பால்வளத்துறை - பால் விற்பனை விலை ரூ.3 குறைத்து அரசாணை (நிலை) எண்: 60, நாள்: 07-05-2021 வெளியீடு...
>>> அரசாணை (நிலை) எண்: 60, நாள்: 07-05-2021...
பால்வளத்துறை - பால் விற்பனை விலை ரூ.3 குறைத்து அரசாணை (நிலை) எண்: 60, நாள்: 07-05-2021 வெளியீடு...
>>> அரசாணை (நிலை) எண்: 60, நாள்: 07-05-2021...
கொரோனா இயல்பு நிலை திரும்பும் வரை கல்விக் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது என அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் AICTE உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப குழுவான ஏ.ஐ.சி.டி.இ வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்றும், பேராசிரியர்களுக்கான ஊதியத்தை மாதந்தோறும் உரிய நேரத்தில் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதேபோல் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் முதற்கட்ட கலந்தாய்வையும், செப்டம்பர் 9 ஆம் தேதிக்குள் இரண்டாம் கட்ட கலந்தாய்வையும் நடத்தி முடிக்க உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரிசோதனை மையங்கள் மீதான அழுதத்தை குறைக்கும் வகையில் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதை குறைப்பதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி
1. ஏற்கனவே ரேபிட் ஆட்டிஜென் சோதனை மூலம் கொரோனா பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியானால் அவர்கள் மீண்டும் ஆர்டிபிசிஆர் சோதனை செய்ய தேவை இல்லை.
2. ஆர்டிபிசிஆர் சோதனை மூலம் கொரோனா உறுதியானால் அவர்கள் மீண்டும் சோதனை செய்ய வேண்டியது கிடையாது.
3. வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டவர்கள் கடைசி 3 நாட்களில் காய்ச்சல் இல்லையென்றால் சோதனை செய்ய வேண்டாம்.
4. கொரோனா சிகிச்சை முடிந்து மருத்துவமனைகளில் இருந்து திரும்புபவர்கள் மீண்டும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
5. ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் மாநிலங்களுக்கு இடையில் பயணிப்பதற்காக ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்கிறார்கள். இது முழுவதுமாக நீக்கப்படலாம்.
நாட்டில் தற்போது மொத்தம் 2506 பரிசோதனை மையங்கள் மட்டுமே இருக்கின்றன. கொரோனா அதிக அளவில் பரவி வருவதால் பரிசோதனை கூடங்களுக்கு நிறைய பரிசோதனைகள் வருவதால் உடனடியாக சோதனை முடிவுகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுகின்றது.
இதுதொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளதாவது: தற்போது கொரோனா நோய் தொற்று அதிகரித்துள்ளதன் காரணமாக, கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் மிகுந்த சவாலை எதிர்கொண்டுள்ளன. அசாதாரண பரிசோதனை எண்ணிக்கை காரணமாக ஆய்வகங்கள் மிகுந்த அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளன. மேலும் ஆய்வகத்தில் பணிபுரியும் நபர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் ஆர்டிபிசிஆர் சோதனையை மேம்படுத்துவதும் ஒரே நேரத்தில் நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் பரிசோதனை கிடைப்பதை அதிகரிப்பதும் கட்டாயமாகும். அளவுக்கதிகமான பரிசோதனை எண்ணிக்கைகளால் சிக்கி தவிக்கும் ஆய்வகங்களுக்கு உதவும் வகையில், ரேபிட் ஆன்டிஜென் சோதனையை அதிகரிக்க வேண்டும். நாடு முழுவதும் இருக்கும் நகரங்கள், நகர்கள், பள்ளிகள், கல்லூரிகள் , அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆன்டிஜென் சோதனையை அனுமதிக்க வேண்டும்.
தனிநபர் ஒருவர் ஆன்டிஜென்ட் சோதனையில் தொற்று இல்லை என அடையாளம் காணப்பட்ட பின்னரும் தொடர்ந்து கொரோனா அறிகுறிகளால் கண்டறியப்பட்டால் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட வேண்டும். மேலும் பரிசோதனை செய்யப்படுவோரின் படிவத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது தொடர்பான விவரங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மே 10 முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிப்பு. தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 08, நாள்: 08-05-2021...
*காய்கறி,பால்,மருந்து, இறைச்சிக்கடைகள் பகல் 12 மணி வரை திறந்து வைக்க அனுமதி
*மற்ற எந்த கடைகளுக்கும் அனுமதி இல்லை
*இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் 9 மணி வரை இயங்கும்- தமிழக அரசு
*2 வாரங்கள் டாஸ்மாக் கடைகள் முழுமையாக அடைக்கப்படும்- தமிழக அரசு
*அரசு மற்றும் தனியார் போக்குவரத்துக்கு தடை. பேருந்துகள் இயங்காது.
மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான தனியார், அரசுப் பேருந்து போக்குவரத்துக்கு தடை.
வாடகை டாக்சி, ஆட்டோக்கள் ஆகியவை இயங்கவும் தடை
அத்தியாவசியப் பணிக்கு செல்வோர் உரிய ஆவணங்களுடன் பயணிக்க அனுமதி.
