கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

IFHRMS - ESR தொடர்பான பணிகளை எதிர்வரும் மே மாதம் 10 ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவு...

 முதன்மைச் செயலர் / ஆணையர் , கருவூலம் மற்றும் கணக்குத்துறை , சென்னை அவர்களின் காணொளி காட்சி ஆய்வுக் கூட்டத்தில் IFHRMS திட்டத்தின் அடுத்த நடவடிக்கையாக e - SR தொடர்பான பணிகளை எதிர்வரும் மே மாதம் 10 ஆம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டது . தற்போது e - SR Correction மென்பொருளில் ஒவ்வொரு பணியாளருக்கும் உள்ள e - SR- ல் இன்றைய தேதிவரை உள்ள அனைத்து பணி தொடர்பான பதிவுகளையும் மேற்கொள்ள வசதியாக Edit Option வசதி கொடுக்கப்பட்டுள்ளது.


இந்த வசதியானது மே மாதம் 10 ஆம் தேதி வரை மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். எனவே , தங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களின் பணி தொடர்பான அனைத்து விவரங்களையும் உடன் பதிவேற்றம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் , பணிப்பதிவேட்டில் முதல்பக்கத்தில் உள்ள Bio Data பகுதியை மட்டும் e - SR- ல் Correction செய்ய இயலாது. அந்த பகுதியில் ஏதும் பதிவுகள் விடுபட்டிருந்தாலோ அல்லது திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தாலோ பணிப்பதிவேட்டின் முதல் பக்கத்ததை Scan செய்து அதற்கு Ticket ஏற்படுத்தி சரிசெய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.


இவ்வாறாக அனைத்து பணிகளையும் மே மாதம் 10 ஆம் தேதிக்குள் முடித்து இத்திட்டம் திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட முழு ஒத்துழைப்பு நல்குமாறு அனைத்து பணம் பெறும் அலுவலர்களையும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.



ஞாயிற்றுக்கிழமை நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழை காண்பித்து பொதுமக்கள் செல்லலாம் - கலெக்டர் தகவல்.

 


'வாட்ஸ் ஆப்'பில் வகுப்புகள் - 8ம் வகுப்பு வரை நடத்த உத்தரவு...

 தொடக்க பள்ளி மாணவர்களுக்கு, 'வாட்ஸ் ஆப்'பில் பாடம் நடத்த வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.



தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலால், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஓர் ஆண்டுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் வகுப்புகளை நடத்தாவிட்டால், மாணவர்களின் கல்வித்தரம் கடுமையாக பாதிக்கப் படும் என, பெற்றோர்கள் கருதினர். 


இதையடுத்து, தொடக்க பள்ளி ஆசிரியர்கள்,  'வாட்ஸ் ஆப்'பில் மாணவர்களை குழுவாக இணைக்க வேண்டும்.


வீடியோ கால், எஸ்.எம்.எஸ்., வழியாக பாடங்கள், பயிற்சி புத்தகங்கள் மற்றும் இணைப்பு பாடங்களுக்கான பயிற்சிகளை, ஆன்லைனில் வழங்க வேண்டும் என, உத்தரவில் தெரிவிக்க பட்டு உள்ளது.


கல்வி 'டிவி'

இதுதவிர, கல்வி 'டிவி'யில் மாணவர்களுக்கான பாடங்களை ஒளிபரப்பவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும், 26ம் தேதி முதல் தினமும் பகல், 12:30 மணிக்கு, கல்வி 'டிவி' யில் பாட நிகழ்ச்சிகள் துவங்குகின்றன.முதல், 30 நிமிடங்கள், 8ம் வகுப்பு, பின், 7ம் வகுப்பு என்று படிப்படியாக, ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் ஒரு வகுப்புக்கு பாடம் நடத்தப்படுகிறது.


ஒவ்வொரு நாளும் மாலை, 4:00 மணிக்கு, இரண்டாம் வகுப்புடன், 'வீடியோ' பாடங்கள் முடிகின்றன. முதல் நாளில் கணிதம்; ஏப்., 27ல் அறிவியல்; 28ல் சமூக அறிவியல்; 29ல் தமிழ்; 30ல் ஆங்கிலம் என, மே, 10 வரை, கல்வி 'டிவி' நிகழ்ச்சிகள் தொடரும். இந்த பட்டியல், பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும்; 'வாட்ஸ் ஆப்'பிலும் மாணவர்களுக்கு அனுப்பப்படும் என, தொடக்க கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆன்லைனில் தட்டச்சு பயிற்சி: அரசு உத்தரவு...

 அனைத்து பயிற்சி நிறுவனங்களுக்கும், தமிழக தொழில்நுட்ப கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:



கொரோனா பரவலை கட்டுப்படுத்த, இரவு நேர ஊரடங்கும், கல்வி நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. இதன்படி, கல்லுாரிகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில், நேரடி வகுப்புகள் நடத்தக்கூடாது. எனவே, தட்டச்சு, சுருக்கெழுத்து உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்கும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், நேரடி கற்பித்தல் வகுப்புகளை நடத்தக்கூடாது. 'ஆன்லைன்' வழியில் மட்டுமே, வகுப்புகளை நடத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

உயர்கல்வி விருப்பப் பாடப்பிரிவில் NCC இணைப்பு - UGC தகவல்...

 


வேலூர் மாவட்டத்தில் CEO உட்பட 301 பேருக்கு கொரோனா...

 


G.O.No:391, Dated: 10.12.2018 - NHIS திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் அவசர கால சிகிச்சை மேற்கொண்டால், ஆகும் மருத்துவ செலவினை விதிகளுக்கு உட்பட்டு பணமாகப் பெற்றுக் கொள்ளலாம்...



 G.O.No:391, Dated: 10.12.2018 - Medical Aid - New Health Insurance Scheme, 2016 for Employees –  Provision of assistance for the treatments/surgeries covered under the said  Scheme on re-imbursement basis in Non-Network Hospitals in case of  Emergency Care – Guidelines to implement the clause “Emergency Care” – Orders– Issued...


>>> Click here to Download G.O.No:391, Dated: 10.12.2018...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...