கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வருமான வரி கணக்கு தாக்கல் (Income Tax E-filing) செய்ய 2021, ஜனவரி 10 வரை கால அவகாசம் நீட்டிப்பு...

 


வருமான வரி கணக்கு தாக்கல் (Income Tax E-filing) செய்ய 2021, ஜனவரி 10 வரை கால அவகாசம் நீட்டிப்பு...

The Due dates of Filing has been extended as follows:

  • Income Tax Returns Last Date for Non Tax Audit Assessees – 10th January, 2021
  • Income Tax Returns Last Date for Tax Audit Assessees – 15th February, 2021
  • Tax Audit Report Last Date – 15th January, 2021
  • Vivad Se Viswas Last Date – 31st January, 2021

வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நீட்டிப்பு.. மத்திய அரசு உத்தரவு

தனிநபர்கள் 2019 - 20ம் ஆண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பிப்ரவரி 15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று ( டிசம்பர் 31) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மத்திய அரசு அவகாசத்தை நீட்டித்துள்ளது.


முன்னதாக கொரோனா பாதிப்பு காரணத்தை காட்டி மத்திய அரசு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலஅவகாசத்தை பலமுறை நீட்டித்திருந்தது. இதனால் டிசம்பர் 31ம் தேதிக்கு பின்னர் நீட்டிக்குமா என்ற கேள்வி எழுந்தது.

 government extended the date for filing income tax returns to January 10 

அதேநேரம் நிதியச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முன்னாள் வர்த்தக அமைச்சரான சுரேஷ் பிரபு உள்பட பல்வேறு தரப்பினர், 2019-20ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலஅவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இதையடுத்தே 2019 - 20ம் ஆண்டிற்கான தனிநபர்கள் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது நிறுவனங்கள் தாக்கல் செய்ய பிப்வரி 15ம் தேதி வரை அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

2019 - 20ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கலை கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி, 4.37 கோடி பேர் தாக்கல் செய்துள்ளதாக நிதியமைச்சகம் கூறியிருந்தது. தற்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் மேலும் பலர் தாக்கல் செய்வார்கள் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது. நாட்டில் 135 கோடி மக்கள் வசிக்கும் நிலையில் 5 கோடி மக்கள் மட்டுமே வருமான வரி செலுத்துகிறார்கள். அதாவது ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளதாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்கிறார்கள்.

முன்னதாக, வருமான வரித்துறை எஸ்எம்எஸ் மற்றும் இமெயில் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று அலர்ட் செய்து வந்தது. அதாவது நீங்கள் வருமான வரி தாக்கல் செய்திருப்பீர்கள் என நம்புகிறோம். அப்படி செய்யாவிட்டால் கால தாமதம் செய்ய வேண்டாம். அதோடு வருமான வரி தாக்கலை இன்றே செய்திடுங்கள் என்று கூறியிருந்தது.

நாளை மாலை பொதுத் தேர்வு அறிவிப்பு வெளியீடு... (TOMORROW IS THE DAY! STAY TUNED - MINISTRY OF EDUCATION)...

 


நாளைக்குள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யாவிட்டால், இருமடங்கு அபராதம்...

 நாளைக்குள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யாவிட்டால், கடந்த ஆண்டைவிட, இருமடங்கு அதிகமாக அபராதம் செலுத்த வேண்டியதாகிவிடும்.வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதில், கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் இடையே முக்கியமான வித்தியாசம், உரிய காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்யாதபட்சத்தில், விதிக்கப்படும் அபராதம் தான்.கடந்த ஆண்டு அபராதம், 5 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இது, இந்த ஆண்டு, இரு மடங்கு உயர்த்தப்பட்டு, 10 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.இருப்பினும், அபராதம் அல்லது தாமதமாக தாக்கல் செய்வதற்கான கட்டணம், உங்கள் நிகர மொத்த வருமானம் அதாவது, தகுதியான கழிவுகள் மற்றும் வரி விலக்குகளை கோரிய பிறகான வருமானம், 5 லட்சம் ரூபாயை தாண்டினால் மட்டுமே வசூலிக்கப்படும்.உங்கள் நிகர மொத்த வருமானம், குறிப்பிட்ட நிதியாண்டில், 5 லட்சத்துக்கு மிகாமல் இருந்தால், அபராதமாக ஆயிரம் ரூபாய் மட்டுமே விதிக்கப்படும்.வழக்கமாக, வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்தவற்கு, தனிநபர்களுக்கு, ஒவ்வோர் ஆண்டும், ஜூலை, 31ம் தேதி கடைசி தேதியாகும்.ஒருவேளை இதற்குள் தாக்கல் செய்ய முடியாமல் போய்விட்டால், அதே ஆண்டில், டிசம்பர், 31ம் தேதிக்குள், தாமத மாக தாக்கல் செய்யலாம்.