*அனைத்து தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள்,தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்படுகிறது
*முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட மாட்டாது - தமிழக அரசு
*மே 10- 24 வரை முழு ஊரடங்கு அமலாக இருப்பதால் இன்றும் (08-05-2021) நாளையும் (09-05-2021) அனைத்து கடைகள், நிறுவனங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை இயங்கலாம்
*முழு ஊரடங்கு அமலாகும் மே 10-24 வரை அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் - தமிழக அரசு
*மே 10-24 வரை மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்கள் இடையே அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோ உள்ளிட்டவற்றுக்கு தடை
*நியாயவிலைக்கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும்
*மே 10-24 வரை முழு ஊரடங்கு காலத்தில் உணவகங்களில் பார்சல் வழங்கலாம்; டோர் டெலிவரிக்கும் அனுமதி
>>> தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 08, நாள்: 08-05-2021...
மேஷம்
மே 08, 2021
வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் வருமானம் குடும்பத்திற்கு உதவியாக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : ஆதரவு கிடைக்கும்.
பரணி : பொருட்சேர்க்கை உண்டாகும்.
கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.
---------------------------------------
ரிஷபம்
மே 08, 2021
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : மனவருத்தங்கள் நீங்கும்.
மிருகசீரிஷம் : துரிதம் உண்டாகும்.
---------------------------------------
மிதுனம்
மே 08, 2021
பயணங்களால் நன்மை அதிகரிக்கும். தொழிலில் மேன்மை உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் சற்று அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : நன்மை அதிகரிக்கும்.
திருவாதிரை : மேன்மை உண்டாகும்.
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
---------------------------------------
கடகம்
மே 08, 2021
புதிய முயற்சிகளுக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். தனவரவுகளின் மூலம் திருப்திகரமான சூழல் உண்டாகும். தொலைபேசி தொடர்பான போக்குவரத்தால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே அன்பு மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
புனர்பூசம் : திருப்திகரமான நாள்.
பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
ஆயில்யம் : நெருக்கடிகள் குறையும்.
---------------------------------------
சிம்மம்
மே 08, 2021
சுபகாரியங்கள் தொடர்பான அலைச்சல்கள் ஏற்படும். பேச்சில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடமாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : அலைச்சல்கள் ஏற்படும்.
பூரம் : அனுசரித்து செல்லவும்.
உத்திரம் : செலவுகள் உண்டாகும்.
---------------------------------------
கன்னி
மே 08, 2021
மனதில் நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்றுவீர்கள். உயர் அதிகாரிகளால் அவ்வப்போது சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழிலில் மேன்மையான சூழல் ஏற்படும். பொதுக்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
உத்திரம் : எண்ணங்கள் நிறைவேறும்.
அஸ்தம் : மேன்மையான நாள்.
சித்திரை : முன்னேற்றம் ஏற்படும்.
---------------------------------------
துலாம்
மே 08, 2021
தந்தையிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். வெளியூர் பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் உயரும். பழைய கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். வெளியில் செல்லும் பொழுது உரிய ஆவணங்களை எடுத்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
சித்திரை : சாதகமான நாள்.
சுவாதி : சுபச்செய்திகள் கிடைக்கும்.
விசாகம் : மதிப்புகள் உயரும்.
---------------------------------------
விருச்சகம்
மே 08, 2021
கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். உறவினர்களுக்கிடையே மதிப்புகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். சகோதரிகளின் வழியில் லாபம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.
அனுஷம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
கேட்டை : லாபம் அதிகரிக்கும்.
---------------------------------------
தனுசு
மே 08, 2021
உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மனைவியின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மூலம் : இன்னல்கள் நீங்கும்.
பூராடம் : முன்னேற்றமான நாள்.
உத்திராடம் : ஆதரவு அதிகரிக்கும்.
---------------------------------------
மகரம்
மே 08, 2021
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். புதிய செயல்களில் நிதானம் வேண்டும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். கடன் பிரச்சனைகள் நீங்கும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
உத்திராடம் : வெற்றி கிடைக்கும்.
திருவோணம் : தனவரவுகள் உண்டாகும்.
அவிட்டம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
---------------------------------------
கும்பம்
மே 08, 2021
பிள்ளைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். உடல் நிலையில் சோர்வும், ஒருவிதமான சுறுசுறுப்பின்மையும் ஏற்பட்டு மறையும். குடும்ப உறவினர்களிடம் மாற்று கருத்துக்கள் தோன்றும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். நண்பர்களிடம் பொறுமை வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அவிட்டம் : எண்ணங்களை அறிவீர்கள்.
சதயம் : மாற்றமான நாள்.
பூரட்டாதி : பொறுமை வேண்டும்.
---------------------------------------
மீனம்
மே 08, 2021
சுபவிரய செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். மனதில் இருந்துவந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறும். துணிவுடன் புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : லாபம் கிடைக்கும்.
உத்திரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.
ரேவதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
---------------------------------------
01.01.2025 முதல் களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே ஓய்வூதிய கருத்துருக்களும், அனைத்து வகை விடுப்புகளும் விண்ணப்பிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி ...