கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) 2021 ஒத்திவைப்பு – மத்திய அமைச்சர் தகவல்...

 


மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) 2021 ஒத்திவைப்பு – மத்திய அமைச்சர் தகவல்...


2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான சாதி வாரி விவரங்கள் குறித்து மக்களவையில் நாடாளுமன்ற திமுக தலைவர் டி.ஆர் பாலு கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.


மத்திய அமைச்சர் பதில்:

நாடு முழுவதும் 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பானது 16-வது இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பாகும். பொதுவாக இதன் முதற்கட்ட பணிகள் ஏப்ரல் 2020 முதல் துவங்கி செப்டம்பர் 2020 முடிய நடைபெறும். இரண்டாம் கட்டப் பணி மற்றும் இறுதி கட்டப் பணிகள் 2021-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் 9 முதல் 28 முடிய நடைபெறும். முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பு பணிகளும் சேர்த்து மேற்கொள்ளப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், தொலைபேசி எண் போன்ற விவரங்களும் சேகரிக்கப்படும்.


இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான சாதிவாரி விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளனவா என, மக்களவையில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். அதில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடுகளில் தொடரும் சட்ட சிக்கல்களை சரி செய்ய, மத்திய அரசால் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? உள்ளிட்ட கேள்விகளை முன்வைத்தார்.


இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் பதில் அளித்தார். அதில், 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அரசாணையின் படி, மத்திய அமைச்சகங்களுடன் கலந்தாலோசித்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 நடத்தப்பட்டு வருகின்றது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக தற்போது இந்த நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசியலமைப்பு சட்ட விதிகளின் படி, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.


மக்களவையிலும், மாநில சட்டப் பேரவைகளிலும், மக்கள் தொகைக்கேற்ப தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் வேலைவாய்ப்பு & கல்வி நிறுவனங்களிலும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரின் இடஒதுக்கீட்டிலும், கணக்கெடுப்புகள் ஆவணம் செய்யப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு நீதிமன்றங்களில் வரும் சட்ட சிக்கல்களுக்கும் தீர்வுகள் காண்பதற்கு, மத்திய அரசு உரிய முயற்சிகளை எடுத்து வருகின்றது என தெரிவித்துள்ளார்.


2013-14ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகளில் (அரசாணை எண். 110, நாள்: 02.07.2013) பணிபுரியும் 900 முதுகலை ஆசிரியர்களுக்கு மூன்று மாத ஊதிய நீட்டிப்பு ஆணை வெளியீடு - Post Continuation Order - Proceedings of the Commissioner of School Education Rc.No.31511/L3/2021, Dated: 14-07-2021...

 


Post Continuation Order - Proceedings of the Commissioner of School Education Rc.No.31511/L3/2021, Dated: 14-07-2021...

2013-14ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகளில் (அரசாணை எண். 110, நாள்: 02.07.2013)  பணிபுரியும் 900 முதுகலை ஆசிரியர்களுக்கு மூன்று மாத ஊதிய நீட்டிப்பு ஆணை வெளியீடு...


>>> Click here to Download Proceedings of the Commissioner of School Education Rc.No.31511/L3/2021, Dated: 14-07-2021 & Certificate...


பள்ளிக் கல்வி - தொடக்க, நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அடிப்படை கணினி பயன்படுத்துதல், EMIS, High Tech Lab மற்றும் ICT ஆகியவற்றில் திறன் வளர் பயிற்சி அளித்தல் - மாவட்டக் கருத்தாளர்களுக்கு மாநில கருத்தாளர்களைக் கொண்டு பயிற்சி அளித்தல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண். 22432/வி2/இ1/2021, நாள்: 22-07-2021, மாவட்ட வாரியான கருத்தாளர்கள் பட்டியல் & பயிற்சி கால அட்டவணை...

 


பள்ளிக் கல்வி - தொடக்க, நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அடிப்படை கணினி பயன்படுத்துதல், EMIS, High Tech Lab மற்றும் ICT ஆகியவற்றில் திறன் வளர் பயிற்சி அளித்தல் - மாவட்டக் கருத்தாளர்களுக்கு மாநில கருத்தாளர்களைக் கொண்டு பயிற்சி அளித்தல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண். 22432/வி2/இ1/2021,  நாள்: 22-07-2021...

🍁 மாவட்ட வாரியான கருத்தாளர்கள் பட்டியல்...

🍁 பயிற்சி கால அட்டவணை...


