கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கொரோனா அச்சம் குறைந்த பிறகே, பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும் - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி...



 கொரோனா அச்சம் குறைந்த பிறகே, பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும் -  பெற்றோர்களிடம் கருத்துக்கணிப்பு கேட்ட பிறகு தான் பள்ளிகள் திறப்பு - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி...


கொரோனா தொடர்பான பெற்றோர்களின் அச்சம் குறைந்த பிறகே, பள்ளி திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆன்லைன் வகுப்பிலேயே சென்றுவிட்டன. நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளை திறக்க திட்டமிட்டிருந்த தமிழக அரசு, இரண்டாம் அலையின் தீவிரத்தால் அந்த முடிவை கைவிட்டது. தற்போது பாதிப்பு குறைந்து இருக்கும் நிலையில் பள்ளிகள் திறக்கப்படுமா? என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது.


தெலுங்கானாவில் ஜூலை 1 ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. பிற மாநிலங்களும் இதனை பின்பற்ற வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. இத்தகைய சூழலில் தான், ஜூலை மாதம் பள்ளிகளை திறப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.


முதலில் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கிய பின்னர் படிப்படியாக பிற வகுப்புகளுக்கு தொடங்க அரசு திட்டமிட்டிருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் கசிந்தன. இந்த நிலையில், கொரோனா தொடர்பாக பெற்றோர்களின் அச்சம் குறைந்து பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இன்று முதல் பஸ்கள் ஓடும் - மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்துகள் இயங்கும் - அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு...


 தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 9333 பேருந்துகள் நாளை மறுநாள் முதல் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டம் விட்டு மாவட்டமும் பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூலை 5ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஏற்கனவே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.


இந்த சூழலில் வரும் 28ம் தேதி முதல் மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், நெல்லை,. கன்னியாகுமரி, ராமநாதபுரம், கடலூர் உள்பட மேலும் 23 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்தது.


எந்தெந்த மாவட்டங்கள் - 50 சதவீத பயணிகள்

இது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று வெளியிட்டுள்ள அறவிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், கோவிட்-19 தொற்றின் காரணமாக அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கனை 28.6.2021 முதல் 05.07,2021 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்கள். அந்த உத்தரவில் வகை 2ல் குறிப்பிட்டுள்ளவாறு அரியலூர், கடலூர், திண்டுக்கல், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கிடையேயும் பொதுப் பேருந்து போக்குவரத்தினை நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவீதம் இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து அமர்ந்து பயணிக்க அனுமதி அளித்துள்ளார்கள்.


27 மாவட்டங்களில் பேருந்துகள் - 28ம் தேதி முதல் பேருந்துகள்

ஏற்கனவே தமிழக முதல்வர் அவர்கள், வகை 3ல் குறிப்பிட்டுள்ளவாறு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கிடையே பொதுப்போகுவரத்தினை, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளித்து தற்போது இயக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ஏற்கனவே அனுமதித்துள்ள 4 மாவட்டங்களுடன், கூடுதலாக 23 மாவட்டங்கள் என ஆக மொத்தம் 27 மாவட்டங்களில் வரும் 28.06.2021 காலை 6 மணி முதல் 50 சதவீத இருக்கைகளுடன், மாவட்டங்களுக்குள்ளும் மாவட்டங்களுக்கு இடையேயும் இயக்கப்படுகின்றன.



எத்தனை பேருந்துகள்  - எங்கு எவ்வளவு..

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள மொத்தம் 19290 பேருந்துகளில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 2200 பேருந்துகளும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 385 பேருந்துகளும், விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 2210 பேருந்துகளும், சேலம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 50 பேருந்துகளும், கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1592 பேருந்துகளும், மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1300 பேருந்துகளும் மற்றும் திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1153 பேருந்துகள் என மொத்தம் 9323 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



ராஜகண்ணப்பன்  - போக்குவரத்துஅமைச்சர்

இயக்கப்படுகின்ற பேருந்துகளை உரிய முறையில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து அரசு விதித்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி இயக்கிடுமாறு உத்தரவிட்ப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசு விதித்துள்ள வழிகாட்டு முறைகளான கட்டாய முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி பயணித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது' இவ்வாறு போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.



ஆந்திராவில் அரசுப் பணிகளுக்கு இனி நேர்முகத் தேர்வு இல்லை...

 ஆந்திராவில் அரசுப் பணிகளுக்கு இனி நேர்முகத் தேர்வு இல்லை...



கொரோனா ஆபத்து இன்னும் ஓயவில்லை; தயக்கம் தவிர்த்து, வதந்திகளை விடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்வீர்: பிரதமர் மோடி வேண்டுகோள்...



 கொரோனா ஆபத்து இன்னும் ஓயவில்லை; தயக்கம் தவிர்த்து, வதந்திகளை விடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்வீர்: பிரதமர் மோடி வேண்டுகோள்...


பிரதமர் நரேந்திர மோடி, "மன் கி பாத்" எனும் வானொலி நிகழ்ச்சியின் வாயிலாக நாட்டு மக்களுக்கு அவ்வப்போது உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இது 78வது மன் கி பாத் அத்தியாயம்.


