கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Naan Mudhalvan திட்டம் - ஊக்கத்தொகை அறிவிப்பு



நான் முதல்வன் திட்டம் - ஊக்கத்தொகை அறிவிப்பு


UPSC குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் மாதம் ரூ.25,000 ஊக்கத்தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு அழைப்பு


கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் ’நான் முதல்வன்’ திட்டத்தின் பெயரையே குறிப்பிடாமல் தமிழ்நாடு அரசு செய்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது எனவும்,  எனினும், இணையதள முகவரியில் ’நான் முதல்வன்’ என ஆங்கிலத்தில் இருப்பதை தற்போதைய அரசு கவனிக்கவில்லை போல எனவும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.



செய்தி வெளியீடு எண்: 254 , நாள் : 18.06.2026


தமிழ்நாடு அரசின் யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் அறிவிப்பு - 2026


தமிழ்நாடு அரசானது ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் குடிமைப் பணித் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் யு.பி.எஸ்.சி குடிமைப் பணித் தேர்வு ஊக்கத்தொகைத் திட்டத்தை செயல்படுத்துகிறது.


இத்திட்டத்தின் கீழ், 2026-ஆம் ஆண்டின் யு.பி.எஸ்.சி குடிமைப்பணி / இந்திய வனப்பணி முதன்மைத் தேர்வுகளுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு 25,000 ரூபாய் நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.


இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு நடப்பு ஆண்டில் (2026) யு.பி.எஸ்.சி குடிமைப்பணி / இந்திய வனப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள். ஆன்லைன் மூலம் ( https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc registration/ ) 19.06.2026 முதல் 30.06.2026 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SMC Member Registration – Important Update

  Sir / Madam  📢 **SMC Member Registration – Important Update** The following changes are being implemented in the SMC Member Registration ...