Letter from the Joint Registrar regarding the repayment of loans obtained from the Cooperative Thrift and Credit Society by teachers transferring from one block (union) to another
பணிமாறுதலில் செல்லும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தில் பெற்ற கடனை செலுத்துதல் தொடர்பாக இணைப்பதிவாளர் கடிதம்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
கூட்டுறவுத்துறை
அனுப்புநர்
க.பா.அருளரசு, B.Sc (Agri)., MBA., HDCM.,
கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர்,
நாமக்கல் மண்டலம்,
நாமக்கல்
பெறுநர்
மாவட்ட கல்வி அலுவலர்
நாமக்கல்
கா.மு.அ. 58/2026/மவ , நாள்.15.10.2026
அய்யா/அம்மையீர்,
பொருள் : கூட்டுறவு பணியாளர் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கங்கள் பணிமாறுதலில் செல்லும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அவர்கள் கடன் பெற்றுள்ள கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கங்களில் தொடர்ந்து தவணைத் தொகை பிடித்தம் செய்ய கோரியது- தொடர்பாக.
பார்வை : தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட சிறப்புப் பொதுக்குழுக் கூட்ட தீர்மானம் நாள்:05.09.2026 (இவ்வலுவலகத்திற்கு பெற்றப்பட்ட நாள்.19.09.2026)
பார்வையில் காணும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட சிறப்புப் பொதுக்குழுக் கூட்ட தீர்மானத்தில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணிமாறுதலில் செல்லும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தில் பெற்ற கடனை முழுமையாக செலுத்திட நிர்பந்தித்திடாமல் பணிமாறுதல் பெற்றுச் செல்லும் ஒன்றியத்தில் நிலுவை தவணை தொகையை தொடர்ந்து பிடித்தம் செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. இந்நேர்வில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணிமாறுதலில் செல்லும் ஆசிரியர்கள் அவர்கள் பெற்ற கடன் தொகை முழுவதும் செலுத்தி முடியும் வரை இயற்கை நியதியின் அடிப்படையில் அவர்கள் கடன் பெற்ற கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்திலேயே தொடர்ந்து தவணை தொகையை செலுத்தவோ அல்லது தனியரது விருப்பத்தின் அடிப்படையில் கடன் தொகையை முழுவதும் செலுத்திவிட்டு பணிமாறுதலில் செல்லும் ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தில் புதியதாக கடன் பெற்றுக்கொள்ளவோ உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஒம்/-க.பா.அருளரசு
இணைப்பதிவாளர்.
நாமக்கல்.
15/10/26
இணைப்பதிவாளருக்காக.
15/10/26
மேஎ எண்.5761/ஆ1/2026 , நாள். .10.26
நகல் தகவலுக்காகவும் தக்க நடவடிக்கைக்காகவும் அனைத்து வட்டார கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பப்படுகிறது
மாகஅ
நாமக்கல்
26/10/2026
பெறுநர்
அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.