கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான(Schools Opening) வழிகாட்டு நெறிமுறை(Standard Operating Procedures) விரைவில் வெளியீடு...



 தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறப்பது குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று தரிசனம் செய்த பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மருத்துவ நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு 50 சதவீத மாணவர்களுடன் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளைத் திறக்கலாம் என முதல்வர் அறிவித்துள்ளார். பள்ளிகளை திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். இன்னும் 2 நாட்களில் இது முடிவு செய்யப்பட்டுவிடும்.


தனியார் பள்ளிகளில் 85 சதவீதம் கல்விக் கட்டணம் வசூலிக்கலாம். கரோனாவால் பாதிக்கப்பட்ட பெற்றோரிடம் 75 சதவீதம்தான் வசூலிக்க வேண்டும். அதையும் செலுத்த முடியாதவர்களுக்கு முழுமையாக விலக்கு அளிக்க பரிசீலிக்கலாம் என உயர் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி அதிக கட்டணம் வசூலித்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி பாடத்திட்டங்களை குறைப்பதற்கான வரைவு தயாராகிஉள்ளது என்றார்.


மெட்ரிக் பள்ளிகளுக்கு(Matriculation Schools) இயக்குநர் எச்சரிக்கை...



 மெட்ரிக் பள்ளிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு இயக்குனர் எச்சரித்துள்ளார்.


தமிழக மெட்ரிக் பள்ளி இயக்குனர் கருப்பசாமி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பல பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூடியிருப்பதை பார்க்க முடிகிறது. 10ம் வகுப்பு முடித்த மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் வாங்கவும், ஒன்பதாம் வகுப்புக்கான மதிப்பெண் பட்டியல் பெறவும், பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனர்.


இதனால், ஒரே நேரத்தில் அதிக கூட்டம் உள்ளது. கொரோனா விதிகளை பின்பற்றாமல், பல பள்ளிகளில் மாணவர்கள் திரளாக நிற்பது தெரியவந்துள்ளது.எனவே, பள்ளிகளில் கொரோனா விதிகளை பின்பற்றாவிட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பள்ளி செல்லா மாணவர்களைக்(Out of School Children) கணக்கெடுக்கும் பணி: பிரத்யேகச் செயலி(App) மூலம் தொடக்கம்...

 


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் பள்ளி செல்லா மாணவர்களைக் கண்டறியும் வகையில் பிரத்யேக ‘சர்வே ஆப்’ மூலம் கணக்கெடுக்கும் பணி  மதுரை மாவட்டத்தில் இன்று முதல் தொடங்கியது.


கோவிட் -19 பெருந்தொற்று காரணமாகக் குழந்தைகளின் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாகப் பெண் குழந்தைகள், மூன்றாம் பாலினக் குழந்தைகள் ஆரம்பப் பள்ளிப்படிப்பை முடிக்கும் முன்பே அதிக அளவில் இடைநின்று விடுவதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதனால் ஆண்டுதோறும் நடைபெறும் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற பிள்ளைகளைக் கண்டறியும் கணக்கெடுப்புப் பணியை இந்த ஆண்டு, கூடுதல் கவனத்துடன் 'சர்வே ஆப்' மூலம் கணக்கெடுப்பு செய்ய அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் இன்று முதல் கணக்கெடுக்கும் பணியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆக.10-ம் தேதி முதல் ஆக.31-ம் தேதி வரை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.


அதனையொட்டி மதுரை மாவட்டத்தில் ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன் ஆலோசனையின்படி இன்று முதல் கணக்கெடுப்புப் பணி தொடங்கியது.


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருஞானம் ஒருங்கிணைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் 2,280-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தொண்டு நிறுவன ஊழியர்கள் ஆகியோர் பள்ளி செல்லா மாணவர்கள் பற்றிக் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கென வடிவமைக்கப்பட்ட பிரத்யேக ’சர்வே ஆப்’ மூலம் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று பள்ளி செல்லா மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



EMIS Websiteல் EER - Update செய்யும் விதம் & தேவையான தகவல்கள்...

 EMIS ல் EER என்ற Tab புதிதாக உருவாக்கப் பட்டுள்ளது.



 EMIS Websiteல் EER - Update செய்யும் விதம் & தேவையான தகவல்கள்...


Total population எனும் தலைப்பில்

Category, Male+Female=Total என SC(A), SC, ST, MBC, BC (H), BC (M), BC (C), OC, Totalஆகிய விவரங்களை நிரப்ப வேண்டும்...