>>> பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண். 22432/வி2/இ1/2021,  நாள்: 22-07-2021,  மாவட்ட வாரியான கருத்தாளர்கள் பட்டியல் & பயிற்சி கால அட்டவணை...



இணைப்பு 1. பயிற்சிக் கால அட்டவணை 

Training Schedule:

Batches      Dates       Teacher Categories

Batch - 1    26.7.21-30.7.21 RPs of the SRGs

Batch –2   02.8.21- 06.8.21 (PGs and BTs)

Batch –3   09.8.21-16.8.21 (BTs)

Batch –4   16.8.21-23.8.21 (BTs and SGTs)

Batch-5 23.8.21-30.8.21 (SGTs and Special Teachers)



Course Modules:

Sl. No    Days.         Transaction       Hands-On

                              10.00 to 12.00         02.00 to 04.00

1. 1st Computer Basics.  Hands- On and Assessment

2. 2nd Hi- Tech Lab. Hands- On and Assessment

3. 3rd Internet Basics / EMIS Hands - On and Assessment

4. 4th EMIS Hands- On and Assessment

5. 5th Recapitulation: Basic ICT, Hi-Tech, Internet and EMIS

Review of Assignments

ஓய்வூதிய, குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு - மத்திய அரசின் சுற்றறிக்கை...

 ஓய்வூதிய, குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு - மத்திய அரசின் சுற்றறிக்கை...





பத்திரப்பதிவுத்துறை சார்பதிவாளர் அலுவலங்களில் பதிவு அலுவலர்கள் இனி உயர்ந்த மேடையில் அமராமல் சரி சமமாக அமரும் இருக்கைகள் போட வேண்டும் எனவும், மேடையைச் சுற்றியுள்ள தடுப்பிணை அகற்றிடவும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவு...

 


பத்திரப்பதிவுத்துறை சார்பதிவாளர்   அலுவலங்களில் பதிவு அலுவலர்கள் இனி உயர்ந்த மேடையில் அமராமல் சரி சமமாக அமரும் இருக்கைகள் போட வேண்டும் எனவும், மேடையைச் சுற்றியுள்ள  தடுப்பிணை அகற்றிடவும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவு...



அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வு - 2021க்கான கால அட்டவணை வெளியீடு - மதிப்பெண் குறைவாக உள்ளது என கருதுபவர்கள் எழுதலாம்...


அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வு - 2021க்கான கால அட்டவணை வெளியீடு - மதிப்பெண் குறைவாக உள்ளது என கருதுபவர்கள் எழுதலாம்...

அரசுத் தேர்வுகள் இயக்குனர் கடிதம் ந.க.எண்: 012923/எச்1/2021, நாள் : 22.07.2021...


>>> அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வு - 2021க்கான கால அட்டவணை வெளியீடு...

நவோதயா பள்ளிகளில் 6ம் வகுப்பு மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 11 இல் நுழைவுத்தேர்வு...

 


நாடு முழுவதும் உள்ள ஜவஹர் நவோதயா பள்ளிகளில் ஆறாம் வகுப்பு மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வு குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து மாணவர்களுக்கும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


நுழைவுத்தேர்வு அறிவிப்பு:

இந்திய அரசினால் திறன் வாய்ந்த மாணவர்களுக்கு சிறப்பு கல்வி வழங்க நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஜவஹர் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டன. இது இந்தியாவின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தன்னாட்சி அமைப்பான நவோதயா வித்யாலயா சமிதியினால் நடத்தப்படுகிறது. சிறப்பு பள்ளிகளுக்கு இணையான தரம் கூடிய கல்வித்திட்டத்தை அனைத்து மாணவர்களும் அவர்களது குடும்ப வருமானம், சமூகநிலை எத்தகையதாக இருப்பினும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டது.


நவோதயா பள்ளிகள் 2010 வரை ஏறத்தாழ 593 பள்ளிகள் நிறுவப்பட்டுள்ளன. மாவட்ட அளவில் நடத்தப்படும் அனைத்திந்திய நுழைவுத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு இந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் நுழைவுத்தேர்வு நடத்துவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது.


இந்த பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட போது நாடு முழுவதிலும் இருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்த நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள நவோதயா பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் 47 ஆயிரம் இடங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தேர்வை எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி இந்த தேர்வினை 16 ஆயிரத்துக்கு மேற்பட்ட மையங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...