கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு - அரசாணை வெளியீடு...

 Age of Superannuation of Tamilnadu Government Servants, Teachers, etc., G.O.Ms.No.29, Dated: 25-02-2021...

>>> Click here to Download - G.O.Ms.No.29, Dated: 25-02-2021...


மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (CTET) முடிவுகள்...

 மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (CTET) முடிவுகள் www.cbse.nic.in இணையதளத்தில் வெளியானது.


கடந்த ஜனவரி 31ம் தேதி சி.பி.எஸ்.இ. நடத்திய தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


முதல் தாளில் 4,41,798, இரண்டாம் தாளில் 2,39,501 பேரும் தகுதி பெற்றிருப்பதாக சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.



கற்போம் எழுதுவோம் இயக்கம் - வயது வந்தோர் கல்வி - 120மணி நேர கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் 26-03-2021வரை தொடர்ந்து செயல்படுத்த இயக்குநர் செயல்முறைகள்...


 கற்போம் எழுதுவோம் இயக்கம் - வயது வந்தோர் கல்வி - 120மணி நேர கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் 26-03-2021வரை தொடர்ந்து செயல்படுத்த இயக்குநர் செயல்முறைகள் ந.க. எண்: 743/ ஆ3/ 2020, நாள்: 25-02-2021...

>>> இயக்குநர் செயல்முறைகள் ந.க. எண்: 743/ ஆ3/ 2020, நாள்: 25-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனே அமல்: தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிப்பு...



 தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, ஆகிய 5 மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவைகளின் ஆயுட் காலம்  விரைவில் நிறைவடைய உள்ளதால் அம்மாநிலங்களில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. தமிழக சட்டப்பேரவையின்  ஆயுட்காலம் வரும் மே மாதம் 24-ம் தேதியுடன் நிறைவு பெரும் நிலையில் அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிர  நடவடிக்கையில் ஈடுபட்டது. 


இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, கொரோனா உச்சத்தில் இருந்த 2020-ல் சட்டப்பேரவை தேர்தலைத் நடத்தியுள்ளோம். தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் சுகாதாரத்துறை மூலம் பிரச்னைகளை சமாளித்து வருகிறோம். தேர்தலை சுமுகமாக நடத்துவதில் மருத்துவர்கள், செவிலியர்கள், அதிகாரிகளுக்கு பெரும் பங்கு உள்ளது என்றும் தெரிவித்தார். தேர்தல் பணி ஈடுபடும் ஊழியர்கள், கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு தலைவணங்குகிறோம். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் முந்தைய தேர்தல்களை விட 57 % வாக்குகள் பதிவாகின. பீகாரில் பெருமளவு பெண்கள் வாக்களித்தனர் என்றும் தெரிவித்தார்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு - சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்...





 கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க கோரிய மசோதா தமிழக சட்டப்பேரவையில், நிறைவேற்றப்பட்டது. 


உள் ஒதுக்கீடு மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். மசோதா குறித்து முதல்வர் அளித்த விளக்கத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5% தனி ஒதுக்கீடு வழங்கவும்,  சீர்மரபினருக்கு 7% தனி இடஒதுக்கீடு வழங்கவும் மசோதா வகை செய்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் இதர பிரிவினருக்கு 2.5% உள்ஒதுக்கீடு வழங்கவும் மசோதா வழிவகை செய்கிறது. 


வன்னியர்களுக்கான தனி ஒதுக்கீடு  தற்காலிகமானது, சாதிகள் குறித்த விவரம் சேகரிப்பு பணிக்கு பின் 6 மாதம் கழித்து மாற்றியமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். எம்பிசியில் உள்ள 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5%, சீர்மரபினருக்கு 7% உள்ஒதுக்கீடு  செய்யப்படுகிறது. 7% உள்ஒதுக்கீட்டைப் பெறவுள்ள சீர்மரபினர் பிரவில் 68 உட்பிரிவுகள் உள்ளன என்றார். தொடர்ந்து, மசோதா ஒருமனதாக சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு - ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே-2 ஆம் தேதி நடைபெறும்...




 தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு - விவரம் 

 வேட்பு மனு தாக்கல் _  12.03-2021.

வேட்புமனு தாக்கல் நிறைவு - 19.03.21

வேட்புமனு  பரிசீலனை - 20.03.21

வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் - 22.03. 21 

தேர்தல் (வாக்குப்பதிவு) - 06/04/2021.

வாக்கு எண்ணிக்கை - 02/05/2021.

 

தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு அரசு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கின் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு நகல்...

 


Copy of Chennai High Court Judgement in the case of private school and college teachers to be paid by the state treasury...

>>> Click here to Download Judgement Copy...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Things to keep in mind before registering FA(a) Marks in TNSED Schools app

    இன்று (18-11-2024) முதல் வளரறி மதிப்பீடு-அ விற்கான மதிப்பெண்களை TNSED Schools செயலியில் பதிவு செய்யலாம்.  வளரறி மதிப்பீடு-அ FA(a) மதிப்ப...