கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
முகநூல் பதிவை விமர்சித்ததால் அரசு பள்ளியில் புகுந்து ஆசிரியருக்கு மிரட்டல்...
மேட்டூர் அருகே முகநூல் பதிவில் விமர்சித்ததால் அரசுப்பள்ளிக்கு புகுந்து வேறு பள்ளி ஆசிரியர்கள்
ஆசிரியருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர் CEO விடம் புகார் அளித்துள்ளார் .
3 ஆண்டில் 2 பாடங்கள் படித்தவருக்கு ஆசிரியர் பணி வழங்கும் தனி நீதிபதி உத்தரவு ரத்து...
மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் பாபு. இவர் பிஎஸ்சி கணிதம் படிப்பில் முதல், இரண்டாம் ஆண்டை முடித்துள்ளார். மூன்றாம் ஆண்டில் பிஏ வரலாறு முடித்துள்ளார். இதையடுத்து அவர் கடந்த 1995ல் காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டம் வழங்கப்பட்டது. பின்னர் பாரதியார்
பல்கலைக்கழகத்தில் B.Ed., முடித்தார். இதன்படி பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டார். 3ஆண்டில் 2 பாடங்கள் படித்துள்ளதால் ஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரித்தது. இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் பணி வழங்க வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர் தேர்வாணைய தலைவர் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது
இந்த மனுவை நீதிபதி கிருபாகரன், புகழேந்தி விசாரித்தனர். தேர்வாணைய தரப்பில் வக்கீல் சண்முகநாதன் ஆஜராகி நிர்ணயிக்கப்பட்ட படிப்பிற்கான தகுதி விண்ணப்பதாரர் பெறவில்லை. மூன்றாண்டில் இரண்டு பாடங்களை படித்து உள்ளார். இதை பணிக்கான தகுதியாக கருத முடியாது என வாதிட்டார். இந்த மனு மீது நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள் தேர்வாணைய தரப்பு வாதம் ஏற்புடையது என்பதால் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தனர்.
ஒரே பதவியில் 30 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு போனஸ் ஊதிய உயர்வு தொடர்பான அரசாணைகள்...
ஒரே பதவியில் 30 ஆண்டுகள் ( Super Grade / Senior Grade ) பணிபுரிந்தவர்களுக்கு போனஸ் ஊதிய உயர்வு தொடர்பான அரசாணைகள்...
Bonus Increment 30 Years Service G.O.No.562, Dated: 28.09.1998...
G.O.(Ms).No.483, Dated : 08.09.1998 - Tamil Nadu Revised Scale of Pay Rules, 1998—Sanction of stagnation increment - Orders-Issued...
>>> Click here to Download G.O.No.562, Dated: 28.09.1998...
>>> Click here to Download G.O.(Ms).No.483, Dated : 08.09.1998...
துறைத் தேர்வுகள் (Departmental Examinations) மே - 2021 அறிவிப்பு வெளியீடு...
துறைத் தேர்வுகள் (Departmental Examinations) மே - 2021 அறிவிக்கை வெளியீடு...
தேர்வு தொடங்கும் நாள் : 22.06.2021
தேர்வு முடியும் நாள் : 30.06.2021
இணையவழி முன்பதிவு முடியும் நாள் : 28.05.2021 இரவு 11.59...
DEPARTMENTAL EXAMINATION MAY 2021...
என்பிஎஸ்: இனி முழு பணப் பலன் கிடைக்கும்...
தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (என்பிஎஸ்) பயனாளா்கள் தங்கள் சேமிப்புத் தொகையிலிருந்து 40 சதவீதத்தை ஓய்வூதிய நிதி சேமிப்பாக முதலீடு செய்வது கட்டாயமில்லை
என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பயனாளா்களுக்கு இனி முழு பணப் பலனும் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.