ஆனால், தாமதக் கட்டணமாக, 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டியதிருக்கும். ஒருவேளை, டிசம்பர், 31ம் தேதிக்குப் பிறகு, மார்ச், 31ம் தேதிக்கு முன்ன ராக தாக்கல் செய்யப்படும்பட்சத்தில், தாமதக் கட்டணம், 10 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும்.இம்முறை தாக்கல் செய்வதற்கான கெடு, டிசம்பர், 31வரை நீட்டிக்கப்பட்டதால், வழக்கமாக விதிக்கப்படும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட மாட்டாது.ஆனால், ஜனவரி, 1ம் தேதி முதல், மார்ச் இறுதிக்குள் தாக்கல் செய்யப்படும்பட்சத்தில், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தியாக வேண்டும். ஏனென்றால், இம்முறை தாமதமாக தாக்கல் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டாலும், தாமதக் கட்டணத்தை வசூலிப்பதற்கான வருமான வரிச் சட்டத்தில், எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.தாமதக் கட்டணம் குறித்த, வருமான வரி சட்டத்தின், 234எப் பிரிவில், இரண்டு அடுக்கு அமைப்பு உண்டு.அதன் படி, 5 ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம் ரூபாய் என, குறிப்பிட்ட தேதிகளுக்கு பிறகு கட்டணம் வசூலிக்கப்படும்.இந்த பிரிவில் மாற்றம் செய்யப்படாததால்,நேரடியாக, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.எனவே, இரு மடங்கு அபராதத்தை தவிர்க்க, நாளைக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக கூறி வெளியாகும் அதிகாரப்பூர்வமற்ற தகவலை நம்ப வேண்டாம்...

 அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, அரசு கல்லூரி, பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியில் அண்ணா பல்கலைக்கழகம் முனைப்பாக செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையில், ஆசிரியர் பணியிடம் வாங்கித்  தரகர்கள் தருவதாக சில, அங்கீகரிக்கப்படாத நபர்கள் தங்களை அணுகுவதாக, சில விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.

 இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஆசிரியர் பணி தொடர்பாக வரும் நம்பகத்தன்மை இல்லாத, அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்படாத நபர்கள் சில விண்ணப்பதாரர்களை தொடர்பு கொண்டு, பணி வாங்கித் தருவதாக கூறுவதாக புகார்கள் வந்துள்ளன. இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு - அமைச்சர் செங்கோட்டையன்...


 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு குறித்து ஆலோசனை நடைபெறுகிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சிறப்பு வகுப்புக்கு முதல்வர் ஒப்புதல் அளித்தவுடன் அட்டவணை வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் இறுதியில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. சில நாட்களுக்கு முன்னர் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இருப்பினும் பள்ளிகள் திறப்பில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இதனால் மாணவர்கள் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை கற்று வருகின்றனர். கடந்த ஆண்டில் கொரோனா அச்சத்தால் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அரையாண்டு, காலாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இம்முறையும் புதிய வகை கொரோனா பரவல், சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் பொதுத்தேர்வு நடத்துவதில் சிக்கல்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும் பூஜ்யம் கல்வியாண்டாக நடப்பு கல்வியாண்டை அறிவிக்க வாய்ப்பில்லை எனவும் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் தேதிகளை பொறுத்தே பொதுத்தேர்வு தேதிகள் முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். இந்நிலையில் இன்று பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், சிறப்பு வகுப்புக்கு முதல்வர் ஒப்புதல் அளித்தவுடன் அட்டவணை வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பள்ளிக் கல்வி - National Scholarship Portal மூலம் Onlineல் பதிவு செய்தல் - தனியார் Browsing Centre மூலம் அதிக மாணவர்களை தவறாகச் சேர்த்தல் - மறு ஆய்வு செய்து தலைமையாசிரியர்கள் சான்றளிப்பு செய்யக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு...


