கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கல்வித் தொலைக்காட்சி பயன்பாடு: வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்யும் கல்வித்துறை அலுவலர்...



 கல்வித் தொலைக்காட்சி வாயிலாக மாணவர்கள் கல்வி கற்பது குறித்து புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து வருகிறார்.


தமிழகம் முழுவதும் கரோனா தொற்றால் மாணவர்கள் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று கல்வி கற்க முடியாத சூழல் உள்ளதால், கல்வித் தொலைக்காட்சி வாயிலாகக் கற்பிக்கப்படுகிறது.


புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் கல்வித் தொலைக்காட்சி வகுப்பு நடைபெறும்போது மாணவர்கள் கவனிக்கிறார்களா என்பதை மாணவர்களின் வீடுகளுக்கே சென்று மாவட்டக் கல்வி அலுவலர் ப.சண்முகநாதன் ஆய்வு செய்து வருகிறார்.


அதன்படி, இலுப்பூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி லத்திகா சரணின் வீட்டுக்கு  (ஜூலை 1 அன்று) சென்று மாணவியுடன் ஆலோசனை செய்தார்.


அப்போது, பள்ளித் துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி, பள்ளியின் தலைமையாசிரியர் ஆர்.தமிழ்செல்வி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆய்வுப் பணி மேற்கொண்டு வரும் மாவட்டக் கல்வி அலுவலரை, பெற்றோர்கள் வரவேற்றனர்.


பிளஸ் டூ மதிப்பெண் முறையால் திருப்பம் - 'தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்கள் உயர் கல்வியில் அதிக இடங்களைப் பெறுவர்'...

 


பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பான கணக்கீட்டினை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. `அரசுப் பள்ளி மாணவர்கள் பலன் பெறும் நோக்கிலேயே இவை வடிவமைக்கப் பட்டுள்ளன. இதனால் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்குப் பின்னடைவு ஏற்படலாம்' என்கின்றனர் கல்வியாளர்கள். 


என்ன நடக்கிறது பள்ளிக் கல்வித்துறையில்?

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக, கடந்த ஜூன் 1ஆம் தேதி சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து `தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வை நடத்தலாமா?' என்பது குறித்து பெற்றோர், மாணவர்கள், கல்வியாளர்கள் எனப் பல தரப்பிலும் அரசு கருத்துகளைக் கேட்டறிந்தது.


இதில் 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர், `தேர்வு வேண்டாம்' என்ற நிலையில் உறுதியாக இருந்ததால், பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக கடந்த ஜூன் 5 ஆம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதன்பிறகு, `சி.பி.எஸ்.இ பாணியிலேயே மதிப்பெண் கணக்கிடப்படுமா?' என்ற கேள்வி எழுந்தபோது, இதற்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.


கணக்கீட்டு முறை சரியா?

பிளஸ் 2 மதிப்பெண்ணை கணக்கிடுவது தொடர்பாக, ஜூன் 26 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், ` மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை ஆய்வு செய்வதற்காக பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர், சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழு, தனது அறிக்கையை அரசுக்கு அளித்துள்ளது. 10, 11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, அதற்கான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 12ஆம் வகுப்புக்கான இறுதி மதிப்பெண்களைக் கீழ்க்கண்ட விகிதாசார அடிப்படையில் வழங்க வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது' எனத் தெரிவித்திருந்தார்.


அதன்படி, 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில், (உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களுடைய சராசரி) 50 சதவிகிதமும் 11ஆம் வகுப்புத் தேர்வில் 20 சதவிகிதமும் 12ஆம் வகுப்புத் தேர்வில் 30 சதவிகிதமும் (செய்முறைத் தேர்வில் 20 மதிப்பெண் மற்றும் அக மதிப்பீட்டுத் தேர்வில் 10 மதிப்பெண்) என கணக்கில் எடுத்துக் கொள்ள உள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.


கொரோனா காலத்தில் செய்முறை தேர்வில் பங்கு பெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் பிளஸ் 1 செய்முறைத் தேர்வு பெற்ற மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இதன்படி, மதிப்பெண் கணக்கிடப்பட்டு வரும் ஜூலை 31ஆம் தேதிக்குள் வெளியிடப்பட உள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.


