கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பட்டதாரிகளுக்கு குவிந்துள்ள மத்திய அரசு பணி வாய்ப்புகள்...


 6 ஆயிரத்து 506 காலியிடங்களுக்கு எஸ்எஸ்சி தேர்வு அறிவிப்பு - ஜன.31-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


மத்திய அரசின் குரூப்-பி, குரூப்-சி பணிகளில் 6 ஆயிரத்து 506 காலியிடங்களை நேரடித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கிறது. பட்டப் படிப்பை அடிப்படை கல்வித்தகுதியாக கொண்ட இந்த பணிகளுக்கு நேர்முகத்தேர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மற்றும் நிறுவனங்களில் குரூப்-பி, குரூப்-சி தரத்திலான பதவிகள் எஸ்எஸ்சி எனப்படும் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்படுகின்றன.


குரூப்-பி பிரிவில் உதவி தணிக்கை அலுவலர், உதவி கணக்கு அலுவலர், உதவி பிரிவு அலுவலர், கடத்தல் தடுப்பு ஆய்வாளர்,வருமானவரி ஆய்வாளர், சிபிஐ இன்ஸ்பெக்டர், உதவி அமலாக்க அதிகாரி, அஞ்சல்ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளும், குரூப்-சிபிரிவில் உதவி தணிக்கை அலுவலர், உதவிகணக்கு அலுவலர், வரி உதவியாளர், மேல்நிலை எழுத்தர், உதவி கணக்காளர், இளநிலை தணிக்கையாளர் உள்ளிட்ட பதவிகளும் உள்ளன.


இப் பணிகள் அனைத்தும் எழுத்துத்தேர்வு அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படுகின்றன. நேர்முகத்தேர்வு கிடையாது. எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றால் அரசு பணி வாய்ப்பு உறுதி என்பது எஸ்எஸ்சி தேர்வின் சிறப்பு அம்சம். எழுத்துத் தேர்வில் மொத்தம் 3 நிலைகள் இருக்கின்றன. பொது அறிவு,அடிப்படைக் கணித அறிவு, நுண்ணறிவுத் திறன், பொது ஆங்கிலம் ஆகிய பகுதிகளில் இருந்து ‘அப்ஜெக்டிவ்’ முறையில் கேள்விகள் கேட்கப்படுகின்றன.


இந்த ஆண்டு குரூப்-பி பணிகளில் 3 ஆயிரத்து 763 காலியிடங்கள், குரூப்-சி பணிகளில் 2 ஆயிரத்து 743 காலியிடங்கள் என மொத்தம்6 ஆயிரத்து 506 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. வயது வரம்பாக குரூப்-பி பணிகளுக்கு 30 ஆகவும், குரூப்-சி பணிகளுக்கு 27 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 5 ஆண்டும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தற்போது இறுதிஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.


இதற்கான ஆன்லைன் பதிவு (https://ssc.nic.in) கடந்த டிச.29-ம் தேதி தொடங்கியது. பெண்கள், எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜன.31. முதல்கட்ட தேர்வு மே 29 முதல் ஜுன் 7 வரை கணினிவழியில் பல்வேறு கட்டங்களாக நடைபெறும். தேர்வு தொடர்பான விவரம் எஸ்எஸ்சி இணையதளத்தில் (www.ssc.nic.in) விரிவாக வெளியிடப்பட்டுள்ளது.


டிஎன்பிஎஸ்சி தேர்வுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் இருந்து எஸ்எஸ்சி தேர்வெழுதும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும்குறைவாக இருந்து வருகிறது. போட்டித்தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்களில் பெரும்பாலானோர் எஸ்எஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிப்பது கூட இல்லை என்பதுதான் உண்மை. தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களும் முழு தயாரிப்புடன் தேர்வு எழுதுவதில்லை.