இது தொடா்பாக, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை வளா்ச்சி ஆணையத்தின் (பிஎஃப்ஆா்டிஏ) தலைவா் சுப்ரதீம் பந்தோபாத்யாய கூறுகையில்,
‘‘என்பிஎஸ் பயனாளா்கள் தங்கள் சேமிப்புத் தொகையிலிருந்து 40 சதவீதத்தை ஓய்வூதிய நிதி சேமிப்பாக முதலீடு செய்ய வேண்டியது சட்டத்தின்படி கட்டாயமாக இருந்தது. அத்தொகையானது சந்தை சாா்ந்த வட்டி விகிதத்துக்கு ஏற்ப மாதந்தோறும் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. மீதமுள்ள 60 சதவீத தொகையை ஒரே நேரத்தில் அவா்கள் பெற்றுக் கொள்ளலாம்.
வட்டி விகிதம் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் முதலீடு செய்யப்படும் தொகையின் வாயிலாக கிடைக்கும் லாபம் குறைந்துள்ளது. எனவே, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் பயனாளா்கள், சேமிப்புத் தொகையிலிருந்து 40 சதவீதத்தை முதலீடு செய்ய வேண்டியது
இனி கட்டாயமில்லை. முழு பணத்தையும் அவா்கள் பெற்றுக் கொள்ளலாம்.
இதன்படி, ஓய்வூதியத் திட்டத்தில் ரூ.5 லட்சம் வரை சேமிப்புத் தொகை கொண்ட பயனாளா்கள், பணி ஓய்வு பெறும்போது மொத்த தொகையையும் பெற்றுக் கொள்வதற்கு விரைவில் அனுமதி அளிக்கப்படவுள்ளது.
இதுவரை ரூ.2 லட்சம் வரை சேமிப்புத் தொகை கொண்ட பயனாளா்களுக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டு வந்தது. ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக சேமிப்புத் தொகை கொண்ட பயனாளா்கள் மட்டும், அதில் 40 சதவீதத்தை அக்கணக்கிலேயே வைத்துக் கொள்ளவும், தொகையை படிப்படியாக எடுத்துக் கொள்ளவும் அனுமதி அளிக்கும் வகையில் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
40 சதவீத முதலீட்டுத் தொகை விவகாரத்தில் பயனாளா்கள் பலா் அதிருப்தி தெரிவித்ததையடுத்து, இந்த மாற்றங்கள் புகுத்தப்பட்டுள்ளன’’ என்றாா். ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்
என்று 2019-20-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்போது மத்திய நிதியமைச்சகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. உறுதியளிக்கப்பட்ட முதிா்வுத் தொகையை அளிக்கும் திட்டமும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
12 மணிநேரம் வேலையா..? ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்குமா புதிய கொள்கை.. உண்மை என்ன...?
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு உள்ள புதிய Wage Code கொள்கையின் மூலம் ஊழியர்களின் வேலை நேரம், சம்பள கணக்கீட்டு, பிஎப் தொகை, கிராஜுவிட்டி ஆகியவை முக்கிய மாற்றங்களை அடைய உள்ளது. இதில்
குறிப்பாக ஊழியர்களின் வேலை நேரத்தில் செய்யப்பட்டு உள்ள மாற்றங்கள் ஊழியர்கள் மத்தியில் அதிகளவிலான பயத்தையும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
புதிய ஊதிய குறியீடு மசோதா
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய ஊதிய குறியீடு மசோதாவில் மக்களுக்குப் பல்வேறு சந்தேகங்கள் உள்ளது, குறிப்பாகத் தற்போது இருக்கும் 9 மணிநேர வேலை நேரத்தை 12 மணிநேரம் உயர்த்துவது குறித்து ஊழியர்கள் மட்டத்தில் அச்சம் எழுந்துள்ளது.