இதில், `தமக்குக் குறைவாக மதிப்பெண் உள்ளதாகக் கருதும் மாணவர்கள், அவர்கள் விரும்பினால் 12 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வினை எழுத வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவ்வாறு நடத்தப்படும் தேர்வில் அவர்கள் பெற்ற மதிப்பெண்ணே இறுதியாகக் கருதப்படும்' எனவும் அறிவிப்பு வெளியானது.


யாருக்கு பாதிப்பு?

அரசின் அறிவிப்பால், `தங்களுக்கு எத்தனை மதிப்பெண் வரப் போகிறது?' என்பதை மாணவர்கள் முன்கூட்டியே தீர்மானித்து விட்டதால், `எந்தப் பொறியியல் கல்லூரியில் சேரலாம், எந்தப் பாடப் பிரிவுகளுக்கு எதிர்காலம்?' என்பது தொடர்பான விசாரணைகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேநேரம், அரசின் மதிப்பீடு கணக்கு முறை குறித்து சில கேள்விகளை முன்வைக்கிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார்.


இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், ``சி.பி.எஸ்.இ-யில் பத்தாம் வகுப்பினை முடித்த மாணவர்கள் பலரும் பிளஸ் 1 வகுப்பில் அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்காக மாநில அரசின் பாடத் திட்டத்தில் சேர்ந்து படிப்பது வழக்கம். காரணம், சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வில் அதிகப்படியான மதிப்பெண்ணை வாங்க முடியாது என்பதுதான். அங்கு 70 சதவிகித மதிப்பெண் வாங்குகிறவர்கள், நமது பாடத்திட்டத்தில் சேர்ந்து 80 சதவிகித மதிப்பெண்ணை வாங்குவார்கள். தற்போது மதிப்பெண் கணக்கீட்டின்படி சி.பி.எஸ்.இ மாணவர்களின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டால் அவர்கள் பாதிப்புக்கு ஆளாவார்கள்," என்கிறார்.


`சி.பி.எஸ்.இ வாரியம், பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீட்டுக்கு பிளஸ் 2 வகுப்புத் தேர்வுகளில் இருந்து 40 சதவிகிதமும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வுகளில் இருந்து தலா 30 மதிப்பெண்ணையும் எடுக்க உள்ளது. அதுவே, தமிழ்நாடு அரசு பத்தாம் வகுப்பில் இருந்து 50 சதவிகிதம் எடுப்பதால், மாநில அரசின் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் வரும், இதனால் சி.பி.எஸ்.சி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்' என்பதைத்தான் கல்வியாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.


தொடர்ந்து பேசிய ரவிக்குமார் எம்.பி, ``அரசு கணக்கீட்டின்படி மதிப்பெண்ணை பெற விரும்பாதவர்களுக்கு சில வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. `மாணவர்கள் தேர்வு எழுத விரும்பினால் அதில் பெறும் மதிப்பெண்ணே இறுதியானது' என அரசு கூறியுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மதிப்பெண் முறை என்பது தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும்தான் எனவும் தேர்வு எழுத முன் வருகிறவர்களுக்கு அந்த மதிப்பெண்ணே இறுதி என்பது சரியான ஒன்றல்ல. `அரசின் மதிப்பெண் கணக்கீட்டைவிட அந்த மாணவர் குறைவான மதிப்பெண் பெற்றால் என்ன செய்வது?' என்ற கேள்வியும் எழுகிறது. இதில் எந்த மதிப்பெண் அதிகமோ அதன்படி வரிசைப்படுத்துவதுதான் சரியானதாக இருக்கும்," என்கிறார்.


8 லட்சம் மாணவர்கள்

அதேநேரம், ரவிக்குமாரின் கூற்றை மறுத்துப் பேசும் மூத்த கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி. ``மாநில அரசின் மதிப்பீட்டு முறை என்பது மிகச் சரியானது. எந்தவொரு கணக்கீட்டு முறையை எடுத்துக் கொண்டாலும் 100 சதவிகித மாணவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் இருக்கப் போவதில்லை. அரசு அறிவிப்பதற்கு முன்பு வரையில் கணக்கீடு முறை எப்படி இருக்கலாம் எனக் கருத்து கூறலாம். ஆனால், அறிவித்த பிறகு இதையெல்லாம் மாற்றலாம் எனக் கூறுவது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தையே ஏற்படுத்தும்," என்கிறார்.