இந்த நிகழ்ச்சியில், பிரதமர் பேசியதாவது:


மக்களே, நீங்கள் அனைவரும் அறிவியலை நம்ப வேண்டுகிறேன். நம் விஞ்ஞானிகள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். இதுவரை கோடிக்கணக்கானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். எனது தாய் 100 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார். அவர், இரண்டு டோஸ் தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளார். ஆகையால், தடுப்பூசி தொடர்பான எந்தவொரு வதந்தியையும் நம்பாதீர்கள்.


தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் மட்டுமே கொடிய உயிர்க்கொல்லி நோயில் இருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ள முடியும். தடுப்பூசிக்கு எதிராக சிலர் வதந்திகளைப் பரப்பலாம். அவர்கள் பரப்பட்டும். நாம் நமது வேலையைச் செய்வோம். கரோனா தொற்றின் பேராபத்து இன்னும் ஓய்ந்துவிடவில்லை. ஆகையால் இப்போது நாம் அனைவரும் தடுப்பூசியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.


இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


நிகழ்ச்சியின் போது மத்தியப் பிரதேச மாநிலம் பீடுல் மாவட்டம் துலாரியா கிராமத்தைச் சேர்ந்த இருவரிடம் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர்கள், சமூகவலைதளங்களில் பரவும் தடுப்பூசி தகவல்கள் பற்றி கூறினர். அதற்கு பிரதமர் வதந்திகளை நம்ப வேண்டாம். தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டுமே இப்போதைக்கு ஒரே தீர்வு என்று எடுத்துரைத்தார்.


முன்னதாக நேற்று, தடுப்பூசி திட்டம் தொடர்பாக பிரதமர் மோடி உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர், "நாட்டில் தடுப்பூசி வழங்கலின் வேகம் திருப்தியளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுவரை 5.6% மக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டிருக்கிறது.


தடுப்பூசி மக்களை சென்றடைவதற்காக புதுமையான முறைகளை ஆராய்ந்து செயல்படுத்த தொண்டு நிறுவனங்கள் மற்றும் இதர அமைப்புகளை ஈடுபடுத்த வேண்டும்.


எந்தவொரு பகுதியிலும் அதிகரித்து வரும் தொற்றுகளை கண்காணித்து கட்டுப்படுத்துவதற்கான மிக முக்கிய ஆயுதமாக பரிசோதனைகள் இருப்பதால், மாநிலங்களுடன் இணைந்து பணியாற்றி பரிசோதனைகள் குறைந்து விடாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி...



ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கும் என மத்திய அரசு கூறியுள்ளது.


தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி தொடர்பான வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், ஜைடஸ் காடிலா நிறுவனம் தயாரித்த தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்த பின்னர் விரைவில் சிறுவர்களுக்கு செலுத்தப்படும் என தெரிவித்திருந்தது. ஜைடஸ் காடிலா நிறுவனம், தனது தடுப்பூசிக்கு அனுமதி கேட்டு, விரைவில் விண்ணப்பம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தடுப்பூசி பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் கொடுக்க முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.


இது தொடர்பாக தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு தலைவர் டாக்டர் என் கே அரோரா கூறியதாவது: ஜைடஸ் கடிலா தடுப்பூசி பரிசோதனை முடிவடையும் நிலையில் உள்ளது. ஜூலை அல்லது ஆக., துவக்கத்தில் 12 முதல் 18 வயதுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கும். இந்த தடுப்பூசிக்கு அனுமதி கிடைக்கும் போது, நமக்கு கூடுதலாக ஒரு தடுப்பூசி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


முன்னதாக இந்த தடுப்பூசி தொடர்பாக, எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப்குலேரியா கூறுகையில், இந்த தடுப்பூசி, பயன்பாட்டிற்கு வரும் போது மிகப்பெரிய சாதனையாக அமையும். பள்ளிகள் மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளை துவக்குவதற்கான பெரிய வழியை ஏற்படுத்தும். 2 முதல் 18 வயதுள்ள குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி குறித்த இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட பரிசோதனை முடிவுகள் செப்., மாதம் கிடைக்கும். மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதல் பெற்ற பின்னர், அந்த தடுப்பூசி குழந்தைகளுக்கு செலுத்தப்படும். பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தாலும், அதுவும் குழந்தைகளுக்கான மற்றொரு தடுப்பூசியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


எந்த வயது மாணவரை எந்த வகுப்பில் சேர்க்க வேண்டும் - வயது ஒப்பீட்டு விவரம்...

 


Which Age student should be Admitted in which class - Age comparison details ...


>>> எந்த வயது மாணவரை எந்த வகுப்பில் சேர்க்க வேண்டும் - வயது ஒப்பீட்டு விவரம்...



வகை 2ல் உள்ள 23 மாவட்டங்களில் 28-06-2021 முதல் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்:

வகை 2ல் உள்ள 23 மாவட்டங்களில் 28-06-2021 முதல் ஜவுளி, நகை கடைகள் திறக்க அனுமதி. 50% வாடிக்கையாளர்களுடன் காலை 9 மணி முதல் இரவு 7மணிவரை இயங்க அனுமதி - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...  *அவசர செய்தி: அனைத்து Block civil coordinators (BRTE) கவனத...