கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

30% ஓய்வூதியமா? - பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் வரை போராட்டம் ஓயாது - CPS ஒழிப்பு இயக்கம்


30% ஓய்வூதியமா? - பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் வரை போராட்டம் ஓயாது - CPS ஒழிப்பு இயக்கம்


ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக திரு.ககன்தீப்சிங் பேடி இ.ஆ.ப தலைமையில்  அமைக்கப்பட்ட அலுவலர் குழுவில்

 *தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கம்* அளித்த பரிந்துரையில் தான் அரசு ஊழியர், ஆசிரியர் நலனுக்கு எதிரான *தமிழ்நாடு மாநில  ஓய்வூதியத் திட்டத்தை (TSPS )* முன்மொழிந்தனர்.


*என்ன முன்மொழிவுகள்.?*


1)  60 வயதில் ஓய்வு பெறும் போது 35%


65 வயதில்  40%

70 வயதில்  45 %

75 வயதில்   50% ஓய்வூதியம் கொடுக்க வேண்டும்.


2) அரசு ஊழியரிடம் பிடித்தம் செய்யும் பங்கீடு 10% 


அரசின் பங்கீடு 10%லிருந்து 20% ஆக உயர்த்த வேண்டும். 


3) ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் போன்று பணிக்கொடை உச்சவரம்பு ரூ.20 /- லட்சமாக்க வேண்டும்.


4) ஓய்வு பெறும் போது அரசு ஊழியர் மற்றும் ஆசிரியகளின் 10%  பங்கீட்டை வட்டியுடன் கொடுக்க வேண்டும்.


அரசின் பங்கீட்டை அரசு ஊழியர் ஓய்வு பெறும் போது அரசே வைத்துக் கொள்ளலாம்.


5) 10 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு

குறைந்தபட்சம் ரூ.10000 /- ஓய்வூதியம் வழங்க வேண்டும்.


6) பிடித்தம் செய்யப்படும் பங்கீட்டு தொகை 10% +20% நிதியை பராமரிக்க தமிழ்நாடு ஓய்வூதிய நிதி மேலாண்மை வாரியத்தை ( Tamilnadu Pension Management Authority) கருவூல ஆணையர் தலைமையில் அமைக்கலாம்.


இந்த நிதியில் இருந்து அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட, கார் வாங்க வட்டிக்கு கடன் கொடுக்கலாம்.


_________________________


*TSPS திட்டம் சாத்தியமா.?*


NPS (புதிய ஓய்வூதியம் திட்டம் ) திட்டத்திற்கும்

UPS ( ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ) திட்டத்திற்கும் இடைப்பட்ட திட்டம் TSPS.


CPS ல் அரசு ஊழியர் பங்கீடு 10%.

தமிழக அரசு பங்கீடு 10%.


NPS ல் அரசு ஊழியர் பங்கீடு 10%.

பிற மாநிலங்களில் அரசின் பங்கீடு 14%.


UPS அரசு ஊழியர் பங்கீடு 10%.

மத்திய அரசின் பங்கீடு

18.5%.


*TSPS திட்டத்திற்கான பரிந்துரை:*


அரசு ஊழியர் பங்கீடு 10%


*தமிழக அரசின் பங்கீடு 20%*.


தற்போது CPS திட்டத்தில் தமிழக அரசு 10% பங்கீட்டுத் தொகையாக  மாதம் 626 கோடி செலவு செய்து வருகிறது.


TSPS திட்டபடி அரசு பங்கீடு 20% ஆக உயர்த்தப்பட்டால், தமிழக அரசு மாதம் ரூ.1252 கோடி செலவு செய்ய வேண்டும்.


*TSPS திட்டப்படி*

*தமிழக அரசு மாதம் 20% பங்கீடும் செலுத்தி., 60 வயதில் 35% ஓய்வூதியமும்,*


*5 வருடத்திற்கு ஒரு முறை ஓய்வூதியத்தை  5% உயர்த்துவது என்ற TSPS திட்டமானது...*


பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதை விட தமிழக அரசுக்கு பன்மடங்கு செலவு கூடுதலாகும்.


பங்களிப்பு சேமநல நிதி ( Contributiory Provided Fund ) திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறியதற்கான வரலாறும், பொருளாதாரக் கணக்கும் தெரியாத தலைவர்களின் முன்மொழிவே தமிழ்நாடு மாநில ஓய்வூதியத் திட்டம்.


