கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சீருடையுடன் சமூக வலைத்தளங்களில் புகைப்படம் பதிவு செய்ய வேண்டாம் - காவல்துறை அலுவலர்களுக்கு டி.ஜி.பி., அறிவுறுத்தல்



சீருடையுடன் சமூக வலைத்தளங்களில் புகைப்படம் பதிவு செய்ய வேண்டாம் - காவல்துறை அலுவலர்களுக்கு டி.ஜி.பி., அறிவுறுத்தல்


சீருடையுடன் புகைப்படம் வெளியிட்டால் நடவடிக்கை 


சீருடை அணிந்து இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் போலீஸ் அதிகாரிகள் பதிவு செய்ய கூடாது.


தனியார் நிகழ்ச்சிகளில் சீருடையுடன் பங்கேற்கும் உயர் அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்க்க வேண்டும்


உயர் அதிகாரிகள் அனுமதி பெறாமல் YOUTUBE சேனல்களுக்கு பேட்டி கொடுக்க கூடாது.


நன்னடத்தை விதிகளை மீறி சமூக வலைதளங்களில் செயல்படும் காவல் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.


- டி.ஜி.பி., சங்கர் ஜிவால்


சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!


சமூக வலைத்தளங்களில் காவல்துறையினர் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தியிருக்கிறார்


காவல்துறைதான், இதுவரை மக்களுக்கு சமூக வலைத்தளங்கள் குறித்த அறிவுறுத்தல்களை வழங்கும், தற்போது காவல்துறையினருக்கே, சமூக வலைத்தளங்கள் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் பல முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.


சமூக வலைத்தளங்களில் காவல்துறையினர் பேசுவது, முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்வது போன்றவற்றில் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்குமாறு டிஜிபி அறிவுறுத்தியிருக்கிறார்.


அதன்படி, அவர் வெளியிட்டிருக்கும் அறிவுறுத்தலில், சமூக வலைதளங்களில் சீருடையுடன் புகைப்படங்களை பதிவு செய்ய வேண்டாம் என காவல் துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.


மேலும், காவல்துறையில் இருப்பவர்கள், தனிப்பட்ட முறையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி, யூடியூப் நிகழ்ச்சிகளில் பங்கேற்க முன் அனுமதி பெற வேண்டும்.


அவ்வாறு அனுமதி பெற்றாலும்கூட, வழக்குகள் பற்றிய ரகசியம் காக்க வேண்டிய தகவல்களை யூடியூப் நேர்காணலின்போது காவல்துறை அதிகாரிகள் பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


தேவைப்பட்டால் நிகழ்ச்சிகளில் பேசக்கூடிய தகவல்களை உயர் அதிகாரிகளிடம் காட்டி அனுமதி பெற்ற பிறகே பேச வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SMC Reconstitution : The number of SMC members to be elected based on the number of parents

  பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு 2026-2028  பெற்றோர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு தேர்வு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை  S...