கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Spouse லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Spouse லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு - கணவன்-மனைவி (Spouse Priority) முன்னுரிமையில் பின்பற்ற வேண்டியவை



ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு - கணவன்-மனைவி (Spouse Priority) முன்னுரிமையில் பின்பற்ற வேண்டியவை பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், நாள். 24.01.2022


Teacher Transfer Counselling Instructions



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




அவசரம் / தனிக்கவனம்


தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் சென்னை-6


ந.க. எண்.25154/அ1/இ2/2021 , நாள். 24.01.2022


பொருள்:


பள்ளிக் கல்வி-2021-22ம் ஆண்டு ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு சார்பான அறிவுரைகள் வழங்குதல் - சார்பு.


பார்வை:


1) அரசாணை (நிலை)எண்.176 பள்ளிக் கல்வி (பக5(1) துறை நாள்.17.12.2021


2) பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் இதே எண்ணிட்ட நாள். 30.12.2021, 06.1.2022, 07.1.2022 8.1.2022, 10.1.2022, 20.1.2022,21.1.2022, 22.1.22 மற்றும் 24.1.2022


-0-


பார்வை-2ல் காணும் 24.1.2022 நாளிட்ட செயல்முறைகளில் பத்தி-3ற்கு கீழ்க்காணுமாறு திருத்தம் செய்து வாசிக்குமாறும் அதன் தொடர்ச்சியாக சில கூடுதல் அறிவுரைகளும் கீழ்க்காணுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.


1. கணவன்-மனைவி (Spouse Priority) முன்னுரிமையில் மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்கள் கணவன் / மனைவி எந்த மாவட்டத்தில் பணிபுரிகின்றனரோ அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளியினை தான் தெரிவு செய்யப்படவேண்டும் என்பதற்கு பதிலாக அவர்கள் விரும்பும் ஏனைய மாவட்டத்தினையும் தெரிவு செய்துகொள்ளலாம்."


2. கணவன் /மனைவி மேற்காண் முன்னுரிமையினை (Spouse Priority) எவரேனும் ஒருவர் பயன்படுத்தினால் கூட அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்த முன்னுரிமையினை (Priority) கோரக்கூடாது.


3. மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் அவர்களின் முன்னுரிமையின் (Seniority basis) அடிப்படையில் அவரது சுழற்சி (turn) வரும்பொழுது உள்ள காலிப்பணியித்தினை மட்டுமே தெரிவு செய்ய ஒரே ஒரு முறை மட்டுமே அனுமதிக்கப்படுவர். அவருக்கு பின்னர் வரும் Resultant Vacancy ஐ தெரிவு செய்ய அனுமதிக்கப்படமாட்டாது.


4.மாவட்டம் விட்டு மாவட்டம் (Inter district transfer) கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் கலந்தாய்வின் போது தற்போது பணிபுரியும் மாவட்டத்தினை தவிர்த்து பிற மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடத்தினையே தெரிவு செய்யப்படவேண்டும். (தனியரின் தற்போது பணிபுரியும் மாவட்டம் EMIS இணையத்தில் காண்பிக்கப்படமாட்டாது)


5.மேலும் மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து கலந்தாய்வு நடைபெறும் அன்றைய நாளில் வருகைபுரியாமலோ (Absent) (அ) தாமதமாக வருகைபுரிந்தாலோ கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது.


மேற்காண் அறிவுரைகளின்படி காலிப்பணியிடங்கள் மற்றும் மாறுதல் விண்ணப்பங்களில் அனைத்து முறையீடுகள், திருத்தங்கள் ஆகியவற்றினை குறித்த காலக்கெடுவிக்குள் சரிசெய்யப்படவேண்டும். கலந்தாய்வு நடைபெறும் அன்றைய நாளில் தெரிவிக்கப்படும் எவ்வித முறையீடுகளும் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.


ஆணையருக்காக


பெறுநர்


அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்


(மின்னஞ்சல் மூலமாக)


நகல்:


1.தொடக்கக் கல்வி இயக்குநர் சென்னை-6


2. இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி)


3. இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)


4. இணை இயக்குநர் (தொழிற் கல்வி)


5. சம்பந்தப்பட்ட பிரிவுகள்


6. EMIS ஒருங்கிணைப்பாளர், மாநில திட்ட இயக்ககம் சென்னை-6


ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு - முன்னுரிமை - கணவர் /மனைவி பணிபுரியும் சான்றிதழ் (Spouse Certificate - Teachers Transfer Counseling - Priority)...



>>> ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு - முன்னுரிமை - கணவர் /மனைவி பணிபுரியும் சான்றிதழ் (Spouse Certificate - Teachers Transfer Counseling - Priority - Model 1)...



>>> ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு - முன்னுரிமை - கணவர் /மனைவி பணிபுரியும் சான்றிதழ் (Spouse Certificate - Teachers Transfer Counseling - Priority - Model 2)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஆசிரியர்கள் பொதுமாறுதல் சார்பான விண்ணப்பங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்தமை - முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் & Spouse Priority முன்னுரிமையில் கணவன் அல்லது மனைவி பணிபுரியும் மாவட்டத்தை மட்டுமே எடுக்க வேண்டும் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Teachers Transfer Applications - Seniority List Publishing & Spouse Priority Priority - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 25154/ அ1/ இ2/ 2021, நாள்: 24-01-2022...



>>> ஆசிரியர்கள் பொதுமாறுதல் சார்பான விண்ணப்பங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்தமை - முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் & Spouse Priority முன்னுரிமையில் கணவன் அல்லது மனைவி பணிபுரியும் மாவட்டத்தை மட்டுமே எடுக்க வேண்டும் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Teachers Transfer Applications - Seniority List Publishing & Spouse Priority Priority - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 25154/ அ1/ இ2/ 2021, நாள்: 24-01-2022...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்