*பழைய ஓய்வூதியத் திட்டத்தை விட பன்மடங்கு கூடுதல் செலவாகும் என்பதால் தமிழ்நாடு மாநில ஓய்வூதியத் திட்டம் சாத்தியமே இல்லை.*


😥😥😥😥😥😥😥😥😥


மத்திய அரசில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000/-


எனவே, OPS திட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியம் அகவிலைப் படியுடன் ரூ.9000/-


தமிழ்நாடு அரசில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,700/-


எனவே, தமிழக அரசில் OPS திட்டத்தில் குறைந்த பட்ச ஓய்வூதியம் அகவிலைப் படியுடன் ரூ.7850/-


10 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு ரூ.10,000/- ஓய்வூதியம் வழங்க வேண்டும் என அச்சங்கம் முன்மொழிவு அளித்துள்ளது.


*குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் தகுதியான ஓய்வூதியத்திற்கு அகவிலைப் படி வழங்க வேண்டும் என்று TSPS திட்டத்தில் வலியுறுத்தவில்லை.*


😥😥😥😥😥😥😥😥😥


பணிக்கொடை அதிகபட்சம் ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என்று அச்சங்கம் முன்மொழிந்துள்ளது.


கடந்த இரண்டு ஆண்டுகளாக (01.01.2024முதல்) தமிழ்நாட்டில் அதிகபட்ச பணி கொடை ரூ.25 லட்சம்.


ரூ.25 லட்சத்திற்குப் பதில் ரூ.20 லட்சம் என்று குறைவாக  கேட்பது யாருடைய நலனுக்காக.?


*ஓய்வூதியச் சட்டம் வேறு.*


*பணிக்கொடை சட்டம் வேறு.*


தொழிலாளர் நலச் சட்டப்படி

பணிக் கொடை பெறுவது

அரசு ஊழியர்,

ஆசிரியர்,

தொழிலாளர்களின் உரிமை.


பணிக்கொடை வழங்குவது

வேலை வாங்கும்

முதலாளிகள் மற்றும்

அரசுகளின் கடமை.


ஓய்வூதியம் 50% க்கு பதில் 35% வழங்க வேண்டும் என்று கேட்பதற்கு...


*பேரம் பேசுவதற்கு ஓய்வூதியம் சந்தைப் பொருள் அல்ல.*


*ஓய்வூதியம் என்பது பிச்சை பணம் அல்ல.*


*ஓய்வூதியம் என்பது கருணை தொகையும் இல்லை*.


*ஓய்வூதியம் நமது உரிமை*.


*ஓய்வூதியம் சொத்துரிமை போன்றது என்றும்*.,


*ஓய்வூதியம் என்பது*

*கொடுபடா ஊதியம் என்றும்*.. 

*உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது*.


*ஓய்வூதியம் தொடர்பாக பேரம் பேச யார் இவர்களுக்கு உரிமை வழங்கினார்கள்.?*


*பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்று பழைய ஓய்வூதியத் திட்டம் மட்டுமே.!*


பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக

CPS 

NPS

UPS

GPS

TSPS

போன்ற எந்த ஒரு திட்டத்தையும் ஏற்க முடியாது.


பழைய ஓய்வூதியத் திட்டம் மட்டுமே அரசுக்கு பாதுகாப்பானது

செலவும் குறைவு.


*பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் வரை போராட்டம் ஓயாது.*


- CPS ஒழிப்பு இயக்கம்



>>> ஜனவரி 2026 நிலவரப்படி, சிறந்த மொபைல் போன்களின் விவரங்கள்...



Kraft Seeds Plant Cutter for Garden with Premium Stainless Steel Lock, Sharp Edges - Tree Cutter Tools & Gardening Tools, Grass Trimmer, Shear Cutting, Pruner for Plants and Leaves, Heavy Duty Cutter


https://amzn.to/45yisY0




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்று (17.04.2026) TNSED Attendance Appல் ஆசிரியர் வருகைப்பதிவு செய்யும் முறை

இன்று (17.04.2026) TNSED Attendance Appல் ஆசிரியர் வருகைப்பதிவு செய்யும் முறை வணக்கம்  17.04.2026 Friday Today Attendanceல்  Fully Not worki...