கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

717 மதுபான கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட முதலமைச்சர் உத்தரவு



 தமிழ்நாட்டில் வழிபாட்டுத்தலங்கள், பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



TNDIPR



செய்தி வெளியீடு எண்: 007 , நாள்: 12.05.2026


செய்தி வெளியீடு


பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு


தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. அதில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களால் உத்தரவிடப்பட்டது. மேற்படி ஆணைக்கிணங்க இந்த மூன்று இனங்களில் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.


பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு வழிபாட்டுத்தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். 


வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை

TNDIPR, Govt. of Tamil Nadu


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

𝐋𝐢𝐭𝐭𝐥𝐞 𝐁𝐢𝐠 𝐌𝐚𝐬𝐭𝐞𝐫 திரைப்படம் குறித்த தகவல்

𝐋𝐢𝐭𝐭𝐥𝐞 𝐁𝐢𝐠 𝐌𝐚𝐬𝐭𝐞𝐫 திரைப்படம் குறித்த தகவல்  மாற்றங்கள் மலர்ந்தே தீரும் * அது ஒரு தனியார் சர்வதேசப் பள்ளி, அங்கே 100க்கு 2 மதி...