கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாநிலக் கல்விக் கொள்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாநிலக் கல்விக் கொள்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மாநில கல்விக் கொள்கையை (SEP) பின்பற்றி பாடத்திட்டம் மாற்றம்



மாநில கல்விக் கொள்கையை (SEP) பின்பற்றி பாடத்திட்டம் மாற்றம்


"மாநில கல்விக் கொள்கையை (State Education Policy) பின்பற்றி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க, பாடவாரியாக நிபுணர் குழு அமைக்கப்படும். மாற்றியமைக்கப்படும் புதிய பாடத்திட்டங்கள் 2027-2028ல் அமலுக்கு வரும்.

 இரண்டாவது கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையான பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்றும் தகவல்"


- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு



மாநிலக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. செயல்முறை கற்றல், மொழித் திறன் மற்றும் நவீன தலைப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து புதிய பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு பாடங்கள் மாற்றியமைக்கப்படும். 


முக்கிய தகவல்கள்:

வகுப்புகள்: 1 முதல் 8 வரை, 9-11 வகுப்புகளுக்கான திருத்தங்களும் பரிசீலனையில் உள்ளன.

அடிப்படை: மாநிலக் கல்விக் கொள்கை வழிகாட்டுதல்கள்.

நோக்கம்: மாணவர்களின் சிந்தனைத் திறன் மற்றும் செயல்முறை அறிவை மேம்படுத்துதல்.

பரிந்துரை: பாடவாரியாக நிபுணர் குழு அமைக்கப்பட்டு பாடத்திட்டங்கள் திருத்தப்படும்.

கருத்து கேட்பு: புதிய பாடத்திட்டம் குறித்து பொதுமக்களின் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. 

இந்த மாற்றங்கள் புதிய கல்வி ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை SEP : அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு

 தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை : அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு 


“எதிர்காலத்திற்கு தேவையான பார்வையுடன் தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையை (பள்ளிக் கல்வி) உருவாக்கியுள்ளோம்”


இந்தக் கல்விக் கொள்கையின் மூலமாக… 


🙇படித்து மனப்பாடம் செய்வதை விட, சிந்தித்து கேள்விக் கேட்கும் மாணவர்களை உருவாக்க நினைக்கிறோம்.


⚡️எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான ஆற்றலை வழங்கவுள்ளோம்.


👩‍💻தொழில்நுட்ப மனம் படைத்த மாணவர்களை உருவாக்குவோம்.


👩‍🎨படிப்பவர்களாக மட்டுமல்ல! படைப்பாற்றல் உள்ளவர்களாக மாணவர்களை உருவாக்குவோம்!


🤾‍♀️கல்வியுடன் உடற்பயிற்சியும் இணைக்கப்படும்.


📋தாய்மொழித் தமிழ் நமது அடையாளமாக, பெருமிதமாக இருக்கும்.


📕தமிழும் ஆங்கிலமும் என இருமொழிக் கொள்கைதான் நமது உறுதியான கொள்கையாக இருக்கும்.


🏫ஒவ்வொரு ஒன்றியத்திலும் மாதிரிப் பள்ளிகள் மற்றும் உண்டு உறைவிடப் பள்ளிகள் உருவாக்கப்படும்!


📺கல்வித் தொலைக்காட்சியும், மணற்கேணி செயலியும் ‘ஒவ்வொரு வீடும் ஒரு வகுப்பறை’ எனும் நிலையை உருவாக்கும்.


👨‍🎓மதிப்பெண்களாக இல்லாமல் மதிப்பீடுகளை நோக்கி தேர்வுகள் அமையும்.


📚பசுமைப் பள்ளிகள், ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும்.


🧑‍🎓‘நான் முதல்வன்’ திட்டம் வாழ்க்கைக்கும் வழிகாட்டுதலாக அமையும்.


👨‍🔬அறிவியலுக்கு புறம்பான பிற்போக்கு சிந்தனைகள் பள்ளிகளில் நுழைய அனுமதிக்க மாட்டோம்!


*“அனைவருக்கும் கல்வி! அனைவருக்கும் உயர்தரமான கல்வி” இதுதான் நமது திராவிட மாடல் அரசின் கல்விக் கொள்கை!* - மாண்புமிகு முதலமைச்சர் 

@mkstalin

 அவர்கள்



SEP Vs NEP

 மாநில கல்விக் கொள்கை Vs தேசிய கல்விக் கொள்கை


State Education Policy Vs National Education Policy 



மாநில கல்விக் கொள்கை Vs தேசிய கல்விக் கொள்கை


மாநில கல்விக் கொள்கை


11ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்து; 10, 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு


1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி


தமிழ், ஆங்கிலம் - இருமொழிக்கொள்கை


கல்வி மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப்பட வேண்டும்


5 வயது முதல் 1ஆம் வகுப்பில் சேர்க்கை


தேசிய கல்விக் கொள்கை


3, 5, 8, 10, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த பரிந்துரைக்கப்படுகிறது


3, 5, 8ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாவிட்டால் மறுதேர்வு கட்டாயம்


தாய்மொழி (முக்கிய மொழியாக), ஆங்கிலம், ஏதேனுமொரு இந்திய மொழி (விருப்ப மொழியாக) - என மும்மொழிக் கொள்கை


கல்வி பொதுப்பட்டியலில் நீடிக்கும்


6 வயது முதல் 1ஆம் வகுப்பில் சேர்க்கை



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SMC Reconstitution 2026 | Budget & Phase wise school list | SPD Proceedings

2026-2028ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் மறுகட்டமைப்பு - அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைபெறுதல் - வ...