நீதித்துறையை கேலி செய்யும் காரணங்கள் - பள்ளிக் கல்வித் துறைக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் - நாளிதழ் செய்தி
தமிழ்நாடு அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் - சென்னை உயர்நீதிமன்றம்
தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு ஏற்பட்ட காலதாமதத்திற்கு கூறும் காரணங்கள் நீதித்துறையை கேலி செய்யும் வகையில் உள்ளதாக கண்டித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு ஏற்பட்ட காலதாமதத்துக்கு கூறும் காரணங்கள், நீதித் துறையை கேலி செய்யும் வகையில் உள்ளதாக கண்டித்த சென்னை உயர் நீதிமன்றம், பள்ளி கல்வித் துறைக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் பகுதியைச் சேர்ந்த ஆர்.புவனேஸ்வரி என்பவர், கடந்த 2023ல் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 'ஓய்வூதிய பலன்களுக்காக, ஆரம்ப நியமனம் முதல் பணி நிரந்தரம் செய்யப்படும் வரை, அதாவது 1985 ஆகஸ்ட் 8 முதல் 1992 அக்டோபர் 15 வரை, பணிபுரிந்த காலத்தையும் கணக்கில் எடுத்து கொள்ளும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, புவனேஸ்வரியின் மனுவை ஏற்று, 2023ஆம் ஆண்டு நவம்பர் 29 அன்று உத்தரவு பிறப்பித்தார். அதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் மேல்முறையீடு செய்தார்.
மனுவில், மேல்முறையீடு மனு, 809 நாட்கள் காலதாமதமாக தாக்கல் செய்ததற்கான காரணங்களை, கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விரிவாக விளக்கி இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
தனி நீதிபதி, கடந்த 2023ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, 809 நாட்களுக்குப் பின், மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. மேல்முறையீடு கால தாமதத்துக்கு, கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கூறிய காரணங்கள், நீதித்துறையை கேலி செய்வதுபோல் உள்ளன.
அதாவது, கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பரில், அரையாண்டு தேர்வு நடந்ததால், மேல்முறையீடு செய்ய நேரம் கிடைக்கவில்லை. கடந்த 2024ல் புத்தாண்டு, பொங்கல் விடுமுறையால் தாமதம்.
பின், 10 முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள், ஜூன், ஜூலையில் கணக்கு தணிக்கை, ஆகஸ்டில் விருதுக்கான ஆசிரியர்கள் தேர்வால் தாமதம்.
கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச்சில் மக்களவைத் தேர்தல், பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தம்; 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் புத்தாண்டு, பொங்கல் விடுமுறை, செய்முறை தேர்வு, பொது தேர்வு, அதன்பின் 2025 ஆம் ஆண்டு அக்டோபரில் கலைத் திருவிழா, நவம்பர், டிசம்பரில் அரையாண்டு தேர்வு,
2026ஆம் ஆண்டில் புத்தாண்டு, பொங்கல் விடுமுறை, பிப்ரவரியில் செய்முறை தேர்வு என, 809 நாட்கள் காலதாமதத்துக்கு காரணங்கள் விளக்கமாக கூறப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் கல்வித் துறை கூறியிருக்கும் காரணங்கள், நீதித்துறையை கேலி செய்வது போல் உள்ளன. எனவே, இந்த காலதாமதமாக தாக்கலான மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாடு அரசுக்கு, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக் குழுவிடம், நான்கு வாரங்களில் செலுத்த வேண்டும்.
சம்மந்தப்பட்ட பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளின் சம்பளத்திலிருந்து அபராதத்தை வசூலிக்க வேண்டும். அரசின் நலனையும், கருவூலத்தையும் பாதுகாக்கும் வகையில், மனுக்களை முறையாக எதிர்த்து வாதிடத் தவறிய அனைத்து அதிகாரிகள் மீதும், தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2023 நவம்பர் 29ம் தேதி ஒரு பிறப்பிக்கப்பட்டது இந்த உத்தரவை எதிர்த்து கள்ளக்குறிச்சி தலைமை கல்வி அதிகாரி 809 நாட்கள் கழித்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார்
நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு
கால தாமதத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை கல்வி அதிகாரி கூறிய காரணங்கள்:
2023 நவம்பரில் அரையாண்டு தேர்வு நடந்ததால் மேல் முறையீடு செய்ய நேரம் கிடைக்கவில்லை.
2024ல் புத்தாண்டு மற்றும் பொங்கல் விடுமுறையால் தாமதம் ஏற்பட்டது.
10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செயல்முறை தேர்வுகள், தொடர்ந்து பொது தேர்வு நடத்தப்பட்டது.
ஜூன் ஜூலையில் கணக்கு தணிக்கை,
ஆகஸ்டில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சிறந்த ஆசிரியர் விருதுக்கான ஆசிரியர்கள் தேர்வு,
2024 மார்ச்சில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு,
அதன் பிறகு தேர்தல் பணிக்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி,
பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தம்,
2025ல் புத்தாண்டு, பொங்கள் விடுமுறை,
செய்முறை தேர்வு, பொதுத் தேர்வு, அதன்பிறகு 2025 அக்டோபரில் ஒன்று முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான கலை திருவிழா,
நவம்பர், டிசம்பரில் அரையாண்டு தேர்வு,
2026 புத்தாண்டு, பொங்கல் விடுமுறை,
பிப்ரவரியில் செய்முறை தேர்வு என்று 809 நாட்கள் காலதாமதத்திற்கு காரணங்கள் கூறப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் கல்வித்துறை கூறியிருக்கும் காரணம் நீதித்துறையை கேலி செய்வது போல் உள்ளது.
எனவே, இந்த காலதாமத மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
தமிழ்நாடு அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.