உயர்கல்வி வழிகாட்டு செய்திகள் 15.07.2025
👉 இன்று பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் - கல்வி வளர்ச்சி நாளாக எழுச்சியுடன் கொண்டாட தமிழ்நாடு அரசு உத்தரவு.
👉 தமிழ்நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் கல்விக்கண் திறந்த காமராசர் குறித்த பேச்சு ஓவியம் கட்டுரைப் போட்டிகள் நடைபெறும்.
👉 இன்று கடைசி தேதி.
TNAU - Agri - Counselling Fees கட்டி College preference order மாற்றி அமைத்து "SAVE" செய்வது மிக மிக முக்கியம். இன்று இரவு 11.59 மணி வரை மட்டுமே அவகாசம்.🛑🛑🛑
👉 இன்று கடைசி தேதி.
CUET தேர்வு எழுதியுள்ள மாணவ மாணவிகள் திண்டுக்கல் காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகத்தில் BSc Agri BTech Civil BSC BEd Microbiology MA Economics & Public Administration & Sociology உள்பட 19 விதமான பட்ட படிப்புகள் படிக்க Online மூலம் விண்ணப்பிக்க இன்று 15.07.2025 கடைசி நாள். ஒவ்வொரு படிப்பிற்கும் தனித்தனியாக ரூ.300 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அருமையான அட்டகாசமான வாய்ப்பு. Don't Miss🛑🛑🛑
👉 இன்று கடைசி தேதி.
டெல்லிக்கு அருகில் NIFTEM ஹரியானாவில் B.Tech Food Technology படிக்க இன்று கடைசி தேதி. JEE NEET CUET எழுதிய மாணவ மாணவிகளுக்கு அட்டசாசமான படிப்பு. Don't Miss🛑🛑🛑
👉 நாளை 16.07.2025 கடைசி நாள். தமிழ்நாட்டில் BE படிக்க 179 and above cut off எடுத்துள்ள 39000 மாணவ மாணவிகள் மட்டும் தங்களுக்கு பிடித்த BE படிப்புகள் & கல்லூரிகளை .... தங்கள் Login மூலம் உள்ளே சென்று Choice Filling செய்ய நாளை 16.7.25 புதன் மாலை 5 மணியுடன் அவகாசம் நிறைவு பெறுகிறது.
👉 BE Counselling விண்ணப்பித்துள்ள 7.5 கோட்டா அரசுப் பள்ளி குழந்தைகள் மட்டும்
7.5 Free Seat Counselling & General Fee Payment Seat Counselling ஆகிய இரண்டு Login மூலம் தனித்தனியாக Login செய்து இரண்டிலும் Choice Filling செய்யலாம்.
👉 இரண்டிலும் நாளை மறுநாள் 17.07.2025 வியாழன் காலை 10 மணிக்கு Seat கிடைத்த பிறகு.... Free Seat ஆ ? Payment Seat ஆ? எதில் சேர்ந்து படிக்கலாம் என யோசித்து முடிவு செய்யலாம்.
👉 Choice Filling செய்யும் போது சுமார் சிறந்த 50-70 கல்லூரிகளை தேர்வு செய்து... ஒவ்வொரு கல்லூரியிலும் உள்ள 10-12 படிப்புகளை தேர்வு செய்து சுமார் 500-700 Choices வைப்பது நல்லது.
👉 நாளை 16.07.2025 மாலை 4.30 வரை Lock செய்யக் கூடாது.
👉 நன்கு யோசித்து Choices மேலும் கீழும் நகர்த்தி முழு திருப்தி அடைந்த பிறகு
நாளை மாலை 4.35 மணிக்கு மேல் 5.00 மணிக்குள் Lock செய்வது நல்லது.
Lock செய்த பிறகு Choice order மாற்ற முடியாது.🛑🛑🛑
👉 நாளை 4.35 PM க்கு பிறகு Lock செய்த பிறகு .... Download Locked Choices என்ற option ஐ தொட்டு
Choice Filling Copy -ஐ Download செய்து Print எடுத்து வைத்து கொள்வது அல்லது Whatsapp ல் Save செய்து வைத்து கொள்ள வேண்டியது மிக மிக முக்கியம்.🛑🛑🛑
👉 அந்த Choice List கைவசம் இருந்தால் தால் .... Upward கொடுக்கலாமா ? வேண்டாமா? என 17.07.2025 காலை 10 மணிக்கு மேல் முடிவு செய்ய பேருதவியாக இருக்கும்.
👉 உங்கள் User id & Password ஆகியவை உங்கள் வீட்டு பீரோ சாவி போன்றது. மிக மிக ரகசியமானது. அதனை யாரிடமும் கொடுக்க கூடாது.🛑🛑🛑
👉 பொறுமையாக நிதானமாக பதற்றமின்றி இன்றும் நாளையும் செயல்படுங்கள்.
👉 அண்ணா பல்கலைக்கழகம் CEG MIT ACT SAP PSG CIT TCE - மதுரை GCT GEC - சேலம் திருநெல்வேலி GEC கரைக்குடி அழகப்பா ஈரோடு IRTT பர்கூர் GEC போன்ற மிகச்சிறந்த கல்லூரிகளில் இடம் பிடித்து வாழ்வில் உயர வாழ்த்துகள்.💐💐💐
👉 மீண்டும் நினைவூட்டுகிறோம். எல்லா Branch படிப்பும் சிறந்த படிப்புகளே. Computer Science ம் Civil & Chemical & Mechanical எல்லாமே நல்ல துறைகள் தான். சொல்லப் போனால் லட்சம் பேர் படிக்கும் Computer ஐ விட சில ஆயிரம் பேர் படிக்கும் Civil & Mechanical சிறந்த எதிர்காலத்தை நிச்சயம் தரும்..👍 நாம் எந்த கல்லூரியில் படிக்கிறோம் என்பது தான் முக்கியம். Best படிப்பு என எதுவுமில்லை. Best கல்லூரிகள் தான் முக்கியம். எல்லா படிப்பும் Best தான். Best கல்லூரிகளில் படித்தால்.👍👍👍 நிதானம்.... பிரதானம்.💐💐💐
பதிவு நாள் : 15.07.2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.