கடந்த சில ஆண்டுகளில் எஸ்எஸ்சி தேர்வுகளில் வெற்றிபெற்றோர் எண்ணிக்கையை ஆராய்ந்தால் தமிழக மாணவர்களின் தேர்ச்சி வெறும் 1 சதவீதம்தான் என்கிறார்கள் தனியார் பயிற்சி மையங்களின் நிர்வாகிகள். எஸ்எஸ்சி தேர்வில் வினாக்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருப்பது இதற்கு முக்கிய காரணம் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


இதுதொடர்பாக அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து வரும் ரேடியன் ராஜபூபதி கூறியதாவது:


எஸ்எஸ்சி தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து கணிசமானோர் விண்ணப்பிக்கிறார்கள். ஆனால், தேர்ச்சி விகிதம் என்று பார்த்தால் வெறும் 1 சதவீதம் மட்டுமே. இதற்கு முக்கியக் காரணம் தமிழக மாணவர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வைப் போன்று எஸ்எஸ்சி தேர்வுக்கு முழுமூச்சாகத் தயாராவதில்லை. பெயரளவிலேயே எழுதுகிறார்கள்.


மற்றொரு காரணம், எஸ்எஸ்சி தேர்வில் வினாக்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருக்கும். மேலும், எஸ்எஸ்சி தேர்வுகள், அதற்கான தயாரிப்பு குறித்து தமிழக மாணவர்களுக்கு போதிய அளவு விழிப்புணர்வு இல்லை. விழிப்புணர்வு ஏற்படுத்தினால், தமிழகத்தில் இருந்தும் ஏராளமானோர் எஸ்எஸ்சி தேர்வில் வெற்றி பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசு உதவி பெறும் பள்ளி நியமனங்கள் - புதிய விதிகள் கொண்டு வர பள்ளிக்கல்வித் துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்...

 


புதிய விதிகள் கொண்டு வர பள்ளிக்கல்வித் துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்...

அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு நியமனங்கள் மேற்கொள்ளும்போது, மாவட்ட கல்வி அதிகாரியின் அனுமதி பெற வேண்டும் என்று விதிகள் கொண்டு வரலாம் என, பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், கோனேரிராஜபுரத்தில் உள்ள அரசு உதவி்பெறும் வடமட்டம் மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு முருகன் என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.

அனுமதிக்கப்பட்ட இப்பணியிடத்துக்கான நியமனத்துக்கு அனுமதி கோரி, மாவட்ட கல்வி அதிகாரிக்கு பள்ளி நிர்வாகம் விண்ணப்பித்தது. பள்ளியின் கோரிக்கையை நிராகரித்து, மாவட்ட கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, பள்ளி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு நியமனங்கள் மேற்கொள்ள அனுமதி பெற அவசியமில்லை என்றும், அனுமதிக்கப்பட்ட பணியிடத்தில் பிற பள்ளிகளில் உபரியாக உள்ள பணியாளர்களை நியமிக்க வேண்டிய தேவையில்லை எனவும் கூறி, மாவட்ட கல்வி அதிகாரியின் உத்தரவை ரத்து செய்துத் தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து பள்ளிக்கல்வித் துறை இயக்குனர், திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோர் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் காலியாக இருந்த பணியிடத்துக்கு, 4 ஆண்டுகள் தாமதமாக 2018- ஆம் ஆண்டு தான் நியமன நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டதாக, பள்ளிக்கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு நியமனம் மேற்கொள்ள மாவட்ட கல்வி அதிகாரியின் அனுமதி பெற வேண்டும் என எந்த விதிகளும் இல்லை. இதுபோன்ற விதிகளை பள்ளிக்கல்வித் துறை வகுக்கலாம். அனுமதிக்கப்பட்ட பணியிடத்துக்கு நியமனம் மேற்கொள்ள பள்ளி நிர்வாகம் எடுத்த நடைமுறைகளைக் குறை கூற முடியாது.’எனத் தெரிவித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட மறுத்து, வழக்கை முடித்து வைத்தனர்.

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை – தமிழக அரசு உத்தரவு...

 தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு உத்தரவு அமலபடுத்தப்பட்டது. இதனால் பொது போக்குவரத்துகளான பேருந்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் கொரோனா பரவல் குறைந்த காரணத்தால் குறைந்த அளவில் பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்டவைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.

தற்போது பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு தேவையான அளவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகளும் 24 மணிநேரமும் இயக்கப்படுகிறது. அரசு சார்பில் அனைத்து துறைகளிலும் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களின் நலனுக்காக அயராது உழைக்கும் போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊக்கத்தொகையை அரசு உயர்த்தி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட உத்தரவின்படி, அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் நற்பணியை ஊக்கப்படுத்தும் வகையில் சாதனை ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி 2020ஆம் ஆண்டில் 200 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.625 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அலைபேசி (Cellphone) பயன்படுத்துவோர் கடைபிடிக்க வேண்டியவை...


