கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்களுக்கான அடிப்படை கணினி பயிற்சி ( EMIS , HI - Tech Lab , ICT ) 12.08.2021 முதல் தொடக்கம்...



ஆசிரியர்களுக்கான அடிப்படை கணினி பயிற்சி - முதற்கட்டமாக 09.08.2021 க்கு பதில் 12.08.2021 முதல் தொடங்கும் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்


ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து கற்றல் , கற்றுக் கொண்டே இருத்தல் , அறிவை புதுப்பித்தல் ஆகியன மிக அவசியம் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் பணியிடைப் பயிற்சி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல் , EMIS , HI - Tech Lab மற்றும் ICT ஆகியவற்றில் திறன் வளர் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு அதற்கான கருத்தாளர்கள் மற்றும் உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தின் பொறுப்பு ஆசிரியர்களுக்கும் 2.8.2021 முதல் 6.8.2021 வரை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது . இப்பயிற்சியானது பல கட்டங்களாக ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். 


5.8.2021 அன்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு நடைபெற்ற இணையவழி கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துக்கள் அடிப்படையில் , முதற்கட்டமாக 12500 முதுநிலை ஆசிரியர்களுக்கு 9.8.2021 அன்று முதல் திட்டமிடப்பட்டிருந்த பயிற்சி 12.08.2021 . 13.08.2021 . 16.08.2021 முதல் 18.08.2021 வரை பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


எனவே , பயிற்சி நன்முறையில் நடைபெறுவதற்கு தேவையான ஆயத்த பணிகள் அனைத்தையும் மாவட்டங்களில் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. 


இதற்காக 26.7.2021 முதல் 30.7.2021 வரையில் நடைபெற்ற கருத்தாளர் பயிற்சியிலிருந்து 264 கருத்தாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் . இரு கருத்தாளர்கள் இணைந்து ஒரு குழுவாகும். ஒவ்வொரு கருத்தாளர் குழுக்களும் 100 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும். தெரிவு செய்யப்பட்ட 264 கருத்தாளர்களின் பெயர் பட்டியல் 132 கருத்தாளர் குழுக்களாக பிரிக்கப்பட்டு இணைப்பு 1 - ல் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிற்சி அளிக்கப்பட வேண்டிய ஆசிரியர்களின் எண்ணிக்கை விபரமும் இணைப்பு 2 - ல் கொடுக்கப்பட்டுள்ளது.


முதற்கட்டமாக 12500 முதுநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் பயிற்சி அளிக்கப்படவுள்ளதால் , 125 கருத்தாளர் குழுக்கள் மட்டும் போதுமானதாகும் , கொடுக்கப்பட்டுள்ள கருத்தாயார் பட்டியலில் கோயமுத்தூர் , தருமபுரி , ஈரோடு , மதுரை , புதுக்கோட்டை சேலம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் மட்டும் கூடுதலாக இரு கருத்தாளர்கள் ( ஒரு குழு ) உள்ளனர் . எனவே , மேற்குறிப்பிடப்பட்டுள்ள 7 மாவட்டங்களில் மட்டும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே கொடுக்கப்பட்டுள்ள கருத்தாளர் பட்டியலிலிருந்து மாவட்டங்களுக்கான கருத்தாளர்களை தெரிவு செய்து கொள்ளவேண்டும்.


>>> ஆசிரியர்களுக்கான அடிப்படை கணினிப் பயிற்சி - முதற்கட்டமாக 09.08.2021க்கு பதில் 12.08.2021 முதல் தொடங்கும் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்...


வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயில விரும்புவோர் கவனத்திற்கு - A to Z வழிகாட்டுதல்...



 கடல் கடந்து கல்வி பயில்வதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? இந்திய மாணவர்களுக்கு ஏற்ற கல்விச்சூழல் உள்ள நாடுகள் எவை? வெளிநாட்டில் பயில சரியான கல்வி நிறுவனத்தை தேர்வு செய்வது எப்படி? சரியான வழிகாட்டு மையங்களை அணுகுவது எப்படி? எந்தெந்த பல்கலைக்கழகங்களில் உதவித்தொகை வழங்கப்படுகிறது? பல்கலைக்கழகங்களில் உதவித்தொகை கிடைக்க வழிவகை உள்ளதா? வங்கிக்கடன் பெற உள்ள வழிமுறைகள் என்னென்ன? வெளிநாட்டில் முதுநிலை மருத்துவ படிப்புகளை படிக்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து தெளிவாகப் பார்க்கலாம்.



வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்கள் கவனத்துக்கு...

வெளிநாடுகளில் எந்த பல்கலைகழகங்கள், கல்லூரிகள் சிறந்தவை என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பின்னர் கல்வி கற்க ஆகும் செலவு, கல்விக்கடன் குறித்து அறிந்து கொள்வது அவசியம். அதன்பிற்கு உதவித்தொகை, வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும். கல்லூரியில் இடம் கிடைத்தால் படிப்பிற்காக அந்த நாட்டிற்கு செல்வதற்கான விசா நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியம். நாம் செல்லவிருக்கும் நாட்டின் அரசியல், பொருளாதார சூழல், காலநிலை, உணவு பற்றி தெரிந்துகொள்வது நலம். சில நாடுகளில் படிக்க சில தேர்வுகளை எழுதி தேர்ச்சிபெற வேண்டியிருக்கும். இணையதளம் மற்றும் தனியார் ஏஜென்சிகள் மூலம் வெளிநாட்டு படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.


