கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி ? முழு விவரங்கள்...

 


முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் பற்றி முழு விவரம் தெரிந்து கொள்வோம்...



மருத்துவ காப்பீட்டு திட்டம் என்பது என்ன ?

பொருளாதார வசதி இல்லாத ஏழை மக்களுக்காக கொண்டுவரப்பட்டது தான் இந்த மருத்துவ காப்பீடு திட்டம் ஆகும். நமக்கு ஏற்படும் சில மருத்துவ உதவி களுக்கு தேவையான பணத்தை அரசே செலுத்துவதுதான் மூலம் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் தனியார் மருத்துவமனைகள் மூலமாக இலவசமாக தமிழக மக்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது மருத்துவச் செலவு என்பது திடீரென வரக் கூடியது .ஆதலால் முன்னெச்சரிக்கையாக மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை எடுத்து வைத்துக் கொள்வது மிக நல்லது.


 


மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பெற தகுதிகள்

இத்திட்டத்தின் பயனைப் பெற ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்குக் கீழே இருக்க வேண்டும்



தேவையான ஆவணங்கள்

வருமானச் சான்றிதழ் குடும்ப அட்டையின் நகல் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் நகல்


 

எங்கே விண்ணப்பிப்பது ?

ஒவ்வொரு மாவட்ட அலுவலகத்திலும் காப்பீட்டுத் திட்ட மையம் இயங்கி வருகிறது .அங்கு சென்று விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களைக் கொடுக்கவும் பின்னர் அவர்கள் சொல்லும் தேதியில் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் இதன் பின்பு அலுவலகத்தில் அதிகாரி  Acknowledgement Receipts தருவார்கள் பின் ஓரிரு நாட்களில் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்படும்.



பயனை எப்படிப் பெறுவது 

இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் பதிவு பெற்ற தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்பெற முடியும்.


 


மருத்துவ காப்பீட்டு அட்டை தொலைந்தால் என்ன செய்வது?

எதிர்பாராதவிதமாக நீங்கள் ஏற்கனவே எடுத்து காப்பீட்டு திட்டத்தின் அடையாள அட்டை தொலைந்து விட்டாலோ அல்லது உடைந்து விட்டாலோ கவலை வேண்டாம் மிக எளிதாக காப்பீட்டு அடையாள அட்டையை இணையதளம் மூலமாக எடுக்கலாம் .முதலில் இந்த லிங்கை கிளிக் செய்து  https://www.cmchistn.com உங்கள் குடும்ப அட்டையின் எண்ணை பதிவு செய்து search செய்தால் போதும் அதில் உங்கள் காப்பீட்டின் மற்றும் குடும்ப தலைவர் உறுப்பினர் பெயர்கள் இடம்பெறும். இதை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம்



மேலும் விபரங்களுக்கு

இத்திட்டம் பற்றிய விவரங்களை அறிவதற்கும் குறைகளை தெரிவிப்பதற்கும் 24 மணிநேர தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை தொலைபேசி எண் 1800 425 3993 மூலம் தொடர்பு கொள்ளலாம்.


WEBSITE

https://www.cmchistn.com

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான விண்ணப்பப் படிவம்...




>>> முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான விண்ணப்பப் படிவம்...


முழு ஊரடங்கை முழுமையாகக் கடைபிடிப்பீர் - முதல்வர் திரு.மு.க ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் - சிறப்பு காணொளி...

முழு ஊரடங்கை முழுமையாகக் கடைபிடிப்பீர் - முதல்வர் திரு.மு.க ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் - சிறப்பு காணொளி...



>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...


முதலமைச்சரின் விரிவான மருத்து காப்பீட்டுத் திட்டத்தில் நாம் உள்ளோமா இல்லையா, என தெரிந்துகொள்ள...



 முதலமைச்சரின் விரிவான மருத்து காப்பீட்டுத் திட்டத்தில் நாம் உள்ளோமா இல்லையா, என தெரிந்துகொள்ள, https://www.cmchistn.com/ எனும் வலைதளத்தில் சென்று Member search ல், குடும்ப அட்டை எண் விபரங்களை உள்ளிட, கார்டுஎண் பெறலாம். டவுன்லோடும் செய்யலாம்.