 ஒரு எண்ணிற்கு கைபேசியில் அழைப்பு விட்டு எதிர் முனைக்கு ரிங் போகிறதா? என்று காதில் வைத்துக் கேட்டுக்கொண்டே இருப்பது தவறு. அந்த வேளையில்தான் கதிர்வீச்சு மற்றும் மின்காந்த அதிர்வுகள் கூடுதலாக இருக்கும். அது உங்கள் காதுகளையும், மூளையையும் கடுமையாக பாதிக்கும். எனவே, எண்ணுக்கு அழைப்பு விடுத்தும் கைபேசியை முகத்து க்குச் சற்றே தள்ளிப் பிடித்து இணைப்பு கிடைத்துவிட்டதை அறிந்ததும் காதில் வைத்துப் பேசுவது நல்லது.


வீட்டிலும் அலுவலகத்திலும் கை பேசியை உங்கள் சட்டைப்பையிலோ, கையிலோ சுமந்து கொண்டிராமல், நான்கடி தள்ளி கண்ணில் படும்படி எங்காவது வையுங்கள். பேசும்போது மட்டும் எடுத்துப் பேசுங்கள். இதனால் அதன் கதிர்வீச்சிலிருந்து தப்பலாம். தூங்கச் செல்லும்போது முக்கிய அழைப்பு வரும் என்று எதிர் பார்த்து தலைக்கு அருகிலேயே கைபேசியை வைத்துக் கொண்டு தூங்குவது மிகத் தவறு அது மூளையைத் தாக்கி, நிம்மதியான உறக்கத்தைத் தடுக்கும். ஆறு மணி நேர நிம்மதியான ஓய்வை உடலுக்கும் மூளைக்கும் தர வேண்டுமானால் இதைத் தவிர்த்து விடவும்.


இதய அறுவை சிகிச்சை செய்து இதயத்துடிப்பு கருவி (பேஸ்மேக்கர்) பொருத்தியிருப்பவர்கள் அதிக நேரம் செல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். செல் போனின் அலைவீச்சு, இந்தக் கருவியின் இயக்கத்துக்கு மிகுந்த இடையூறு செய்யும்.


பெருமழை பெய்யும் போதும், இடி தாக்கும் போதும், மின்னல் வெட்டும் போதும் செல்போனில் பேசுவதைத் தவிர்த்தல் சாலச் சிறந்தது. அந்த வேளைகளில் அலை பேசி ஒரு இடிதாங்கி போலச் செயல்பட்டு இடி, மின்னல் உங்களை நோக்கி ஈர்த்து விடும் அபாயம் உண்டு என்பதை மனதில் வையுங்கள்.

அனைத்து பள்ளிகளும் பள்ளி வளாகத்தை தூய்மை செய்து பயனீட்டுச் சான்றை ஜனவரி 20 க்குள் சமர்ப்பிக்கவும், Safety & Security Training நிறைவு செய்யாத ஆசிரியர்கள் விவரம் கோரியும் மாநிலத் திட்ட இயக்குனர் செயல்முறைகள்...

 


ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வாயிலாக 2020- 21 கல்வி ஆண்டில் கல்வி ஆண்டில் அனைத்து அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி பாதுகாப்பு உணர்வுடன் கல்வி கற்கும் சூழலை உருவாக்குவதற்காக பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு என்ற தலைப்பில் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிக்காக பள்ளி ஒன்றுக்கு ரூபாய் 500 வீதம் 6173 அரசு உயர் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் 31 ஆயிரத்து 297 அரசு தொடக்க நடுநிலை பள்ளிகளுக்கு நிதி விடுவிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் 19-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து செல்வதாலும் பார்வை ஒன்றில் உள்ள வழிகாட்டுதலின்படி விடுவிக்கப்பட்ட நிதியை உடனடியாக பயன்படுத்தி பணியினை மேற்கொள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் அனைத்து அரசு தொடக்க நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கும் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனி கவனம் சார்ந்து ஒருநாள் இணையதள பயிற்சி 16-12-2020 முதல் வழங்கப்பட்டு வருகிறது இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்தவர்கள் செய்யாதவர்கள் விவரத்தை மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ள படிவத்தை உடனடியாக பூர்த்தி செய்து அனுப்ப  அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். மாநிலத் திட்ட இயக்குனர் செயல்முறைகள் ந.க. எண்: 539/ C6/ SS/ 2020, நாள்: 12-01-2021...