மேலும், ``தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 7 லட்சத்து 90 ஆயிரம் மாணவர்கள் பிளஸ் 2 படித்து வருகின்றனர். அதேநேரம், சி.பி.எஸ்.இயில் 40 ஆயிரம் மாணவர்கள் பிளஸ் 2 படிக்கின்றனர். அரசின் கணக்கீட்டு முறையால் நமது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அதிகப்படியான பலன்கள் கிடைக்கப் போகின்றன. கடந்தமுறை சி.பி.எஸ்.இ மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை வாங்கியதால் உயர் கல்வியில் அதிகப்படியான இடங்களைப் பிடித்தனர். இந்தமுறை அந்த இடங்களை அரசுப் பள்ளி மாணவர்கள் பிடிக்க உள்ளனர்," என்று அவர் கூறினார்.


`அரசு பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம்`

``எந்த வகையில் என விவரிக்க முடியுமா?" என்றோம். `` பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தால்கூட இந்தளவுக்கு மதிப்பெண் வந்திருக்கப் போவதில்லை. இதனால் முதல் தரமான உயர்கல்வி நிறுவனங்களில் கடும் போட்டி நிலவப் போகிறது. அதேநேரம், மதிப்பெண் கணக்கீட்டில் `டெசிமல் முறை' வருவதையே சிறப்பான ஒன்றாகப் பார்க்கிறோம்.


உதாரணமாக, ஒரு மாணவருக்கு 91.716 என மதிப்பெண் வருகிறது என்றால், அதையே அரசு கொடுக்க வேண்டும். இதை 92 என மாற்றிக் கொடுக்கக் கூடாது. காரணம், மாணவர் சேர்க்கை முறைகள் கணினி மயமாகிவிட்டன. பிளஸ் 2 மதிப்பெண்ணை டெசிமலுடன் கொடுப்பது தொடர்பாக அரசு இன்னமும் முடிவெடுக்கவில்லை. ஐ.ஐ.டி, ஜே.இ.இ போன்றவற்றில் 7 டெசிமல் வரையில் மதிப்பெண்ணைக் கணக்கிடுகின்றனர். இதனை நாமும் கணக்கில் எடுத்துக் கொண்டால் ரேங்க் முறையில் எந்தவித சிரமமும் வரப் போவதில்லை. அவ்வாறு செய்யாவிட்டால் ஒரே மதிப்பெண்ணில் ஏராளமான மாணவர்கள் வரக் கூடிய சூழல் வரலாம்.


உதாரணமாக, ஒரு மாணவர் 10ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்ணும் பிளஸ் 2 வகுப்புகளில் எடுத்த மதிப்பெண்ணும் 50:30 என்பதால் முழுமையான எண்ணாக வரலாம். அதுவே, பிளஸ் 1 வகுப்பில் 70 மார்க்குக்கு 60 மதிப்பெண் எனக் கணக்கிட்டால் டெசிமலில்தான் வரும். இந்த அடிப்படையில் கொடுப்பதால் எந்தவொரு மாணவருக்கும் நிறை, குறைகள் இருக்கப் போவதில்லை. அதேநேரம், சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. காரணம், சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணில் அவர்கள் 30 சதவிகிதம்தான் எடுக்கின்றனர்.


அதுவே, நாம் 50 சதவிகிதம் எடுக்க உள்ளோம். சி.பி.எஸ்.இ-யில் 72 சதவிகித மதிப்பெண்ணை ஒருவர் வாங்கினால், நமது மாணவர்களுக்கு 82 சதவிகிதம் என 10 மதிப்பெண்கள் கூடுதலாக கிடைக்கும். இதனால் வேளாண் படிப்புகள், பொறியியல், கால்நடை மருத்துவம் போன்ற படிப்புகளுக்குச் செல்லும்போது மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கும்" என்கிறார் ஜெயப்பிரகாஷ் காந்தி.


