் கார்டு நகல் இணைத்து அனுப்ப வேண்டும். 


ஓய்வூதியர் அடையாள அட்டை விண்ணப்பத்துடன் அனைத்து ஆவணங்களையும் இணைத்து கீழே கொடுக்கபட்டுள்ள விலாசத்தில் இருக்கக்கூடிய அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது ஸ்பீடு போஸ்ட் (Speed Post) மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிறுத்தப்படு உள்ளது. 


ஓய்வூதியர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி? 


டிஓடி ஓய்வூதியர்கள் அனைவரும் ஓய்வூதியர் அடையாள அட்டை பெற பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்துடன் தேவையான அந்த மூன்று ஆவணங்களை கீழே காணக்கூடிய முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது ஸ்பீடு போஸ்ட் மூலம் சமர்ப்பிக்கலாம். 


ஓய்வூதியர் அடையாள அட்டை விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி எது?


CCA -Pension Office Address

Deputy Controller of Communication

Accounts (Pension), DOT Cell, 

Office of Principal CCA, 

Tamil Nadu Circle, 

TNT Complex, 1st Floor, 

No-60, Ethiraj Salai, 

Egmore,

Chennai-600008.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

₹ 1.1 lakh compensation for insect bite while traveling in bus - Court orders

 பேருந்தில் பயணித்தபோது பூச்சி கடித்ததால் ₹ 1.1 லட்சம் இழப்பீடு - நீதிமன்றம் உத்தரவு ₹ 1.1 lakh compensation for insect bite while traveling...