கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2000 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குகிறது ரிலையன்ஸ் நிறுவனம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

 தினந்தோறும் 2000 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தலா 50 லிட்டர் வீதம் எரிபொருள் வழங்க ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது 

- மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்




2 - 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை மேற்கொள்ள மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி...

 இந்தியாவில் 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை மேற்கொள்ள மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி.  



மத்திய மருந்து மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஒப்புதல்.  


தடுப்பூசியின் 2 மற்றும் 3 ஆம் கட்ட பரிசோதனை 525 தன்னார்வலர்களிடம் நடத்தப்பட உள்ளது.

கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் மீதான GST வரியை பூஜ்ஜிய சதவீதமாக நிர்ணயிக்க பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்...

 கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரியை பூஜ்ஜிய சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும்  


பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் 


நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகை மற்றும் அரிசி மானியத்தொகைகளையும் விடுவிக்க வேண்டும்


மாநில அரசின் கடன் வாங்கும் அளவை உற்பத்தி மதிப்பில் இருந்து மேலும் ஒரு சதவீதம் உயர்த்த வேண்டும் - முதலமைச்சர்


செய்தி வெளியீடு எண் 49, நாள்: 13-05-2021...




முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் கொரோனா(COVID 19) சிகிச்சைக்கு மாவட்ட வாரியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளின் பட்டியல்...


  முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் கொரோனா(COVID 19) சிகிச்சைக்கு மாவட்ட வாரியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளின் பட்டியல்...


https://www.cmchistn.com/covidHospital.php


கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஏற்படுத்த முதல்வர் உத்தரவு...

 தமிழகத்தில் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை ஏற்படுத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


தமிழகத்தில் தற்போது அரசு மருத்துவமனைகளில் 41 ஆயிரம் படுக்கைகள் உள்ள நிலையில், 22 ஆயிரம் படுக்கைகளில் ஆக்ஸிஜன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.



தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கூடுதலாக ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை ஏற்படுத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


அந்த வகையில் கூடுதலாக ஆக்ஸிஜன் வசதிகளுடன் கூடிய 12 ஆயிரத்து 468 படுக்கைகள் தயாராகி வருகின்றன. இதில் 5000 படுக்கைகள் தயார் செய்யும் பணி முடிவடைந்துள்ளன. மீதமுள்ள படுக்கைகளை தயார் செய்யும் பணி ஒரு வாரத்தில் நிறைவடையும் எனக் கூறப்படுகிறது.


கிராமப்புறங்களில் வேகமாக பரவுகிறது கொரோனா தொற்று: தடுப்பூசி போடுவதும் கிராமப்புறங்களில் குறைவு...

 கொரோனா தொற்று தற்போது இந்தியாவின் கிராமப்புறங்களில் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் பெரு நகரங்களை காட்டிலும் அதில் இருக்கக்கூடிய கிராமப்புற பகுதிகளில் அண்மை நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 



குறிப்பாக தமிழகத்தில் அரியலூர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, சிவகங்கை, திருவாரூர், தருமபுரி, விழுப்புரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் கிராமப்புறங்களில் வாழ்ந்து வருகின்றனர். எனவே இவை கிராமப்புற மாவட்டங்களாக கருதப்படுகின்றன. 


கொரோனா 2வது அலையில் இந்த கிராமப்புற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் அதிகரித்து காணப்படுகிறது. உதாரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 2021 மார்ச் 1ஆம் தேதி முதல் மே 10ஆம் தேதி வரை 3,158 கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன. கொரோனா முதல் அலையின் போது அதாவது 2020 மார்ச் முதல் 2021 மார்ச் 1ஆம் தேதி வரையிலான காலத்தில் கண்டறியப்பட்ட மொத்தப் பாதிப்புகளின் எண்ணிக்கை 6,475 என்கிற அளவில் இருந்தது. ஆனால் தற்போது சராசரியாக ஒரு மாதத்தில் மட்டும் 1,300க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்படுகின்றன.


முதல் அலையின் போது இந்த எண்ணிக்கை 540ஆக குறைந்திருந்தது. 2வது அலையில் சென்னையில் ஒருமாத கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டாலும் பாதிப்பு விகிதம் கிராமப்புற மாவட்டங்களில் அதிகமாக உள்ளது. அதேபோல தடுப்பூசியும் சென்னை, மதுரை போன்ற நகரங்களை ஒப்பிடும் போது கிராமப்புறங்களில் குறைவாகவே போடப்படுவதாக தெரிகிறது

அரபிக்கடலில்.. மே 16ல் உருவாகிறது "தக்டே" புயல்.. எவ்வளவு வேகத்தில் காற்று வீசும்? எங்கே செல்லும்?

 அரபிக்கடலில் மே 16ம் தேதி தக்டே என்ற புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.



இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கோடை காலம் வாட்டி எடுத்து வருகிறது. தமிழகத்திலும் அக்னி நட்சத்திரம் காரணமாக கடுமையான வெயில் அடித்து வருகிறது.


இந்த நிலையில் திடீரென தற்போது அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் இந்த தாழ்வு நிலை உருவாகும்.


எப்போது

மே 14ம் தேதி இந்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை பின் தாழ்வு மண்டலமாக மாறும். அதன்பின் மே 16ம் தேதி அரபிக்கடலில் மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


புயல்

இது அரபிக்கடலில் புயலாக மாறும் பட்சத்தில் இதற்கு தக்டே என்று பெயர் வைக்கப்படும். இது மியான்மர் மூலம் வைக்கப்பட்ட பெயர் ஆகும். தக்டே என்பது மியான்மரின் ஒரு வகை பல்லி இனம் ஆகும். அதே சமயம் இதன் தற்போதைய வலிமையை பார்த்தால், மணிக்கு இந்த புயல் 120 கிமீ வேகம் வரை செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


எங்கே

ஆனால் இந்த புயல் எங்கே கரையை கடக்கும் என்று சொல்லப்படவில்லை. பெரும்பாலும் குஜராத் அல்லது பாகிஸ்தான் அருகே செல்லும். இப்போதே இதன் பாதையை கணிக்க முடியாது என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.



தமிழகம்

ஒருவேளை இந்த புயல் கேரள கரையோரம் வந்தால் தமிழகத்தில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக பரப்பில் மழை பெய்யலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...