கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

3% விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்புகள் - SDAT செய்தி வெளியீடு



3% விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்புகள் - SDAT செய்தி வெளியீடு



செய்தி வெளியீடு எண்: 026 , நாள் : 15.05.2026


செய்தி வெளியீடு


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்


3% விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ துறையில் செவிலியர் உதவியாளர் நிலை -II பணிக்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.


தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகள் / திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் சார்பாக ஒலிம்பிக், பிற சர்வதேச அளவிலான போட்டிகளில், தேசிய, மாநில அளவில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவித்திடும் வகையில் அவர்களுக்கு அரசுத் துறைகள் / பொதுத்துறை நிறுவனங்களில் (PSUs) 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுவருகிறது.


எனவே, அரசாணை நிலை எண்.6. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை (S1) நாள்: 20.02.2019-ன் அடிப்படையில், விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் அரசுத் துறைகள் / பொதுத்துறை நிறுவனங்களில் 3% இடஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு பெறுவதற்கு கீழ்காணும் விளையாட்டுப் போட்டிகளில் விண்ணப்பிக்கப்பட்ட ஆண்டிற்கு முந்தைய கடந்த 5 ஆண்டுகளில் பெறப்பட்ட விளையாட்டு சாதனைகள் மட்டுமே தகுதியானவையாக கருதப்படும். குழு விளையாட்டுகளில், மாநில அளவில் குறைந்தது 50% போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.


சர்வதேச போட்டிகள் (வெற்றிபெற்றவர்கள் / பங்கேற்றவர்கள்)


ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்,


காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்


ஆசிய விளையாட்டுப் போட்டிகள்


சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் (IOC) அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு


கூட்டமைப்பால் (ISF) 4 ஆண்டுகளுக் ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்ல ஆண்டுதோறும் நடத்தப்படும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள்.


4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை, IOC ஆல் அங்கீகரிக்கப்பட்ட ISF இன் கீழ் நடத்தப்படும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப்கள் போட்டிகள்.


4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது IOC ஆல் அங்கீகரிக்கப்பட்ட ISF இன் கீழ் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆசிய சாம்பியன்ஷிப்கள் போட்டிகள்


தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகள்


பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்


ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள்


சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு சங்கம் (IBSA) காது கேளாதோருக்கான


சர்வதேச விளையாட்டுக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக விளையாட்டுகள்


மற்றும் காது கேளாதோர் விளையாட்டுகள்.


தேசிய அளவிலான போட்டிகள் (வெற்றிபெற்றவர்கள் மட்டும்)


தேசிய விளையாட்டுப் போட்டிகள்.


இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட


தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளால் நடத்தப்படும் தேசிய சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள்.


மாநில அளவிலான சாம்பியன்ஷிப்போட்டிகள் (வெற்றிபெற்றவர்கள் மட்டும்)


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் (SDAT) அங்கீகரிக்கப்பட்ட


மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் போட்டிகள்.


போட்டிகளின் அனைத்து நிலைகளிலும், சீனியர் அளவிலான போட்டிகள் மட்டுமே தகுதியான போட்டிகளாக கருதப்படும்.


Based on the above guidelines, the SDAT invited online application for filling up 31 vacancies for the post of Nursing Assistant Grade II in Tamil Nadu Medical Subordinate Service at Grade -II (Level of Pay: 1 (pre revised Grade Pay below Rs.2,400/-) under 3% Sports Quota. The vacancies details and other eligibility criteria framed by the Director of Medical Education and Research, Chennai.


Eligibility Criteria:


The sportspersons should fulfil all the minimum educational qualification


criteria prescribed for the post.


1) Must not have completed 32 years of age if recruited direct, provided that his age-limit shall not apply in case of any person transferred from a local fund or Municipal Institution in consequence of the transfer of such institution to the control of the State Government.


ii) Must have possess the SSLC from recognised school and


iii) Must posses the certificate for having successfully completed the


training course of Nursing Assistants in any of the Government Medical Institutions in the State.


Provided that a person who has rendered war services as Nursing Assistant if appointed shall pass the Departmental Examination for Nursing Assistant, failing which he shall not be granted increments:


முழுமையான விவரங்களை அறிய...


DIPR - P.R.No.026 - SDAT MRB Press Release -Date.15.05.2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

3% விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்புகள் - SDAT செய்தி வெளியீடு

3% விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்புகள் - SDAT செய்தி வெளியீடு செய்தி வெளியீடு எண்: 026 , நாள் : 15.05.2026 செய்தி வெளியீடு தமிழ்...