கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க சிறப்பு பணிக்குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு(G.O. (D) No. 861 Dt: July 26, 2021 - Infectious Diseases - State Level Task Force on Paediatric Care of Covid cases - Constituted -Orders - Issued)...



 கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க சிறப்பு பணிக்குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு. 


சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 13 பேர் கொண்ட பணிக்குழு அமைத்து அரசாணை வெளியீடு.


தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா வைரஸ் பரவல் கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதே வேளையில், தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியையும் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.


இந்நிலையில், கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க சிறப்பு பணிக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 13 பேர் கொண்ட பணிக்குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


கொரோனா 3-ம் அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு என வல்லுநர்கள் எச்சரித்த நிலையில் அவர்களை பாதுகாக்க சிறப்பு குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. 


>>> Click here to Download G.O. (D) No. 861 Dt: July 26, 2021 -  Infectious Diseases - State Level Task Force on Paediatric Care of Covid cases - Constituted -Orders - Issued...


டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதலில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா (Neeraj Chopra wins Gold Medal in men's javelin throw at Tokyo Olympics)








டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதலில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா...


*டோக்கியோ ஒலிம்பிக் - இந்தியாவின் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை


*டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியின் தங்கத்தை உறுதி செய்த நீரஜ் சோப்ரா இந்தியாவிற்காக இரண்டாவது தங்கப்பதக்கம் வென்றவர் ஆவார்


*முதன்முதலில் 2004 ம் ஆண்டு அபினவ் பிந்த்ரா துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவிற்காக தங்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..


*இந்தியாவிற்கு 2020 ஒலிம்பிக் போட்டிகளில் முதல் தங்கப்பதக்கம்.


*நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தடகளப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தார் நீரஜ் சோப்ரா.


*ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பெற்று இந்தியாவிற்கு தங்கப்பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார்...

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை தேர்வு(TNPESU New Vice Chancellor Selection) செய்ய, தேடுதல் குழு அமைப்பு...



 தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, தேடுதல் குழு அமைப்பு... 


தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை துணைவேந்தரை தேர்வு செய்ய, தேடுதல் குழு அமைக்கப்பட்டு உள்ளது. குழுவின் தலைவராக, மத்திய பிரதேசம், குவாலியரில் உள்ள, லட்சுமிபாய் தேசிய உடற்கல்வி நிறுவன முன்னாள் துணைவேந்தர் திலிப்குமார் துரேகா நியமிக்கப்பட்டு உள்ளார்.


உறுப்பினர்களாக, தமிழக அரசின் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டேவிதார், பாரதியார் மற்றும் சென்னை பல்கலை முன்னாள் துணைவேந்தர் திருவாசகம் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இக்குழு, பல்கலை துணைவேந்தர் பதவிக்கு, மூன்று பேர் பெயரை பரிந்துரை செய்யும். இவ்விவரம் தமிழ்நாடு அரசிதழில் வெளியிட்டுள்ளது.


கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்க கூடாது()- தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு (Private schools not to refuse to issue Transfer Certificates to students for non-payment of fees - Chennai High Court)...





 கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்க கூடாது- தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.


மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்-கல்வித்துறை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


புகார் வரும் பட்சத்தில், தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக விசாரிக்கப்படும் - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.

கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு கோருதல்(Compassionate Ground Basis Appointment) - பணி வாய்ப்புக் கோரி காத்திருப்பவர்கள் சார்பாக விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் சமர்பிக்க கோருதல் - தொடர்பாக - பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்: 39671/ஜே/இ4/2021, நாள்: 04-08-2021...


17-11-2013 வரை பணியிலிருக்கும் பொழுது இறந்தவர்களின் வாரிசுதாரர்களில் 250நபர்களுக்கு 14-07-2021 அன்று கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டுள்ள நிலையில் 18-11-2013 முதல் 31-12-2015 வரை பணியிலிருக்கும் பொழுது இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு  கருணை அடிப்படையில் பணி வாய்ப்புக் கோரி காத்திருப்பவர்கள் சார்பாக விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் சமர்பிக்க கோருதல் - தொடர்பாக - பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்: 39671/ஜே/இ4/2021, நாள்: 04-08-2021...


>>> பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்: 39671/ஜே/இ4/2021, நாள்: 04-08-2021...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


7 இ.ஆ.ப. அலுவலர்களை இடமாற்றம்(7 IAS Officers Transfer) செய்து, தமிழ்நாடு அரசு உத்தரவு(G.O.Rt.No.3175, Dated: 07-08-2021)...



 தமிழ்நாட்டில் 7 இ.ஆ.ப. அலுவலர்களை இடமாற்றம் செய்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. (G.O.Rt.No.3175, Dated: 07-08-2021)


>>> Click here to Download (G.O.Rt.No.3175, Dated: 07-08-2021)...


1. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணைச் செயலாளராகப் பதவி வகித்து வரும் எஸ்.செந்தாமரை, நில நிர்வாக ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


2. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணைச் செயலாளராகப் பதவி வகித்துவரும் மகேஸ்வரி ரவிக்குமார், பொதுப்பணித்துறை இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


3. வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநராகப் பதவி வகித்து வரும் எம்.அருணா, கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


4. தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் இணை மேலாண் இயக்குநராகப் பதவி வகித்து வரும் ஷ்ரவண் குமார் ஜதாவத், வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், அவரை பொது (தேர்தல்) துறை துணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.


5. பள்ளிக் கல்வித்துறை துணைச் செயலாளராகப் பதவி வகித்துவரும் ஜே.ஆனி மேரி ஸ்வர்ணா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


6. உள்துறை இணைச் செயலாளராகப் பதவி வகித்துவரும் ஏ.ஜான் லூயிஸ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


7. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை இணைச் செயலாளராகப் பதவி வகித்துவரும் எம்.லஷ்மி, சி.எம்.டி.ஏ தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்".




இன்றைய (08-08-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஆகஸ்ட் 08, 2021



உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். மனம் திறந்து பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். சுபகாரியங்களை முன்னின்று நடத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். புதுவிதமான ஆடைகளை வாங்கி மனம் மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.


பரணி : தெளிவு பிறக்கும்.


கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------




ரிஷபம்

ஆகஸ்ட் 08, 2021



எழுத்து தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். சிற்றின்ப தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். எண்ணிய காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். குறுகிய தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும்.


ரோகிணி : புத்துணர்ச்சியான நாள்.


மிருகசீரிஷம் : எண்ணங்கள் நிறைவேறும்.

---------------------------------------




மிதுனம்

ஆகஸ்ட் 08, 2021



கொடுக்கல், வாங்கலில் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். பத்திரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு ஞாபக சக்திகள் மேம்படும். மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தி ஆதாயம் அடைவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



மிருகசீரிஷம் : லாபகரமான நாள்.


திருவாதிரை : தாமதங்கள் குறையும்.


புனர்பூசம் : ஆதாயம் மேம்படும்.

---------------------------------------




கடகம்

ஆகஸ்ட் 08, 2021



பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். நினைவாற்றலில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். வித்தியாசமான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்துவந்த தடை, தாமதங்களை அறிந்து வெற்றி கொள்வதற்கான சூழ்நிலைகளை அமைப்பீர்கள். இளைய சகோதரர்களுக்கு லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



புனர்பூசம் : புரிதல் மேம்படும்.


பூசம் : மந்தத்தன்மை குறையும்.


ஆயில்யம் : வெற்றி கிடைக்கும்.

---------------------------------------




சிம்மம்

ஆகஸ்ட் 08, 2021



சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். இடது கண் தொடர்பான பிரச்சனைகள் குறையும். அதிகாரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு மேம்படும். மனதில் இருந்துவந்த தயக்கங்கள் குறையும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மகம் : பொறுமை வேண்டும்.


பூரம் : பிரச்சனைகள் குறையும்.


உத்திரம் : ஒத்துழைப்பு மேம்படும்.

---------------------------------------




கன்னி

ஆகஸ்ட் 08, 2021



மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். மற்றவர்களுக்கு தேவையான பணிகளை செய்து கொடுப்பீர்கள். தெய்வீகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாலின மக்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



உத்திரம் : ஆசைகள் உண்டாகும்.


அஸ்தம் : ஆர்வம் அதிகரிக்கும்.


சித்திரை : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------




துலாம்

ஆகஸ்ட் 08, 2021



வியாபாரம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் புதுவிதமான அனுபவம் உண்டாகும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். விவசாய பணிகளில் லாபம் உண்டாகும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் சிலருக்கு கிடைக்கும். மருத்துவம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



சித்திரை : அனுபவம் உண்டாகும்.


சுவாதி : லாபகரமான நாள்.


விசாகம் : மேன்மை உண்டாகும்.

---------------------------------------




விருச்சிகம்

ஆகஸ்ட் 08, 2021



தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். பெரியோர்களிடம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். தெளிவான சிந்தனைகளின் மூலம் எண்ணிய இலக்கை அடைவீர்கள். புதிய நுட்பமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளில் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. தந்தை வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



விசாகம் : நம்பிக்கை அதிகரிக்கும்.


அனுஷம் : விவேகம் வேண்டும்.


கேட்டை : ஆதாயமான நாள்.

---------------------------------------




தனுசு

ஆகஸ்ட் 08, 2021



தொழில் தொடர்பான பணம் கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படுவது அவசியமாகும். நண்பர்களிடம் கருத்துக்களை பரிமாறும்போது கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சிலரின் அறிமுகத்தின் மூலம் தனவரவுகள் உண்டாகும். தேவையற்ற சிந்தனைகளின் மூலம் மன அமைதி குறையும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



மூலம் : சிந்தித்து செயல்படவும்.


பூராடம் : கவனம் வேண்டும்.


உத்திராடம் : மன அமைதி குறையும்.

---------------------------------------




மகரம்

ஆகஸ்ட் 08, 2021



சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் உண்டாகும். குழப்பமான சிந்தனைகளின் மூலம் இலக்கிலிருந்து விலகி செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை



உத்திராடம் : முன்னேற்றமான நாள்.


திருவோணம் : நெருக்கம் அதிகரிக்கும்.


அவிட்டம் : விவாதங்கள் நீங்கும்.

---------------------------------------




கும்பம்

ஆகஸ்ட் 08, 2021



உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். சகோதரர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு



அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


சதயம் : மாற்றமான நாள்.


பூரட்டாதி : இழுபறிகள் குறையும்.

---------------------------------------





மீனம்

ஆகஸ்ட் 08, 2021



குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். மனைவி வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். தனவரவுகளை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



பூரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.


உத்திரட்டாதி : கலகலப்பான நாள்.


ரேவதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Our next calender year 2025 is a mathematical wonder

 நமது அடுத்த நாட்காட்டி ஆண்டு 2025 ஒரு கணித அதிசயம் சுவாரஸ்யமான 2025  1) 2025, ஒரு முழு வர்க்க எண்  2) இது இரண்டு வர்க்கங்களின் பெருக்கற்பலன...