4 நாட்கள் மட்டுமே வேலை
உலக நாடுகளில் பல நிறுவனங்கள் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் முறையை அமல்படுத்திப் பெரிய அளவிலான வர்த்தக மாற்றத்தைச் செய்துள்ளது. இது ஊழியர்களுக்கும் சரி, நிறுவனங்களுக்கும் சரி அதிகளவிலான லாபம் அளிப்பதாக ஆய்வுகள் கூறும் நிலையில், இந்தியாவிலும் இதுபோன்ற முறையை அமல்படுத்த நிறுவனங்களுக்கு இந்தப் புதிய ஊதிய குறியீடு மசோதா மூலம் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
12 மணிநேரம் வேலைக்கு அனுமதி
தற்போது நடைமுறையில் தினமும் 9 மணிநேரம் வேலை என்பதில் எவ்விதமான மாற்றமும் இல்லை, ஆனால் ஒரு நிறுவனம் விரும்பினால் ஒரு நாளுக்கு 12மணிநேரம் ஊழியர்களைப் பணியில் அமர்த்தலாம். அப்படி அமர்த்து போதும் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலைநாட்களாக இருக்க வேண்டும் என்பதையும் இந்த மசோதாவில் தெளிவுபடுத்தியுள்ளது.
ஊழியர்களுக்குச் சாதகமானது
இதன் மூலம் நிறுவனங்களுக்குக் கூடுதலாகத் தினமும் 3 மணிநேரம் ஊழியர்களின் பணிகளைப் பெற முடியும், அதேநேரத்தில் ஊழியர்கள் வாரத்திற்கு 3 நாட்கள் விடுமுறை பெற முடியும். இதனால் ஊழியர்களின் Work Life Balance மேம்படும்.
30 நிமிடம் இடைவேளை கட்டாயம்
இதே ஊதிய குறியீடு மசோதா கொள்கையில் ஊழியர்களின் நலனுக்காக 5 மணி நேரத்திற்குக் கட்டாயம் 30 நிமிடம் இடைவேளை அளிக்க வேண்டும் என்பதை உறுதி செய்துள்ளது. மேலும் 5 மணிநேரத்திற்கும் அதிகமான தொடர் வேலை செய்யும் முறையைத் தடை செய்துள்ளது.
ஓவர்டைம் கணக்கீடு
மேலும் தற்போது நடைமுறையில் 15 முதல் 30 நிமிடத்திற்குள் கூடுதலாக வேலை செய்தால் ஓவர்டைம் கணக்கிடப்படாது. 30 நிமிடத்திற்கு அதிகமாக வேலை செய்தால் மட்டுமே கூடுதல் பணிநேரம் கணக்கிடப்படும்.
இப்புதிய ஊதியக் குறியீடு மசோதாவில் 15 நிமிடத்திற்கு அதிகமாக ஒரு நிமிடம் பணியாற்றினாலே 30 நிமிடத்திற்கான ஓவர்டைம் கணக்கிடப்பட வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளது.
அடிப்படை சம்பள கணக்கீடு
மேலும் ஒரு ஊழியரின் மொத்த சம்பளத்தில் 50 சதவீதம் மற்றும் அதற்கு அதிகமான தொகையை அடிப்படை சம்பளமாகக் கணக்கிடப்பட வேண்டும் எனப் புதிய உத்தரவை புதிய ஊதிய குறியீடு மசோதாவில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
Take Home Salary அளவு குறையும்
இந்தச் சம்பள கணக்கீட்டு முறையில் ஏற்பட்டு உள்ள மாற்றத்தால் ஊழியர்களுக்கான பிஎப் மற்றும் கிராஜுவிட்டி ஆகியவை அதிகரிக்கும். இது ஓய்வுபெற்றும் போது பெரிய அளவில் உதவும், ஆனால் அதேவேளையில் பிஎப் மற்றும் கிராஜுவிட்டிக்கு அதிகப் பணம் பிடித்தம் செய்யப்படுவதால் டேக் ஹோம் சேலரி அளவீட்டில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படும்.
ஏப்ரல் 1 முதல் அமலாக்கம்
இப்புதிய கொள்கை மாற்றங்கள் அனைத்தும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்பட வேண்டும், ஆனால் மாநில அரசுகளும், நிறுவனங்களும் முழுமையாகத் தயாராக நிலையிலும், கொரோனா பாதிப்பால் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ள சூழ்நிலையிலும் கால தாமதம் ஆகி வருகிறது.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
23-12-2024 - School Morning Prayer Activities
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...