கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

+2 தேர்வு நடத்தப்படும், நீட் தேர்வு நடத்த மாட்டோம் - மத்திய கல்வித்துறை அமைச்சர் கூட்டத்தில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி அமைச்சர்கள் தகவல்...



 தமிழகத்தில் +2 தேர்வு கட்டாயம் நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் இன்று ஆலோசனை நடத்தினார். அனைத்து மாநில கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடன் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் காணொலி வாயிலாக இன்று உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். 


இக்கூட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமை வகித்தார். தமிழகத்தின் சார்பில் மாநில உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் நீட் மற்றும் ஜேஇஇ போன்ற தொழில்முறைக் கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் நடத்துவது குறித்தும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு 12ம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாய அடிப்படை என்பதால் அந்த தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என்பதால், அதைப் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. 



மேலும், சில குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டும் 12ம் வகுப்புக்கு தேர்வு நடத்துவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய கொரோனா சூழ்நிலையில் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரியுள்ளனர். இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மாலையில் அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.



இந்நிலையில் +2 தேர்வு தொடர்பாக மத்திய அரசு நடத்திய ஆலோசனையில் பங்கேற்ற பின் அமைச்சர்கள், அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய அவர்கள்; தமிழகத்தில் +2 தேர்வு கட்டாயம் நடைபெறும். கொரோனா பரவல் குறைந்த பிறகே பிளஸ் டூ தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு தொடர்பாகவே முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. 



தமிழகத்தின் நிலைப்பாடு பற்றி செவ்வாய்கிழமைக்குள் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும். ஜேஇஇ, இசிஆர் நுழைவுத் தேர்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வு கூடாது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டும் நீட் தேர்வை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது எனவும் கூறினார்.


6 கோடி பாடப் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி நிறைவு - கல்வித் துறை தகவல்...




 ஜூன் மாதத்திற்குள் தொற்று குறைந்துவிட்டால், ஜூலை மாதத்திலிருந்து பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தகங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அச்சடித்து முடிக்கப்பட்டுள்ளன. 



6 கோடி இலவச பாடப் புத்தகங்கள் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் முழுமையாக அனுப்பப்பட்டு விட்டன என்றும் , பள்ளிகள் எப்போது திறக்கப்பட்டாலும்  புத்தகங்கள் உடனடியாக மாணவர்களுக்கு வழங்கும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக  பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.



மேலும் தனியார் பள்ளியில் மாணவர்களுக்கான புத்தகங்கள் மற்றும் சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பாட புத்தகங்களும் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம்... வழங்குமா அரசு?

 பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 16,549 பகுதிநேர ஆசிரியர்களை கடந்த 2012 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் முதல்வராக இருந்த ஜெயலலிதா நியமித்தார். ஆனாலும் நியமனம் செய்தது முதலே மே மாதம் சம்பளம் கொடுக்காமல் முந்தைய அ.தி.மு.க அரசால் மறுக்கப்பட்டது. 


எத்தனையோ முறை கோரிக்கை வைத்து இருந்தாலும் 10 ஆண்டுகளும் மே மாதம் மட்டும் சம்பளம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படவில்லை.


இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க புதிய ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார். தி.மு.க தேர்தல் அறிக்கையிலும் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என நம்பிக்கை கொடுத்துள்ளது. 


ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் ஏற்கனவே பெறப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற இதற்காக தனித்துறை ஏற்படுத்தி தனி அதிகாரியை நியமித்துள்ளார் முதல்வர். 


இதிலும் கோரிக்கை மனுக்களை பகுதிநேர ஆசிரியர்கள் கொடுத்து உள்ளார்கள். எனவே கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பில் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளார்கள்.


இதுகுறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியதாவது,



"கரோனா நோய் தொற்று பரவலை தடுக்க அரசு ஊரடங்கை இப்போது அறிவித்துள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் மே மாதம் சம்பளம் கொடுத்து அனைவரின் குடும்பங்களுக்கு உதவிட முதல்வர் ஸ்டாலின் அவர்களை வேண்டுகிறோம்.



பெருமனதுடன் முதல்வர் அவர்கள் 12 ஆயிரம் குடும்பங்களுக்கு இம்முறை மே மாதம் சம்பளத்தை வழங்கினால், இவர்களின் உணவு, வீட்டு வாடகை குறித்த கவலைகள் குறையும். ஏற்கனவே, மே மாதம் சம்பளம் குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கலந்து பேசி நல்ல விடியலை கொடுப்பதாக பள்ளிக்கல்விஅமைச்சர் பேட்டி ஒன்றில் பதில் சொன்னதை ஆவலாக நாங்கள் எதிர்பார்த்து வருகிறோம்" என்றார்.

இன்றைய (24-05-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

மே 24, 2021



குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


திர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : அறிமுகம் உண்டாகும்.


கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




ரிஷபம்

மே 24, 2021



உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகளில் இருந்துவந்த தடைகள் அகலும். நெருக்கமானவர்கள் பற்றிய சிந்தனைகள் மனதில் மேம்படும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். தற்பெருமை பேசுவதை குறைத்துக்கொள்வது நல்லது.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


திர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



கிருத்திகை : சிந்தனைகள் அதிகரிக்கும்.


ரோகிணி : தடைகள் அகலும்.


மிருகசீரிஷம் : மாற்றங்கள் ஏற்படும்.

---------------------------------------




மிதுனம்

மே 24, 2021



குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வாழ்க்கைத்துணைவரின் வழியில் பொருள் வரவுகள் ஏற்படும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கலைஞர்களின் அறிமுகம் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


திர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



மிருகசீரிஷம் : பொருள் வரவுகள் ஏற்படும்.


திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.


புனர்பூசம் : சிந்தனைகள் தோன்றும்.

---------------------------------------




கடகம்

மே 24, 2021



கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். சேமிப்புகள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். விவசாயப் பணிகளில் பாசன வசதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். நுணுக்கமான விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபட்டு பாராட்டுகளை பெறுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


திர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



புனர்பூசம் : நெருக்கம் அதிகரிக்கும்.


பூசம் : முயற்சிகள் ஈடேறும்.


ஆயில்யம் : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------




சிம்மம்

மே 24, 2021



வியாபாரம் தொடர்பான குழப்பங்கள் குறையும். நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பாக எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். மக்கள் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கை பற்றிய பழைய நினைவுகள் மனதில் அவ்வப்போது ஏற்பட்டு மறையும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


திர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மகம் : குழப்பங்கள் குறையும்.


பூரம் : உதவிகள் சாதகமாகும்.


உத்திரம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------




கன்னி

மே 24, 2021



பத்திரம் தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். தனவரவுகள் மேம்படும். கூட்டாளிகளின் மூலம் லாபகரமான சூழல் உண்டாகும். கண் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபகரமான சூழல் உண்டாகும். உடனிருப்பவர்களுக்கிடையே நம்பிக்கை அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


திர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



உத்திரம் : மேன்மை உண்டாகும்.


அஸ்தம் : லாபகரமான நாள்.


சித்திரை : நம்பிக்கை அதிகரிக்கும். 

---------------------------------------




துலாம்

மே 24, 2021



மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த பலதரப்பட்ட குழப்பங்களில் இருந்து தெளிவு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


திர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



சித்திரை : பொறுமையுடன் செயல்படவும்.


சுவாதி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.


விசாகம் : தெளிவு கிடைக்கும். 

---------------------------------------




விருச்சகம்

மே 24, 2021



வாழ்க்கைத்துணைவரிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விட்டுக்கொடுத்து செல்லவும். மக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


திர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



விசாகம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.


அனுஷம் : அறிமுகம் கிடைக்கும்.


கேட்டை : செலவுகள் ஏற்படும். 

---------------------------------------




தனுசு

மே 24, 2021



தனவரவுகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் தோன்றும். விரும்பிய குறிக்கோள்களை அடைவதற்கான முயற்சிகளும், அதற்குண்டான உதவிகளும் சாதகமாக அமையும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கலைகளில் திறமைகளை வெளிப்படுத்தி அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


திர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மூலம் : ஆசைகள் தோன்றும்.


பூராடம் : முயற்சிகள் மேம்படும்.


உத்திராடம் : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------




மகரம்

மே 24, 2021



வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் புதிய கட்டுப்பாடுகள் உண்டாகும். வேலையாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். மருத்துவம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். மாமியார் வழியில் எதிர்பாராத ஆதரவு கிடைக்கும். அறப்பணி தொடர்பான செயல்பாடுகளில் இருப்பவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


திர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திராடம் : ஒற்றுமை ஏற்படும்.


திருவோணம் : ஆதரவான நாள்.


அவிட்டம் : பாராட்டுகள் கிடைக்கும்.

---------------------------------------




கும்பம்

மே 24, 2021



குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். தந்தைவழியில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். தனவரவுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். இறைவழிபாடு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். ஆராய்ச்சி தொடர்பான கல்விகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் புதிய உறுப்பினர்களின் வருகையின் மூலம் மாற்றங்களும், மகிழ்ச்சியும் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


திர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அவிட்டம் : தீர்வு கிடைக்கும்.


சதயம் : தாமதங்கள் குறையும்.


பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.

---------------------------------------




மீனம்

மே 24, 2021



இளைய உடன்பிறப்புகளிடம் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். வாகனம் தொடர்பான பயணங்களில் கவனம் வேண்டும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது தகுந்த ஆலோசனைகளை பெற்று மேற்கொள்ளவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். வஞ்சனை தொடர்பான எண்ணங்களையும், முயற்சிகளையும் குறைப்பது நன்மையளிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


திர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



பூரட்டாதி : விட்டுக்கொடுத்து செல்லவும்.


