கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஏப்ரல்,மே மற்றும் ஜூன் மாதங்களில் மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை -அரசாணை வெளியீடு...



 அரசாணை (நிலை) எண்.G.O.No.256, நாள்: 28-05-2021 - ஏப்ரல்,மே மற்றும் ஜூன் ஆகிய 3 மாதங்களில் தொடர் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் அதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு...


>>> அரசாணை (நிலை) எண்.256, நாள்: 28-05-2021...


தமிழகத்தில் ஜூன் 7ஆம் தேதி வரை மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிப்பு...

 


தமிழகத்தில் ஜூன் 7ஆம் தேதி காலை 6மணி வரை மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிப்பு...


செய்தி வெளியீடு எண்:173, நாள்:28.05.2021


ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களது அறிக்கை...


>>> செய்தி வெளியீடு எண்:173, நாள்:28.05.2021...




COVID - 19 உங்களுக்கு இருப்பதாக நீங்கள் நினைத்தால் என்ன செய்வது? UNICEF வழங்கும் உதவிக்குறிப்புகள்...

What to do if you think you have COVID - 19 

அவசரக் காலப் பராமரிப்பை எப்போது நாடவேண்டும் , வீட்டில் இருந்தபடியே லேசான COVID - 19 பாதிப்புகளை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றி UNICEF வழங்கும் உதவிக்குறிப்புகள்.



உங்களுக்கு உடல்நலக் குறைவு என அறிந்தவுடன்,



பொறுமையாக இருங்கள். நினைவில் கொள்ளுங்கள் கோவிட்-19 பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் குணமடைகிறார்கள். மேலும் அவர்கள் மருதுவமைனையில் அனுமதிக்கப்பட தேவையில்லை.  




1. சுய-தனிமைபடுத்திக் கொள்ளுங்கள். கோவிட் பரிசோதனை செய்துகொள்வதற்கோ, பரிசோதனை முடிவிற்கோ காத்திருக்க வேண்டாம்.



2⃣ ஆலோசனைக்கு ஒரு மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள்.  



3⃣ ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை அல்லது அடிக்கடி உங்களின் மூச்சு வேகமாகும் போது உங்களது ஆக்சிஜென் அளவினை பரிசோதியுங்கள்.


📍 ஆக்சிமீட்டரின் ஆக்சிஜென் அளவு 94% க்கும் கீழே காண்பித்தால் உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாடவும்.



4⃣ ஒவ்வொரு 6 மணிநேரத்துக்கும் உங்களது உடல் வெப்பநிலையை கண்காணியுங்கள். உங்களுக்கு காய்ச்சல் இருந்தால் அடிக்கடி கண்காணியுங்கள்.


📍 3 நாட்களுக்கு உடல் வெப்பநிலை 101F (38C) தொடர்ந்தால் உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாடவும்.




5⃣ இந்த நிகழ்வுகளில் ஏதேனும் உங்களுக்கு இருந்தால் ஒரு அவசர மருத்துவ உதவியை நாடுங்கள்.


📍 மோசமான சுவாசக் குறைபாடு ஏற்படும்போது.


📍 உதடு அல்லது முகம் நீல நிறமாகும்போது.


📍 தன்னிலை இழத்தல் எனும் நிலை அதிகரிக்கும்போது.


📍 மார்பு பகுதியில் தொடர் வலி அல்லது அழுத்தம் ஏற்படும்போது.


📍 மந்தமான பேச்சு அல்லது வலிப்புதாக்கங்கள். 


📍 எழுந்திருக்கவோ அல்லது விழித்திருக்கவோ முடியவில்லை என்ற நிலையின்போது.




பள்ளிக் கல்வித்துறை இயக்குநராக இருந்த கண்ணப்பன் அவர்களுக்கு புதிய பதவி...

 

பள்ளிக் கல்வித்துறை இயக்குநராக இருந்து, பொறுப்பில் இருந்து விலகிய திரு.கண்ணப்பன் அவர்களுக்கு புதிய பதவி.



ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில கூடுதல் திட்ட இயக்குநராக கண்ணப்பன் அவர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை.


உயர்கல்வித் துறைச் செயலாளராக இரண்டு நாள்கள் மட்டுமே இருந்த திரு.தீரஜ்குமார் இ.ஆ.ப. மாற்றம்...

 


உயர்கல்வித் துறைச் செயலாளராக இரண்டு நாள்கள் மட்டுமே இருந்த திரு. தீரஜ்குமார் மாற்றப்பட்டு, திரு கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். 