50 கல்லூரிகளுக்குத்தான் போட்டி

இதனால் பொறியியல் படிப்புகளில் தாக்கம் ஏற்படுமா?" என்றோம்.


``தமிழ்நாட்டில் 461 கல்லூரிகளில் 50 கல்லூரிகளுக்குள்தான் கடுமையான போட்டி இருக்கும். இந்த முறை டாப் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. காரணம், பத்தாம் வகுப்பு தேர்வில் நமது அரசுப் பள்ளி மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்ணை எடுத்துள்ளனர். அதையெல்லாம் கவனித்த பிறகுதான் தமிழ்நாடு அரசு இப்படியொரு கணக்கீட்டு முறையைக் கொண்டு வந்துள்ளதாகப் பார்க்கிறேன். இதனால் தரம் குறையும் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. உண்மையாகவே பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்தால் 80 சதவிகித மாணவர்களுக்கு இப்படியொரு மதிப்பெண் கிடைக்கப் போவதில்லை. இதை போனஸ் மதிப்பெண்ணாகத்தான் பார்க்கிறேன். இதனால் உயர் கல்வியில் தரம் என்பது கேள்விக்குறியாகும் என்பது உண்மைதான்.


இதனை சரிசெய்யும் வகையில் இணைப்பு பாடப் பயிற்சிகளை (Bridge courses) கொடுக்க வேண்டும். முதல் கல்வியாண்டையும் 3 மாதங்கள் வரையில் நீட்டிக்க வேண்டும். அடுத்ததாக, கர்நாடக மாநிலத்தில் அடுத்த 10 நாளில் உயர்கல்வியில் படிக்கும் அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம் போடப்படும் என அறிவித்துள்ளனர். இதைப் பின்பற்றி தமிழ்நாடு அரசும் நமது மாணவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசியை செலுத்த வேண்டும். இதன்பிறகு கல்லூரிகளைத் திறந்து இணைப்புப் பாடத்தில் தேர்வெழுத வைத்து அதன்பிறகு வகுப்புகளைத் தொடங்க வேண்டும். அப்போதுதான் பிளஸ் 2 தேர்வில் இழந்ததை இதில் சரிக்கட்ட முடியும். தரத்தையும் நம்மால் சரிசெய்ய முடியும். மாணவர்களின் எதிர்காலத்திலும் சிக்கல் வரப் போவதில்லை," என்கிறார்.


எந்தெந்த பாடப் பிரிவுகளுக்கு டிமாண்ட்?

``இந்தமுறை எந்தப் படிப்புகளுக்கு டிமாண்ட் வரப் போகிறது?" என்றோம். `` பொறியியல் படிப்பில் கணிப்பொறி அறிவியல் மீது மோகம் அதிகரித்துள்ளது. கணிதம் தவிர்த்து இயற்பியல், வேதியியல் எடுத்துப் படித்த மாணவர்கள்கூட, `நாங்கள் கணிப்பொறி அறிவியல் படிக்க முடியுமா?' எனக் கேட்கின்றனர். அனைத்துமே கணிணிமயம், ரோபோடிக், செயற்கை நுண்ணறிவு என அந்தத் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளதுதான் பிரதான காரணமாக உள்ளது. மாணவர்களும் பெற்றோரும் இதனை நோக்கி நகரத் தொடங்கி விட்டனர்.


ஒருகாலத்தில் இ.சி.இ, மெக்கானிக் படிப்புகளுக்கு இருந்த போட்டி, தற்போது கணிப்பொறி பக்கம் திரும்பிவிட்டது. இதைத்தவிர, பி.காம் படிப்புக்கு அதிகப்படியான போட்டி இருக்கப் போகிறது. தற்போது மாணவர்களும் அதிகம், மதிப்பெண்ணும் அதிகம் என்பதால் போட்டியும் கடுமையாக இருக்கும். இதுதவிர, கடந்த ஆண்டைவிட எம்.பி.சி, எஸ்.சி மாணவர்களும் அதிகப்படியான மதிப்பெண்ணை வாங்க உள்ளனர். கடந்த ஆண்டு சிலர் 120, 130 என கட் ஆஃப் பெற்றனர். அதுவே, இந்த முறை 160 முதல் 180 வரையில் உயரப் போவதை அறிய முடிகிறது. எவ்வளவு மதிப்பெண் வரப் போகிறது என்பதை மாணவர்களும் முடிவு செய்துவிட்டனர். அதனை வைத்து, `எனக்கு நல்ல கல்லூரி கிடைக்குமா?' என கேட்கின்றனர். எனவே, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த மதிப்பீட்டு முறை மிகப் பெரிய வரப்பிரசாதமாக மாறியுள்ளது" என்கிறார்.