 >>> பள்ளிக் கல்வி - National Scholarship Portal மூலம் Onlineல் பதிவு செய்தல் - தனியார் Browsing Centre மூலம் அதிக மாணவர்களை தவறாகச் சேர்த்தல் - மறு ஆய்வு செய்து தலைமையாசிரியர்கள் சான்றளிப்பு செய்யக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கடன்களுக்கு வங்கிகள் எப்படி வட்டிவிகிதம் கணக்கிடுகின்றன..?

 


கடன்களுக்கு வங்கிகள் எப்படி வட்டிவிகிதம் கணக்கிடுகின்றன தெரியுமா? 

7 வங்கிகளில், குறிப்பாக தனியார் வங்கிகளில் அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்களில் நீங்கள் கடன் வாங்கும்போது ஒரு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அது வட்டி விகிதக் கணக்கு.

கடைசி அத்தியாயத்தின் முடிவில், பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் எதில் தனிநபர் கடன் வாங்கினால் வட்டி குறைவாக இருக்கும் என்று கேட்டிருந்தோம். இந்தக் கேள்விக்கு சரியான பதிலை அதாவது, பொதுத்துறை வங்கிகள்தான் எனப் பலரும் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். சரியான பதில் சொன்ன அனைவருக்கும் பாராட்டுகள்.

அது மட்டுமல்ல, கடந்த அத்தியாயத்தைப் படித்த மதுக்கூர் மணி என்பவர் ஒரு ஆலோசனை கேட்டிருக்கிறார். அவர் கேட்டிருப்பதாவது...

கடன் வாங்கினேன், திரும்பக் கட்ட முடியவில்லை...

``நான் தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தபோது தனியார் வங்கியில் எனது பெயரில் சம்பளத்தின் அடிப்படையில் வேறு எந்த பிணையும் வைக்காமல் தனிநபர் கடன் வாங்கினேன். தற்போது கொரோனாவின் காரணமாகக் கடந்த ஒன்பது மாதமாக வேலையின்றி இருக்கிறேன். இந்த நிலையில, கடன் தவணையைக் கட்ட வேண்டும் என்று வீட்டுக்கு வந்து தொந்தரவு செய்கின்றனர். நான் என்ன செய்ய வேண்டும்? தயவு செய்து கூறுங்கள்!’’ என்று கேட்டிருக்கிறார். அவருக்கான பதில்...

6 மாத காலத்திற்கு ரிசர்வ் வங்கி வகுத்துள்ள வழிகாட்டுதலின்படி, கடன் தவணை தள்ளிவைப்பு (Loan Moratorium) வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கொரோனா பிரச்னையின் காரணமாக அனைத்து வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆறு மாத காலம் மாதத் தவணைகளை தள்ளி செலுத்தும் வசதியைக் கொடுக்குமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. இதற்குக் கூடுதல் வட்டி வசூலிக்கப்பட்டாலும் சாதாரண வட்டிக்கும், கூட்டு வட்டிக்கும் உள்ள வித்தியாசத் தொகையை மத்திய அரசு சலுகையாக வழங்குகிறது. இது கொரோனா காலத்துக்கு முன்பு தாங்கள் கடனை ஒழுங்காக செலுத்தி இருக்கும்பட்சத்தில், ரிசர்வ் வங்கி விதிமுறைகளுக்கு உட்பட்டு வங்கிகள் இந்த வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்குத் தருகின்றன. அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே நான் அவருக்கு அளிக்கும் பதில்.

ரூ.2 லட்சம் கடனுக்கு எவ்வளவு வட்டி?

சரி, இந்த அத்தியாயத்துக்கு வருவோம். வங்கிகளில், குறிப்பாக தனியார் வங்கிகளில் அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்களில் நீங்கள் கடன் வாங்கும்போது ஒரு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அது வட்டி விகிதக் கணக்கு. உதாரணமாக, தனியார் வங்கி ஒன்றில் தனிநபர் கடன் ரூ.2 லட்சத்துக்கு விண்ணப்பிப்பதாக வைத்துக்கொள்வோம். அவர்கள் வட்டி விகிதம் 24% எனில் (தற்போதைய சூழ்நிலையில் தனிநபர் கடன் வட்டி விகிதம் 16 சதவிகிதத்திலிருந்து 24% வரை தரப்படுகிறது), நம்மில் பலர் மாதம் இரண்டு வட்டி என்ற முறையில் நம்மிடம் வட்டி பணம் வசூலிக்கிறது என்று நினைக்கிறார்கள்.