கடல் கடந்து கல்வி கற்க ஆர்வம் காண்பிக்கும் மாணவர்கள் தான் தேர்ந்தெடுக்கும் படிப்புக்கு ஏற்ற நாடுகளைத் தேர்வு செய்வதில் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். வெளிநாட்டில் உள்ள கல்லூரிகளில் பயில ஆங்கிலம் நன்றாகத் தெரிந்திருப்பது அவசியம். சில நாடுகளில் குறிப்பிட்ட பாடப் பிரிவுகளுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும்.


கல்வி கற்க ஏற்ற நாடுகள் சில...

அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், சீனா, ரஷ்யா, நியூசிலாந்து, ஐரோப்பிய நாடுகள்.


வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி கற்க விரும்புவோர் ஓராண்டுக்கு முன்னரே தயாராக வேண்டும். பொதுவாக 3 வழிமுறைகளில் வெளிநாடுகளில் கல்வி பயில முடியும். 12ஆம் வகுப்பு படித்துவிட்டு இளநிலை படிப்புகளுக்காக வெளிநாடு செல்லலாம். இளநிலை படிப்புகளை இந்தியாவில் முடித்துவிட்டு மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லலாம். மேற்படிப்புகளை இந்தியாவில் முடித்தவர்கள் வெளிநாடு சென்று ஆராய்ச்சி படிப்புகளைப் படிக்கலாம். ஒவ்வொரு படிப்புகளுக்கும் ஒவ்வொரு விதமான வழிமுறைகள் உள்ளன. வெளிநாடுகளில் கல்வி பயில தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.


கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க சிறப்பு பணிக்குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு(G.O. (D) No. 861 Dt: July 26, 2021 - Infectious Diseases - State Level Task Force on Paediatric Care of Covid cases - Constituted -Orders - Issued)...



 கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க சிறப்பு பணிக்குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு. 


சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 13 பேர் கொண்ட பணிக்குழு அமைத்து அரசாணை வெளியீடு.


தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா வைரஸ் பரவல் கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதே வேளையில், தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியையும் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.


இந்நிலையில், கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க சிறப்பு பணிக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 13 பேர் கொண்ட பணிக்குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


கொரோனா 3-ம் அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு என வல்லுநர்கள் எச்சரித்த நிலையில் அவர்களை பாதுகாக்க சிறப்பு குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. 


>>> Click here to Download G.O. (D) No. 861 Dt: July 26, 2021 -  Infectious Diseases - State Level Task Force on Paediatric Care of Covid cases - Constituted -Orders - Issued...


டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதலில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா (Neeraj Chopra wins Gold Medal in men's javelin throw at Tokyo Olympics)








டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதலில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா...


*டோக்கியோ ஒலிம்பிக் - இந்தியாவின் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை


*டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியின் தங்கத்தை உறுதி செய்த நீரஜ் சோப்ரா இந்தியாவிற்காக இரண்டாவது தங்கப்பதக்கம் வென்றவர் ஆவார்


*முதன்முதலில் 2004 ம் ஆண்டு அபினவ் பிந்த்ரா துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவிற்காக தங்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..


*இந்தியாவிற்கு 2020 ஒலிம்பிக் போட்டிகளில் முதல் தங்கப்பதக்கம்.


*நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தடகளப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தார் நீரஜ் சோப்ரா.


*ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பெற்று இந்தியாவிற்கு தங்கப்பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார்...

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை தேர்வு(TNPESU New Vice Chancellor Selection) செய்ய, தேடுதல் குழு அமைப்பு...



 தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, தேடுதல் குழு அமைப்பு... 


தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை துணைவேந்தரை தேர்வு செய்ய, தேடுதல் குழு அமைக்கப்பட்டு உள்ளது. குழுவின் தலைவராக, மத்திய பிரதேசம், குவாலியரில் உள்ள, லட்சுமிபாய் தேசிய உடற்கல்வி நிறுவன முன்னாள் துணைவேந்தர் திலிப்குமார் துரேகா நியமிக்கப்பட்டு உள்ளார்.


உறுப்பினர்களாக, தமிழக அரசின் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டேவிதார், பாரதியார் மற்றும் சென்னை பல்கலை முன்னாள் துணைவேந்தர் திருவாசகம் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இக்குழு, பல்கலை துணைவேந்தர் பதவிக்கு, மூன்று பேர் பெயரை பரிந்துரை செய்யும். இவ்விவரம் தமிழ்நாடு அரசிதழில் வெளியிட்டுள்ளது.


கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்க கூடாது()- தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு (Private schools not to refuse to issue Transfer Certificates to students for non-payment of fees - Chennai High Court)...





 கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்க கூடாது- தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.


மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்-கல்வித்துறை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


புகார் வரும் பட்சத்தில், தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக விசாரிக்கப்படும் - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.

கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு கோருதல்(Compassionate Ground Basis Appointment) - பணி வாய்ப்புக் கோரி காத்திருப்பவர்கள் சார்பாக விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் சமர்பிக்க கோருதல் - தொடர்பாக - பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்: 39671/ஜே/இ4/2021, நாள்: 04-08-2021...


17-11-2013 வரை பணியிலிருக்கும் பொழுது இறந்தவர்களின் வாரிசுதாரர்களில் 250நபர்களுக்கு 14-07-2021 அன்று கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டுள்ள நிலையில் 18-11-2013 முதல் 31-12-2015 வரை பணியிலிருக்கும் பொழுது இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு  கருணை அடிப்படையில் பணி வாய்ப்புக் கோரி காத்திருப்பவர்கள் சார்பாக விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் சமர்பிக்க கோருதல் - தொடர்பாக - பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்: 39671/ஜே/இ4/2021, நாள்: 04-08-2021...


>>> பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்: 39671/ஜே/இ4/2021, நாள்: 04-08-2021...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...