நன்றி: பிபிசி தமிழ்

G.O.No.181, Dated:15.11.2011க்கு முன்னர் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு -TET தேவையில்லை என்பதற்கான நீதிமன்ற தீர்ப்பாணை - Judgement Date- 14.06.2021...



 G.O.No.181, Dated:15.11.2011க்கு முன்னர் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு -TET தேவையில்லை என்பதற்கான நீதிமன்ற தீர்ப்பாணை - Judgement Date- 14.06.2021...

BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT

 DATED: 14.06.2021

CORAM:

 THE HONOURABLE MS.JUSTICE V.M.VELUMANI

W.P(MD)Nos.17516 & 17519 of 2020

and W.M.P.(MD)No.14666 & 14668 of 2020


The issue whether a person, who was appointed as B.T.Assistant prior to the issuance of G.O.Ms.No.181, can be compelled to acquire a pass in TET Examination, is no longer res integra. The amended notification issued by the NCTE makes it very clear that the qualification of TET is mandatory only from 29.07.2011. The Division Bench of this Court, in a batch of Writ Petitions, has considered these issues and held that the respondents cannot compel the teachers similarly placed like petitioners to pass in TET examination.


7. For the above reasons, these Writ Petitions stand allowed. The respondents are directed to pay annual increments, incentive, surrender leave benefits and other attendant benefits to the petitioners from the date of their appointments namely 27.07.2011 and 18.02.2011. No costs., Consequently  connected miscellaneous petitions are closed.


>>> Click here to Download Judgement Copy...



26 துணை ஆட்சியர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வெளியீடு...



 26 துணை ஆட்சியர்கள் பணியிட மாற்றம் - அரசாணை (2டி) எண்:81, நாள்: 02-07-2021 வெளியீடு...


>>> அரசாணை (2டி) எண்:81, நாள்: 02-07-2021...



30 ஆண்டுகள் ஒரே பணிநிலையில் உள்ள ஆசிரியர்கள் போனஸ் ஊதிய உயர்வு கோரும் விண்ணப்பப் படிவம்...

Application Form seeking Bonus Increment for Teachers who have been Completed 30 years in Same Job Position...



>>>> 30 ஆண்டுகள் ஒரே பணிநிலையில் உள்ள ஆசிரியர்கள் போனஸ் ஊதிய உயர்வு கோரும் விண்ணப்பப் படிவம்...


இன்றைய (04-07-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூலை 04, 2021



எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். வியாபார ரீதியாக இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். மனை மற்றும் வீடு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் மற்றும் அதை சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அஸ்வினி : தனவரவுகள் உண்டாகும்.


பரணி : நெருக்கடிகள் குறையும்.


கிருத்திகை : மாற்றங்கள் ஏற்படும்.

---------------------------------------




ரிஷபம்

ஜூலை 04, 2021



தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக தடைகளை அறிந்து கொள்வீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சில மாற்றங்கள் உண்டாகும். தோற்றப்பொலிவு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் 



கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.


ரோகிணி : புதுவிதமான நாள்.


மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------




மிதுனம்

ஜூலை 04, 2021



பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். சுயதொழிலில் லாபம் மேம்படும். அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மிருகசீரிஷம் : நெருக்கடிகள் குறையும்.


திருவாதிரை : முன்னேற்றமான நாள்.


புனர்பூசம் : தாமதங்கள் குறையும்.

---------------------------------------




கடகம்

ஜூலை 04, 2021



மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையும், தைரியமும் ஏற்படும். உறவினர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறைந்து தனவரவுகள் மேம்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



புனர்பூசம் : தைரியமான நாள்.