>>> மாநிலத் திட்ட இயக்குனர் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


'வாரத்தின் 6 நாட்கள் பள்ளிகள் இயங்கும்' - விரும்பினால் பள்ளிக்கு வரலாம்...

 பெற்றோரின் இசைவு கடிதத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 10,12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. வரும் 19 ஆம் தேதி கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் இயங்கப்படவுள்ளது. கடந்த நவம்பர் மாதமே பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முடிவானது கைவிடப்பட்டது. தற்போது 98% பெற்றோர்கள் பள்ளிகள் திறக்க சம்மதம் தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படஉள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “10, 12 ஆம் வகுப்புகளில் மாணவர்களுக்கு திங்கள் முதல் சனி வரை பள்ளிகள் இயங்கும். அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் கட்டாயம் முக கவசம் அணிவிக்க வேண்டும். பள்ளியில் மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே சுற்றித் திரிய அனுமதிக்கக் கூடாது.பெற்றோரின் இசைவு கடிதத்துடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள். தனியார் பள்ளி நிர்வாகங்கள் எழுத்துப்பூர்வமாக இசைவு அளித்த பிறகே பள்ளிகளை திறக்க வேண்டும். பள்ளிகளில் உடல் வெப்ப பரிசோதனை கருவிகள், கிருமி நாசினிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வகுப்பறையில் மாணவர்களுக்கு இடையே 6 மீ இடைவெளி இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

>>> பெற்றோரின் இசைவு கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஜனவரி 31-ம் தேதிக்குள் அங்கன்வாடிகளை திறக்க முடிவு எடுங்கள்: மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு...

 கரோனா வைரஸ் பரவல் காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருக்கும் அங்கன்வாடிகளைத் தவிர்த்து நாட்டில் உள்ள பிற அங்கன்வாடிகளைத் திறப்பது குறித்து வரும் 31-ம் தேதிக்குள் மாநில அரசுகளும், மத்திய அரசும் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

 மகாராஷ்டிராவைச் சேர்ந்த தீபிகா ஜகாத்ராம் சாங்கேனி எனும் சமூக ஆர்வலர், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “ கரோனா வைரஸ் பரவல் தொடங்கியவுடன் திடீரென நாடுமுழுவதும் அனைத்து அங்கன்வாடிகளையும் மத்திய அரசு மூடிவிட்டது. கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக அங்கன்வாடிகள் மூடிக்கிடக்கின்றன. அங்கன்வாடிகளை மூடிவிட்டதால், ஏழை பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள், சிறு குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.அவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவுகளுக்குப் பதிலாக ரேஷன் பொருட்கள் மட்டுமே கிடைக்கிறது. 

 ஆதலால், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிதேசங்களில் உள்ள அங்கன்வாடிகளை திறக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். உணவுப்பாதுகாப்புச் சட்டம் 2013-ன்படியும், ஊட்டச்சத்து விதிகளின்படியும் சத்தான உணவுகளை ஏழை தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் வழங்கிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷான் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிஅசோக் பூஷன் அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: “ உணவுப்பாதுகாப்புச் சட்டத்தின்படி கர்ப்பிணிப்பெண்கள், பாலூட்டும் ஏழை தாய்மார்கள், குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை சத்துணவுசட்ட விதியின்படி வழங்குவதை உறுதி செய்யவேண்டும். 

 ஆதலால், கரோனா பாதிப்புக்கு ஆளான பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் செயல்படும் அங்கன்வாடிகளைத் தவிர்த்து நாடுமுழுவதும் அங்கன்வாடிகளை திறப்பது குறித்து வரும் 31-ம் தேதிக்குள் மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும், மத்திய அரசும் முடிவு எடுக்க வேண்டும் இது தொடர்பாக அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்கள் மாநிலங்களில் இருக்கும் தேசியபேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவில் முழுமையானஅறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...