கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேர்தல் பணி அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 7ஆம் தேதி விடுப்பு அளிக்க கோரிக்கை...

 சட்டசபை தேர்தலில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தேர்தலுக்கு மறுநாள் விடுப்பு வழங்க வேண்டும் என, ஜாக்டோ - ஜியோ (JACTTO GEO) கூட்டமைப்பு கோரிக்கை விடுத்து உள்ளது.



இந்த கூட்டமைப்பினர், மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் அளித்து உள்ள மனு:சட்டசபை தேர்தல் பணியில் உள்ள, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.தேர்தல் பயிற்சி வகுப்புக்கு வந்த பல ஆசிரியர்களுக்கு, விண்ணப்பித்தும் தபால் ஓட்டு கிடைக்கவில்லை. அவர்களின் சட்டசபை தொகுதியும் பிரித்து காட்டப்படவில்லை. கடைசி தேர்தல் வகுப்புக்கு முன் தபால் ஓட்டுகளை வழங்க வேண்டும்.


ஓட்டுப்பதிவு, காலை, 7:00 மணி முதல், மாலை, 7:00 மணி வரை நடப்பதால், தேர்தல் பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு, போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும்.கொரோனா பரவல் காலமாக, தேர்தல் பணியாளர்களுக்கு குடிநீர் வசதி, கழிவறை வசதி மற்றும் சுகாதார வசதிகள் செய்து தர வேண்டும்.தேர்தலை முடித்து, அதற்கான பொருட்களை ஒப்படைக்கும் பணிகள், அடுத்த நாள் வரை நடப்பதால், தேர்தல் பணி பார்க்கும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஏப்.,7ல் விடுமுறை அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

>>> ஜாக்டோ ஜியோ கடிதம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி...

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று ஆசிரியர்கள், பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.




நடப்பு ஆண்டு கரோனா பரவல்காரணமாக தமிழக பள்ளிக்கல்விபாடத்திட்டத்தில் 9, 10-ம் வகுப்புகள் மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதேநேரம் உயர் கல்வியை கருத்தில் கொண்டு பிளஸ் 2 வகுப்புக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. அதன்படி பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 3 முதல் 21-ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது.



இதற்கிடையே மாநிலம் முழுவதும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தஞ்சாவூர்உள்ளிட்ட சில மாவட்டங்களில் தனியார் பள்ளிகளில் மாணவர்கள்,ஆசிரியர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக 9, 10 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு நேரடி கற்பித்தல் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணைய வழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.


பொதுத்தேர்வு இருப்பதால் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் தற்போது நேரடி வகுப்புகள் தொடர்கின்றன.


மறுபுறம் நோய் பரவலின் தீவிரம் தினமும் உயர்வதால் மாணவர்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. இதை தவிர்க்க பிளஸ் 2மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.


இதுதொடர்பாக பெற்றோர் சிலர் கூறும்போது, ‘‘பெரும்பாலானபள்ளிகள் கரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றுவதில்லை. வகுப்பறையில் முகக்கவசத்தை கழற்றிவைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர்.அதனால் பிள்ளைகள் தினமும்பாதுகாப்பாக பள்ளி சென்று திரும்புவதே சிக்கலாகியுள்ளது. எனவே பிளஸ் 2 தேர்வை ரத்து செய்து தேர்ச்சி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். இல்லையெனில் பள்ளிகளில் உரிய பாதுகாப்பு வசதிகளை செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றனர்.


ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர் பே.சந்தானம் கூறியதாவது:


தற்போதைய சூழலில் நோய்த் தொற்று பரவலுக்கான சாத்தியங்கள் அதிகரித்துவிட்டன. இவற்றில் இருந்து மாணவர்களை பாதுகாத்து தேர்வுக்கு தயார்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும். ஆனால், தேர்தலில் மட்டுமே அரசியல் கட்சிகளின் கவனம் இருக்கிறது. பள்ளிகளில் மட்டுமல்ல பொதுவெளியில்கூட பலர் முகக்கவசத்தை முறையாக அணிவதில்லை. இதனால் பெற்றோர் மத்தியில் அச்சம் நிலவுகிறது. அதேநேரம் பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்தால் மாணவர்கள் உயர்கல்வி செல்வதில் சிக்கல்கள் ஏற்படும். அதனால் உரிய பாதுகாப்புகளுடன் தேர்வை நடத்த கல்வித் துறை முன்வரவேண்டும்.