அதாவது, வருடத்துக்கு 24% வட்டி என்றால் மாதத்துக்கு 2% வட்டி என்று கணக்கிடுகிறார்கள். இது தவறு. ரூ.2 லட்சத்துக்கு 24% வட்டிக்கு மூன்று வருடங்களுக்கு மாதாந்தரத் தவணை ரூ.7,847 என்று வரும். அப்படி மூன்று வருடங்களுக்குச் செலுத்தினால், மொத்த வட்டி செலுத்திய தொகை ரூ.82,476 என்று வரும்.

இதுவே நாம் நடைமுறையில் பேசும் இரண்டு வட்டி என்று கணக்கிட்டால், நாம் செலுத்த வேண்டிய மொத்த வட்டி தொகை மூன்று வருடங்களுக்கு ரூ.1.44 லட்சம் (ரூ.4,000 மாத வட்டி x 36 மாதங்கள்) என்று வரும். இதிலிருந்து நாம் சாதாரணமாக வட்டி கணக்கிடுவதற்கும் வங்கிகள் வட்டி கணக்கிடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் உணரலாம்.

கடன் வரலாற்றைப் பொறுத்தே வட்டி

இதில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒவ்வொரு மாதமும் வட்டியை மட்டும் செலுத்திவிட்டு, அசலை எப்போது வேண்டுமானாலும் பகுதி பகுதியாகவோ, மொத்தமாகவோ செலுத்தும் வசதி இருக்கிறது. அவ்வாறு பகுதி பகுதியாகச் செலுத்தும்போது அதற்கு ஏற்றவாறு வட்டித் தொகை குறையும். இத்தகைய கடன் திட்டம் பெரும்பாலும் தங்க நகைக் கடன்களில் வழங்கப்படுகிறது.


ஒரே விதமான கடனுக்கு, வட்டி விகிதம் என்பது ஒவ்வொரு வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு இடையே மாறுபடலாம். மேலும், ஒவ்வொரு நபருக்கும் மாறுபடலாம். ஒருவரின் தனிப்பட்ட அல்லது நிறுவனத்தின் வயது, கல்வித்தகுதி, தொழில், வருமானம், கூடுதல் வருமானம், சொத்து மதிப்பு, கடன் தகவல் அறிக்கையில் எந்த பாதகமான விஷயங்களும் இடம்பெறாதது ஆகியவற்றைக் கொண்டு வட்டி விகிதம் தீர்மானிக்கப்படுகிறது. மேற்சொன்ன அம்சங்கள் உங்களுக்கு சாதகமாக இருந்தால், வட்டி விகிதம் குறைவாக இருக்கும்.

ஆப்ஸ் மூலம் கடனா, ஜாக்கிரதை!

மேற்சொன்ன அம்சங்கள் மட்டுமல்லாமல், இப்போது வந்திருக்கும் ஃபின்டெக் (Fintech) நிறுவனங்கள் தங்களின் சமூகத்தொடர்புக் கணக்குகள், கடன் அட்டை பயன்பாடுகள், வெளிநாட்டு பயணங்கள், கடன் தேவையின் அவசரம் ஆகியவற்றைக் கொண்டு தங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய கடன் அளவையும் வட்டி விகிதத்தையும் தீர்மானிக்கின்றன. ஆகவே, நீங்கள் எந்த வங்கியிலோ, வங்கிசாரா நிதி நிறுவனத்திலோ கடன் வாங்குவதற்கு முன்னால், அந்த வட்டி விகிதம்தான் தங்களுக்கு கிடைக்கக்கூடிய குறைந்த வட்டி விகிதம் என்று உறுதிப்படுத்திக் கொண்டு எடுப்பது நல்லது. ஆப்ஸ் மூலம் கடன் தரும் நிறுவனங்களிலிருந்து முடிந்தவரை கடன் பெறாமலே இருப்பது நல்லது.

இப்போது மாதாந்தரத் தவணை கணக்கீட்டு முறையையும் வட்டி விகிதங்கள் பற்றியான தகவல்களையும் பற்றி ஓரளவுக்கு தெளிவடைந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி: விகடன்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...  *அவசர செய்தி: அனைத்து Block civil coordinators (BRTE) கவனத...