திரு. தீரஜ்குமார் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.



ஐஏஎஸ் அதிகாரிகள் சிலர் இரண்டு நாளில் மூன்று முறை மாற்றப்பட்டுள்ளனர். இன்றும் மாற்றப்பட்ட அதிகாரிகள் சிலருடன் சேர்ந்து 5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.



டெல்லி அயல்பணியிலிருந்து தமிழக பணிக்கு திரும்பிய அதிகாரி ஷிவ்தாஸ் மீனாவுக்கு முக்கிய துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் இறையன்பு பிறப்பித்துள்ளார். மாற்றப்பட்ட அதிகாரிகள் பழைய பதவி விவரம்:



1. அயல் பணியில் மத்திய சுற்றுச்சூழல் துறை தலைவராக பதவி வகித்த ஷிவ்தாஸ் மீனா மாநில பணிக்கு திரும்பிய நிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.



2. உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து தீரஜ்குமார் மாற்றப்பட்டு நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.




3. நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலர் கார்த்திகேயன் மாற்றப்பட்டு உயர்கல்வித்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.




4. போக்குவரத்து கழக ஆணையர் பதவி வைக்கும் ஜவகர் மாற்றப்பட்டு கால்நடை, பால்வளம், மற்றும் மீன்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப்பதவி கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்த்துக்கு நிலை உயர்த்தப்பட்டுள்ளது.




5. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பதவி வகிக்கும் ஹர்மந்தர் சிங் மாற்றப்பட்டு சர்க்கரை துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆணையர் அந்தஸ்தில் இருந்த சர்க்கரை துறை கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்திற்கு நிலை உயர்த்தப்பட்டுள்ளது.



இவ்வாறு தலைமைச் செயலர் இறையன்பு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


>>> IAS அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வெளியீடு...


ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை...

 கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஆசிரியர்கள் கட்டாயம் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 


இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை : 


அரசு , அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் துரிதமாக கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்ட விவரத்தை அதற்குரிய ஆவணங்களுடன் கல்வி மேலாண்மை தகவல் முகமை ( எமிஸ் ) தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆசிரியர்கள் , போடாதவர்கள் எண்ணிக்கையை மாவட்டவாரியாக அந்தந்த முதன்மைக் கல்வி அதிகாரிகள் தொகுத்து அதன் விவர அறிக்கையை இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும். அதில் முதல் மற்றும் 2 - ஆவது தவணை தடுப்பூசி விவரங்களை தனியாக குறிப்பிட வேண்டும். இது தொடர்பாக அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் , முதல்வர்களுக்கு உரிய வழிகாட்டு தல்களை வழங்க வேண்டும் . அதனுடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மூலம் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்த வேண்டும்.




தன்னார்வலர்களுக்காக இணையதளம் துவக்கம்...



 கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்கு உதவ விரும்புவோர், அரசு இணையதளத்தில் பதிவு செய்து, மக்களுக்கு உதவும் பணியில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளலாம்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.


தமிழக அரசின் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கொரோனா பெருந்தொற்று நோயை ஒழிக்க, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அரசு செயல்பட மாநில, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன.


மாநில அளவிலான ஒருங்கிணைப்பு குழு, சென்னை தேனாம்பேட்டை, தேசிய சுகாதார இயக்க வளாகத்தில் இயங்கி வரும் கட்டளை மையத்தில், தன் பணிகளை மேற்கொண்டு வருகிறது.தன்னலம் கருதா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள், பெருந்தொழில் நிறுவனங்கள், https://ucc.uhcitp.in/ngoregistration என்ற இணையதளத்தில், தங்களை பதிவு செய்து, மக்களுக்கு உதவும் பெரும் பணியில், தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.


மாநில அளவிலான ஒருங்கிணைப்பு குழு சார்பில், https://www.facebook.com/tnngocoordination/ என்ற முகநுால் கணக்கு துவக்கப்பட்டுள்ளது. மேலும், 87544 91300 என்ற மொபைல் போன் எண்ணிலும், tnngocoordination@gmail.com என்ற இணையதளம் வழியாகவும், மாநில ஒருங்கிணைப்பு குழுவை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Don't trust DEEP FAKE videos circulating like RBI Governor speaking in support of some investment schemes - RBI appeals to public

 ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் முதலீட்டு திட்டங்கள் குறித்து அறிவுரைகள் வழங்குவது போல பரவும் DEEP FAKE வீடியோக்களை நம்பிவிட வேண்டாம்...