இளைஞர்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் என்பதற்காக அலட்சியமாக இருக்கக்கூடாது. மாணவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டால் குறைந்தபட்சம் இருவாரங்கள் கற்றல் தடைபடும். மேலும், மே மாதம் பாதிப்பு ஏற்பட்டால் தேர்வெழுத முடியாத நிலை உருவாகும். அது உளவியல் ரீதியாக மாணவர்களுக்கு பின்னடைவை தரும். தற்போது தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


அதேபோல், தேர்வெழுதும் மாணவர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை அரசு இலவசமாக போட வேண்டும். அதன்பின் மாணவர்கள் தொற்றுக்கு ஆளானாலும் பெரிய பாதிப்பு இருக்காது. மேலும், வழக்கமான முறையை மாற்றி எளிய வடிவில் தேர்வை நடத்த வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.


தமிழகம் முழுவதும் சுமார் 8.5 லட்சம் மாணவர்கள் பிளஸ் 2தேர்வெழுத உள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்கு பிறகு மீண்டும் ஊரடங்கு ? தமிழக அரசு தொடர் ஆலோசனை...

 தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக சுகாதாரத்துறையினர் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக சுகாதாரத்துறையினர் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 500-க்கும் கீழ் இருந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் அதிகமாகியுள்ளது. குறிப்பாக சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.


பள்ளி, கல்லூரிகள் திறப்பு , தேர்தல் பிரசாரத்தால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் ஏப்ரல் 2-வது வாரம் முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


குறிப்பாக இரவு நேர ஊரடங்கு, தனியார் துறை ஊழியர்களை வீட்டில் இருந்து பணியமர்த்தல் ஆகியவை அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை, கோவை, செங்கல்ப்பட்டு உள்ளிட்ட கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.


கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட 4 ஆம் மற்றும் 5-ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் மீண்டும் செயல்படுத்த வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 4-ம், 5-ம் கட்ட ஊரடங்கு தளர்வுப்படி வழிபாட்டு தலங்கள், மத நிகழ்ச்சிகள், அரசியல், சமூக நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. 


பொதுப்போக்குவரத்தில் சில கட்டுப்பாடுகள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்கள் ஆகியவற்றிற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பரவிவரும் நிலையில் பள்ளி விடுமுறை மற்றும் சனிக்கிழமை விடுமுறை பற்றி RTI விளக்கம்...









தபால் வாக்கை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக ஆசிரியை தற்காலிக பணி நீக்கம்...

 


சட்டமன்ற தேர்தலில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள்  தங்கள் தபால் வாக்குகளை செல்போனில் படம் எடுத்துக் கொண்டாலும் அதை வாட்ஸ்அப் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் எதையும் வைக்காதீர்கள் எந்த ஒரு முகநூல் பக்கத்திலும் பதிவிட வேண்டாம் தென்காசி மாவட்டத்தில் ஸ்டேட்டஸ் வைத்த பெண் ஆசிரியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் தாங்கள் அளித்த வாக்குச் சீட்டின் விவரங்களை மற்றவருடன் பகிர வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தென்காசி மாவட்டக் கல்வி அலுவலரின் ந.க.எண்: 630/ அ1/ 2021, நாள்: 28-03-2021...

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 - தேர்தல் விதிமுறைகளை மீறியமைக்காக கீழப்பாவூர் வட்டாரம் ஆர்.சி நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றும் திருமதி. சகாய ஆரோக்கிய அனுஷ்டாள்‌ என்பார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல் சார்பு

>>> தென்காசி மாவட்டக் கல்வி அலுவலரின் ந.க.எண்: 630/ அ1/ 2021, நாள்: 28-03-2021...




இன்றைய (30-03-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்



மேஷம்

மார்ச் 30, 2021



மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தனவரவுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பார்கள். நண்பர்களுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



அஸ்வினி : புத்துணர்ச்சியான நாள்.


பரணி : விருப்பங்கள் நிறைவேறும்.


கிருத்திகை : ஒற்றுமை அதிகரிக்கும்.

---------------------------------------




ரிஷபம்

மார்ச் 30, 2021



சமூகப்பணிகளில் இருப்பவர்கள் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி தெளிவு ஏற்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.


ரோகிணி : தெளிவு ஏற்படும்.


மிருகசீரிஷம் : முயற்சிகள் அதிகரிக்கும்.

---------------------------------------




மிதுனம்

மார்ச் 30, 2021



மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோர்களின் வழியில் இருந்துவந்த மருத்துவ செலவுகள் குறையும். வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் நிறைவேறும். தொழில் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் அதிகரிக்கும். வியாபார அபிவிருத்தி தொடர்பான எண்ணங்கள் நிறைவேறும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : விருப்பங்கள் நிறைவேறும்.