பள்ளிக்கல்வியில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க பெற்றோர்கள், அதிகாரிகள், பள்ளி நிர்வாகம் ஆகியோர் இணைந்த 'திங்க் டேங்க்' (Think Tank) - பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்...

 அண்ணா நூலகத்துக்குப் புத்துணர்வு தரும் விதமாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.



பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (மே 08) சென்னை, அண்ணா நூலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:


"அண்ணா நூலகத்துக்குள் நுழையும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. ஆனால், வாசலில் போடப்பட்டிருக்கும் கால்மிதி கூட சரியாக இல்லை. அந்தளவுக்கு, அண்ணா நூலகம் பராமரிக்கப்படாத நிலை நிலவுகிறது. இது சங்கடமாக இருக்கிறது. துறை அதிகாரிகள், இயக்குநர்கள் இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர்.


இங்கு நிறைய பேர் படித்து குடிமைப் பணிகளில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் எங்களிடத்தில் எந்தளவுக்கு அண்ணா நூலகம் உதவிகரமாக அமைந்தது என்பதை கூறுவார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தொலைநோக்குப் பார்வையை நினைத்தால் எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது.


அண்ணா நூலகத்துக்குப் புத்துணர்வு தரும் விதமாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வின் அறிக்கையை தயார் செய்ய சொல்லியிருக்கிறேன்.


கடந்த 10 ஆண்டுகள் என்ன நடந்தது என்பதை ஒருபுறம் தள்ளிவைத்துவிட்டு, முதலில் இதனை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதியும் இதனை பார்வையிட்டு சென்றிருக்கிறார்.


அதிமுக பலவற்றில் அரசியல் செய்திருக்கிறது. நூலகத்திலும் அரசியல் செய்திருப்பது வேதனையாக இருக்கிறது. கருணாநிதி, அண்ணா புகைப்படங்களை எடுப்பதையே வேலையாக செய்திருக்கின்றனர். ஆக்கப்பூர்வமான எதனையும் செய்யவில்லை.


தொடர்ந்து குற்றச்சாட்டுகள் சொல்வதை நிறுத்திவிட்டு, நூலகத்துக்குத் தேவையானவற்றை செய்வதுதான் எங்கள் அரசாங்கம்.


பள்ளிக்கல்வியில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க பெற்றோர்கள், அதிகாரிகள், பள்ளி நிர்வாகம் ஆகியோர் இணைந்த 'திங்க் டேங்க்' (Think Tank) உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறோம்.


ஆன்லைன் வகுப்புகள், கல்விக் கட்டணம், 10-ஆம் வகுப்பு மதிப்பெண்களை எப்படி மதிப்பிடுவது, 12-ம் வகுப்பு தேர்வு குறித்தும் ஆலோசனை நடத்துவோம்.


அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. கல்வி தொலைக்காட்சி அழகாக இருக்கிறது. அதனை இன்னும் சுவாரஸ்யமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்".


இவ்வாறு அவர் தெரிவித்தார்.


>>> பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் பேட்டி (காணொளி)...


16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் மே 11ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என அறிவிப்பு...

 தமிழக சட்டசபை கூட்டத் தொடர் மே 11-ல் தொடங்குகிறது.


சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் தொடங்குகிறது.


மே 11-ந் தேதி எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.


மே 12-ந் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல்கள் நடைபெறும்.




பெண் அரசு ஊழியர்களுக்கு 180 நாட்கள் குழந்தை தத்தெடுப்பு விடுப்பு - அரசாணை...



 பெண் அரசு ஊழியர்களுக்கு 180 நாட்கள் குழந்தை தத்தெடுப்பு விடுப்பு - அரசாணை (நிலை) எண்: 56, நாள்: 10-04-2012...


>>> அரசாணை (நிலை) எண்: 56, நாள்: 10-04-2012...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Free Note Books Requirement List from EMIS as on 27.12.2024 - DEE Proceedings

  2025-26 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசு / அரசு நிதியுதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 8ஆம்‌ வகுப்பு வரை  பயிலும்‌ மாணவ...