உத்திரட்டாதி : ஆலோசனைகள் வேண்டும்.


ரேவதி : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------


பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு குறித்த மாநில கல்வி அமைச்சர்களுக்கான கூட்டம் குறித்த அறிக்கை - செய்தி வெளியீடு எண்: 143; நாள்:23.05.2021...

 பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு குறித்த மாநில கல்வி அமைச்சர்களுக்கான கூட்டம் குறித்த அறிக்கை - செய்தி வெளியீடு எண்: 143; நாள்:23.05.2021...


பன்னிரெண்டாம் வகுப்பு இறுதி தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு-Press Release- 143


தமிழக அளவில் நீட் தேர்வு நடத்த இருப்பதாக சில ஊடகங்களில் வெளியான தகவல் தவறு - தமிழக அரசு.


மாணவர்களின் 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களை பொறுத்து மருத்துவக்கல்லூரியில் சேர்க்கை நடத்த வேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கையில் மாற்றமில்லை - தமிழக அரசு.





செய்தி வெளியீடு எண்: 143;   நாள்:23.05.2021...


செய்தி வெளியீடு 


பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு குறித்த மாநில கல்வி அமைச்சர்களுக்கான கூட்டம் குறித்த அறிக்கை :


இன்று (23.5.2021) மத்திய அரசின் பள்ளி கல்வித் துறை CBSE முறையில் செயல்படும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பன்னிரெண்டாம் வகுப்பு இறுதி தேர்வு குறித்து அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டு தமிழகத்தின் நிலைப்பாட்டை தெரிவித்து இருந்தனர். மேலும் இக்கூட்டத்தில் மாநில அளவில் நடைபெறும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் குறித்தும், அதற்குப் பிறகு மாணவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு நுழைவுத் தேர்வுகள் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.



இக்கூட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவி வரும் இக்காலகட்டத்தில் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் நடத்தும் முறைகள் குறித்து தமிழக அரசின் கருத்துகளை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் எடுத்துரைத்தார். மேலும் தமிழக அரசின் இறுதி நிலைப்பாட்டை மாண்புமிகு முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து மத்திய அரசிற்கு தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார். 



இக்கூட்டத்தில் பேசிய மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் தமிழகத்திற்கு நீட் (NEET) தேர்வு கூடாது என்றும், வழக்கம் போல பன்னிரெண்டாம் வகுப்பு இறுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையிலே மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

 


மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் இக்கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, தமிழக அரசு தனியே நீட் தேர்வை மாநில அளவில் நடத்த இருப்பதாக சில ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. இது முற்றிலும் தவறானது ஆகும். தமிழகத்தில் நீட் தேர்வு மூலம் சேர்க்கை நடைபெறக் கூடாது என்பது மட்டுமல்லாது, மாணவர்கள் பயிலும் பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை. 


***


வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9




தமிழ்நாட்டில் இன்றைய (23.05.2021) கொரோனா பாதிப்பு 35483 பேர் - Media Bulletin...




>>> Click here to Download Media Bulletin 23.05.2021, 69 Pages...


தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் அறிவிக்கப்படவேண்டிய நோயாக (Notified Disease) அறிவிப்பு - தமிழக அரசு அரசாணை வெளியீடு...

 தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் அறிவிக்கப்படவேண்டிய நோயாக (Notified Disease) அறிவிப்பு - தமிழக அரசு அரசாணை (G.O.Ms.No.249, Dated: 20-05-2021) வெளியீடு.

 

யாருக்கு கருப்பு பூஞ்சை ஏற்பட்டாலும் மருத்துவமனை நிர்வாகம் பொது சுகாதார இயக்குனரிடம் தெரிவிக்க வேண்டும். கருப்பு பூஞ்சை குணப்படுத்த கூடிய நோய்தான்.


 பொது மக்கள் கருப்பு பூஞ்சை குறித்த வாட்ஸ் அப் வதந்திகளை நம்ப கூடாது


ஸ்டிராய்ட் எடுப்பவர்கள், சர்க்கரை வியாதி, ஐசியூவில் பல நாட்களாக உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை ஏற்படலாம்.


மாநிலங்களும் அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியதை அடுத்து தமிழக அரசு நடவடிக்கை - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு...


 G.O.Ms.No.249, Dated: 20-05-2021...






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Attention Sabarimala Devotees - Devasam Board Notice

  சபரிமலை பக்தர்கள் கவனத்துக்கு - தேவசம் போர்டு அறிவிப்பு சபரிமலை செல்லும் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைக...