ஊட்டி மலை ரயில் சேவை ரத்து
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் உதகை - மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை 2 நாட்களுக்கு ரத்து
கனமழை காரணமாக ஊட்டி மலை ரயில் சேவை இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கனமழையால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், இன்றும் நாளையும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு இன்று அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், உதகையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
மேலும், சாலைகளில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மறு உத்தரவு வரும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.