திருவாதிரை : செலவுகள் குறையும்.


புனர்பூசம் : அபிவிருத்தியான நாள்.

---------------------------------------




கடகம்

மார்ச் 30, 2021



உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய தொழில் தொடர்பான திட்டங்கள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், ஒற்றுமையும் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நிலுவையில் இருந்துவந்த சரக்குகள் விற்பனையாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



புனர்பூசம் : நெருக்கடிகள் குறையும்.


பூசம் : திட்டங்கள் நிறைவேறும்.


ஆயில்யம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

---------------------------------------




சிம்மம்

மார்ச் 30, 2021



சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளில் நல்ல முடிவுகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும், ஆதரவும் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மகம் : மதிப்புகள் அதிகரிக்கும்.


பூரம் : மாற்றங்கள் ஏற்படும்.


உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 

---------------------------------------




கன்னி

மார்ச் 30, 2021



சகோதரர்களுக்கிடையே ஒற்றுமையும், ஆதரவும் கிடைக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில செயல்களை செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. வாக்கு சாதுர்யத்தின் மூலம் லாபம் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கும், அறிமுகமும் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



உத்திரம் : ஒற்றுமை மேம்படும்.


அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.


சித்திரை : அறிமுகம் உண்டாகும்.

---------------------------------------




துலாம்

மார்ச் 30, 2021



பொருளாதாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். போட்டிகளில் கலந்துகொண்டு பாராட்டுகளை பெறுவீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய தெளிவு ஏற்படும். நீண்ட நாட்களாக மனதை உறுத்திக்கொண்டிருந்த சில விஷயங்களுக்கு தீர்வு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



சித்திரை : முன்னேற்றமான நாள்.


சுவாதி : பாராட்டுகளை பெறுவீர்கள்.


விசாகம் : தீர்வு கிடைக்கும்.

---------------------------------------




விருச்சகம்

மார்ச் 30, 2021



நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். தொழிலை விரிவுப்படுத்துவது தொடர்பான சிந்தனைகளும், முதலீடுகளும் மேம்படும். புதிய பங்குதாரர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மாற்றத்தை ஏற்படுத்தும். ஒருசிலர் எதிர்பார்த்த இடமாற்றங்கள் சாதகமாக அமையும். நண்பர்களுடன் கேளிக்கைகள் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



விசாகம் : ஒற்றுமை அதிகரிக்கும்.


அனுஷம் : முதலீடுகள் மேம்படும்.


கேட்டை : இடமாற்றங்கள் சாதகமாகும்.

---------------------------------------




தனுசு

மார்ச் 30, 2021



திட்டமிட்ட காரியங்கள் யாவும் எண்ணிய விதத்தில் நடைபெறும். தனவரவுகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். தம்பதிகளுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் தடைபட்டு வந்த சுபகாரியங்கள் இனிதே நிறைவேறும். வாரிசுகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மூலம் : எண்ணங்கள் நிறைவேறும்.


பூராடம் : நெருக்கம் அதிகரிக்கும்.


உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




மகரம்

மார்ச் 30, 2021



குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். தடைபட்டு வந்த சுபகாரியங்கள் கைகூடும். விலகி சென்ற உறவினர்கள் விரும்பி வருவார்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பெயரும், செல்வாக்கும் அதிகரிக்கும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



உத்திராடம் : தடைகள் நீங்கும்.


திருவோணம் : செல்வாக்கு அதிகரிக்கும்.


அவிட்டம் : லாபம் மேம்படும்.

---------------------------------------




கும்பம்

மார்ச் 30, 2021



முயற்சிக்கேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வீடு கட்டுவதற்கான எண்ணங்கள் நிறைவேறும். எதிர்பாராத உபரி வருமானங்கள் மேம்படும். குழந்தைகள் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்பட்டாலும் லாபம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


சதயம் : வருமானம் மேம்படும்.


பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




மீனம்

மார்ச் 30, 2021



உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய தொழில் தொடங்குவது தொடர்பான எண்ணங்கள் காலதாமதமாகும். பெற்றோர்களின் உடல்நிலையில் கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.


உத்திரட்டாதி : விவாதங்களை தவிர்க்கவும்.


ரேவதி : கவனம் வேண்டும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...  *அவசர செய்தி: அனைத்து Block civil coordinators (BRTE) கவனத...