Schools > EER Elementary எனும் தலைப்பில் 

Child Population, School Age Population, School Going Population, Dropout, Never Enrolled, Eligible for Enrolment, Migration Inbound, Migration Outbound, Migration Summary ஆகிய தலைப்புகளில் கீழ் Boys+Girls=Total என SC(A), SC, ST, MBC, BC (H), BC (M), BC (C), OC, Totalஎன Category வாரியாக விவரங்களை நிரப்ப வேண்டும்...




Schools > EER Secondary எனும் தலைப்பில் 

School Age Population, School Going Population, Studying At Other Than School Education, Dropout Age 15 to 19, Migration Inbound, Migration Outbound, Migration Summaryஆகிய தலைப்புகளில் கீழ் Boys+Girls=Total என SC(A), SC, ST, MBC, BC (H), BC (M), BC (C), OC, Totalஎன Category வாரியாக விவரங்களை நிரப்ப வேண்டும்...



கீழ்கண்ட படிவத்தை  Habitationwise முதலில் தயார்செய்ய வேண்டும். பிறகு Over all  மொத்த தொகுப்பை தயார் செய்து அதை  மட்டும் EMIS தளத்தில் உள்ள EER ஐ Online ல் நிரப்பி Update செய்ய வேண்டும்..


>>> EER FORMAT...


குறிப்பு:

Age 0 - 3 = 0+ To 2+

Age 3+ to 5 = 3+ to 4+

Age 5+ to 10 = 5+ to 9+

Age 11 to 14 = 10+ to 13+

Age 15 to 19 = 14+ to 18+


மேற்கண்ட Age categories தெளிவாக age+  வைத்து நிரப்பினால் சரியாக இருக்கும்..


>>> இத்தகவலை PDF கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



கல்வித் தொலைக்காட்சியில்(Kalvi TV) 10-08-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான ஆங்கிலப் பாடக் காணொளிகள்( I-VII Standard English Videos)...



கல்வித் தொலைக்காட்சியில் 10-08-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான ஆங்கிலப் பாடக் காணொளிகள்...



💥 1st Standard - Unit 1 – My Pet – Part 2 - https://youtu.be/bNEtdFgAH4Y



💥 2nd Standard - Unit 2 – Listen To Our Body – Part 2 - https://youtu.be/GLnMk6UXBu8



💥 3rd Standard - Unit 3 – Let Us Sing – Beauty Of Nature - https://youtu.be/Kc7W9hwdDd4



💥 4th Standard - Unit 2 – Let Us Build And Let Us Listen - https://youtu.be/VwkYw9tdYcg



💥 5th Standard - Unit 3 – Our Nation The Guardians Of The Nation Part 2 - https://youtu.be/-SKjgKEtPqc



💥 6th Standard - Unit 2 – Prose – When The Trees Walked – Part 1 - https://youtu.be/_KyXRYvnsp0



💥 7th Standard - Unit 2 – Poem – The Listeners -

https://youtu.be/9wh_cgoZ8IM?t=7266

கல்வி தொலைக்காட்சியில்(Kalvi TV) 10-08-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு காணொளிகள்(VIII Standard Videos)...



 கல்வி தொலைக்காட்சியில்  10-08-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு காணொளிகள்:



💥  தமிழ் - அலகு 2 - திருக்குறள் - பகுதி 2 - https://youtu.be/SU9hytfnrBA



 💥 ஆங்கிலம் - Unit 3 – Poem – Making Life Worthwhile - https://youtu.be/iTuftHEwBfU



 💥 கணக்கு - அலகு 1 - எண்கள் - விகிதமுறு எண்களின் திட்ட வடிவம் - ஒப்பீடு பற்றி அறிதல் - பகுதி 2 -  https://youtu.be/zwTVrl_02KE



💥 அறிவியல் - அலகு 10 - நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் - பகுதி 1 - https://youtu.be/hEOniIQt5wI



💥 சமூக அறிவியல் - அலகு 1 - குடிமையியல் - குடிமக்களும், குடியுரிமைகளும் - பாகம் 2 -  https://youtu.be/iHLuehXzCoc



தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை கூட்டத் தொடர் 13-08-2021முதல் 21-09-2021 வரை நடைபெறுகிறது...



 தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை கூட்டத் தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடக்கம்...


தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை கூட்டத் தொடர் 13-08-2021முதல் 21-09-2021 வரை நடைபெறுகிறது...


💥 உயர் கல்வித் துறை& பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை - 27-8-2021 (வெள்ளிக்கிழமை)...


>>> சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சி நிரல் - மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதம்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...