பூசம் : தனவரவுகள் மேம்படும்.


ஆயில்யம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

---------------------------------------




சிம்மம்

ஜூலை 04, 2021



உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுக எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். வியாபாரம் தொடர்பாக எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீது ஈடுபாடு உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மகம் : வெற்றிகரமான நாள்.


பூரம் : அனுபவம் உண்டாகும்.


உத்திரம் : புரிதல் மேம்படும்.

---------------------------------------




கன்னி

ஜூலை 04, 2021



குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற கருத்துக்கள் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



உத்திரம் : அனுசரித்து செல்லவும்.


அஸ்தம் : சிந்தித்து செயல்படவும்.


சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




துலாம்

ஜூலை 04, 2021



வியாபாரம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். நண்பர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். கூட்டு வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு



சித்திரை : முயற்சிகள் ஈடேறும்.


சுவாதி : முன்னேற்றமான நாள்.


விசாகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------




விருச்சிகம்

ஜூலை 04, 2021



எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் ஆதரவின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த நண்பர்களை சந்திப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



விசாகம் : சுறுசுறுப்பான நாள்.


அனுஷம் : அனுகூலம் உண்டாகும்.


கேட்டை : ஆர்வம் ஏற்படும்.

---------------------------------------




தனுசு

ஜூலை 04, 2021



உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த சிக்கல்கள் படிப்படியாக குறையும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். முகத்தில் புதுவிதமான பொலிவும், புத்துணர்ச்சியும் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



மூலம் : மகிழ்ச்சியான நாள்.


பூராடம் : சிக்கல்கள் குறையும்.


உத்திராடம் : புத்துணர்ச்சியான நாள்.

---------------------------------------




மகரம்

ஜூலை 04, 2021



தொழில் மற்றும் வியாபாரத்தில் உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். மனதில் ஒருவிதமான ஆசைகள் உண்டாகும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.


திருவோணம் : நெருக்கடிகள் குறையும்.


அவிட்டம் : லாபம் மேம்படும்.

---------------------------------------




கும்பம்

ஜூலை 04, 2021



உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். தனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



அவிட்டம் : அறிமுகம் கிடைக்கும்.


சதயம் : எண்ணங்கள் மேம்படும்.


பூரட்டாதி : மாற்றமான நாள்.

---------------------------------------




மீனம்

ஜூலை 04, 2021



மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த மாற்றமான சூழ்நிலைகளின் மூலம் புதிய வாய்ப்புகள் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மையை ஏற்படுத்தும். பத்திரிக்கை தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயமான பலன்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



பூரட்டாதி : கவலைகள் குறையும்.


உத்திரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும்.


ரேவதி : ஆதாயமான நாள்.

---------------------------------------


பாலிடெக்னிக் கல்லூரிகளில் 9ஆம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள அரசாணை வெளியீடு...

 


பாலிடெக்னிக் கல்லூரிகளில் 9ஆம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள அரசாணை (1டி) எண்: 152, நாள்: 25-06-2021 வெளியீடு...


G.O.NO : 152, Dated : 25.06.2021


9-ஆம் வகுப்பு மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் சேர்க்கை நடத்த வேண்டும்.தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்துக்கு அனுமதி வழங்கி, உயர்கல்வித்துறை அரசாணை வெளியீடு


ஆணை:


 2021-2022 - ஆம் கல்வியாண்டில் Covid - 19 பெருந்தொற்றினை கருத்தில் கொண்டு அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாணாக்கர் சேர்க்கை பதிவை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணைய தளம் வாயிலாக மேற்கொள்ள அனுமதி வழங்கி . மேலே ஒன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆணை பெறப்பட்டதாகவும் , 10 - ஆம் வகுப்பு கல்வி தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் முதலாமாண்டு பட்டயப்படிப்பு மாணாக்கர் சேர்க்கை செய்யப்படுவது நடைமுறையில் இருந்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் , AICTE 2021-2022 - ஆம் ஆண்டு வழிகாட்டு நெறிமுறை Appendix 1 உட்பிரிவு 1.1 - ல் பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.


>>> அரசாணை (1டி) எண்: 152, நாள்: 25-06-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...